வேறு :- சுக்கு, வில்வபழம் இவைகளை சூரணித்து வெல்லத்துடன் கலந்து பிள்ளைக்கு கொடுத்தால் திரிதோஷத்தினால் உண்டான
கிராணி நிவர்த்தியாகும்.
ரத்தாதிசார சிகிச்சை :- இலவன்பிசின், மேல்மல்லி, காட்டாத்திப்பூ, தாமரைப்பூ இவைகளை சூரணித்து தண்ணீர் விட்டுக்காய்ச்சி பிள்ளைக்கு கொடுத்தால் ரத்தாதிசாரம் நீங்கும்.
சர்வாதிசார சிகிச்சை :- சுக்கு, அதிவிடயம், கோரைக்கிழங்கு, வெட்டிவேர், வெட்பாலைவிரை இவைகளை கியாழம்வைத்து
பிள்ளைக்கு கொடுத்தால் சகல அதிசார ரோகங்கள் நீங்கும்.
அசீரண சூலைக்கு சிகிச்சை :- கொத்தமல்லி, சுக்கு இவைகளை கியாழம்வைத்து சாப்பிட்டாலும், அல்லது மிளகு, திப்பிலி,
சித்திரமூலம், சீரகம் இவைகள் சூரணத்தை மேற்கூறிய கியாழத்
தில் கலந்து சாப்பிட்டாலும் சூலை, ஆமம், அஜீரணம் முதலிய
ரோகங்கள் நிவர்த்தியாகும்.
அஜீரணபேதி சிகிச்சை :- இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, சிற்றரத்தை, சுக்கு, முருக்கன்ப்பட்டை, கோஷ்டம், சிற்றா
முட்டி இவைகளை எலுமிச்சம்பழச் சாற்றினால் அரைத்து சர்க்கரை கலந்து பிள்ளைக்கு கொடுத்தால் அசீரணம், பேதி
முதலியன நிவர்த்தியாகும்.
இருமல் காச சிகிச்சை :- பூனைகாஞ்சொரிவேர், திப்பிலி,
திரா¨க்ஷ, கடுக்காய்பிஞ்சு, இவைகளை சூரணித்து தேனில் கலந்து
மூன்றுநாள் பிள்ளைகளுக்கு ஊட்டச்செய்தால் இரைப்பு, இருமல்
இவை நீங்கும்.
காச சுவாசாதி சிகிச்சை :- பூனைகாஞ்சொரிவேர், திப்பிலி,
திரா¨க்ஷ, கடுக்காய்ப்பூ, ஆனைதிப்பிலி இவைகளை சூரணித்து தேன்
அல்லது நெய் கலந்து பிள்ளைகளுக்கு கொடுக்க இரைப்பு, இருமல்
சுரம் இவைகளை குணமாக்கும்.
காச சிகிச்சை :- வெல்லம் பாகுபிடித்து சுக்கு, மிளகு, திப்பிலி, இந்துப்பு, இவைகளை சூரணித்து அதில்போட்டு இளகமாக்கி
பிள்ளைகளுக்கு கொடுக்க காசரோகம் நீங்கும்.
கிருமிக்கு சிகிச்சை :- வாய்விளங்கத்தை சூரணித்து தேனுட
னாவது அல்லது முருக்கன் விரையைச் சூரணித்து தேனுடனாவது
கொடுத்துவர அல்லது எலிக்காது இலைரசம் கொடுத்துவர குழந்தைகளின் வயிற்றிலிருக்கும் கிருமிகள் நாசமாகும்.
காச சிகிச்சை :- கோஷ்டம், அதிவிடயம், கடுக்காய்ப்பூ, திப்பிலி, பூனைகாஞ்சொரிவேர், இவைகளை சூரணித்து தேனில் கலந்து
பிள்ளைகளுக்கு கொடுக்க ஐந்துவித இருமல்கள் நீங்கும்.
வேறு :- கண்டங்கத்திரி, இலவங்கம், சிறுநாகப்பூ, இவைகளை
சூரணித்து, தேனில் கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்தால் வெகு
காலமாகயிருக்கும் இருமல் நீங்கும்.
விக்கல் சிகிச்சை :- பொன்னிறமான கானிக்கல்லை சூரணித்து,
தேனில் கலந்து பிள்ளைகளுக்கு நாவில் தடவினால் அந்த க்ஷணமே
விக்கல் நீங்கும்.
வேறு :- திப்பிலி, காட்டுமிளகு, இவைகளை கியாழம் வைத்து
அத்துடன் சுட்டப்பெருங்காய சூரணத்தையும் தேனையும் விட்டு
கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்தால் நானாவித விக்கல்கள் நீங்கும்.
இது தன்வந்திரி மதம்.
வேறு :- கடுகுரோகணி சூரணத்தை தேனில் கலந்து பிள்ளை
களுக்கு நாவில் தடவினால் சீக்கிரமாக விக்கல் நீங்குவதுடன்
வெகு நாளாக யுருக்கும் கக்குதலும் நீங்கும்.
வாந்திக்கு சிகிச்சை :- கடுக்காய் ரணத்தை தேனில் கலந்து
பிள்ளைகளுக்கு நாவில் தடவினால் அந்த க்ஷணமே வாந்தி நீங்கும்.
வேறு :- அரசன் பட்டையை உலர்த்தி அதை சுட்டு, சாம்ப
லாக்கி தண்ணீரில் கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்தால் வாந்திகள்
நிற்கும்.
வேறு :- மாம்பருப்பு, நெற்பொறி இந்துப்பு இவைகளை
சூரணித்து தேனில் கலந்து பிள்ளைகளுக்கு நாவில் தடவினால்
வாந்திகள் நிற்கும்.
விக்கலுக்கு சிகிச்சை :- திப்பிலி அதிமதுரம், இவைகளை
சூரணித்து தேனுஞ் சர்க்கரையும் கலந்து கொடி மாதுளம்பழச்சாற்றில்
சிசுவுக்கு கொடுத்தால் விக்கல் வாந்தி இவைகள் நீங்கும்.
ரோதன நிவாரக சிகிச்சை :- திப்பிலி, திரிபலை இவைகளை
சூரணித்து தேன் நெய் கலந்து சிசுவுக்கு கொடுத்தால் அழுகையை
விட்டு சுகமாக யுருக்கும்.
விரேசனத்திற்கு லேபனம் :- ஆமணக்கு விதைப்பருப்பு எலி
புழுக்கை, இவ்விரண்டையும் வேப்பிலை சாற்றினால் அரைத்து சிசு
வின் குதத்திலும், தொப்புளிலும் தடவினால் சுகமாக பேதியாகும்.
தேகபுஷ்டிக்கு அசுவகந்திகிருதம் :- அமுக்கிறாக்கிழங்கு கற்கம் ஒருபாகம், பால் எட்டுபாகம், பசுநெய் இரண்டு பாகம் இவை
களை வொன்றாகச் சேர்த்து தைல பாண்டத்திலிட்டு நெய்பதமாக
காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்துவர தேகபுஷ்டி, பலம் இவைகளை யுண்டாக்கும்.
முகசிராவ சிகிச்சை :- நன்னாரி, நிலவேம்பு, லோத்திரப்பட்டை, அதிமதுரம் இவைகளை கியாழம்வைத்து அக்கியாழத்தினால்
குழந்தையின் வாயைக் கழுவினால் வாயிலிருந்து வடியும் சொள்ளு
நிவர்த்தியாகும்.
மூத்திர கிருச்சர சிகிச்சை :- வெட்டிவேர், சீந்திற்கொடி,
சுக்கு, அமுக்கிறாக்கிழங்கு, நெல்லித்தோல், நெருஞ்சில் இவைகளை
கியாழம்வைத்து தேன்கலந்து குழந்தைக்கு ஊட்டினால் மூத்திர
கிருச்சரரோகம் நிவர்த்தியாகும்.
வாதரோக சிகிச்சை :- ஆமணக்கெண்ணையிற் பசும்பால் அல்லது கோமூத்திரமாவது கலந்து அதில் குங்கிலிய சூரணம்சேர்த்து
குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் வாதரோகம் நிவர்த்தியாகும்.
ரத்த பித்தத்திற்கு சிகிச்சை :- ஆடாதோடை இலைச்சாற்றில்
தேன் சர்க்கரை கலந்தாவது அல்லது ஆலந்துளிர் கற்கத்தில்
தேன் சர்க்கரை கலந்தாவது குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் ரத்த
பித்தம் நீங்கும்.
மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகலுக்கு சிகிச்சை :- மாதுளம்பழம்
அல்லது பூச்சாறு, அருகம்புல் சாறு இவைகளை நசியஞ் செய்வித்தால் சிசுக்களுக்கு மூக்கிலிருந்து ஒழுகும் ரத்தமானது நின்று
விடும்.
வாதகுன்ம சிகிச்சை :- சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், இந்துப்பு, சீரகம், கருஞ்சீரகம், வருத்த பெருங்காயம் இவைகளை சம
எடையாக சூரணித்து முதற் சாதபிடியில் இந்த சூரணங்கலந்து
நெய்யுடன் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு அக்கினி புஷ்டியுண்டாவதுடன் வாதகுன்மநோயும் நிவர்த்தியாகும்.
அபஸ்மார சிகிச்சை :- கலியாண பூசனிக்காய் சாற்றில் அதிமதுரத்தை சூரணித்து போட்டு ஏழுநாள் குழந்தைக்கு கொடுத்து
வர அபஸ்மாரரோகம் நீங்கும்.
மூர்ச்சை சிகிச்சை :- இலந்தைவிரை, தாமரைக் கிழங்கு,
வெட்டிவேர், சந்தனம், சிறுநாகப்பூ இவைகளை சூரணித்து தேன்
கலந்து குழந்தைக்கு கொடுத்தால் மூர்ச்சைரோகம் நிவர்த்தியாகும்.
பாண்டுரோக சிகிச்சை :- யவாக்ஷ¡ரம், வாய்விளங்கம், திப்பிலி இவைகளை சூரணித்து தேன் கலந்து குழந்தைக்கு கொடுத்தால்
பாண்டுரோகம், பக்கசூலை இவைகள் நிவர்த்தியாகும்.
வேறு :- லோகபற்பம், திரிபலை இவைகளை கோமூத்திரத்
தினாலரைத்து தேன் அனுபானத்திற் கொடுத்து மோர்சாதம் பத்தியம் வைத்தால் குழத்தைக்கு உண்டாகும் பாண்டுரோகம், இரு
மல், சூலை இவைகள் நிவர்த்தியாகும்.
காசசுவாச சிகிச்சை :- ஆடாதோடை, சுக்கு, கண்டங்கத்தரி
சீந்திற்கொடி இவைகளை கியாழம் வைத்து குழந்தைகட்கு கொடுத்து
வர இருமல் இரைப்பு நீங்கும்.
சரீரபுஷ்டிக்கு சிகிச்சை :- வெண்ணெய் சர்க்கரை, தேன்
இவைகளை ஒன்றாக ஊட்டி வைத்தவுடனே பால் சாதம் ஊட்டினால்
குழந்தைகட்கு சரீரம் புஷ்டியாகும்.