கணம்
இது மாதா பிதாக்களின் நாதவிந்துகளில் அடங்கிய வாதாதி
தோஷங்களினின்று உற்பத்தியாகிக் கருப்பாசயத்துச் சிசுவைப்
பற்றி அச்சிசுவினது சப்ததாதுக்களும் வன்மையை யடையுங்காலத்தில் விருத்தியடைவதால் கணரோகம் எனப் பெயர் பெற்றது.
இந்நோயில் தேகவாட்டம் வாய்நாற்றம், தலைசுற்றல், உட்சுரம்,
வெளிச்சுரம், வயிற்றின்மேல் சுடுகை, மயக்கம், வறண்ட மலம் என்னும் குணங்கள் ஏற்படும். இது 12-வயது வரையிலும் தொடரும்.
கணம் எண்வகைப்படும். அவையாவன :-
குலிகணம், முக்குகணம், ஆமகணம், தேரைக்கணம், மகா
கணம், கழிகணம், சுழிகணம், வறள்கணம் என்பதாம்.
1. சூலிகணம் :- மேல்மூச்சு, இருமல், நெஞ்சு, நாவு, நாபி
புண்போலிருத்தல், பாலுண்ணாமை, முகநாற்றம் என்னும் குணங்க
ளுண்டாகும்.
2. முக்குணம் :- வயிற்றுக்கடுப்பு, நாவில் வெடிப்புடன்
வெந்ததுபோலிருத்தல், சுரம், தலைவலி, எரிச்சல், ஆசனம்
வெளிப்பட்டு முக்கலுடன் ரத்தமும் சீதமும் ஒழுகுதல், தேக வாட்டத்திலும் கறுத்த நிறம், முடிச்சோறுதல், தாகம் என்னும் குணங்களுண்டாகும். இதுவே மூலகணமாம்.
3. ஆமக்ணம் :- நெஞ்சில் துடித்தல், சிறுநீர் மஞ்சலாக
இறங்குதல், தேகத்தில் புகை கப்பினது போல் மாறு நிறம், ஒருவேளை சர்வாங்கத்திலும் வெதும்பல், இருமல், வயிற்றிறைச்சல்
புகைந்து புகைந்து மேல் மூச்சு என்னும் குணங்களுண்டாகும்.
4. தேரைக்கணம் :- வாதநாடி மற்ற நாடிகளில் பின்னிக்கொண்டு நடத்தல், புளிப்பு, துவர்ப்பு, வஸ்த்துக்களில் வெறுப்பு
அன்னத்துவேஷம் திரிதோஷாதிக்கம், நாபியில் புண்போலிருத்தல்
உட்காய்ச்சல், தேகவாட்டம், எரிகுன்மம், பித்தவெட்டை தாது
நஷ்டம் என்னும் குணங்களுண்டாகும்.
5. மகாகணம் :- முகம் புறங்கால், புறங்கை இவைகளில்
மினுமினுப்பு, நகமும் விழியும் வெளிறல், மயக்கம், மிகு வெப்பம்,
உதடு புண்போல் சிவந்திருத்தல், என்னும் குணங்களுண்டாகும்.
6. கழிகணம் :- சீதஞ்சீதமாயும் மலமாயும், பலைபோல
சலஞ்சலமாயும், பேதியாதல் உள்ளங்கை, உள்ளங்கால்களில்
சிலசமயம் காங்கை என்னும் குணங்களுண்டாகும்.
7. சுழிகணம் :- கண்சோருதல், மார்புநோய், வயிறு ஈறல்,
நெஞ்சு நரம்பு இவைகள் வெந்ததுபோலிருத்தல், பாலுண்ணாமை
அலறுதல், மேல்மூச்சு, இருமல் கைகால்களில் சீதளம் வயிற்றுப்
பொருமலுடன் வலி, சுரம் நாக்குவறளல் என்னும் குணங்களுண்டாகும்.
8. வறள் கணம் :- மேனி வறளல், நெஞ்சு துடித்தல், புகை
இருமல், மாறுநிறம், விட்டுக்கூடு வயிற்றில் இரைச்சல் என்னும்
குணங்களுண்டாகும்.