CHAPTER 2

Tamil Medicine

the most informative pages on Siddha, Ayurvedha, Tamil Medicine
நாடி விரணம்

நரம்புகளில் பிறக்கின்ற கட்டியானது பழுத்து உடைந்து விஷமித்தால் அந்த நரம்பைப்பற்றி, மாமிசதாதுமுதல் அஸ்திதாது வரையிலும் சிலையோடும். அது ஒரு நரம்பைப்பற்றினாலும் அதற்கு சகல நரம்புகளும் சம்மந்தப்பட்டு வலைப்பின்னல் போல் யிருப்ப
தால் சிலை ஒடுதற்கும் சீழ்கொள்ளுதற்கும் பலவழிகளுண்டு ஆதலால் இதை சிலையோட வொட்டாமல் வசப்படுத்தல் வேண்டும். இதுவே நாடிவிரணம். இதனால் நுரைத்த சலம்வடிதல், கருஞ்
சிவப்பு ரத்தம்வடிதல், அதிக நமைச்சல், மிகுந்த வேதனை என்னுங்குணங்களுண்டாம். இது வாதநாடிவிரணம், பித்தநாடிவிரணம், சிலேஷ்மநாடிவிரணம், திரிதோஷநாடிவிரணம், அஸ்திநாடி விரணம் என ஐந்து வகைப்படும்.

1. வாதநாடி விரணம் :- இது சூட்சும முகத்துடன் நிறபேத
மாகப் பிறந்து அதிக நோயைத் தரும். இக்கட்டியானது பழுத்து உடைந்தால், அதில் நுரைத்த சலம் வடிதலும் இரவில் கருஞ்சிவப்பு ரத்தம் ஒழுகுவதுமாக இருக்கும்.

2. பித்தநாடி விரணம் :- இது சுரம், தாகம், எரிச்சல் இவைகளை உண்டாக்கிக்கொண்டே பிறக்கும். இக்கட்டி பழுத்து உடைந்தால் மஞ்சள் நிறத்துடன் சுடுகையுள்ள துர்க்கந்த சீழும் ரத்தமும் பகற் காலத்தில் ஒழுகுவதாயிருக்கும்.

4. சிலேஷ்ம நாடி விரணம் :- இது தடித்து கெட்டிபட்டு
மினுமினுப்புடன் பிறக்கும். இக்கட்டி பழுத்து உடைந்தால் எந்நேரமும் சீழ் வடிவதாயிருந்தாலும் இரவு காலத்தில்மிதமில்லாமல் வடிந்தாலும். அதிக நமைச்சலும் உண்டாகும்.

5. திரிதோஷ நாடிவிரணம் :- இது வாத பித்த கிரணங்களுக்குள்ள குணங்களை யெல்லாம் உண்டாக்கும். இது அசாத்தியமாம்.

6. அஸ்தி நாடி விரணம் :- இது எலும்பின் மார்க்கத்தில்
பிறந்து அந்த எலும்பின் நரம்புகளுக்கு உபத்திரவத்தை தருவது மன்றி மிருதுவாய் இருக்கும். இக்கட்டி பழுத்து உடைந்தால் இதிலிருந்து அரைத்து சுடுகையுடன் ரத்தமும் சீழும் வடியும். இவ்விரணம் பிறந்த எலும்பை அறுத்து சிகிச்சை செய்யாவிடில் வசப்படாது. இதனை சல்லியநாடி விரணம் என்றும் கூறுவர்.