Monday, 24 September, 2018
கிரந்திரோக சிகிச்சை - சிறஙு - வங்கு - தமிழ் மருத்துவம்

வாதகிரந்திக்கு சிகிச்சை :- ஜடாமாஞ்சி, ரத்தபோளம், சீந்தில்கொடி, கண்டுபாரங்கி, பெருவாகைப்பட்டை, வில்வபழம், அருகு, முருங்கன், எலிக்காது இலை இவைகளை கோமூத்திரத்தி னால் அரைத்து லேபனஞ் செய்தால் வாதகிரந்தி நிவர்த்தியாகும்.

பித்தகிரந்திக்கு சிகிச்சை :
- பித்தகிரந்திக்கு முதலில் அட்டையை விட்டு பிறகு பால் ஜலம் இவைகளினால் கழுவவேண்டியது. பிறகு கடுக்காய் சூரணம் திரா¨க்ஷ ரசத்துடனாவது அல்லது கரும்பு ரசத்துடனாவது சாப்பிடவேண்டியது.

கபகிரந்திக்கு சிகிச்சை :- இலுப்பை, நாவல், மருதம், இவைகள் பட்டைகளை அரைத்து லேபனஞ் செய்தால் சகல தோஷங்கள் நாசமாகி சிலேஷ்ம தோஷங்கள் நிவர்த்தியாகும்.


மேதஜகிரந்திக்கு சிகிச்சை :- மேதஜகிரந்திக்கு வாய்விளங்கம், சுக்கு, மஞ்சள் இவைகளினால் காய்ச்சிய தைலத்தினால் தடவவேண்டி டியது அல்லது பாலினால் எள்ளை அரைத்து கல்கஞ்செய்து அதன் மீது வைத்து துணியை சுற்ற வேண்டியது.

சாமானிய உபச்சாரங்கள் :- பக்குவமான கிரந்தியை மிருதுவாக கீறி விரணத்தை ஹிதமாயிருக்குங் கியாழத்தினால் கழுவவேண்டியது. மேலும் க்ஷ¡ரம், நெய், தேன், கலந்து கழுவவேண்டியது.

மேகனாதி எண்ணெய் :- கோவைச்சாறு, வல்லாரைச்சாறு, சிறு செருப்படைச்சாறு, பொன்னாங்கண்ணி சாறு, ஆனைநெரிஞ்சிச்சாறு,சீந்தில் தண்டுச்சாறு, அரசம்பட்டைச்சாறு, வகைக்குப்படி1/2, சிற்றாமணக்கெண்ணெய் படி 3/4, நல்லெண்ணெய் படி 3/4இவைகளை ஒர் தைலபாண்டத்திலிட்டு அதை சாதிக்காய்சாதிப்பத்திரி, மாசிக்காய், கற்கடகசிங்கி, சண்பகப்பூ, காட்டாத்
திப்பூ, சிறு நாகப்பூ, ஏலம், குரோசாணியோமம், வகைக்கு கழஞ்சுஇரண்டு வீதம் இடித்துச் சூரணித்து பசுவின் பாலில் விட்டரைத்துகற்கத்தையும் சேர்த்து அரைத்து சிறு தீயாக எரித்து தைலபதமாகஅதில் இரண்டு பலம் கற்கண்டை தூள் செய்து போட்டுக்கலக்கி வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு தினம் இருவேளை காலையில் கொள்ள இரண்டு மூன்று முறை பேதியாகும்.இப்படி இரண்டு மூன்று நாள் கொடுத்து , அதன் பிறகு 1,2 தேக்கரண்டி வீதம் தினம் ஒரு வேளையாக காலையில் கொடுக்க1/2 அல்லது 1 மண்டலம் அருந்திவர மேகநோய்கள் யாவும் நீங்கும். கிரந்தி, சீழ்ரட்ரத்த பிரமேகங்கள், வெடிசூலை மேகரணம், லிங்கப்புத்து, யோனிப்புற்று, அரிகிரந்தி, மேகப்படைகள் முதலியன யாவும் குணமாகும்.

கருடன் கிழங்கு எண்ணெய் :- கருடன்கிழங்கு பலம் 12,  வாய்விளங்கம், வாலுளுவை அருசி, கருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி வகைக்கு பலம் 1 இவைகளை இடித்து 4 படி சுத்த ஜலத்திலிட்டு 1/2 படியாய் சுண்டக்காய்ச்சி வடிகட்டிய கியாழத்துடன் 1 படி சிற்றாமணக்கெண்ணெய்யும் சிறு துண்டுகளாக அறிந்த  12 பலம் வெங்காயத்தையும் சேர்த்து கலந்து ஒர் தைலபாண்டத்தி லிட்டு அடுப்பிலேற்றி சிறு தீயாய் எரித்து வெங்காயம் வெந்து மிதந்து தைலபதமாக வரும்போது வடித்துப் பத்திரபடுத்துக. இதில்  வேளைக்கு 1/2 முதல் 1 அவுன்சு வீதம் தேகத்திடத்திற்கும், நோயின் வன்மைக்கும் ஏற்றவாறு தினம் ஒரு வேளை வீதம் காலையில் கொடுக் கவும். இப்படி இரண்டு மூன்று முறை கொடுத்துவர வெள்ளை அரையாப்பு, குஷ்டம் கொருக்கு கிரந்தி, மேகரணம் முதலியன குணமாகும்.

சித்திரமூல நெய் :- சித்திரமூல வேர்ப்பட்டை பலம்-2, ஆவின் நெய் படி-1, நல்லெண்ணெய் படி-1 சித்திரமூல வேர்ப்பட்டையை பசும்பால் விட்டரைத்து எண்ணெய், நெய் முதலியவற்றுடன் கலந்து பதமுறக் காய்ச்சி வடித்து வைத்துக்கொளக. இதில் வேளைக்கு 1-2 தேக்கரண்டி வீதம் தினம் 1-வேளை காலையில் அருந்தவும். இப்படி 1/2 முதல் 1-மண்டலம் அருந்த கிரந்தி, மேகரணம், வெடிப்புள்ள ரணங்கள், மேகசூலை, கொருக்கு உள்ளழலை
முதலியன குணமாகும்.

இடிவல்லாதகி லேகியம் :- சுத்திசெய்த கந்தகம், குங்கிலியம், பறங்கிகொட்டை, வாய்விளங்கம், நீரடிமுத்து பருப்பு வகைக்கு பலம்-1, மூக்கைவெட்டி முறைபடி நன்கு சுத்திசெய்த சேராங்கொட்டை பலம்-5, கந்தகத்தை கல்வத்திலிட்டு சன்னமாக அரைத்து வைத்துகொள்க. பிறகு மற்றசரக்குகளை இடித்து சூரணித்து அத்துடன் கந்தகத்தூளையுஞ் சேர்த்து இடித்து கல் வத்திலிட்டு 4-ஜாமம் நன்கு அரைத்து பிறகு தேன் விட்டு 2-ஜாமம் அரைத்து மெழுகு பதத்தில் பத்திரப்படுத்துக. இதில் வேளைக்கு சுண்டக்காய் அளவு தினம் இருவேளையாக ஒரு மண்டலம் உட்கொள்ள மேகநோய்கள், கிரந்தி, கட்டி, விரணம் முதலியன குணமாகும். இச்சாபத்தியம்.

கந்தகத் தைலம் :- சுத்திசெய்த நெல்லிக்காய் கந்தகம் பலம்- 2 1/2, பூவரசம் வித்து பலம்-1 1/4, பிரமதண்டு விதை பலம்-7 1/2 இவைகளைப் பொடித்து குமரிச்சாறு விட்டரைத்து நெல்லிக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி ஓர்நாள் நிழலில் ஆறப்போட்டு, இதனை குழித்தைலக் கருவியிலிட்டு முறைபடி குழித்தைலம் வாங்கி, அதற்கு சமம் சிற்றாமணக்கெண்ணெய் விட்டு அரைத்து புட்டி யில் பத்திரபடுத்துக. இதில் வேளைக்கு 5-முதல் 10-துளி வீதம் சர்க்கரையில் விட்டு தினம் 1-2 வேளையாக 5-நாள் கொடுக்கவும். இச்சாபத்தியம். இப்படி விட்டு விட்டு சில முறைகள் கொடுக்ககுணமாகும்.

பறங்கிச் சூரணம் :- பறங்கிகொட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி கருந்துளசிச் சாற்றில் பாவனை செய்து உலர்த்தி இடித்து வஸ்திரகாயஞ்செய்து வேளைக்கு திரிகடிபிரமாணம் சாப்பிட்டு வர சொரி, சிரங்கு, மேகரணம் முதலியன குணமாகும்.

இரசத் தைலம் :- நன்கு சுத்திசெய்த பாதரசம் பலம்-1/4, கம் மாறு வெற்றிலை பலம்-1, கோவையிலை பலம்-5, பாவட்டையிலை பலம்-5, சிற்றாமணக்குக்காய் பலம்-40, இவற்றுள் எண்ணெய் நீங்கலாக மற்ற சரக்குகளை கல்லுரலிலிட்டு பூணில்லாத உலக்கையால் நன்கு இடித்து கல்வத்திலிட்டு இரசம் உரு தெரியாமல் நன்கு மடித்து இலைகளின் கற்கம் வெண்ணெய்போல் மசியும் வரையில் நன்கு அரைத்து பிறகு சிற்றாமணக்கு நெய்யில் சேர்த்து மர அகப்பையால் கலக்கி ஜாடிகளில் அல்லது பீங்கான் பாத்திரகளிலிட்டு வெய்யலில் சூரியபுடமாக சிலநாள் வைத்து எடுத்து வைத்துக்கொள்க. வேண்டும்போது மர அகபையால் நன்கு கலக்கி இதில்
வேளைக்கு ஒரு உச்சிகரண்டி அல்லது 1/4-பலம் வீதம் தினம் ஒருவேளையாக காலையில் அருந்தவேண்டும். இப்படி மூன்று நாட்கள் கடுபத்தியம் அல்லது உப்பிலா பத்தியத்துடன் அருந்தவும். தேவையாயின் சிலநாட்கள் விட்டுவைத்து பிறகு மீண்டும் முன்போல் ஓர் முறை அருந்தலாம். இப்படி இரண்டு மூன்று முறை
அருந்த கருங்கிரந்தி, செங்கிரந்தி, நுணாக்காய்கிரந்தி முதலிய சகல கிரந்தி, ரோகங்கள், ஆறாத மேகவிரணங்கள், லிங்கப்புற்று யோனிப்புற்று, கண்டமாலை முதலிய மேகநோய்கள் யாவும் குணமாகும்.