5. பித்த சிலேஷ்மப் பிரமேகம் :- வாய் கசத்தல், அடிவயிற்றில்
பொருமலுடன் இசிவு, கோசம் சுருங்குதல், மஞ்சளாயும் வெண்மையாயும் நீரிறங்கல்,
கீல்களிலே வலி, பகல் நித்திரை, பசிஇன்மை, சரீரம் ஊதல் என்னுங் குணங்களுண்டாகும்.
6. தொந்தப் பிரமேகம் :- சரீரத்தில் தினவு, புழுக்கள்
ஊருதல்போல் ஊருதல், அடிவயிறு சுரத்தல், கோசத்தில் கருமை நிறம், அடிக்கடி கடுத்து
நீரிறங்கல், அதைப் பிடித்துப் பார்க்கில் அடியில் பலநிறமாகத் தோய்ந்திருத்தல்
என்னும் குணங்களை
உண்டாக்கும்.
7. கட்டிப் பிரமேகம் :- சரீரம் முழுதும் சகிக்கக்கூடாத
நோயுடன் கட்டிகள் எழும்புதல், கோசத்தில் சொறியுடன் தினவு, பருக்கைப்போல் சீழ் வடிதல்,
பீசத்தில் நீர் கசிதல் என்னும் குணங்களை உண்டாக்கும்.
8. சலப் பிரமேகம் :- சர்வாங்க வேதனை, வாய்கசத்தல், வாந்தி, மயக்கம்,
மூத்திரகசிவிலும் வெளுத்த நீரிறங்குதல். அடி வயிற்றில் வலி, மலத்தில் சீதம் விழுதல்
அரையாப்புக்கட்டி என்னும்
குணங்களை உண்டாக்கும்.
9. தந்திப் பிரமேகம் :- அடிவயிற்றில் புண்போல் கோதல், வீணாந்தண்டினது அடியில்
விருவிருப்பு விம்மல், நீர் இறங்கியவுடன் தந்திபோல் மேகந்தொங்குதல், வெள்ளைக்காணல்
இதனால்
அடிக்கடி சீலை நனைதல் கையால் எறிவு என்னும் குணங்களை உண்டாக்கும்.
10. ரத்த பிரமேகம் :- சரீரம் பஞ்சைப்ப்போல் மெதுவுறல், முயல் ரத்தமென சிவந்த
சுருக்குடன் அடிக்கடி வேதனையை தரவதாய் நீர் இறங்குதல், பேய்போல் அலைதல் என்னும்
குணங்களை
உண்டாக்கும்.
11. கீழ்ப்பிரமேகம் :- கோசத்தின் துவாரத்தில் கடுப்புடன் சீழைப்போல்
வெள்ளைக்காணல், அரையாப்பு பகந்தரம், நாபியில் விரணம் கணுக்காலில் குடைச்சல்,
அடிக்கடி நீர் இறங்குதல், அதிக குளிரோடு சுரம், மயக்கம், வேதனை சர்வாங்க நோய்
என்னும்
குணங்களை உண்டாக்கும்.
12. ஒழுக்கு பிரமேகம் :- இது கோசத்தின் துவார
வழியிலிருந்து சீழ்ரத்தம் சலம் ஆகிய இவைகளைப்போல் மேகம் ஒழுகுதல் சரீரம் முழுதுங்
கருமையுள்ள முளைக்கட்டிகள் எழும்பல்,
கனத்த விரணம், குடைச்சல், எரிச்சல் , வெகு நோயோடு புரளல் என்னும் குணங்களை
உண்டாக்கும்.
13. அரித்திராப்பிரமேகம் :- மஞ்சள் நிறமான வெள்ளை காணல், சூடாக நீர் இறங்க,
அந்த இடத்தில் நெருப்பைக்கொளுத்தினது போல் எரிச்சலுடன் கூடிய கடுப்பு,
விருவிருப்புஅதிக உஷ்ணம், முகத்தில் மஞ்சள் நிறம், நாவில் கசப்பு, மனது திடுக்கிடல்
என்னும் குணங்களை உண்டாக்கும்.
14. மூத்திரக் கிரிச்சரப் பிரமேகம் :- குத்தலுடன் மஞ்சள்
நிறமான நீர் இறங்கல், துர்ப்பலம், நீர்க்கட்டு, நித்திரைப்பங்கம்,
அன்னத்துவேஷம், மனோசஞ்சலம், சர்வாங்கத்திலும் உளைச்சல்
என்னும் குணங்களை உண்டாக்கும்.
15. கரப்பான் பிரமேகம்
:- வயிற்றில் உளைச்சல், சீதம்,
விழல், நீரானது உஷ்ணமாகவும், கடுப்பாகவும் இறங்குதல், ஒரு
வேளை அத்துவாரத்தைப் புண்ணாக்கிச் சுண்ணாம்புக்கல்லைக்கரைத்த
சலம்போல் குத்தலுடன் இறங்கல், அழலையாய் வாட்டத்துடன்
கைகால் ஓய்தல், உடம்பெல்லாம் நெருங்கிய பெருஞ்சொறி என்னும்
குணங்களை உண்டாக்கும்.
16. கல்லுப் பிரமேகம் :- கோசத்தில் கள்ளைப்போல்
மேக நீர் கசிதல், தேகத்தில் கற்றாழை நாற்றம் வீசுதல். வயிற்றில்
கல்லைப்போல் மூத்திரஞ்சிக்கிகொண்டு விம்மி விருவிருப்புடன் நாபியைப்பற்றி உப்பிசமாகி பசியை அடக்கி கனத்தல்
என்னும்குணங்களை உண்டாக்கும்.
17. தந்துப்பிரமேகம் :- கோசத்தில் நோயுடன் சிலந்தி
நூலைப்போலத் தொங்குதல், வெளுத்த உதிரம் காணல், அக்கோசம்
விம்மும் போது வலித்தல்., மடிப்பில் கிருமி சேரல், விலாவில் குத்தல், மூத்திரந் துளி துளியாக விழுதல் என்னும்குணங்களை
உண்டாக்கும்.
18. நீர்ச்சுப்பிரமேகம் :- கள்ளை ஒத்த நீர் இறங்குதல்
வெளுத்த சீழ் வடிதல், கோசம் விம்மும்போது நோய், குத்தல், விருவிருப்பு, நரம்பு சுருங்குதல், அடிவயிற்றிர் சூலை, குளிர் என்னும்
குணங்களை உண்டாக்கும்.
19. மலினப்பிரமேகம் :- குய்யஸ்தானம், குதஸ்தானம்
ஆகிய இவ்விடத்து நரம்புகளில் குத்தலுடன் அடிக்கடி நோய்,
மயக்கம், நாவு கைத்தல், புறங்காலில் திமிர், வெள்ளை காணுதல்
வீணாத்தண்டின் முனையில் துர்மாமிசம் சுருண்டிருத்தல் என்னும்
குணங்களை உண்டாக்கும்.
20. மதுப்பிரமேகம் :- ஆண்குறியில் நோயுடன் தேன் போல்
நீரிறங்கல், அந்த நீரில் எறும்பு மொய்த்தல், நாளத்திற்குள் விரணம்
உடம்பில் ஒரு வித நாற்றம், அருசி, நாக்கு வரட்சி, மயக்கம்
என்னும் குணங்களை உண்டாக்கும்.
21. விரணப்பிரமேகம் :-
சர்வாங்கத்திலும், மிகுந்த நோயுடன்
விரணம், ஆண்குறி கனத்தல், அதிலிருந்து சீழும் ரத்தமும் கசிதல்,
அக்கணுவில் கறடு கட்டி நோதல், கடுத்தல், விருவிருத்தல் சரீரம்
வெதும்பல் என்னும் குணங்களை உண்டாக்கும்.