1. செங்கிரந்தி :- முழங்கால், முழங்கைவரைக்குமாவது தேகமுழுவதுமாவது சிவந்த நிறமான வீக்கமும், அவ்வீக்கம் ஒடியோடிக்கட்டுதல் வாய்கடித்தல் மலமூத்திரபந்தம், பூனை குரலோசையை
யொத்து விம்மிவிம்மி அழுதல், பிரேதம் போல் கிடக்குதல் என்னும்
குணங்களுண்டாகும்.
2. கருங்கிரந்தி :- தேகம் முழுவதுமாவது முழங்கால், முழங்கைவரைக்குமாவது நீலம்போற் கறுத்தல், வெளிறல், முலையுண்ணாமை
அல்லது வலது முலையுண்ணாமை, நாவறளல், உடலிலாவது, தோளிலாவது சுடுகை, விழித்து விழித்து பார்ப்பது, குணம் மாறுவது,
அலறுவது, இருமல், குறற்கம்மல், வயிற்றில் வேதனை என்னும்
குணங்களுண்டாகும்.