விஷபாகரோகம்
செம்பின் களிம்பு மீன் முள் முதலியவைகள் சேர்ந்த
உணவையருந்தல், சாநிய அன்னம், மழைசலம், காடித்தண்ணீர்,
நோய்மாதர் சேர்க்கைம், முதல் நாளில் சமைத்த பதார்த்தம் அழுகிய
மாமிசம் என்னும் இவைகளால் எண்வகை விஷபாக ரோகம் உண்டாகும் அவைகளை அடியிற் காண்க :-
1. வாத விஷபாகம் :- ஒருபக்கத்தில் வீக்கம், சரீரம் வாட்டத்திலும் வெளிறல், கணதி, உறக்கம், பசியின்மை, மலச்சிக்கல் என்னுங் குணங்களை உண்டாக்கும்.
2. பித்த விஷபாகம் :- சர்வாங்கத்தினவு, வெடிப்பு, கிரந்தி,
பாரிப்பு, எரிவு, சுரம், ஊறல், அசதி, நித்திரையின்மை, மேல்மூச்சு,
என்னும் குணங்களை உண்டாக்கும்.
3. சிலேஷ்ம விஷபாகம் :- தேகமுற்றிலும் மிகுநமைச்சல்,
வெளிறல், வீக்கத்துடன் வெடித்தல், வறவறப்பு, தாபச்சுரம்,
குளிர், அற்ப இருமல், கோழை, சுடுகையுடன் சிறுநீரிறங்கல்,
மேல்மூச்சு என்னும் குணங்களை உண்டாக்கும்.
4. தொந்த விஷபாகம் :- மூர்ச்சை, மிகுந்ததாகம், அடிக்கடி
நீரிறங்கல், விக்கல், மயக்கம், தேகம் வெளுத்து கண்ணூதலுடன்
வீக்கம், அருசி, பிரமை, பேதி, வாய்நீருரல் என்னுங் குணங்களுடையது.
5. வாத விஷபாகம் ::- சேறுபோல் பேதி, குதத்தில்
இரணத்துடன் ரத்தம்கசிதல், சுவாசம், சுரம், மயக்கம், காந்திய
கொள்ளின்மனம்போல் சரீரவாசனை, முகவீக்கம், வியர்வை, அசதி,
பிதற்றல் என்னும் குணங்களை உண்டாக்கும்.
6. அக்கினி விஷபாகம் :- வாதபித்தாதிக்கம், தேகமிளைததல், வீக்கம், புரளல், கோழை, இருமல், வாந்தி, மூர்ச்சை, வாய்
நீருரல், வயிறுளைதல், மலசலச்சிக்கல், பக்கநோய் என்னும் குணங்களை உண்டாக்கும்.
7. எரிச்சல் விஷபாகம் :- வாயினால் ரத்தம்வீழ்தல், எரிச்சல், கோழை, சுவாசம், மார்பில் அடைப்பு, இரணம், அதில் மாமிசம் வளரல், குத்தல், கட்டிபோல் நெஞ்சிற்காணல், பேதி, வீக்கம்
என்னும் குணங்களை உண்டாக்கும்.
வாதபித்த சிலேஷ்மதொந்த விஷபாகரோகங்கள் சாத்தியம்.
மற்ற நான்கும் அசாத்தியம்.
