Monday, 19 February, 2018
பிரமேக சிகிச்வச

கபத்தால் உண்டாகிய மேகங்களுக்கு லோத்திராதிகியாழம் :-
கடுக்காய், காய்பலம், கோரைக்கிழங்கு இவைகளின் கியாழத்திலாவது, வாய்விளங்கம், வட்டத்திருப்பி, மருதம்பட்டை, பூனைக்காஞ்சொரிவேர், இவைகள் கியாழத்திலாவது, இலவங்கப்பட்டை, மருதம்பட்டை, ஓமம் இவைகளின் கியாழத்திலாவது, வாய்விளங்
கம், மரமஞ்சள், கோரைக்கிழங்கு, இலவம்பட்டை இவைகள் கியாழத்திலாவது, தேன் கலந்து சாப்பிட்டால் கபபிரமேகங்கள் நீங்கும்.


வேறு முறை :- மரமஞ்சள், வாய்விளங்கம், கருங்காலி,
சக்கை, தவவிருக்ஷம் இவைகளின் கியாழத்திலாவது, தேவதாரு, கோஷ்டம், மருதம்பட்டை, சந்தனம் இவைகளின் கியாழத்திலாவது, மரமஞ்சள், கூரநெல்லிவேர், திரிபலை, வட்டத்திருப்பிவேர்
இவைகளின் கியாழத்திலாவது, ஓமம், வெட்டிவேர், கடுக்காய், சீந்தில்கொடி இவைகளின் கியாழத்திலாவது, நாவல்சக்கை, நெல்லி தோல், சித்திரமூலம், வாழைக்கிழங்கு இவைகளின் கியாழத்திலா
வது தேன் கலந்து சாப்பிட்டால் கிரமமாக கபத்தினால் உண்டான ஜலப்பிரமேகம், இக்ஷ£மேகம், சாந்திரமேகம், சுராமேகம், பிஷ்ட மேகம், சுக்கிலமேகம், சிகதாமேகம், சீதமேகம், சனைர்மேகம், லாலாமேகம் இந்த பத்து மேகங்கள் நிவர்த்தியாகும்.

பித்தமேக சாமானிய கியாழம் :- வில்வவேர்ப்பட்டை, மருத வேர்ப்பட்டை, வெட்டிவேர், ரத்தசந்தனம் இவைகளின் கியாழத்திலாவது, வேப்பன் ஈர்க்கு, குறுவேர், நெல்லிவற்றல், கடுக்காய் இவைகளின் கியாழத்திலாவது, நெல்லிவற்றல், மருதம்பட்டை, வேப்பன் ஈர்க்கு, வெட்பாலை இவைகளின் கியாழத்திலாவது, கரும்
அல்லித் தண்டு, சீரகம், மஞ்சள், மருதம்வேர்பட்டை இவை
களின் கியாழத்திலாவது தேன் கலந்து சாப்பிட்டால் பித்தமேகங்கள் நீங்கும்.

வேறு முறை :- வெட்டிவேர், லோத்திரம், சந்தனம், இவை
களின் கியாழம், வெட்டிவேர், நெல்லிவற்றல், கோரைக்கிழங்கு, கடுக்காய் இவைகளின் கியாழம், பேய்ப்புடல், வேப்பன் ஈர்க்கு, நெல்லிவற்றல், சீந்தில்கொடி இவைகளின் கியாழம், கோரைக் கிழங்கு, கடுக்காய், ஆமணக்கு வேர் இவைகளின் கியாழம், லோத்
திரம், குறுவேர், மரமஞ்சள், காட்டாத்திப்பூ இவைகளின் கியாழம், மன்ஜிஷ்டமேகம், ஹரித்திராமேகம், நீலமேகம், க்ஷ¡ரமேகம், கால மேகம், ரத்தமேகம் இந்த மேக ரோகிகளுக்குக் கொடுத்தால் நிவர்த்தியாகும்.

கபவாத மேகத்திற்கு கியாழம் :- கடுக்காய், தேவதாரு, நன்னாரி, லோத்திரம், ரத்தசந்தனம், வெட்டிவேர் இவைகள் கியாழம் போட்டு அதில் தேன் அல்லது மஞ்சள் சூரணமாவது கலந்து சாப்பிட்டால் மேகங்கள் நிவர்த்தியாகும்.

பித்தவாத மேகத்திற்கு கியாழம் :- வாய்விளங்கம், மஞ்சள், மரமஞ்சள், கருங்காலி, மரசக்கை, வெட்டிவேர், கொட்டைப்பாக்கு இவைகளின் கியாழத்தை காலையில் சாப்பிட்டுவந்தால் பித்தவாத மேகங்கள் நிவர்த்தியாகும்.

திரிபலாதி கியாழம் :- திரிபலை, மரமஞ்சள், கோரைக்கிழங்கு, இவைகளின் கியாழத்திடன் தேன் கலந்தாவது அல்லது சீந்தில் கொடி சுரசத்தில் தேன் கலந்தாவது சாப்பிட்டால் சகல மேகங்கள்
நிவர்த்தியாகும்.

திரிபலாதி கியாழம் :- திரிபலை, மரமஞ்சள், தேவதாரு, பாப் பாரமுள்ளி, கோரைக்கிழங்கு இவைகளின் கியாழத்தில் மஞ்சள் தூள் தேன் கலந்து சாப்பிட்டால் சகல மேகங்கள் நிவர்த்தியாகும்.

பலாசபூ கியாழம் :-


கர்கட்யாதி சூரணம் :- வெள்ளரிக்காய்விரை, இந்துப்பு, திரி பலை இவைகளை சமஎடையாய் சூரணித்து, வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் மூத்திரநிரோதனம் நிவர்த்தியாகும்.

திரிபலாதி சூரணம் :- கடுக்காய் 1 பகம், தானிக்காய் 2
பாகம், நெல்லிக்காய் 4 பாகம் இவைகளை சூரணித்து நெய்தேன் கலந்து சாப்பிட்டால் மேகம், வெள்ளை, வெட்டை, நேத்திரரோகம் இவைகள் நிவர்த்தியாகும்.

தலபோடகசூரணம் :- ஆவாரைசமூலம், நிழலிலுலர்த்திச்
சூரணித்து, சூரணத்திற்கு பேர் பாதி பாகம், நெல்லிக்காய்ச்சூரணம் நெல்லிக்காய்ச் சூரணத்திற்கு பேர் பாதி பாகம், மஞ்சள், மர மஞ்சள் இவைகள் சூரணம் இவைகள் எல்லாம் ஒன்றாக கலந்து தேனுடனாவது அல்லது மோருடனாவது சாப்பிட்டால் சகல மேகங்கள் நிவர்த்தியாகும்.

சிலாஜித்துச்சூரணம் : - ஏலக்காய், சுத்திசெய்த சிலாஜித்து
சுத்திசெய்த ஹேமமாஷிகம், அதிமதூரம், திரிகடுகு, வாய்விளக்கம், திரிபலை இவைகளை சமஎடையாய் எடுத்துச் சூரணித்து, அந்தச்சூரணத்திற்குச் சமம் ஆவாரங்கொட்டை சூரணத்தை கலந்து 1/2 பலம்
விகிதம் தேனுடன் சாப்பிட்டால் சகல மேகங்கள் நிவர்த்தியாகும்.

வெகு மூத்திரத்திற்கு தாலேசுவர ரசம்
:- இரசபஸ்பம்,
வங்கபஸ்பம், லோஹபஸ்பம், அப்பிரகபஸ்பம், இவைகள் யாவையும் ஒன்றாக கலந்து தேன் விட்டு அரைத்து 2 குன்றி எடைமாத்திரை செய்து வைத்துக் கொள்ளவேண்டியது. இதில் ஒருமாத்திரை தேன் அனுபானத்துடன் சாப்பிட்டால் வெகு மூத்திரம்
சமனமாகும்.

சகலமேகங்களுக்கு வங்கேசுர ரசம் :- சுத்தரசம்1, சுத்த
கெந்தி 1, வங்கபஸ்பம் 2 இவைகளை யொன்றாகச்சேர்த்து அரைத்து 2 குன்றி எடை தேன் சர்க்கரையுடன் சாப்பிடவும். பத்தியம் உப்பு புளிப்பு இவைகள் ஆகாது. கடும் பத்தியாமாக யிருக்க வேண்டியது.

பிரமேஹ பத்தரசம் :- ரசபற்பம், கசாந்தபற்பம், லோஹ
பற்பம், சிவாஜித்துவபற்பம், துத்தபற்பம், லோஹமாஷிகபற்பம், மனோசிலைபற்பம், சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய், தானிக்காய் நெல்லிப்பருப்பு, விலாம், மஞ்சள் இவைகள் யாவையும் சமஎடையாகச்
சேர்த்து சூரணித்து கரிசனாங்கண்ணி சாற்றினால் 30 நாள்
அரைத்து உலர்த்தி தேன் அனுபானத்துடன் 2,3 குன்றி எடை மருந்தை கொடுத்தால் சமஸ்தை மேகங்கள் நிவர்த்தியாகும்.

மஹாநிம்ப பீஜங்கள்-6 சூரணித்து 1-பலம், அரிசி கழிநீரில்
கலந்து 1/8-பலம் நெய் கலந்து சாப்பிட்டால் வெகு காலமாக யிருக்கும் மேஹங்கள் நிவர்த்தியாகும்.

ஹரிசங்கர ரசம் :- இரச பஸ்பம், அப்பிரபஸ்பம் இவைகள்
சமஎடை நெல்லிக்காய் ரசத்தில் 7-நாள் அரைத்து சேவித்தால் சகல மேகங்கள் நிவர்த்தியாகும்.

மேகநாத ரசம் :- இரசபற்பம், காந்தபற்பம், கெந்தி, எழுகு
பற்பம், ஹேமமாக்ஷ¢கபற்பம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தானிக்காய், நெல்லிப்பருப்பு, சிலாசத்து, மனோசிலை, மஞ்சள், விலாம் இவைகளை சமஎடையாகச் சூரணித்து கரசனாங்கண்ணி இரசத்தில் 21-நாள் அரைத்து 2-3 குன்றிஎடை தேனுடன் கொடுத்தால் சகல மேகங்கள் நிவர்த்தியாகும்.

இலகுசந்திரோதய ரசம் :- அப்பிரகபற்பம், கெந்தி, பாதரசம், வங்கபற்பம், ஏலக்காய், சிலாஜித்து இவைகளை சமஎடையாகச் சூரணித்து வாழைக்கிழங்கு ரசத்தைவிட்டு இரண்டு நாள் (இரவும் பகலும்) அரைத்து வைத்துக்கொள்க. இதை அனுபான விசேஷ
மாக கொடுத்தால் 20-மேகரோகங்கள், காமாலை, பித்தம் இவைகள் சூரியனைக்கண்ட இருளைப்போல மறைந்துவிடும். இதற்கு இங்கு சந்திரோதய மென்றுபெயர். இச்சாபத்த்யம் எண்ணை கடுகு வாயு பண்டம் மீன் முதலியது ஆகாது.

வங்ககேசுர ரசம் :- சுத்திசெய்த ரசம்-1, வங்கபற்பம்-3, சுத்தி
செய்த கெந்தி-3 இவைகளை கல்வத்திலிட்டு கற்றாழை ரசத்தினால் ஒருநாள் அரைத்து மாத்திரைகள் செய்து காசிகுப்பியில் வைத்து சீலைமண் செய்து வாலுகாயந்திரத்தில் காடாக்கினியால் ஒருநாள்
எரித்து ஆறியபிறகு எடுத்து திப்பிலி சூரணம், தேன் இந்த அனு பானத்துடன் சாப்பிட்டு பால்சாதம் சாப்பிட்டு உப்பில்லாத பத்தி யத்துடனிருந்தால் சகல மேகங்களும் நிவர்த்தியாகும்.

மேஹகுஞ்சர கேசரீரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த
கெந்தி, அப்பிரகபற்பம், லோஹபற்பம், ஈயபற்பம், வங்கபற்பம், சுவர்ணபற்பம், வஜ்ரபற்பம், முத்துபற்பம் இவைகளை சமஎடை யாக கல்வத்திலிட்டு தண்ணீர்விட்டான் கிழங்கு ரசத்தினால் அரை
த்து பில்லைசெய்து உலர்த்தி மடக்கில்வைத்து மேல் மடக்கு மூடி காட்டு விரட்டியால் நாலுபுடமிட்டு, ஆறியபிறகு எடுத்து கல்வத்தி லிட்டு அரைத்து குப்பியில்வைத்து 2, 3 குன்றிஎடை சாப்பிட்டு
பிறகு குளிர்ந்த ஜலம் சாப்பிடவேண்டியது. இம்மாதிரியாக ஒரு மாதகாலம் சாப்பிட்டுவந்தால் 18-வித பிரமேஹங்கள் நீங்கும். வீரியம், பலம், காந்தி, மேனி, அக்கினிதீபனம் இந்திரிய விருத்தி இவைகள் உண்டாகும்.


பஞ்சலோஹ ரசாயனம் :- அப்பிரகபற்பம் 1 பாகம், லோஹ பற்பம் 2 பாகம், நாகபற்பம் 3 பாகம், வங்கபற்பம் 4 பாகம் இவைகளை கல்வத்திலிட்டு ஆவாரைசமூலம், நிலப்பனை, தண்ணீவிட்டான் கிழங்கு, சந்தனம் இவைகளை கியாழங்களினால் தனித்தனி ஒவ்வொரு சாமம் அரைத்து கட¨லாளவு மாத்திரைகள் செய்து
காலையில் ஒரு மாத்திரையை வெண்ணையுடன் அருந்தி வாகு அரிசி, புடலங்காய், சிறுகீரை, சர்க்கரைவர்த்திக்கிழங்கு, பொன்னாங்கண்ணிக் கீரை, பச்சைப்பயறு, வாழைக்கச்சல் இவைகளை
சாப்பிட்டால் சகலமேகங்கள், கிரஹணிதோஷம், மூலவியாதி, மூத்திர கிருச்சரம், மூத்திர அடைப்பு, காமாலை, பாண்டு, சோபை, அபஸ் மாரம், க்ஷயம், ரத்தகாசம், இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

மஹாவங்கேசுர ரசம் :- வங்கபற்பம், அப்பிரகபற்பம், காந்த பற்பம், ஆவாரம்பூ இவைகள் சமஎடையாகச் சூரணித்து கற்றாழை ரசத்தினால் ஏழு நாள் அரைக்கவும் இதை சாப்பிட்டால் 20 மேகங்கள், மூத்திரகிருச்சரம், சோமரோகங்கள், பாண்டுரோகம், அஸ்மரீ
ரோகம் இவைகள் நிவர்த்தியாகும்.

வசந்தகுசுமாகர ரசம் :- சுவர்ணபற்பம் 2 பாகம், வெள்ளி
பற்பம் 2 பாகம், நாகபற்பம் 3 பாகம், வங்கபற்பம் 3 பாகம்,
லோஹபற்பம் 3 பாகம், பாதரசபற்பம் 4 பாகம், அப்பிரகபற்பம் 4 பாகம், பவழபற்பம் 4 பாகம், முத்துபற்பம் 4 பாகம், இவைகள் யாவையு கலந்து கல்வத்திலிட்டு, பசும்பால், கரும்புரசம்,ஆடாதோடை இலைரசம், சந்தனம், குருவேர், வெட்டிவேர், மஞ்சள், வாழைக்கிழங்கு தனித்தனி இவைகளின் கியாழங்கள், தாமரைப்பு ரசம்,இவைகளால் ஏழு நாட்கள் அரைத்து பிறகு கஸ்தூரி 1 பாகம்
கலந்து அரைத்து வைத்துக் கொள்க. இதை தேன் சர்க்கரை
இந்த அனுபானத்துடன் 2 குன்றி எடை சாப்பிட்டால் காசரோகம் மேல்மூச்சு, துஷ்டரத்தம், விஷம் பாண்டுரோகம், காசரோகம், மூத்திரகாதம், அஸ்மரீரோகம் இவைகளை நாசமாக்கும். சர்க்கரை சந்தனம் இவைகளின் சூரணத்துடன் கொடுத்தால் ஆமல பித்தம் நாசமாகும். தேகவலிவு, காமம், புஷ்டி, ஆயுசு, புத்தி புருஷர்களுக்கு சந்தானத்தை உண்டாக்கும். சாமர்த்தியம், காந்தி
பலம், காமோத்தீபனம் இவைகளை உண்டுபணும். இந்த ஒளஷத்தை சாப்பிட்டு தகுந்தாற்போல் ஆகாரத்தை சாப்பிட்டு வந்தால் அளவு கடந்த தாதுவிரித்தியை உண்டாக்கும்.

ஜலஜாமிருக ரசம் :- தவஷீரி, சிலாசித்துபற்பம், வங்கபற்பம் சீந்தில் சர்க்கரை, ஆவாரைவிரை இவைகளை கல்வத்திலிட்டு வெள்ளைப் பூசினிக்கிழங்கு ரசம், பால்கீரை ரசம் இவைகளால் மூன்றுநாள் அரைத்து பணவெடை கற்கண்டுடன் சாப்பிட்டால் மேக கிருச்சிரங்கள் நிவர்த்தியாகும்.

மேஹாந்தக ரசம் :- இரசபற்பம் 3-பாகம், சுவர்ணபற்பம்
4-பாகம், வெள்ளிபற்பம், எழுகுபற்பம், தாம்பிரபற்பம், நாகபற்பம், வைகிறாந்தபற்பம், அப்பிரகபற்பம், சிலாசத்துபற்பம், கெந்திசூரணம் வகைக்கு 3-பாகம் இவைகளை எல்லாம் சுபமுகூர்த்தத்தில் கல்
வத்திலிட்டு திரிபலை கியாழத்தினால் அரைத்து மாத்திரைசெய்து நிழலிலுலர்த்தி மூன்றுபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து வெட்டிவேர், சந்தனம் இவைகளின் கியாழத்தினால் நான்கு ஜாமம் அரைத்து 4-குன்றிஎடை சர்க்கரை, தேன் இவைகளுடன் சாப்பிட்டால் மது
மேகம், இக்ஷ¢மேகம், தாகம், தாபம், உதகமேகம், சுக்கிலமேகம், லாலாமேகம், தந்திமேகம், க்ஷயமேகம், வாதமேகம், காசங்கள் சுவாசங்கள், அங்கதாகம், சிரோதாகம், நானாவித ரோகங்கள் நிவர்த்தியாகும். இதை மலடி சாப்பிட்டால் புத்திரவதியாவாள். வீரியவிருத்தி, பலம், புஷ்டி, காந்தி இவைகளை யுண்டாக்கும்.

மேஹமிருகாங்க ரசம் :- சுத்திசெய்த பாதரசம், கெந்தி
வங்கபற்பம், கஸ்தூரி, லிங்கம், கொத்தமல்லி, குங்குமப்பூ, நெல்லி வற்றல், ஏலக்காய், திரிகடுகு, கோரைக்கிழங்கு, பச்சைகற்பூரம் இவைகளை சமஎடையாகச் சேர்த்து சந்தனத்தூள் கியாழத்தினால் இரண்டு ஜாமங்கள் அரைத்து 2-குன்றிஎடை அனுபானயுக்தமாக கொடுத்தால் இரத்த மூத்திரம், சர்வமேகங்கள் நிவர்த்தியாகும்.
சர்க்கரை, நெய் இந்த அனுபானத்துடன் கொடுத்தால் மஹாதாக ரோகம் நிவர்த்தியாகும்.

மேஹகஜசேகரீ ரசம் :- அப்பிரகபற்பம், காந்தபற்பம், எழுகு பற்பம், இரசபற்பம், இந்துப்பு, நாகபற்பம், வங்கபற்பம், மண்டூர செந்தூரம் இவை யாவும் சமஎடைகள், இவைகள் யாவற்றிற்கும் சமஎடை ஆவாரைவிரைச்சூரணம். இவைகளை யொன்றாய்கலந்து
கடுக்காய், தானிக்காய், நெல்லிப்பருப்பு, ஆவாரைசமூலம், தேத்தான் கொட்டை இவைகளை தனித்தனி கியாழம்வைத்து இந்தக் கியாழங்களினால் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கியாழத்தினால் அரைத்து பசு
மோரில் 3-குன்றிஎடை கொடுத்தால் இருபது மேகங்கள், மூத்திர காதம் இவை யாவும் நாசமாகும்.

நாரிகேள ரசாயணம் :- தேங்காய்நீர், பசும்பால், பூசினிக்காய் ரசம், தண்ணீர்விட்டான்கிழங்குரசம், பொன்னாங்காணி இலை ரசம், நெல்லிக்காய் ரசம், கரும்வாழைரசம், நிலப்பனைரசம், வாழைப்பழ
ரசம், அழவனைரசம், நெய் இவைகள் வகைக்கு 16-பலம் எடையாய்ச்சேர்த்துக் காய்ச்சி அதில் மஞ்சிஷ்டி, கோஷ்டம், கிரந்திதகரம்,  ஜாதிக்காய், குறுவேர், சந்தனம், ஏலக்காய், இலவங்கம், அதிமதுரம், தக்கோலம், கிச்சிலிக்கிழங்கு வெட்டிவேர், பற்பாடகம், கோரைக்
கிழங்கு, தாமரைத்தண்டு, நன்னாரிவேர், குடச்சப்பாலை, இவைகள் வகைக்கு 4 பலம் சூரணீத்து 10 பலம் சர்க்கரை கலந்து ரசாயன பாகமாய் சமைத்து சாப்பிட்டால் சோமரோகம், பிரமேகம், மூத்திர கிருச்சரம், சரீரதாபம், இவைகள் நிவர்த்தியாகும். மெலிந்த மனிதன் புஷ்டியுளவனாவான்.

சைலூலாதி ரசாயனம் :- வில்வவேர், அதிமதூரம், திரா¨க்ஷ இவைகளை வகைக்கு 21 பலம் இடித்து 2 மரக்கால் ஜலத்தில்  கொட்டி, எட்டில் ஒரு பாகம், மீறும்படியாய்ச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் பசுநெய் 1 வீசை, கற்கண்டு 1 வீசை, சேர்த்து மந்தாக்கினியால் பக்குவமாய் சமைத்து அதில் சந்தனம் ரத்தசந்தனம், கிறாம்பு, கொத்தமல்லி, சிறுநாகப்பூ, கிச்சிலிக்
கிழங்கு, இலவங்கப்பத்திரி, அதிமதூரம், ஜாதிக்காய்,
திரிகடுகு, திரா¨க்ஷ, பேரிச்சம்பழம், குருவேர், வெட்டிவேர்
இவைகள் வகைக்கு 2 பலம் சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து அத்துடன் கலந்து ஆறிய பிறகு 20 பலம் தேன் கலந்து  காயளவு சாப்பிட்டு வந்தால் ரத்தமேகம், சுராமேகம், முதலிய  20 மேகங்கள் மேகத்தினால் உண்டான தாகம், பெரும்பாடு
ரத்தபித்தம், ருதுசூலை, கைகால் உழைச்சல், விரணம், கிரந்தி வாதகாசங்கள், மூர்ச்சை, வித்திரதி, 20 க்ஷயரோகங்கள் வாய், நாக்கு, கண்டம், இவைகள் உலரல் நிவர்த்தியாகும்.

மதுக்கனஹீ ரசாயனம்
:- திரிபலை, திரிகடுகு, திரிசாதம்
ஓமம், குராசானி ஓமம், சித்திரமூலம், சீரகம், தும்பராஷ்டம் கண்டுபாரங்கி, திப்பிலி, செவ்வியம், கொத்தமல்லி, கடுகு, கருஞ் சீரகம், சடாமாஞ்சி, கோஷ்டம், வெட்டிவேர், இவைகளுக்குச் சமம் பரங்கிச்சக்கை சூரணம் சேர்த்து 30 பலம் சர்க்கரையை நீரில் கரைத்து கடாயிலிட்டு அடுப்பிலேறி எரித்து பாகுபதமாய்
காய்ச்சி அதில் மேல் சொல்லிய சூரணத்தை கலந்து பசும்நெய் சேர்த்து பக்குவமாய் லேகியம்போல் சமைத்து அதில் 16 பலம்  தேன் கலந்து சாப்பிட்டால் மேகபைத்தியாவாதம், குஷ்டங்கள் சூலை, குன்மம், இவைகளை நிவர்த்திக்கும். சப்ததாதுவிருத்தி
தீபனம், காந்தி, சந்தோஷம் இவைகளை உண்டாக்கும்.

மேகத்திற்கு சிக்குரு புஷ்ப ரசாயனம் :- ஐந்து சேர் முருங்கைப்பு, 20 சேர் பசும்பாலில் போட்டு நாலில் ஒரு பாகம் மீறும் படியாகச் சுண்டக்காய்ச்சி அதில் நிலப்பூசினிக்கிழங்கு ரசம், வாழைப்பழரசம், தேங்காய்ச்சலம், நிலப்பனங்கிழங்குரசம், இவைகள் வகைக்கு 16-பலம், 16-பலம் சர்க்கரை, 12-பலம் பசும்நெய்,
கலந்து பக்குவமாக சமைத்து அதில் திரா¨க்ஷ, கர்சூரக்காய்,
ஏலக்காய், இலவங்கம், கெஞ்சா, ஓமம், அபினி, போஸ்தக்காய், பூசக்கரைகிழங்கு, கெசகெசா, சுக்கு, திப்பிலி, மிளகு, சாதிக்காய், சாதிப்பத்திரி, மதனக்காமபூவிரைகள், அசரன்விரை, நீர்முள்ளி விரை, முருங்கைவிரை இவைகளை தனித்தனி 1-தோலா விகிதம் சூரணித்துப் போட்டு லேகியம்போல் செய்து ஆறியபிறகு தேன்
12-பலம் கலந்து காலையில் கடுக்காயளவு சாப்பிட்டால் மேக்ரோகங்கள், வெகுமூத்திரம், மூத்திர கிருச்சிரம், பித்த மூத்திரம், இவைகள் நிவர்த்தியாகும். இந்திரிய தம்பனம், தேகபுஷ்டி, வீரிய விருத்தி இவைகளை உண்டாக்கும்.

மேகங்களுக்கு சனகயோகம் :- மஞ்சள், மரமஞ்சள், திரிபலை, இவைகளை கல்கஞ்செய்து மண்பாண்டத்தில் போட்டு மூன்று நாள் வெய்யில்வைத்து பிறகு அதில் ஒரு கவளம் கடலையை மூட்டை கட்டி துலாயந்திரத்தில் ஒரு இராபகல் வைத்து எறித்து பிறகு அதை எடுத்து பிரதிதினம் கிரமவிருத்தியாக சாப்பிட்டு வந்தால்
அசாத்திய மேகங்கள் நிவர்த்தியாகும்.

அங்கோலியாதி யோகம் :- அழிஞ்சில் நெல்லிவற்றல், மஞ்சள், இவைகளைச் சூரணித்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் 20-மேகஙகள் நிவர்த்தியாகும்.

சிலாஜித்து யோகம் :- சிலாஜித்து பற்பத்தை சர்க்கரை பால் கலந்து காலையில் பிரதிதினம் ஒருவேளை மாத்திரமாக 21-நாள் சாப்பிட்டால் சகல மேகரோகங்கள் நிவர்த்தியாகும்.

சுவர்ணமாக்ஷ¢க பஸ்பயோகம் :- பொன்னிமிளை பற்பத்தில் தேன் கலந்து சாப்பிட்டால் மேகங்கள் நீங்கும். சீந்தில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் பித்தமேகம் நிவர்த்தியாகும்.

திரிபலாதி யோகம் :- திரிபலை, மூங்கில் இலை, கோரைக்கிழங்கு, வட்டத்திருப்பிவேர் இவைகளை கியாழம்வைத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டால் வெகுமூத்திரவியாதி நிவர்த்தியாகும்.

சந்திரகளா வடுகங்கள் :- ஏலக்காய், பச்சைக்கற்பூரம், சிலா சத்து, நெல்லிவற்றல், ஜாதிக்காய், நெரிஞ்சில், இலவம்பிசின், சுத்திசெய்த ரசம், வங்கபற்பம், இரும்புபற்பம் இவைகளை சமஎடையாய்ச் சேர்த்து சீந்தில்கொடி, இலவம்பட்டை இவைகளின் கியாழத்தால் அரைத்து 2-குன்றிஎடை பிரமாணம் மாத்திரைகள் செய்து தேனுடன் ஒவ்வொரு மாத்திரையாக சாப்பிட்டால் சகல
மேகங்கள் நிவர்த்தியாகும்.

குக்குலு :- சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய், தானிக்காய்,
நெல்லிபருப்பு, கோரைக்கிழங்கு, குங்கிலியம் இவைகள் சமஎடையாக, நெரிஞ்சல்வேர் கியாழத்தினால் அரைத்து மாத்திரைகள் செய்து தேகத்தையும், காலத்தையும், நோயின் பலாபலத்தையும் அறிந்து சாப்பிட்டால் மேகம், வாதரோகம் வாதசோணிதம், மூத்திரகாதம், மூத்திரதோஷம், பெரும்பாடு இவைகள்யாவும்
நிவர்த்தியாகும். இதற்கு பத்தியம்-இச்சாபத்தியம்.