பொருட்களின் பண்பும் பயனும்
நீரின் குணம்
மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முத்லியன உண்டாக்கும். பனி நீரினால் வாதகோபம்,
வெகுமூத்திரம், சொறி சிரங்கு முத்லியன போம். மேற்கூறியது போக மற்ற நீர்கள் அவை
யிருக்கும் நிலத்தின் குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது ஆற்று சலம் திரிதோஷத்தால்
ஏறபட்ட நோய்களையும் பித்தகோபத்தையும் தாகத்தையும் தணிக்கும். குளத்து நீர், வாதம்,
மது மூத்திரம், சீதளம் இவைகளை உண்டாக்க்கும். கிணற்று சலம் சரீரக் கடுப்பு, அழற்சி,
வீக்கம், பித்த்ம் சுவாசம் முதலியவை
நீக்கும். ஏரிநீர் வாதத்தை விருத்திசெய்யும். சமூத்திர ஜலமானது பீலிகம், குன்மம்,
குஷ்டம், உதரநோய், சுரம் முதலிய நோய்களைப் போக்கும்.
குளிர்ந்தநீர் சீதவீரியமுள்ளது இதனை வாதரோகம், கண்ட நோய், மந்தம், மலபந்தம், விக்கல்
முதலிய
நோய்களை உடையவர்கள் அருந்துதல் கூடாது. வெந்நீரை அருந்த, அதாவது நன்றாக காய்ச்சி
அருந்துமளவு ஆற்றி அருந்த புளியேப்பம், சீதக்கட்டு, குன்மம், காசம், மந்தாக்கினி
நேத்திரப்பிணிகள்
முதலியவைகளை குணமாக்கும். இது உதரநோய், பாண்டு, சோபை, மேகம், விரணம், வாதம்,
அதிசாரம், கபநோய் முதலிய நோய்களை உடையவர்களுக்கு ந்ல்லது. காய்ந்து ஆறிய நீரானது
பித்தாதி திரிதோஷம், பைத்தியம், ரத்தபித்தம், சுரம், வாந்தி, மூர்ச்சை, அதிசாரம்,
சன்னிபாதம்
முதலிய நோய்கட்குச் சிறந்தது.
உணவுக்கு முன்பு நீரை அருந்த மந்தத்தையும், உணவுக்கு பின்பு அருந்த சீரணத்தையும்,
உணவுக்கு இடையிடையே அருந்த பல நோய்களையும் உண்டாக்கும். மற்றும் சூரிய
அஸ்தமனத்திற்கு
பின்பு அதிகமாக நீரை அருந்தக் கூடாது.
அன்னம் கஞ்சி இவைகளின் குணம்
அரிசியுடன் முறைப்படி நீர் சேர்த்து கொஞ்சங்கூட கஞ்சியில்லாம்ல் வடித்தெடுத்த
அன்னத்திற்கு
ஒதனமென்று பெயர். இதுவே சாதாரண அன்னமாம். இதனால் விரணயோகம், நேத்திரரோகம்,
துர்பலம், தைல பாணத்தால் உண்டான தோஷம் முதலியன நீங்கும். தீபன முண்டாகும்.
ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு நீர் விட்டு கஞ்சியை வடிக்காமல் எடுத்த
அன்னத்திற்கு
விலேபி என்று பெயர். இது தேகத்திற்கு ஆரோக்கியம், பசி பாசனம் முதலியவைகளை உண்டாக்கி
கிரகணி முதலியவைகளை போக்கும்.
ஒரு பங்கு அரிசியுடன் பதினான்கு பாகம் நீர் சேர்த்து சிறிது சாதம் தென்படும்படி
காய்ச்சிய
கஞ்சிக்கு பேயம் என்று பெயர். இது பசி, தாக்ம், ஆயாசம், துர்பலம், சுரம், வாதம்
இவைகளை
தணித்து பசிதீபனத்தை யுண்டாக்கும்.
ஒரு பங்கு அரிசியுடன் பதினான்கு பங்கு நீர் சேர்த்துக்கொஞ்சங்கூட அன்னம் தெரியாம்ல்
சுத்த கஞ்சி சலம்போல் காய்ச்சிய கஞ்சிக்கு மண்டமென்று பெயர். இது தாகம், ஆயாசம்,
தோஷம்
இவைகளை நீக்கும். தாதுவிருத்தி, தீபனம், வியர்வை இவைகளை யுண்டாக்கும். இது மிகவும்
மெலிந்தவர்களுக்கும் அதிசார நோயினருக்கும் பயன்படும்.
தானியங்கள்
பச்சரிசி :- இது பலத்தைத் தரும். பித்தத்தை தணிக்கும். வாதத்தை விருத்தி செய்யும்.
பத்தியத்திற்குதவாது.
புழுங்கலரிசி :- இது பாலர்முதல் விருத்தர்வரை யாவருக்கும் நோயாளிகட்கும் பொருத்தமான
உணவாகும். பத்தியத்திற்காகும்.
கோதுமை :- இது பலம், சுக்கிலம், பித்தம் இவைகளை விருத்தி செய்யும். வாதத்தையும்,
பிரமே
கத்தையும் நீக்கும். ஷயம் மது, மேகம் முதலிய நோயினருக்கு நல்ல உணவாகும்.
சோளம்:- ச்ச் தினவு, வீரணம், கரப்பான் முதலியன அதிகரிக்கும் நல்ல மருந்தும் கெடும்
.
கேழ்வரகு:- இது வாதம் அல்லது பித்தவாதத்தை உண்டாக்கும். பலம் எற்படும். இது கபதேதிக
ளுக்கு சிறந்த உணவாகும்.
கம்பு:- இதனால் சொரி, சிரங்கு உண்டாகும். ஆனால் உடலுக்கு பலத்தைதரும். சரீரத்தின்
வெப்பத்தைத்தணிக்கும் குளிர்ச்சி யென்பர்.
கடலை :- இது வயிற்றுவலி வயிற்றுப்புரம்,மந்தம், கிரகணி, மயக்கம், மூலவாயு
முதலியவைகளை
உண்டாக்கும். மருந்தின் குணத்தைக்கெடுக்கும்.
உளுந்து :- இது பித்தாதிக்கம், எலும்புறுக்கி முதலியவைகளை நீக்கும். கபவாதம்
இடுப்பிற்கு
பலம். வீரியவிருத்தி முதலியவைகளை உண்டாக்கும்.
துவரை :- இது சாதாரணமாக உடலுக்கு பலத்தைத்தருவதுடன் இது சிறந்த பத்திய உணவாகும்.
இது சுரம், சன்னி , முதலிய நோயிலும் , மிக மெலிந்தவர்களுக்கும், கடும்
பத்தியர்களுக்கும்,
உதவும் என்க.
பச்சைப்பயறு:- இது பித்தத்தை நீக்கும், வாய்வை உண்டாக்கும் சீதளமென்பர்.
பட்டாணி :- இது நூரையீரலுக்கும், இருதயத்திற்கும் வலிவைத்தரும். ஆனால்
வாய்வையும்,மந்தத்
தையும், உண்டாக்கும்.
மொச்சை :- திரிதோஷணங்களை விருத்தி செய்யும். உஷ்ணத்தைத்தணிக்கும், மலத்தைப்பெருக்
கும்.
பார்லியரிசி:- இது சிறுநீரைப்பெருக்கும், மந்தபேதியைக்கட்டும், பசியைத்தணிக்கும்.
சுரம்
முதலிய நோயாளிகளுக்கு கஞ்சிக்கு உதவும்.
கீரைகள்
சிறு கீரை :- நீரைப்பிரிக்கும், மருந்தையும் விஷத்தையும் முறிக்கும், சிறிது
உஷ்ணத்தை
உண்டாக்கும்.
அறு கீரை :- இதனால் வாதமும் கபமும் மட்டாகும், மலம் இளகும், வீரியவிருத்தி
முதலியவைக
ளை உண்டாக்கும்.
அரைக்கீரை: - இதனால் பித்தம் தணியும் , நீரை வரட்டும்.
அகத்திக் கீரை:- இதனால் பித்தம் தணியும் , மலமும் நீரும்
போகும். மருந்தையும் விஷத்தையும் முறிக்குமென்க.
முருங்கைக் கீரை :- பித்தத்தைதணிக்கும். மலத்தை இளக்கும்.
புதியனா :- இதனால் அரோசகம்,வாந்தி, பசியின்மை நீக்கும், ஜீரணசக்தியுண்டாகும்.
கருவேப்பிலை :- இதனால் அரோசகம், பேதி,சுரம், பித்தம், பசி மந்தம் இவைகள் போம்.
கொத்தமல்லிகீரை :- இதனால் அரோசகம், பித்தாதிக்கம், போம், சுக்கிலம் பெருகும்.
துத்திக்கீரை :- வெட்டையைத்தணிக்கும், விரணத்தை ஆற்றும்.
சுக்கான்கீரை :- உஷ்ணத்தைதணிக்கும், ஜீரணசக்தியையும், இரத்தசக்தியையும் உண்டாக்கும்.
சிறுபசலைகீரை :- உஷ்ணத்தைதணிக்கும், கபத்தை விருத்திசெய்யும் புணர்ச்சி யிச்சையை
உண்டாக்கும்.
புளிச்சகீரை :- பித்தம் தணியும் , வீரியவிருத்தியாம்.
சோகிக்கீரை :- வாய்வையும், உதிரச்சிக்கலையும் போக்கி, ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.
மணலிக்கீரை :- இது வாத பித்த கப தோஷங்களை தணிப்பதுடன் கிருமிகளை மடியச்செய்யும்
பத்தியத்திற்குதவும்.
புளியாரைக்கீரை :- இதனால் உஷ்ணமும், பித்தமும் சமனப்படும்
பொண்ணாங்காணிக்கீரை :- இதனால் உடலில் உஷ்ணம் தணியும்,கண்களுக்கு ஒலியும், உடலுக்
கு பலமும் மேனியுமுண்டாகும்.
மணத்தக்காளிக்கீரை :- வெட்டையைத்தணிக்கும், வாய்ரணத்தை ஆற்றும். மலத்தை இளக்கும்,
நீரைப்பிரிக்கும்.
காசினிக்கீரை :- இது இரத்தத்தை சுத்தி செய்வதுடன், இரத்த விரித்தியையும் உண்டாக்கும்,
மலத்தையும் நீரையும் பிரிக்கும்.
வெந்தயக்கீரை :- இது வயிற்றுவலி, பசிமந்தம், வாதகோபம், உஷ்ணத்தினால் ஏற்பட்ட இருமல்
முதலிவைகளையும் போக்கும்.
முள்ளங்கிக்கீரை :- நீரைப்பெருக்கும், பசிதீபனத்தையும்,ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.
முளைக்கீரை :- இவைகள் உஷ்ணத்தை தடுத்து நீரைப்பெருக்கும், சீதளமென்பர்.
அத்திக்காய் :- இதனால் பிரமேகம், வெட்டை, விரணம்,சூலை முதலியன நீங்கும், மலங்கழியும்.
அவரைப்பிஞ்சு :- இது இரவு போஜனத்திற்கும், மருந்துண்பவர்களுக்கும்,திரிதோஷத்திற்கும்
பத்திய உணவாகும்.
கத்திரிப்பிஞ்சு :- பித்தம், கபம் நீங்கும், காயாக இருப்பின் சிறிது உஷ்ணத்தைத்தரும்.
கொத்தவரை :- இது அபத்திய உணவாகும், மருந்தை முறிக்கும்,பித்தாதிக்கம், பித்தவாயு,
கபம்
முதலிவைகளை உண்டாக்கும்.
சுண்டைக்காய் :- கைப்பு சுவையுள்ள காயால் , மார்புச்சளி, கிருமிநோய், வாதாதிக்கம்
முதலியன
குணமாகும். இதன் வற்றல் சீதபேதி,கிரகணி இவைகட்கு நன்று.
சுரைக்காய் :- இதனால் வாதபித்தம், மார்புநோய், புலிகநோய் முதலியன உண்டாகும்.
பத்தியத்
திற்காகாது. சீதளமென்பர்.
பூசனிக்காய்:- இது உஷ்ணாதிக்கம்,மிகு பித்தம் இவைகளை நீக்கும். கபத்தையும் பசியையும்
உண்டாக்கும். உடலுக்கு வன்மை தரும்.
பாகற்காய் :- இதனால் கிருமி நோய்,திரிதோஷகோபம், பாதரசதோஷம் முதலியன குணமாகும்.
விரேசனத்தையுண்டாக்கும்.
பீர்க்கங்காய் :- இதனால் பித்தமும், சீதளமும் அதிகரிக்கும்.
புடலங்காய் :- இதனால் பித்தம், கபம், சுக்கிலம் இவைகள் அதிகரிக்கும்.
முருங்கைக்காய் :- இதனால் கபம் நீங்கும். விந்து கட்டும், பத்திய உணவாம்.
வாழைக்காய் :- இதனால் வாந்தி பித்தம் பேதி இவைகள் குணமாகும் இரத்த விரித்தியையும்
பலமும் உண்டாகும். வாதம் மிகும்.
வெண்டைக்காய் :- இதனால் அதிசாரம் , கிரகணி, சீதபேதி, முதலியன குணமாகும். விந்து
கட்டும்
கபவாதம் உண்டாகும்.
கலியாண பூசணிக்காய் :- உட்காய்ச்சல், பித்தம், மூத்திரகிரிச்சரம்,அஸ்திதாதுகதசுரம்,
இடுமருந்
து தோஷம் முதலியன போம் வாதம் மிகும்.
வாழைப்பழம் :- இதனால் பாண்டு பித்தப்பிணிகள் முதலியன தீரும். அதிகமாக உண்ணில் மந்தத்
தை உண்டாக்கும். மலத்தைப்போக்கும்.
பலாப்பழம் :- இதனால் வாதபித்த கபப்பிணிகள் யாவும் உண்டாகும். மிக்க உஷ்ணத்தையும்,
கரப்
பானையும் உண்டாக்கும்.
மாம்பழம் :- இதனால் சொரி, சிரங்கு , கரப்பான், சீதபேதி, வயிற்றுவலி முதலியன
உண்டாகும்.
பசிதீபனம் மட்டாகும்.
மாதுழம்பழம் :- இதனால், வாந்தி, கபம், விக்கல், தாகம், மாந்தம், சுரம், உஷ்ணாதிக்கம்,
பித்தாதிக்
கம்,இரத்தக்குறைவு, முதலியன நீங்கும். மலத்தைக்கட்டும்.
உலர்ந்ததிராட்சைப்பழம் :- இது மேக அழலையை தணிக்கும். மலத்தை இளக்கும், உதிரப்பெருக்
கையுண்டாக்கும்.
ஆழ்வள்ளிக்கிழங்கு :- இதனால் வாதாதிக்கம் ,திரிதோஷதொந்தம், குன்மம்,மந்தம், அக்கினி
முதலியனஉண்டாகும்.
உருளைக்கிழங்கு :- இது பலத்தை தரும். வாய்வைக்கண்டிக்கும், மந்தத்தையுண்டாக்கும்.
காராக்கருணைக்கிழங்கு :- இதனால் வாதநோய், இரத்தமூலம், அக்கினிமந்தம் முதலியன
குணமாகும். பத்திய உணவாம்.
சேப்பங்கிழங்கு :- இது கபத்தை விரித்திசெய்யும், மருந்தின் குணத்தை கெடுக்கும்.
இஞ்சி :- இதனால் சந்நிசுரம், வாந்தி, பேதி,சூலை, வாதாதிக்கம்,காசம்போம்,
பசிதீபனத்தையும்,
ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.
மஞ்சள் :- இதனால் தலைவலி, ஜலதோஷம், வலி, வீக்கம், வாந்தி,விரணம் முதலியன போம், பசி
தீபனமும், புருஷ வசியமும் உண்டாகும்.
முள்ளங்கி :- இதனால் குன்மம்,சூலை, குடல்வாதம், வாய்வு,கரப்பான், மூலகடுப்பு,கபம்,
முதலியன
குணமாகும். பசிதீபனமும், சிறுநீரையும் அதிகரிக்கும்.
வாழைக்கிழங்குஅல்லதுதண்டு :- இது சிறுநீரைப்பெருக்கும், கல்லடைப்பு, மகோதரம்,
மூத்திரக்
கிரிச்சரம், சோபை முதலிய நோய்கட்கு சிறந்தது.
வெங்காயம் :- இது தேக உஷ்ணம், மூலம், இரத்தபித்தநோய், சிரங்கு முதலியன குணமாகும்.
ஆல்பகோராப்பழம் :- இது உஷ்ணத்தையும், பித்தத்தையும், அரோசகத்தையும் நீக்கும். மலத்தை
இளக்கும்.
இளநீர் :- இது சூட்டைத்தணிக்கும்,சிறுநீரைப்பெருக்கும்,
பித்தகோபத்தையும்,கபாதிக்கத்தையும்
அடக்கும்.
எலுமிச்சம்பழம் :- இதனால் பித்தாதிக்கம், பைத்தியம்,கண்ணோய், வாந்தி, தாகம்,
பசியின்மை,
அஜீரணம், பேதி முதலியன குணமாகும்.
பழம்புளி :- பழைய புழியினால், திரிதோஷம்,வாதநோய், சூலை, வாந்தி, உஷ்ணாதிக்கம்
முதலியன
குணமாகும்.
பிரண்டை :- பசிமந்தம், அஜீரணம் , சூன்மம், அதிசாரம், கபதோஷம், இரத்தமூலம், முதலியன
குணமாகும்.
பச்சைமிளைகாய் :- இதனால் வாதாதிக்கம், துத்திரோகம், இடுப்புவலி, சீதள சைத்தியம்,
முதலியன குணமாகும்.
விழாம்பழம் :- விழாம்பழத்தினால் சுவாசம்,காசம், பித்தாதிக்கம், பித்ததாகம், முதலியன
குணமாகும்.
பசிதீபனமுண்டாகும்.
வெள்ளைப்பூண்டு :- இதனால் வாதம், சன்னிபாதம், கபாதிக்கம், சீதபேதி, நீரேற்றம்,
முதலியன
குணமாகும்.
கரும்பு :- கரும்பின் சாற்றால் வாய்க்குமட்டல், வாந்தி,விக்கல்,
பித்தநோய்கள்முதலியன குணமாகும்.
சர்க்கரை :- இதனால் பித்ததோஷம், வமனம், அரோசகம், குணமாகும். கபத்தை இளக்கும்.
மருந்து
களுக்கு சிறந்த அனுபானமாகும்.
கற்கண்டு : - இதனால் கபதோஷம், வாந்தி, காசம், வெப்பம் முதலியன குணமாகும்.
பனங்கற்கண்டு : - இதனால் வெப்பம், மூத்திரகிரிச்சரம்,உஷ்ணதாகம் முதலியன குணமாகும்.
பனைவெல்லம் :- இதனால் குன்மம், வாந்தி, அரோசகம், திரிதோஷதொந்தம். முதலியன குணமாகும்.
மூலிகைப்பொருட்கள்
ஆடாதோடை :- இதற்கு கோழையை அகற்றுஞ் செய்கையும், இசிவை அகற்றுஞ்செய்கையுமுண்டு
இதனால் இருமல், இரைப்பு, இரத்தபித்தம் முதலியன குணமாகும். இதன் இலைச்சுரம் 1/2
தேக்க
ரண்டிவீதம் தேன்கூட்டிகுடுக்க, இருமல், கபக்கட்டு முதலியன குணமாகும். ஆடாதோடையுடன்
சிறிது திப்பிலி அதிமதுரம், சிற்றரத்தை முதலியவைகளை சேர்த்து முறைப்படி
குடிநீரிட்டும்
வழங்க மேற்கூய நோய்கள் குணமாகும்.
ஆமணக்கு இலை :- இதற்கு வாதத்தை அடக்குஞ் செய்கையும், பாலைப்பெருக்கும்செய்கையு
முண்டு, இந்த இலையை குறுக்கு அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி கீல்வாயு, வாதரத்த
வீக்
கம், இவைகட்கு ஒற்றிடமிட்டு வரகுணமாகும். ஆமணக்கு இலையை ஆமணக்கு நெய்விட்டு
வதக்கி ஸ்தனங்களில் வைத்துக்கட்ட பாற்சுரப்பு உண்டாகும்.
துளசி :- இதற்கு கோழையை அகற்றுங்குணமுண்டு. இதனால் இருமல், இரைப்பு, சலதோஷம்,
மார்புச்சளி முதலியன குணமாகும்.
இதன் இலையை சரசம் செய்து குழந்தைகளுக்கு 10 துளி வீதமும், பெரியவர்களுக்கு 1/2தேக்க
ரண்டிவீதமும் தேன்சேர்த்து கொடுத்துவர மேற்கூய பிணிகள் குணமாகும். மற்றும் இது
கோரோசன
மாத்திரை கஸ்தூரி மாத்திரை முதலிய கபபிணிகட்கு வழங்கும் மருந்துகளுக்கு சிறந்த
அனுபான
மாகும்.
கண்டங்கத்திரி :- இதற்கு கோழையை அகற்றுஞ் செய்கையும், சிறு நீரைஅகற்றுஞ்செய்கையு
முண்டு. இதனால் சுரம், காசம், சுவாசம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாறு 1/2 முதல்
1
தேக்கரண்டிவீதம் கொடுத்துவர காசம், சுவாசம் கபகட்டு முதலியன குணமாகும். இதன்
சமூலத்தை
குடிநீரிட்டு கொடுக்க கபசுரம், காசம், சுவாசம் முதலியன குணமாகும்.
கரிசாலை :- இது உடலைத்தேற்றும், இதில் இரும்புச்சத்து உள்ளது. இதனால் பாண்டு, சோபை,
காமாலை, காசம், முதலியன குணமாகும். கரிசாலை இலையுடன் சமன்மிளகு சேர்த்து அரைத்து
1-2 சுண்டக்காய் அளவு மோரில் கொடுத்துவர பாண்டு, சோபை, காமாலை, காசம், முதலியன குணமாகும். கரிசாலை சாற்றுடன் சமன் நல்லெண்ணெய்கூட்டிப்பதமுறக்காய்ச்சி வடித்து
வைத்துக்
கொண்டு 1 தேக்கரண்டிவீதம் உண்டு வர காசம் குணமாகும். கரிசாலை சாற்றுடன் சமன்
நெல்லிக்
காய்ச்சாறும் நல்லெண்ணெய்சேர்த்துப்பதமுறக்காய்ச்சி வடித்து முடித்தைலமாக வழங்கி வர
உடல்
காங்கை, கண்ணெரிச்சல், கண்காசம், செவிநோய் முதலியன குணமாகும். இதன் இலைக்கற்கத்தை
கற்பமாகவும் உண்பதுண்டு.
கீழ்காய் நெல்லி :- இதற்கு துவர்ப்பு, குளிர்ச்சி செய்கைகள் உண்டு. இதனால்
தாதுவெப்பம், பிர
மேகம், முதலியன குணமாகும். இதன் சமூலத்தை அரைத்து கொட்டைப்பாக்களவு தினம் இரு
வேளை மூன்று நாள் உப்பில்லாப்பத்தியத்துடன் கொடுத்துவர காமாலை குணமாகும். மற்றும்
இதனால் வெள்ளை வெட்டை, பெரும்பாடு முதலியவைகளும் குணமாகும். இதன் கற்கத்தை
ல்லெண்ணெயிலிட்டு தைலமாகக்காய்ச்சி முடித்தைலமாக வழங்க பித்தாதிக்கம், விழிநோய்கள்
முதலியன குணமாகும்.
குப்பைமேனி :- இதற்கு வமனத்தை உண்டாக்கி கோழையை வெளிப்படுத்தும் செய்கையும் குடலி
லுள்ள கிருமிகளைக்கொலிலுஞ்செய்கையும் உண்டு. இதனால் கபாதிக்கம், சர்வவிஷம், புண்,
முதலியன குணமாகும். இதன் இலைச்சாற்றில் குழந்தைகட்கு 1 தேக்கரண்டிவீதமும்,
பெரியவர்க
ளுக்கு 1/2 அவுன்சு வீதமும் கொடுக்க பேதியாகும். மலக்கிருமிகளை வெளிப்படுத்தும்.
இருமலைத்
தணிக்கும். இலையை உலர்த்தி சூரணித்து 10 குன்றி எடை வீதம் தேனில் கொடுத்துவர இருமல்,
இரைப்பு, கபாதிக்கம் முதலியன குணமாகும். இதன் இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து
அரைத்து
சொறி, சிரங்கு,புண், விஷக்கடிகள் முதலியவைகட்கு பூச குணமாகும்.
உத்தாமணி :- இதற்கு வமனத்தை உண்டாக்கி கோழையை வெளிப்படுத்தும் செய்கையுமுண்டு,
இதனால் கபகட்டு, சுவாசம், மாந்தம், மலக்கிருமி முதலியன குணமாகும். இதன் சாற்றில்
1/2 தேக்
கரண்டியாவது அல்லது இதன் குடிநீரில் சங்களவையாது குழந்தைகட்கு கொடுக்க வாஎதியாகி
கோழை வெளிப்படும். இருமல் சுவாசகாசம் முதலியன குணமாகும். இன்னும் இது வயிற்றிலுள்ள
மலக்கிருமிகளை வெளியாக்கி, மந்தத்தை நீக்கி, தீபனத்தையுண்டக்கும். இதன் இலைசாற்றுடன்
சிறிது
உப்பும், வசம்பு சுட்டசாம்பலும் சேர்த்து கருக்கியாழமாகசெய்து குழந்தைகளுக்கு காணும்
அள்ளு
மாந்தம், அசீரணபேதி முதலியவைகட்கு வழங்குவதுண்டு.
ஊமத்தை :- இதற்கு இசிவகற்றி வேதனாசாந்தினி செய்கைகளுண்டு, இதனால் கட்டி, விரணம்
நஞ்சுகளின் விஷம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் சமன் தேங்காயெண்ணெய்
சேர்த்து காய்ச்சி இரண்டொரு துளி வீதம் காதில் துளித்துவர காது வலி குணமாகும்.
இன்னும்
இத்தைலத்தை விரணங்களுக்கும் மேற் பூசிவர விரைவில் ஆறும். இலையை ஆமணக்கெண்ணெய்
விட்டு வதக்கியாவது அல்லது அரிசிமாவுடன் சேர்த்து களிபோல் கிளறியாவது
வித்திரிகட்டிகள்,
வாதவீக்கம் இவைகளுக்கு வைத்துக்கட்ட, அல்லது ஒற்றிடமிட குணமாகும். இதன் இலை
அல்லது பூவைப்பொடித்து புகைப்பிடிக்க சுவாசகாசம் குணமாகும்.
எருக்கு :- இதற்கு சுரமகற்றி, கபஹரகாரி, புழுக்கொல்லி, முதலிய செய்கையுமுண்டு.
இதனால்
முறைசுரம், கபநோய், கிருமிநோய், வாதநோய், பாம்புவிஷம் , எலிவிஷம் , முதலியன
குணமாகும்.
இலையை வதக்கி கட்டிகளுக்கு வைத்துக்கட்ட, பழுத்துடையும். வாதநோய், வலிவீக்கம்
இவைகளுக்கு ஒற்றிடமிடலாம். இதன் பூவுடன்சமன் எடை அளவு மிளகு சேர்த்து அரைத்து மிளக
ளவு மாத்திரைகளை செய்து கொடுக்க சுவாசகாசம் முறைசுரம் முதலியன குணமாகும். எருக்கம்
பாலுடன் சமன் எண்ணெய் சேர்த்து தைலமாககாய்ச்சி வாதகுடச்சல், இசிவு முதலியவைகட்குப்
பூசிப்பிடிக்க குணமாகும்.
சீந்தில் :- இதற்கு முறை சுரமகற்றி, பித்தமகற்றி, உடல்தேற்றி முதலிய செய்கையுமுண்டு.
இத
னால் சுரம், ரத்தம், இரத்தபித்தம், மேகம் முதலியன குணமாகும். இதனை தனியாகவாவது
அல்லது
பேய்புடல், பற்பாடகம், கோரைக்கிழங்கு முதலியவற்றுடன் சேர்த்தாவது குடிநீரிட்டு
கொடுக்க
முறைசுரம், பித்தசுரம் முதலியன குணமாகும்.இதன் முற்றின கொடியினின்று '
சீந்திர்சர்கரை '
என்ற சத்து தயாரிப்பதுண்டு. இதில் வேளைக்கு 2முதல்5 குன்றி வீதம் பாலில் கொடுத்துவர
சுரம், உட்சுரம், பித்தாதிக்கம், காமாலை, மதுமேகம், மூத்திரப்பிணிகள்,
சுரங்களுக்குப்பின்
காணும் உடற்சோர்வு முதலியன குணமாகும்.
சித்திரமூலம் :- இதனால் மேகநோய்கள் வாதநோய்கள் , குன்மம் முதலியன குணமாகும். இதன்
வேர்பட்டையை பால் விட்டு அரைத்து கற்கம் சிறு இலந்தைவிதைப்பிரமாணம் தினம் ஒரு வேளை
வெள்ளாட்டுப்பாலில் கலந்து 5அல்லது7 நாள் பத்தியத்துடன் அருந்திவர
மூலம்,கிரந்தி,அரையாப்பு
புரையோடும்,விரணம், மேகசூலை முதலியன குணமாகும். சித்திரமூலவேர்பட்டையை பச்சையாக
எடுத்து அரைத்து எண்ணெயிலிட்டு காய்ச்சி முடித்தைலமாக உபயோகிக்க தலைபாரம், நீர்பீ
நசம், வாதப்பிணிகள் முதலியன குணமாகும்.
நாயுருவி :- இதனால் மந்தம், அதிசாரம், கபநோய், உதிரச்சிக்கல், குன்மம் முதலியன குணமா
கும். இதன் இலைச்சாறு அல்லது குடிநீர் வயிற்றுவலி, குன்மம் இவைகட்கு வழங்கப்படும்.
இதன்
வேர் சூரணத்துடன் மிளகுச்சூரணம் அல்லது திப்பிலி சூரணத்துடன் சேர்த்து தேனில்
அருந்த
இருமல் தீரும். விதை கற்கத்தை அரிசி கழுவியநீரில் கரைத்து அருந்திவர இரத்தமூலம், அதி
சாரம், முதலியன குணமாகும். இதன் சமூலத்தைச்சுட்டு சாம்பலாக்கி 5 குன்றி எடை வீதம்
வெல்லத்தில் கொடுக்க உதிரச்சிக்கலை நீக்கும்.
துத்தி :- இதற்கு மலத்தை இளக்கல், உள்ளழலை முதலிய செய்கையுமுண்டு. இதனால் மூலம்,
கட்டி, முதலியன குணமாகும். இதன் இலையை சமைத்தாவது அல்லது குடிநீரிட்டாவது, மூலச்சூடு
மலைச்சிக்கல் முதலியன குணமாகும். இலையை ஆமணக்கெண்ணெய்விட்டு வதக்கி மூலத்திற்கு
ஒற்றிடமிட்டு, அவ்விடத்திலேயேகட்டி வர வேதனை தணியும். இதன் இலைச்சாற்றுடன் பச்சரிசி
மாவு சேர்த்து களி கிளறி கட்டிகளுக்குவைத்துகட்ட பழுத்துடையும்.
வல்லாரை :- இதற்கு உடலைத்தேற்றல், உடலுக்குப்பலந்தருதல்,மேகப்பிணிகளை விலக்கல்,
முதலிய செய்கையும் உண்டு.இதனால் பித்தம், மேகநோய், குஷ்டம், மூலை, நரம்பு, பலவீனம்
ஞாபகசக்திகுறைவு முதலியன குணமாகும். இதன் இலைச்சூரணம் 2முதல்5 குன்றி எடை வீதம்
ஒரு மண்டலம் அருந்த சர்மவியாதிகள், மேகநோய்கள், பைத்தியம், ஆரம்பகுட்டம் முதலியன
குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் நெய்சேர்த்து கிருதமாக காய்ச்சி அருந்திவர நரம்பு
பலவீனம், ஞாபகசக்திகுறைவு ,கணமாந்தம், இளைப்பு முதலியன குணமாகும்.
காக்கட்டான் :- இதற்கு மலத்தைப்போக்கல், சிறுநீரை பெருக்கல் முதலிய செய்கையும் உண்டு.
இதனால் மலக்கட்டு, மலக்கிருமி, பிரமேகம், யானைக்கால்வாதம் முதலியன குணமாகும். இதன்
விதையை இளவறுப்பாய் வறுத்திடித்துச்சூரணஞ்செய்து 15-20 குன்றியளவு கொடுக்க நன்றாக
பேதி
யாகும். இதன் வேர் கற்கம் சிறு கழற்சியளவு அல்லது வேரை ஊறல் குடிநீராகவும் செய்து
வழங்க
லாம். இதனால் பேதியாவதுடன் யானைக்கால், சுரம், வாதம்,வாதாதிக்கம், மலக்கிருமி
முதலிய
நோய்கள் குணமாகும்.
புங்கு :- இதனால் கிரந்தி,புண், சொறி, சிரங்கு, கரப்பான் முதலியநோய்களும்,
சர்மவியாதிகளும்
மேகநோய்களும் குணமாகும். புங்கம் பூவை வறுத்திடித்து சூரணித்து திரிகடிபிரமாணம்
தினம்
இரு வேளையாக ஒரு மண்டலம் அருந்த மேற்கூறிய நோய்கள் குணமாகும். புங்கம் பாலுடன்
தேங்காய்பாலை சேர்த்து தைலபதமாக காய்ச்சி வடித்து விரணங்களின்மேல்தடவி வர விரைவில்
ஆறும்.
ஆவாரை :- இதற்கு சங்கோசனகாரி, பலகாரி, முதலிய செய்கையும் உண்டு. இதனால் வெள்ளை,
வெட்டை, கிரகணி, உட்சூடு, நீரிழிவு, முதலியன குணமாகும். இதன் உலர்ந்த பூ அல்லது
பட்டை
யை, 1/2 பலம் எடுத்து முறைப்படி குடிநீரிட்டுக்கொடுக்க நீர்சுருக்கு, பிரமேகம்,
நீரிழிவு, தாகம்,
தேக காங்கை ,கிரகணி பெரும்பாடு முதலியன குணமாகும்.
ஆவாரை இலை வேர், பட்டை, பூ, காய் என்ற பஞ்சாங்கங்களையும் சமனெடையாக சூரணித்து
கலந்து வேளைக்கு 1/2 முதல் 1 வராகனெடை வீதம் தினம் இரு வேளையாக அருந்திவர மதுமேகம்
முதலியன குணமாகும்.
அவுரி :- இதற்கு கிருமிநாசினி, வெப்பகற்றி நஞ்சகற்றி செய்
கைகளுண்டு. இதனால் சுரம், சன்னி, விஷக்கடி தாவரகந்தமூலவிஷம்
முதலியன குணமாகும். அவுரி இலை அல்லது வேரைக் குடிநீரிட்டுக்
கொடுக்க எல்லா விஷங்களையும் முறிக்கும். அவுரி வேருடன் சமன்
மிளகு சேர்த்து குடிநீரிட்டு கொடுக்க வாதசுரம் சன்னிபாசுரம்
விஷக்கடிகள் அதனாலுண்டான் சுரம் முதலியன குணமாகும்.
இலைக்கள்ளி :- இதற்கு கபஹரகாரி விரேசனகாரி செய்கைகள்
உண்டு. இதனால் குழந்தைகட்கு உண்டாகும்கருங்கிரந்தி, செங்கிரந்தி,
கபாதிக்கம், மாந்தம்,மலக்கட்டு முதலியன குணமாகும். இதன்
இலையை வதக்கிப் பிழிந்தச்சாறு 2-3 துளி காதில்விட காதுவலி
குணமாகும். இதன் இலைச்சாற்றை குழந்தைகட்கு அரைத் தேக்கரண்டி வீதம் தாய்ப்பாலில் கொடுக்க இருமல், இரைப்பு, கபக்
கட்டு கரப்பான் முதலியன குணமாகும். மலங் கழியும்.
கொடிக்கள்ளி :- இதன் பாலுடன் வேப்பெண்ணெய் சேர்த்து
காய்ச்சி வாதநோயகளுக்கு மேலுக்கு பூசிப்பிடிக்க குணமாகும்.
நொச்சி :- இதன் வேர் குடிநீர் அல்லது வேர் சூரணம் 5-10
குன்றி எடை தேனில் கொடுக்க சுரம், வாதநோய், இசிவு, வாத
சுரம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் எண்ணெய்
சேர்த்து காய்ச்சி முடித்தைலமாக வழங்க சிரோபாரம், நீர்
கோவை, பீநசம் குணமாகும்.
பொடுதலை :- இதன் இலையை வதக்கி, வறுத்த ஓமத்துடன்
சேர்த்தரைத்து நீர் சேர்த்துகுடிநீரிட்டு சங்களவு வீதம் குழந்தை
கட்கு வழங்க அஜீரணபேதி, மாந்தம், முதலியன குணமாகும்.
இதன் இலை கற்கத்தை நல்லெண்ணெய்யிலிட்டு சூரியபுடமாக வைத்
தெடுத்து மேலுக்கு தடவிவர தலையில் உண்டாகும் பொடுகு, புழு
வெட்டு, மயிர் உதிர்தல் முதலியன குணமாகும்.
அம்மாம்பச்சரிசி :- இதன் சமூலத்தை அரைத்து கொட்
டைப்பாக்களவு பால் அல்லது மோரில் தினம் ஒரு வேளை வீதம்
ஏழு நாள் கொடுக்க, வெள்ளை வெட்டை குணமாகும்.
சிறு பீளை :- இதன் இலைச்சாறு ஒரு அவுன்சு வீதம் கொடுக்க
நீரடைப்பு, கல்லடைப்பு பெரும்பாடு முதலியன குணமாகும்.
நல்வேளை :- இதன் இலை கற்கம் அல்லது குடிநீர் கொடுக்க
வாதநோய்கள் குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் எண்ணெய்
சேர்த்து காய்ச்சி மேலுக்கு தடவிவர வாதப்பிடிப்பு
குடைச்சல் முதலியன குணமாகும்.
வாத நாராயணன் :- இதற்கு இலகு மலகாரி, வாதமரஹாரி
செய்கைகள் உண்டு. இதனால் வாதநோய்கள் குணமாகும். இதன்
இலையை வாதநோய்க்கு ஒற்றிடமிடப் பயன்படும். மற்றும் இத
னைச்சேர்த்து தைலமாக காய்ச்சி வாதநோய்க்கு உள்ளுக்கும்
வழங்குவதுண்டு.
தழுதாளை :- இதன் இலையை நீரிட்டுகாய்ச்சி வதவலி
யுள்ள பாகங்களில் தாரையாக விட்டுவர நோய் குணமாகும். இதன்
இலை அல்லது வேரை எணெய்யிலிட்டு காய்ச்சி வாதப் பிடிப்புகளுக்கும் தடவுவதுண்டு.
விழுதியிலை :- இதன் இலையை குடி நீரிட்டு அத்துடன் சிறிது
ஆமணக்குநெய் சேர்த்து கொடுக்க பேதியாகி, வாத நீரை வெளிப்படுத்தி, வாதப்பிணிகள் குணமாகும். இதன் இலையை நீரிட்டுகாய்ச்சி வதவலியுள்ள பாகங்களில் விட்டுவர நோய் குணமாகும்.
முட்சங்கன் :- இதன் இலைச்சாறு கோழையை வெளிப்
படுத்தி, இருமலை தணிக்கும். இதன் வேரை குடி நீரிட்டு கொடுக்க
முறைசுரம், குன்மம், வாதநோய், சோபை குழந்தைகட்கு காணும்
மாந்தம், சுரம், இருமல் முதலியன குணமாகும்.
சங்ககுப்பி :- இதன் இலைக் குடிநீர் முறை சுரத்தைக் குணமாக்கும். மற்றும் இதனால் இரத்தம் சுத்தப்பட்டு மேக நோய்கள் குணமாகும்.
அசோகு:- இதன் மரப்பட்டையை இடித்து சாறு எடுத்துதா
வது அல்லது குடிநீரிட்டாவது கொடுத்து வர சீத ரத்தபேதி,
பெரும்பாடு முதலியன குணமாகும். இது கருப்பைக்கு உரத்தைத்தரும்.
அத்தி :- அத்திப்பிஞ்சை சமைத்துண்ண மூலச்சூடு வயி
றுக்கடுப்பு முதலியன தீரும். அத்திப்பட்டையை குடி நீரிட்டு கொடுக்க
சீத ரத்தபேதி, பெரும்பாடு பிரமேகம் முதலியன குணமாகும். அத்திப்
பழம் மலத்தை இளக்கும்.
இஞ்சி :- இதற்கு வயிற்றுலுள்ள வாயுவை கண்டித்து, பசி
தீயையும், ஜீரணத்தையும் உண்டாக்கும் செய்கைகள் உண்டு. இதனால் சுரம்,சந்தி, வாதசோபம், பித்தாதிக்கம், வாந்தி, மயக்கம்,
அஜீரணம், பேதி, கபம், முதலியன குணமாகும். இஞ்சிச் சாறு
அல்லது இஞ்சிக்கற்கத்தில் திப்பிலிச் சூரணத்தி சேர்த்துக்
கொடுக்க இருமல், இரைப்பு, குன்மம், அஜீரணப் பேதி, முதலியன
குணமாகும். இஞ்சிச் சாறுடன் சமன் பாலும் சர்க்கரையும்
சேர்த்து மணப்பாகு செய்து அருந்திவர பித்தாதிக்கம், வாந்தி,
அஜீரணம், அரோசகம் முதலியன குணமாகும். இஞ்சிச் சாறுடன்
சமன் பாலும் நல்லெண்ணெய்யும் சேர்த்து தைலமாக காய்ச்சி
முடித்தைலமாக உபயோகிக்க நீர், பீனசம், தலைவலி முதலியன
குணமாகும்.
எலுமிச்சை :- இதற்கு பித்தனாசினி குளிர்ச்சியுண்டாக்கி
செய்கைகள் உண்டு. இதனால் பித்தமயக்கம், வாந்தி, தாகம்
முதலியன குணமாகும். எலுமிச்சம்பழச் சாற்றுடன் சர்க்கரை
சேர்த்து நீருடன் கலந்து குடிக்க பித்தமயக்கம், வாந்தி, தாகம்
முதலியன குணமாகும். சீரகத்தை தேன் விட்டு வறுத்து, அத்துடன் பழச்சாறு சேர்த்து நீர் விட்டு குடிநீரிட்டு வழங்க நேர்வாளம் முதலிய பேதி மருந்துகளினால் ஏற்பட்ட அடங்காத வாந்தி
யும் பேதியும் குணமாகும்.
தராயிலை :- இதனால் விரணம் கிரந்தி முதலியன குணமாகும்.
பெண்களுக்குண்டாகும் உதிரச் சிக்கல் நீங்கும். இந்த இலையை
அரைத்து கிரந்தி பிளவை கட்டி முதலியவைகட்கு மேலுக்கும்
போட்டுவர விரைவில் ஆறும். உலர்ந்த தராயிலையுடன் சமனெடை
காட்டுச் சீரகஞ் சேர்த்து இடித்துக் கல்வத்திலிட்டு வெள்ளாட்டுப்
பிச்சி நீர் விட்டு நாலைந்து நாட்கள் அரைத்து தேற்றறான் கொட்டைப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி வேளைக்கு
1-மாத்திரை வீதம் தினம் 2-வேளையாக ஒரு மண்டலம் அருந்திவர
வெண்குட்டம் குணமாகும்.
பிரமதண்டு :- இதனால் சொறி சிரங்கு, புண், மேகப்பிணிகள்
முதலியன தீரும். இதன் இலைச்சாறு 2-முதல் 4-தேக்கரண்டி
வீதம் தினம் ஒரு வேளையாக காலையில் அருந்திவர மேற்கண்ட
நோய்கள் தீரும். இதன் பால் கண்ணோய்கட்கும், வித்து மேக
நோய்கட்கும் உதவும்.
இம்பூரல் :- இதனால் இருமல், இர்த்தகாசம், பித்த கோபம்,
இரத்தவாந்தி முதலியன குணமாகும். இதன் வேரை உலர்த்தி
இடித்துச் சூரணித்து திரிகடி பிரமாணம் கற்கண்டு தூள் சேர்த்து
தினம் இருவேளையாக பாலில் அருந்திவர மேற்கண்ட நோய்கள்
குணமாகும்.
நாவல் :- இதன் பட்டையை சூரணித்தாவது குடிநீரிட்டா
வது அருந்திவர சீதபேதி, இரத்தபேதி, பெரும்பாடு முதலியன
குணமாகும். இதன் கொட்டையைத் தூள்செய்து கல்வத்திலிட்டு
ஆடு தின்னாப்பாளை சாறுவிட்டு இரண்டு மூன்று நாள் அரைத்து
குன்றியளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி வேளைக்கு
1-மாத்திரை வீதம் தினம் 2-வேளையாக ஒரு மண்டலம் அருந்திவர
நீரிழிவு மதுமேகம் குணமாகும்.
நெருஞ்சில் :- இதற்கு சிறுநீரைப் பெருக்குஞ் செய்கையுண்டு.
இதனைத் தனியாகவாவது அல்லது நீர்முள்ளி, சுரைக்கொடி, சிறுபிளை போன்ற சரக்குகளுடனாவது சேர்த்து முறைப்படி குடிநீரிட்
டுக் கொடுப்பதுண்டு. இதனால் நீர் நன்றாக போவதுடன் நீர்சுருக்கு
நீரடைப்பு, கல்லடைப்பு, சோபை, மகோதரம் முதலியன
குணமாகும்.
கடைச் சரக்குகள்
சுக்கு :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அற்றுஞ் செய்கையும், பசித்தீயை தூண்டும் செய்கையும் உண்டு. இதனால் வயிற்று
வலி, வயிற்றுப்பொருமல், அசீரணம், பேதி, குன்மம், சூலை, வாய்வ முதலியன குணமாகும். சுக்குத்தூளில் திரிகடிப்பிரமாணம் எடுத்து
சமன் கற்கண்டு சேர்த்து பாலில் அருந்திவர வாய்வு நீங்கும். சுக்கிற்க்கு உப்பை அரைத்து கவசஞ் செய்து நெருப்பணலில் வாட்டவும்.
இப்படி 10முறை செய்து இடித்து சூரணித்து வைத்துக்கொண்டு
இதில் வேளைக்கு 1/4முதல் 1/2 வராகனெடை வீதம் அருந்தி
வர, வயிற்றுவலி, வயிற்றுப்பிசம், அசீரணம், உஷ்ணபேதி, குன்மம்,
சூலை முதலியன குணமாகும்.
மிளகு :- இதற்கு முறைசுர மகற்றி, வாதமகற்றி செய்கையும்
உண்டு. இதனால் குளிர்சுரம், வாய்வு, சுரம், அசீரணம், முதலியன
குணமாகும். மிளகை இளம் வறுப்பாக வறுத்தி டித்துச் சூரணத்தில்
நாலைந்து குன்றினெடை வீதம் சமன் கற்கண்டு தூள் கூட்டிப் பாலில்
கொடுத்து வர இருமல், தொண்டை, ரணம், வாய்வு, வயிற்றுவலி,
முதலியன குணமாகும். மிளகைத் தனியாகவாவது அல்லது தும்பைப்பூவுடன் சேர்த்தாவது முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து
வர குளிர்சுரம், முறைச்சுரம் முதலியன குணமாகும்.
திப்பிலி :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அற்றல், கபத்
தை சமணப்படுத்துதல் சீரணசக்தியை உண்டாக்கல் முதலிய செய்கையு முண்டு. இதனால் இருமல், தொண்டை, கபக்கட்டு, இரைப்பு
நோய், அசீரணம், பேதி, முதலியன குணமாகும். திப்பிலி யை
இளம் வறுப்பாக வறுத்தி டித்தச் சூரணத்தில் திரிகடிப்பிரமாணம்
தேனுடன் சேர்த்து அருந்திவர இருமல், தொண்டைக்கட்டு, கபம்
முதலியன குணமாகும். திப்பிலியுடன் இரண்டு பங்கு சீரகம்
சேர்த்து இளம் வறுப்பாக வறுத்தி டித்தச் சூரணத்து தேனில்
கொடுத்து வர விக்கல், வாந்தி, அரோசகம், அசீரணபேதி, பசியின்மை முதலியன குணமாகும்.
கடுக்காய் :- இது துவர்ப்புச்சுவை யுடையதாக இருப்பி
னும் மலத்தைப் போக்கும் செய்கையுடையது.
கடுக்காய் :- இதனால் வாதகப
நோய்கள் காமாலை, பெருவயிறு, குன்மம், விரணம் முதலியன குணமா
கும். கடுக்காய்த்தோலை குடிநீரிட்டு விரணம், இரத்தமூலம்,
பெரும்பாடு, வாய், ரணம் முதலிய நோய்களில் அவ்வவ்விடங்களைக்
கழுவிவர நல்ல பலனைத் தரும். கடுக்காய்ச் சூரணம் 1/2 வராக
னெடை அருந்த மலங்கழியும். கடுக்காய் சூரணத்தில் வேளைக்கு
5முதல் 10 குன்றி வீதம் காலைதோறும் தினம் 1 வேளை சாப்பிட்டு
வர உந்திரணம், வயிற்று வலி, மூலம், குன்மம், வாதகப நோய்கள்
முதலியன குணமாகும். கற்பமாகவும் பயன் படும்.
நெல்லிக்காய் :- பச்சை நெல்லிக் காய்க்கு குளீச்சி யுண்டாக்
கும் செய்கையும்உண்டு. இதுவும் மலத்தைப் போக்கும். பச்சை நெல்லிக்காய்ச்சாறுடன் சமன் சர்க்கரை சேர்த்து மணப்பாகு செய்து 2முதல்
4 தேக்கரண்டி வீதம் அருந்தி வர வாந்தி, அரோசகம், இரத்தபித்தம், நீர்சுருக்கு முதலியன குணமாகும். ஒரு தோலா நெல்லிவற்
றலை ஒர் இரவு வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி
வடித்து பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டுவர பித்தாதிக்கம், உட்சூடு,
முதலியன குணமாகும்.
தான்றிக்காய் :- இதற்கு துவர்ப்புச்செய்கையும், கோழை
அகற்றுஞ் செய்கையும்உண்டு. இதுவும் மலத்தைப் போக்கும்.
இதனால் சுவாசம், காசம், இரத்தபித்தம், கீழ்மேகம், முதலியன
குணமாகும். தான்றிக் காய்த்தோல் 1/4 பலம் எடுத்து சூரணித்துச்
சமன் சர்க்கரை சேர்த்து நீரிலாவது அல்லது தேனுடனாவது அருந்தி
வர உஷ்ண இருமல்,கபக்கட்டு, ரணம், தொண்டை, நீர்சுருக்கு
பிரமேகம் முதலியன குணமாகும். தான்றிக் காய்த்தோலைக் குடிநீரிட்டு வாய் கொப்பளித்துவர வாய் ரணம், பல் வலி முதலியன
குணமாகும். விரணங்களை கழுவிவர விரைவில் ஆறும்.
சீரகம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், பசித்
தீயைத்தூண்டல், சீரண சக்தியை உண்டாக்கல், மலத்தைக்கட்டல்
முதலிய செய்கையும்உண்டு. இதனால் அசீரணம், அதிசாரம்
கிரகணி, பித்தாதிக்கம், முதலியன குணமாகும். சீரகத்தைதனியாக வாவது, அல்லது சிறிது மிளகு சேர்த்தாவது வறுத்து இடித்துச் சூரணித்து1/4 அல்லது1/2 வராகனெடைவீதம் நெய்யில்கொள்ள
மந்தம், அசீரணம், பேதி முதலியன குணமாகும். சீரகத்தை இஞ்சிச் சாற்றிலும், பழச் சாற்றிலும், ஊறவைத்து உலர்த்தி இடித்துச்சூரணித்து சமன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக
கொண்டு வேளைக்கு 1/2 முதல் 1 வராகனெடைவீதம் தினம் இரு
வேளையாக அருந்திவர பித்தாதிக்கம்,வாந்தி, அரோசகம், அசீணம் முதலியன குணமாகும். சீரகத்தை எண்ணெய்யிலிட்டுக்
காய்ச்சி வடித்து தலைமுழுகி வர பித்தமயக்கம், நேத்திரரோகம்
தலைபாரம் முதலியன குணமாகும்.
கருஞ்சீரகம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல்,
சூதகச் சிக்கலை அகற்றல், கிருமிகளை நாசம் செய்தல் முதலிய
செய்கையும்உண்டு. இதனால் கரப்பான், விரணம், வயிற்றுப் பொருமல், கிருமிநோய், குன்மம், சூதகச் சிக்கல் முதலியன குணமாகும்.
இதனுடன் சமன் சுக்கு சேர்த்து இடித்துச் சூரணித்து 1/4 விராக
னெடை வீதம் நீரில் கொடுத்துவர வயிற்றுப் பொருமல், வயிற்று
வலி, மார்புவலி, குன்மசூலை முதலியன குணமாகும். இதை காடிவிட்டரைத்து கரப்பான், சொறி, சிரங்கு, சர்மபடைகள் முதலியவற்
றிற்குப் பூச குணமாகும்.
பெருஞ்சீரகம் :- இதுவே சோம்பு எனப்படும். இதனால்
வெட்டை, நீர்சுருக்கு, அசீரணம், வயிற்றுப் பூசம், குன்மம், இருமல்
சுவாசம் முதலியன குணமாகும். இதனை இளவறுப்பாய் வறுத்திடித்து சூரணித்து 1/4 வராகனெடைவீதம் சமன்சர்க்கரை
சேர்த்து அருந்திவரலாம். இதனை குடிநீர் அல்லது தீநிர் செய்தும்
வழங்குவதுண்டு.
இலவங்கம் :- இதற்கு இசிவகற்றல், வயிற்றிலுள்ள வாயுவை
அகற்றல், பசித்தீயைத்தூண்டல், முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, வாந்தி, கண்ணோய், பல்வலி முதலியன குணமாகும்.
இதை நீர்விட்டரைத்து நெற்றியில் தடவ சலதோஷம், நீரேற்றம்
தலைபாரம் முதலியன குணமாகும். இதன் ஊறல் குடிநீர் வாந்தி
பேதி முதலியவற்றிற்கு வழங்குவதுண்டு. இதன் தைலம் பல்வலிக்குத் தடவ குணத்தைத் தரும். இன்னும் இதனை இருமல், இரைப்பு
முதலியவற்றிற்கு வழங்குவதுண்டு.
இலவங்கப்பட்டை :- இதற்கு துவர்ப்புச்செய்கை உண்டு.
இதனால் பேதி, சீதபேதி, தாதுநட்டம் முதலியன குணமாகும்.
இதனைத் தனியாகவாவது அல்லது காய்ச்சுக்கட்டியுடன் சேர்த்தாவது சூரணஞ் செய்து கொடுத்துவர பேதி, சீதபேதி, கிரகணி
முதலியன குணமாகும்.
ஏலக்காய் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல்,
பசித்தீயைத்தூண்டல், முதலிய செய்கைகள் உண்டு.இதனால் வாந்தி
தாகம், பித்தாதிக்கம், உஷ்ணபேதி முதலியன குணமாகும். ஏலக்
காயை சதைத்து நீரிட்டு காய்ச்சி அருந்த தாகம், பித்தம், வாந்தி
முதலியன குணமாகும்.
சிறுநாகப்பூ :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல்,
பசித்தீயைத்தூண்டல், மலத்தைக்கட்டல் முதலிய செய்கைகள்
உண்டு. இதனால் பேதி, சீதபேதி, வாய்வு, இருமல், விரணம் முதலியன குணமாகும். இதனை நெய்விட்டு இளவறுப்பாய் வறுத்திடித்து
சூரணித்து வைத்துக் கொண்டு வேளைக்கு 1/4, 1/2 வராகனெடை
வீதம் அருந்திவர அசீரணம், பேதி, சீதபேதி, இரத்தமூலம்,
பெரும்பாடு, கபத்தோடு கூடிய இருமல் முதலியன குணமாகும்.
வெந்தயம் :- இதற்கு மலத்தைக்கட்டல் , உள் அழலை ஆற்றல், உடலை உரமாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால்
பேதி, சீதபேதி, இரத்தபித்தம், பிரமேகம், கணச்சூடு, அஸ்திசுரம்
தாது நட்டம் முதலியன குணமாகும். வெந்தயத்தை நீரிலிட்டு
வேகவைத்து, தேன் விட்டு கடைந்து அருந்தி வரலாம். இதனால்
மேற்கூறப்பட்ட பலன்கள் உண்டாகும்.
கடுகு :- இதற்கு மேலுக்கு வெப்பமுண்டாக்கி, தடிப்புண்
டாக்கி செய்கைகளும்; உள்ளுக்குள் வாந்தி யுண்டாக்கல், சீரணத்தை யுண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால்
பசிமந்தம், வாததோஷம், விக்கல் முதலியன குணமாகும். 1 முதல் 4
வராகனெடைக் கடுகை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க
வாந்தியாகும். இது வமன சிகிச்சைக்கு பயன்படும். கடுகுத்தூள் 1-2 வராகனெடை ஆழாக்கு வெநீரில் ஊறல் குடிநீராகச்
செய்து வடித்துக் கொடுக்க விக்கல் குணமாகும். வாதரோகங்கட்கு
கடுகை அரைத்து பற்றிடுவதுமுண்டு.
ஓமம் :- இதற்கு இசிவகற்றல், வயிற்றிலுள்ள வாயுவை
அகற்றல், பசித்தீயைத்தூண்டல், மலத்தைக் கட்டல்முதலிய
செய்கைகள் உண்டு. இதனால் மந்தம், அசீரணபேதி, வயிற்றுப்
பொருமல் முதலியன குணமாகும். ஓமத்துடன் சமன் மிளகு
சேர்த்து இளவறுப்பாய் வறுத்திடித்துச் சூரணித்து திரிகடிப் பிரமாணம் வெல்லத்துடன்சேர்த்து அருந்திவர மந்தம், அசீரணபேதி,
வயிற்றுவலி முதலியன குணமாகும். ஓமத்துடன் பொடுதலை சேர்த்துக் குடிநீர்செய்து குழந்தைகட்குக் காணும் மாந்தக் கழிச்சலுக்கு
வழங்குவதுண்டு. ஓமத் தீநீர் செய்தும் வழங்குவதுண்டு.
பெருங்காயம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை அகற்றல்,
இசிவை யகற்றல், ரிதுவை யுண்டாக்கல் முதலியச் செய்கைக
ளுண்டு. இதனால் வயிற்றுப்புசம், அசீரணம், குன்மம், வாதாதிக்கம், சூதகச்சிக்கல், செவிநோய் முதலியன குணமாகும். பெருங்காயத்தை நீர் விட்டரைத்து சீதள சைத்திய வீக்கங்களுக்கு
மேலுக்கு பற்றிட குணமாகும். காயத்தை நல்லெண்ணெயிலிட்டுக்
காய்ச்சி காதில்விட காதுவலி குணமாகும். காயத்தைச் சிறிது
நெய்விட்டு பொரித்துப் பொடித்து 2-3 குன்றிஎடைவீதம் வெல்லத்துடன் சேர்த்து அருந்திவர வயிற்றுவலி, வயிற்றுப்புசம், அசீரணம்
முதலியன குணமாகும். பொரித்த காயத்துடன் வெள்ளைப் பூண்
டும் வெல்லமும் சேர்த்து அரைத்துக் கொடுத்துவர மாதர்களுக்கு
பிரசவத்திற்குப்பின்காணும் உதிரச்சிக்கலை ந்ன்கு வெளிப்படுத்தும்.
கடுகுரோகணி :- இதற்கு மலத்தைப் போக்கல், முறைசுர
மகற்றல் முதலிய செய்கைகள் உண்டு. இதைத் தனியாகவாவது
அல்லது இதர சரக்குகளுடன் சேர்த்தாவது மலக்கட்டுடன் கூடிய
சுரத்திற்குக் குடிநீரிட்டு வழங்குவதுண்டு.
சாதிக்காய் :- இதற்கு முக்கியமாக வயிற்றிலுள்ள வாய்வை
யகற்றல், மலத்தைக் கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. மற்றும்
காமத்தைப் பெருக்கல், உடலுக்கு உரம்தரல் முதலிய செய்கை
களும், அதிக அள்வில் மயக்கத்தை உண்டாக்கும் செய்கையும்
உண்டு. இதனால் பேதி, கிரகணி, தாது நட்டம் முதலியன குணமாகும். ஒரு பங்கு சாதிக்காயுடன் இரண்டு பங்கு சீரகம் சேர்த்திடித்துச் சூரணம் செய்து வேளைக்கு திரிகடிபிரமாணம் சமன் சர்க்கரை சேர்த்து அருந்திவர முற்கூறப்பட்ட பிணிகள் குணமாகும்.
சாதிக்காயின் மேலே மூடியுள்ள தோலுக்கு சாதிபத்திரி யென்று
பெயர். இதற்கும் சாதிக்காயின் செய்கையே உண்டு. இதையும்
சாதிக்காயைப்போலவே பேதி கிரகணி முதலியவைகட்கு வழங்கும்
மருந்துகளிலும், தாது விருத்திக்குரிய லேகியங்களிலும் சேர்ப்பதுண்டு.
தாளிசபத்திரி :- இதற்கு கோழையகற்றல், பசித்தீயைத் தூண்டல், மலத்தை கட்டல், உடலுக்கு உரம்தரல் முதலியச் செய்கைகள் உண்டு. இதனால் அசீரணபேதி, நாட்பட்ட அதிசாரம், கிரகணி, துர்பலம், நாட்பட்ட இருமல், இரைப்பு, அஸ்திசுரம் முதலியன குணமாகும். இதன் சூரணத்தில் 1/4, 1/2 வராகனெடை வீதம்
ஆடாதோடை சுரசத்துடன் சேர்த்து தேன் கூட்டிக் கொடுத்துவர
இருமல், இரைப்பு, கபக்கட்டு முதலியன குணமாகும். தாளிசபத்
திரி சூரணத்துடன் சமன் திரிகடுகு சூரணம் சேர்த்து அருந்திவர
பசி மந்தம், அசீரணம், பேதி முதலியன குணமாகும்.
மாசிக்காய் :- இதற்கு மலத்தைக் கட்டச்செய்தல், விரணத்தை
ஆற்றல், உதிரப்போக்கைத்தடுத்தல், உடலுக்கு உரந்தரல் முதலியச்
செய்கைகள் உண்டு. இதனால் அக்கரம், விரணம், அதிசாரம், உட்
சூடு, கணச்சூடு, சீதபேதி முதலியன குணமாகும். உடலுக்கு
பலந்தரும். இதனை நீர் விட்டிழைத்து வாய் ரணம், நாசி விரணம்,
ஆசனவெடிப்பு, மூலவிரணம், தீச்சுட்ட புண் முதலியவைகட்கு
மேலுக்குத் தடவிவர விரைவில் குணமாகும். இதன் சூரணத்தில்
5-முதல் 10-குன்றி வீதம் தினம் இருவேளையாகக் கொடுத்துவர
இரத்தகாசம், இரத்த வாந்தி இரத்தமூத்திரம், பேதி, சீதரத்த
பேதி, பெரும்பாடு முதலியன குணமாகும்.
அரத்தை :- இதில் சிற்றரத்தை பேரரத்தை என இருவகை
உண்டு. இவைகளின் குணம் ஏறத்தாழ ஒன்றேயாகும். இதற்கு
முக்கியமாக கோழையை அகற்றுஞ் செய்கையும், வெப்பத்தைத்
தணிக்குஞ் செய்கையும் உண்டு. இதனால் இருமல், ஈளை, கபக்கட்டு,
சுரம், வாயு முதலியன குணமாகும். இதன் தனி சூரணம் 1/4-
வராகனெடை வீதம் சமன் கற்கண்டு சேர்த்து நெய் அல்லது
தேனில் அருந்திவர இருமல், கபக்கட்டு முதலியன குணமாகும்.
வாதகப சுரக் குடிநீர்களிலும் இதனைச் சேர்த்து வழங்குவதுண்டு.
அதிமதுரம் :- இதற்கு கோழையகற்றல், உள் அழலைத் தனித்தல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் இருமல், தாகம்
தொண்டைரணம், உடல் காங்கை முதலியன குணமாகும். தனி
அதிமதுரச் சூரணம் 5-முதல் 10-குன்றி எடை வீதம் சமன்
கற்கண்டு சேர்த்து சிறிது காய்ச்சிய பாலில் அருந்திவர உஷ்ணத்தினால் ஏற்பட்ட இருமல், தொண்டைரணம், கபக்கட்டு முதலியன
குணமாகும்.
அக்கராகாரம் :- இதற்கு உமிழ் நீரைப் பெருக்கல், வெப்ப
முண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் நாவரட்சி,
தாகசுரம், ஜன்னிதோஷம் முதலியன குணமாகும். இதில் ஓர்
துண்டை வாயிலிட்டு மென்று சுவைத்து வரலாம். அல்லது ஊறல்
குடிநீரிட்டும் வழங்கலாம். இதனால் மேற்கண்ட குணங்கள்
ஏற்படும்.
கோஷ்டம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல்
வியர்வையைப் பெருக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால்
வாதம், சுரம், இருமல், ஈளை, தோஷசுரம், வீக்கம் முதலியன குணமாகும். இதனைப் பெரும்பாலும் சுரக் குடிநீர்களில் சேர்த்து
வழங்குவதுண்டு.
வசம்பு :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல், பசித்
தீயைத் தூண்டல், முறை சுரத்தை தடுத்தல், கிருமிகளை நாசஞ்
செய்தல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் சர்பகீட தாவர
விஷங்கள், சுர சன்னிதோஷம், மாந்தக் க்ழிச்சல், மலக்கிருமி முதலியன குணமாகும். வசம்பை ஊறல் குடிநீரிட்டுக் கொடுக்க
குழந்தைகட்குக் காணும் மாந்தக் கழிச்சல், முறை சுரம் முதலியன
குணமாகும். இதைச் சுட்டுக் கரியாக்கி ஆமணக்கு நெய்யில்
குழைத்து குழந்தைகளின் அடிவயிற்றில் பூச வயிற்றுப் பொருமல்,
வயிற்றுவலி முதலியன குணமாகும். வசம்பிற்கு மஞ்சளை அரைத்
துக் கவசமிட்டு கருகும்படி சுட்டுக் கரியாக்கித் தேனில் கொடுத்து
வர நேர்வாளத்தினால் ஏற்பட்ட நிற்காதபேதி, வாந்தி, வயிற்று
வலி முதலியன குணமாகும்.
அதிவிடயம் :- இதற்கு மலத்தைக் கட்டல், முறைசுரமகற்றல்
முதலிய செய்கைகள் உண்டு. இதனால் சுரம், முறைசுரம், பேதி முதலியன குணமாகும். இதன் தனிச்சூரணம் 1/4-1/2 வராகனெடை வீதம்
தேனில் வழங்கலாம். அல்லது இதனைத் தனியாகவாவது அல்லது
மற்றச் சரக்குகளுடன் சேர்த்தாவது குடிநீரிட்டு வழங்குவதுண்டு.
இது பேதியுடன் கூடிய சுரத்திற்குச் சிறந்தது.
அமுக்குராக் கிழங்கு :- இதற்கு காமத்தைப் பெருக்கல், உடலைத் தேற்றல், பலந்தரல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால்
வாத நோய்கள், வீக்கம், தாதுநட்டம், பலயீனம் முதலியன குணமாகும். இதைப் பாலில் வேகவைத்து இடித்துச் சூரணத்துச்
சமன் சர்க்கரை சேர்த்து 1/2 -1 வராகனெடை நெய்யில் அருந்திவர
மேற்கூறப்பட்ட குணங்கள் உண்டாகும்.
அபினி :- இதற்கு மலத்தைக் கட்டல், வேதனைகளைத் தனித்தல், இசிவகற்றல், நித்திரையை உண்டாக்கல் முதலிய செய்கைகள்
உண்டு. இதனால் வயிற்றுவலி, பேதி, வாந்தி, இரைப்பு, இருமல்,
காதுநோய், இசிவு, நித்திரையின்மை முதலியன குணமாகும். ஒரு
உச்சிக்கரண்டி நல்லெண்ணெயில் பயறளவு அபின்கூட்டி எரித்து
2-துளி காதில் விட காது வலி குணமாகும். ஒரு ஜாதிக்காயைத்
துளைத்து அதனுள் ஒரு குன்றி அபினியைச்செலுத்தி, துளைவாய்க்கு
சாதிக்காய் தூளையே போட்டு அடைத்து, நெய்விளக்கின் சுடரில்,
காய் வேகுமட்டும் சுட்டெடுத்து அரைத்து சிறு உளுந்தளவு மாத்திரைகள் செய்து கொடுத்துவர அசீரணபேதி, அதிசாரம், கிரகணி
முதலியன குணமாகும்.
கஞ்சா :- இதற்கு இசிவகற்றல், வேதனையைத் தணித்தல்,
நித்திரையுண்டாக்கல், காமத்தைப் பெருக்கல் முதலிய செய்கைகள்
உண்டு. இதைத் தனியாக வழங்குவதில்லை. பெரும்பாலும் தாது
விருத்திக்குரிய லேகியங்களிலும், கிரகணி, பெரும்பாடு போன்ற
நோய்கட்குரிய மருந்துகளிலும் சேர்த்து வழங்குவதுண்டு.
வெட்பாலை :- இதற்கு துவர்ப்புச் செய்கையுண்டு. இதனால்
பேதி, சீதபேதி முதலியன குணமாகும். வெட்பாலையரிசி அல்லது
பட்டையைக் குடிநீரிட்டாவது அல்லது இடித்துச் சூரணமாகவாவது வழங்க பேதி, சீதபேதி முதலியன குணமாவதுடன், சுரத்திற்குப்பின் காணும் உடல் இளைப்பு முதலியன நீங்கி உடலுக்கு
உரத்தையுந் தரும்.
நேர்வாளம் :- இதற்கு பேதியை உண்டுபண்ணுஞ் செய்கையுண்டு. இதனால் மலக்கட்டு, வாதரோகம், விஷம், குன்மம், சூலை
முதலியன குணமாகும். இது துர்பலமுள்ளவர், வயது முதிர்ந்தவர்,
கருப்பிணிகள், பித்த நோயுள்ளவர் முதலியவர்கட்குச் சிறந்ததல்ல.
இதனைத் தனியாக வழங்குவதில்லை. பேதியாகும் மருந்துகளில்
சேர்த்து வழங்கப்படும். இதை மருந்துகளில் சேர்க்கும் முன்
முறைப்படி நன்கு சுத்திசெய்து சேர்க்கவேண்டும். இன்றேல் சில
துர்குணங்களை யுண்டாக்கும்.
நிலாவாரை :- இதற்கு பேதியை உண்டாக்குஞ் செய்கை
யுண்டு. இதனால் நாட்பட்ட மலச்சிக்கல், மூலவாயு, குன்மம், சுரம்
முதலியன குணமாகும். இது சிறு குழந்தைகள், மெலிந்தவர்,
முதிர்ந்தவர், கருப்பிணிகள் முதலியவர்கட்கும் வழங்கப் பயன்
படும். இதன் சூரணத்தை பாலில் பிட்டவியலாக அவித்தெடுத்து
வழங்க சூடு செய்யாமல் மலத்தை கழிக்கும். இதன் சூரணத்தில்
1/4 முதல் 1/2 வராகனெடை வீதம் தனியாகவாவது அல்லது ஒரு
தோலா குல்கந்துடனாவது சேர்த்து இரவு படுக்கைக்குப் போகும்
போது அருந்திவர, மலச்சிக்கல் குணமாகும். இன்னும் இத்துடன்
சுக்கு, மிளகு, ஓமம் வாய்விளங்கம், இந்துப்பு இவைகளைச் சம
னெடையாகச் சேர்த்திடித்துச் சூரணித்து வேளைக்கு 1-2 வராக
னெடை வீதம் கொடுத்துவரலாம். அல்லது 1 பலம் நிலாவாரை
யுடன், 1 வராகனெடை சுக்குத்தூள் சேர்த்து ஆழாக்கு வெந்நீரில்
ஊறல் குடிநீராகச் செய்து 1/4,1/2 ஆழாக்கு வீதம் சிறிது இந்துப்புச்
சேர்த்து வழங்கி வரலாம். இதனால் வயிற்றுப்புசம், வயிற்றுவலி,
மலபந்தம், வாய்வு, கைகால் கீல்களின் பிடிப்பு முதலியன குணமாகும்.
சிவதைவேர் :- இதற்கு பேதியை உண்டாக்குஞ் செய்கை
யுண்டு. இதனால் பழையமலம், மேல்நோக்கும் வாய்வு, பித்தவாத
தொந்தம், பாலகிரக தோஷம் முதலியன குணமாகும். இதை
வழங்குவதற்கு முன்பு சுத்தி செய்துக்கொள்ளவேண்டும். அதாவது
இதன் நடுநரம்பை நீக்கிப் பாலில் பிட்டவியலாகச் செய்தெடுத்துக்
கொள்வதாம். இது பாலர்கட்குக் காணும் மாந்தம், தோஷம்,
மலச்சிக்கல் முதலிய பிணிகட்கு வழங்கச் சிறந்த சரக்காகும்.
இதன் தனிச் சூரணம் 1/4 1/2 வராகனெடை வீதம் தனியாக
வாவது அல்லது அத்துடன் சமன் இந்துப்பு சேர்த்தாவது வழங்க
நன்கு பேதியாகும். அல்லது சுத்தி செய்த சிவதைவேர்ச் சூரணம்
4-தோலாவுடன் திப்பிலிச்சூரணம் 1-தோலா சேர்த்து, இவைகட்குச் சமனெடை சர்க்கரை கலந்து வைத்துக்கொண்டு, இதில்
வேளைக்கு 10-20 குன்றி எடை வீதம் கொடுத்துவர மலசிக்கல்
நீங்கும். வயிற்றுவலி, மலாசயக் கிருமி முதலியவைகளும் குண
மாகும்.
கரியபோளம் :- இதனை மூசாம்பரம் எனவுங் கூறுவர். இதற்கு
பேதியை உண்டாக்கல், ருதுவை யுண்டாக்கல், பசித்தீயைத் தூண்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் மேகசூலை, வீக்கம்,
வயிற்றுவலி, குன்மம், சூதகச்சிக்கல் முதலியன குணமாகும். இதில்
1-முதல் 3-குன்றி எடை கொடுக்க மலத்தைப்போக்கும் இத்
துடன் சமன் காயம் சேர்த்து தேன் விட்டுஅரைத்து வேளைக்கு
2 குன்றி வீதம் தினம் இரு வேளையாக கொடுத்துவர சூதகச்சிக்கல்
சூதக வயிற்றுவலி முதலியன குணமாகும். இதை முட்டை வெண்கரு விட்டுஅரைத்து, கீல்வாயு, விரதவீக்கம், மேகக்கட்டி முதலியவை
கட்கு பற்றிட்டு வர குணமாகும்.
கழற்ச்சி :- இதன் விதை, வேர்பட்டை இவைகட்கு இசிவை
யகற்றல், முறை சுரத்தை தடுத்தல் முதலிய செய்கைகள் உண்டு.
இதனால் அண்டவாதம், வயிற்றுவலி, சூலை, சுரம் முதலியன குணமாகும். இதன் வேர்பட்டையை சூரம் 5-7 1/2 குன்றி எடை வீதம்
கொடுத்து வர முறை சுரம் முதலியன குணமாகும். இதில் வேளைக்கு 10-15
குன்றி வீதம் தினம் இரு வேளையாக கொடுத்துவர அண்டவாய்வு,
வயிற்றுவலி, சுரம் முதலியன குணமாகும். கழற்ச்சிப் பருப்பை முட்டை
வெண்கரு விட்டுஅரைத்து, அண்ட வீக்கத்திற்க்கு மேலுக்குப் பற்றிட்டு வர
அண்ட வீக்கம் குணமாகும்.
சடமாஞ்சி :- இதற்கு இசிவையகற்றல், கோழயை அகற்றல்
முதலிய செய்கைகள் உண்டு. இதனால் காசம், இரைப்பு, இரத்த
பித்தம், சுரம் முதலியன குணமாகும். இதன் சூரணம் 2 வராகனெடை
எடுத்து ஆழாக்கு வெந்நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து
2அல்லது3 வேளையாக கொடுத்து வர சூதகச்சன்னி, வலி
மூர்ச்சை, சுரம் முதலியன குணமாகும்.
சேராங்கொட்டை :- இதற்கு மேகநோய்களை போக்குஞ்
செய்கையும், உடலைத்தேற்றும் செய்கையும் உண்டு. இதனால் சொறி
சிரங்கு, மேகவிரணம், கிரந்தி, குட்டம், காணாக்கடிவிஷம், வாத
ரோகம், குன்மம் முதலியன குணமாகும். இதனைத் தனியாக வழங்குவதில்லை. பெரும்பாலும் இதரச்சரக்குகளுடன் சேர்த்து,வல்ல்லாததி லேகியம், முதலியன செய்து வழங்குவதுண்டு, இதனால்
மேற்கூறப்பட்ட பிணிகள் குணமாகும். ஆனால் இதனை முறைப்
படி நன்கு சுத்தி செய்து மருந்துகளில் சேர்க்க வேண்டும்.
பறங்கிச்சக்கை :- இதற்கு மேகநோய்களை போக்குஞ் செய்கையும்,உடலைத்தேற்றும் செய்கையும் உண்டு. இதனால் சொறி
சிரங்கு சர்மவியாதிகள், மேக விரணம்,குட்டம், கடி விஷம், வாதப்பிணிகள், நீரிழிவு, தகம் முதலியன குணமாகும். பறங்கிச்சக்கைகளின் மேல் தோலை நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கி ஓர் கோப்
பையிலிட்டு மூழ்க வல்லாரைச்சாறு விட்டு 10 நாள் இரவியில்
வைத்து, முற்றுலர்ந்த பின்பு இடித்துச் சூரணித்து வேளைக்குத்
திரிகடிப் பிரமாணம் தினம் இரு வேளையாக அருந்திவர மேற்கூறப்பட்ட நோய்கள் குணமாகும்.
நன்னாரிவேர் :- இதற்கு சிறுநீரை பெருக்கல், உள் அழலை
ஆற்றல், உடலைத்தேற்றல், இரத்தத்தை சுத்திசெய்தல், முதலிய
செய்கைகள் உண்டு. இதனால் பித்தாதிக்கம், உட்சூடு, மதுமேகம்
தாகம், சொறி சிரங்கு, கிரந்திமுதலிய மேகப்பிணிகள், நீர்ச்சுருக்கு
முதலியன குணமாகும். நன்னாரி வேர்ப்பட்டையை உலர்த்தி இடித்
துச் சூரணித்து வேளைக்கு 1/2-1 விராகனெடை வீதம் சமன் சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பசும்பாலில் அருந்திவர மேற்கூறிய பிணிகள்குணமாகும். இன்னும் இதனைக் குடிநீராய்ச்செய்து பால் சேர்த்து அருந்தி வரலாம். மணப்பாகு செய்தும்
வழங்குவதுண்டு.