தோஷம்
இது ஒன்பது வகைப்படும். அவையாவன :-
1. நாய் முள் தோஷம் :- வாயிலும் தொண்டையிலும் முள்ளைப்
போல துர்மாமிசம் எழும்புதல், முலைய்ண்ணாமை, சுரம், மேல்மூச்சு,
கண்ணிற் சலம் வடிதல், கால்வலி, அள்ளெடுக்குதல், கபத்தாலழக்
கூடாமை, தலைநடுக்கலென்னும் குணங்களுண்டாகும்.
2. எச்சில் தோஷம் :- தலையெடுக்கக்கூடாத மயக்கம், சரீர
வாட்டம், அதில் பல நிறத்துடன் நாறுதல், அற்ப்பபேதி, முலை
யுண்ணாமை, இமையொட்டிக்கொள்வதால் கண்களை நிமிண்டிக் கொண்டு
மண்ணிர் புரண்டு அழுதல், தாயைக்கண்டு சீறி அழிதலென்னும்
குணங்களுண்டாகும்.
3. குளிசதோஷம் :- கருப்பம் வேண்டின ஸ்திரீகள் குளிசங்
கட்டிக்கொள்ளும் போது அவ்விடத்தில் எதிர்பட்ட சிசுக்களுக்கு
தோஷங்கண்டு உச்சியில் பள்ளம், கண்ணில் குழி விழுதலுடன்
சலம் வடிதல், தேகமிளைத்தல், அதிகசுரம், வெருட்சியாக அழுதல்
வீக்கம், வாந்தி என்னும்குணங்களுண்டாகும்.
4. தூரஸ்திரீ பரிசதோஷம் :- தேகம் இளைத்து பலநிறமாகத்தோற்றல், துர்க்கந்தம், பால் குடித்தாலும் அடிக்கடி கக்குதல்,
தாய்மீது இச்சையில்லாமை, பேதி, சுரம், உச்சந்தலையில் சீதளம்,
கண்மூடல், பீளைச்சாரல் என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.
தூரஸ்திரீகள் இது தொடுவதால் ஏற்படுவதாம்.
5. சையோக புருஷ பரிசதோஷம் :- கண்ணிலும் உச்சியிலும்
குழிவிழுதல், தேகத்தில் பச்சைநிறம், அல்லது வயிரநிறம் தோற்றல், சீறிசீறி அழுதல், அழுகையின் சத்தம் பக்ஷ¢யின் ஒசையொத்
திருத்தல், குடித்தபாலை எடுக்குதல் என்னுங் குணங்களுண்டாகும்.
இது சையோகஞ்செய்த புருஷர்கள் தீண்டுவதால் ஏற்படுவதாம்.
6. சையோகஸ்திரீ பரிசதோஷம் :- நெஞ்சு வறளல், கண்குழி
விழுதல், வெளிறல், பெருமூச்சு, பால்குடியாமை, இரவிலும் பகலிலும் அநித்திரை, வியர்வை, மயக்கம் என்னும் குணங்களை உண்
டாக்கும். இது சையோகஞ்செய்த ஸ்திரீகள் அந்த அசுசியுடன்
சிசுவைத் தொடுதலினால் ஏற்படும்.
7. அளிதோஷம் :- குடித்தப்பால் தங்காமை, தலையில் ரோமக்
காலெல்லாம் நோதல், நெஞ்சில் புகை எழும்பி அடைத்தல்போ
லிருத்தல், தேகத்தில் நாற்றம், கைகால்களில் நோய் என்னுங்குணங்களை உண்டாக்கும்.
8. குளித்தவள் எடுத்த தோஷம் :- சரீர வாட்டம், பால்
தங்காமை, உச்சியில் குழிவிழுதல், வாந்தி, கண்ணில் நீர்க்கம்ம
லுடன் குழிவிழுதல், வாயுலரல் என்னுங் குணங்களுண்டாகும்.
தூரஸ்திரீ ஸ்நானஞ் செய்தவுடன் எதையும் அருந்தாமல் சிசுக்களை
எடுப்பதால் இந்த தோஷம் பிறக்கும்.
மேற்கூறிய எட்டுவித தோஷமும் மாந்திரிக சிகிச்சைகளால்
விலகுமெனிலும் ஔஷத சிகிச்சைகளும் அத்யாவசியமென்று
அறியவும்.
9. தேரை தோஷம் :- காலுங்கையும் மெலிதலுடன் கட்டிப்
போட்டதுப்போல் கிடத்தல், சரீரவாட்டம், வெளிறல், நிறம்மாறல்
குரல்நெறிதல், பால்குடியாமை என்னும் குணங்களை உண்டாக்கும்.
இது தேரைகள் குழந்தையின் மேல் விழுந்து பீச்சுவதினால் உண்
டாகுமெனவும் கூறப்படுகிறது.