ஆதிதூல ரோகம்
இந்நோயில் உடலில் இயற்கையாய் உள்ள மாமிச அணுக்கள்
அதிகரித்து வளருங்காரணத்தினால், உடல் பருப்பதுடன், மார்பு வ்யிறு
தொடை, பிருஷ்டம் இவைகள் அளவுக்கு மிஞ்சிபருத்து அசைவற்று
கடினமாகவும் இருக்கும். இதனால் உடலை விருப்பப்படி இயக்க
முடியாமை சந்தோஷக்குறைவு அறிவு மங்கல், நடந்தால் அவ்விடத்து
சதைகளெல்லாம் குலுங்கல், ஆயாசம், இரைப்பு, கபாதிக்கம்
அற்ப இருமல், மேல் சுவாசம் முதலிய துர்க்க குணங்கள் உண்டாகும்.
இது சுக்கில சோணித தோஷத்தை உண்டாக்கில் கருப்ப நாசத்தைச்
செய்யும்.
