பாலரோக சிகிச்சைகள் (வேறு)
கஸ்தூரி மாத்திரை :- கஸ்தூரி குன்றிஎடை-4, கோரோசனை
குன்றிஎடை-8, குங்குமப்பூ குன்றிஎடை-16, பச்சைக்கர்ப்பூரம்
குன்றிஎடை-16, பொரித்த வெங்காயம் குன்றிஎடை-16, சுத்தி
செய்த லிங்கம் குன்றிஎடை-32, அதிமதுரச் சூரணம் குன்றி
எடை-16, திப்பிலிச் சூரணம் குன்றிஎடை-16, கோஷ்டச் சூரணம் குன்றிஎடை-16, அக்ராகாரச் சூரண்ம் குன்றிஎடை-16,
கிராம்புச் சூரணம் குன்றிஎடை-16.
முதலில் லுங்கத்தைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து மிருது
வானபின்பு கஸ்தூரி கோரோசனை குங்குமப்பூ பச்சைக்கர்ப்பூரம்
நீங்கலாக மற்ற சரக்குகளைச் சேர்த்து இஞ்சி சுரசம் விட்டு
இரண்டுசாமம் அரைத்து, இறுதியில் கஸ்தூரி முதலாதி வாசனைச்
சரக்குகளை சேர்த்து ஒருமணிநேரம் அரைத்து நன்கு உறவாகி
மெழுகுபதம்வரும்போது பயறளவு மாத்திரைகளாக திரட்டி நிழலி
லுலர்த்தவும். இதில் வேளைக்கு ஒரு மாத்திரைவீதம் தினம் இரு
வேளை தாய்ப்பால் தேன் அல்லது தக்க அனுபானங்களில் குழந்தை
கட்கு கொடுத்துவர எத்தகைய சுரங்களும் குணமாகும். பாலுண்.