Tamil Medicine

the most informative pages on Siddha, Ayurvedha, Tamil Medicine

வாதரோகசிகிச்சை

கோஷ்டகதவாதசிகிச்சை :- திரிகடுகு, கருப்புப்பு, சீரகம்,
கருங்காய்ப்பிஞ்சு, உப்பு, வெங்காரம், சைந்தவலவணம், பிடாலவணம், நன்னாரி, முள்ளங்கத்திரி, சுக்கு, வெட்பாலைவிரை, சித்திர மூலம், இவைகளை சமஎடையாகச் சூரணித்து தயிர்நீர், புளித்தநீர்
வெந்நீர், முதலிய அனுபானங்களில் மேற்சூரணத்தை கலந்து கொடுத்தால் கோஷ்டவாயு நிவர்த்தியாகும். அக்கினிதீபனம் உண்டாகும்.

ஜீரணசக்திஉண்டுபண்ணும்படியான ரசங்களினாலாவது
அல்லதுஇதர ஒளடங்களினாலாவது மலமூத்திரங்கள் தாராளமாக வரும்படி செய்து பால் குடித்து வர கோஷ்டவாதம் நிவர்த்தியாகும்.

ஆமாசயவாதகதசிகிச்சை :- ஆமாசவாய்யு நிவர்த்திக்க,
பசி யுண்டாகவும், சீரணசக்தி யுண்டாகவும், ஒளடதங்களை கொடுத்தாவது, அல்லது வாந்தியாகவும் பேதியாகவும் ஒளடதங்களை கொடுத்து பச்சைப்பயறு, நவதானியம், பழைய அரிசி சாதம் இவைகளை பத்தியமிட வேண்டியது.

பக்குவாதசய வாத சிகிச்சை :- பக்குவாசய வாயுவைப் போக்க அக்கினிதீபனம் உண்டாகும் படியான சிகிச்சையாகிலும் அல்லது உலர்ந்த வாயு நிவர்த்திக்கச் சொல்லிய உபசாரங்களையாவது செய்தல் வேண்டும்.
வயிற்றில் இருக்கும் வாயுவு நிவர்த்திக்க தீபனகரமான க்ஷ¡ரங்கள் சூரணங்கள் இவைகள் கொடுக்கவேண்டியது.
குஷிகத வாயு நிவர்த்திக்க சுக்கு, வெட்பாலைவிரை, சித்திர
மூலம் இவைகளின் சூரணத்தை வெந்நீரில் சாப்பிடவேண்டியது.பக்குவாசய வாயுவை போக்க பேதியாக எண்ணெய்களை சாப்பிட வேண்டியது. லவனாதி சூரணத்தைப் புசிக்க வெண்டியது.

சர்வாங்கவாத சிகிச்சை :- சர்வாங்கவாதம் அல்லது ஏகாங்க வாதம் இதை நிவர்த்தி செய்ய ஆமணக்கெண்ணெயை அப்பியங்கனம் செய்து வெந்நீரில் குளித்தல் நன்று.

குதஸ்திவார சிகிச்சை :- குதவாததோஷம் நிவத்திக்க
குதாவர்த்தத்தில் சொல்லிய சிகிச்சைகளைச் செய்யவேண்டியது.

வஸ்தி, குக்ஷ¢, குதம் இவ்விடத்தில் பிரகோபித்த வாய்வு,
சமனமாகும்படிக்கு தசமூல கியாழத்திலாவது அல்லது கொடி மாதுளம்பழ ரசத்திலாவது எண்ணெயைப்போட்டு சாப்பிட வேண்டியது.

சோத்திராதி கதவாத சிகிச்சை :- செவி முதலிய இந்திரியத்
தானத்தில் பிரகோபித்த வாதமானது நிவர்த்திக்க வாதநாச உபசாரங்கள் செய்து எண்ணை யிட்டுக்கொள்ளல் அப்பியங்கனம் பற்று ஒற்றடம், பூச்சு, புகை முதலியன செய்யவேண்டியது.

ஜீரும்பவாத சிகிச்சை :- சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், இந்
துப்பு இவைகளை சமனளவு எடுத்து சூரணித்து ஒன்றாய்க் கலந்து கொடுத்தால் அந்தக்ஷணமே ஜீரும்பவாதம் நாசமாகும்.

பிரலாபகவாத சிகிச்சை :- கிரந்திதகரம், பற்பாடகம்,
கொன்னை, கோரைக்கிழங்கு, கடுகுரோகணி, வெட்டிவேர், அமுக் கிறாக்கிழங்கு, துளசி, திரா¨க்ஷ, சந்தனம், தசமூலம், காக்கட்டான் இவைகள் சமஎடை கியாழம் வைத்துக் குடித்தால் பிரலாபகவாதம் சீக்கிரம் நீங்கும்.

ரசாஞான சிகிச்சை :- உருசியின்மை முதலியவற்றுடன் நாக்கு மரத்திருந்தால் இந்துப்பு, மிளகு, திப்பிலி, சுக்கு, பலாசு விதை இவைகளை சூரணித்து நாக்கில் தேய்த்தாலும் அல்லது நெல்லிக்காய் புளிப்பு இது அகப்படவிட்டால் சுக்கான்கீரை கொடுத்தாலும்
அல்லது சீமை நிலவேம்பு, கடுகுரோகணி, வெட்பாலைவிரை, வெட்பாலைப்பட்டை, பேயகத்தி, முருக்கன்விரை, கடுகு, கருஞ்சீரகம், திப்பிலி, மோடி, சித்திரமூலம், சுக்கு, மிளகு இவைகளைச் சூர
ணித்து இஞ்சி ரசத்தினால் கல்கஞ்செய்து அடிக்கடி நாக்கில் தடவிக்கொண்டு வந்தாலும் நாக்கின் தடிப்பை எடுத்து லேசாக்கி ருசியின்மை முதலியவைகளை நிவர்த்திக்கச் செய்யும்.

துவக்சூனியதசி சிகிச்சை :- சுப்தவாதம் நிவர்த்திக்க அடிக்
கடி தேகத்திலிருந்து குருதிவாங்கல் சிகிச்சையையும் இந்துப்பு, கருதூபம் இவைகளை தயிலத்துடன் கலந்து தேகத்தின் மீது லேபனஞ் செய்தல் முதலியவைகளையும் செய்யவேண்டியது.

சப்ததாதுகதவாயு சிகிச்சை :- சர்மத்தின் வாதகததோஷம் நிவர்திக்க சிநேகபானம், அப்பியங்கனம், வியர்வை வாங்கல் முதலிய கிரியைகளைச் செய்யவேண்டியது. ரத்தகதவாயுதோஷம் நிவர்த்திக்க சீதபேதனம், விரேசனம், இரத்தம் வாங்கல், முதலிய சிகிச்சைகள் செய்யவேண்டியது.

ஸ்நாயுகத சிகிச்சை :- எலும்புவாயுதோஷம் நிவர்த்திக்க
வியர்வை வாங்கல், உபநாஹகிரியை, சூடுபோடல், கட்டுகட்டல்,
மர்த்தளம்செய்தல் முதலிய கிரியைகளை செய்தல் வேண்டும்.
(ஸ்நாயு-எலும்பு).

சந்நிகவாத சிகிச்சை :- ஆற்றுத்தும்மட்டிவேர், திப்பிலி
இவைகளைச் சூரணித்து சமன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் சந்நிகவாதம் நீங்கும்.

பித்தகபாசிரித பிராணாதித சிகிச்சை :- பித்தத்துடன் கலந்த  வாயு நிவர்த்தியாக வாதபித்தஹரசிகிச்சைகள் செய்யவேண்டியது. அந்த வாயு கபத்துடன் மிசிரமானால் வாதசிலேஷ்ம ஹரசிகிச்சைகளைச் செய்யவேண்டியது.

ஆகேஷபக வாயு சிகிச்சை :- சிற்றாமுட்டிவேர், தசமூலம், யவதானியம், இலந்தை, கொள்ளு இவைகளது கியாழம், பசும்பால் இவைகள் வகைக்கு 8 பாகம், எண்ணெய் 1 பாகம், அதிமதூரம் இந்துப்பு, அகில், குங்கிலியம், புஷ்கரமூலம், தேவதாரு, மஞ்சிஷ்டி
தாமரைக்கிழங்கு, கோஷ்டம், இலவங்கப்பத்திரி, கெந்தி, சன்னமான நன்னாரிவேர், வசம்பு, தண்ணீர்விட்டான் கிழங்கு, அமுக்கிறாங்கிழங்கு, சோம்பு, வெள்ளைச்சாரணை இவைகள் வகைக்கு 1 பங்கு தோலா வீதம் எடுத்து பதினாலு பங்கு நீர் விட்டு, எட்டிலொன்றாக
நீர்விட்டு முன் கியாழத்துடன் சேர்த்து தயிலம் காய்ச்சி வடித்து முறைப்படி அருந்திவர ஆகேஷபகவாயுகள் வாத வியாதிகள் நீங்கும். விக்கல், சுவாசம் அதிமந்தம், குன்மம், இருமல் முதலியன நாசப்படுத்தும். மேற்படி தயிலத்தை ஆறுமாதங்கள் தேகத்தில் தடவிக்கொண்டால் அண்டவிருத்தி நாசமாகும். கர்ப்பமாதர்களுக்கு அவர்களது பலாபலத்தை அறிந்து இதை பிரயோகித்தால் பிரசூதிரோகங்கள் நீங்கும். மலடிமாதர்கள் இதைச்
சாப்பிட்டால் மலடித்தனம் நீங்கி கர்ப்பமுண்டாகும். க்ஷ£ணதாது வுடைய புருஷர்களுக்குக் கொடுத்தால் தாதுவிருத்தியுண்டாகும். வாயுவினால் க்ஷ£ணமானவனுக்கும், மர்மஸ்தானத்தில் அடுயுண்டவ
னுக்கும் அதிக அலுப்பும் ஆயாசமுமடைந்த மனிதனுக்கும், அபி காதம் அடைந்தவனுக்கும் எலும்பு முதலியது உடைந்தவனுக்கும் இதை கொடுக்கலாம். அரசர்கள், மெல்லிய தேகமுடையவர்கள் சுகுமார முடையவர்கள், சுமாயிருப்போருங்கூட இதை உட் கொண்டால் மிகவும் சுகமாயிருப்பார்கள்.

மஹாராஸ்னாதி கியாழம் :- சித்தரத்தை, ஆமணக்குவேர், சீந்தில்கொடி, வசம்பு, பச்சை, அழவணை, பேயாவரை, பற்பாடகள், கோரைக்கிழங்கு, கண்டுபாரங்கி, ஓமம், குராசானி ஓமம், சுக்கு, தேவதாறு, வாய்விளங்கம், கடுக்காய்ப்பூ, சிற்றாமுட்டி வேர், பெருங்குரும்பை, கடுகுரோகணி, மஞ்சிஷ்டி, வெள்ளை அதிவிடயம், கரும் அதிவிடயம், கிச்சிலிக்கிழங்கு, திரிபலை, திப்பிலி,
யசக்ஷ¡ரம், சிகப்பு சந்தனம், கொண்ணைசதை, ஜாதிக்காய், வெட் பாலைப்பட்டை, தேள்கொடுக்குவேர், தசமூலங்கள் இவைகளை சம எடையாக நறுக்கி பதினாறுபங்கு நீர்விட்டு எட்டிலொன்றாய் கியாழம் வைத்து சாப்பிட்டால் ஏகாங்கவாதம், சர்வாங்கவாதம், சுவாச காசங்கள், வியர்வை, சைத்தியம், நமை, சூலை, களரோகம், தேக
மெல்லாம் குத்தல், உதரல், கம்பவாதம், கல்லிவாதம், ஆனைக்கால், ஆமவாதம், கர்ப்பிணிரோகங்கள், சுப்திவாதம், ஜிம்மதம்பம், அபதானகம், குத்தல்வலி, வீக்கம், திமிர்வாதம், குப்ஜவாதம், அபதந்திரவாதம், அர்ஜிவாதம், குதவாதம், குடவாதம், அநுக்கிரக
வாதம், பாதசூலை, வாதசிலேஷ்மம் வியாதிகள் முதலியன யாவும் நாசமாகும்.

மஹாபில்வாதி கியாழம் :- சிற்றாமுட்டிவேர், சுக்கு இவை களின் கியாழத்தில் திப்பிலி சூரணம்போட்டு இரண்டு மூன்று நாள் சாப்பிட்டால் சீதவாதம், கம்பவாதம், தாகம் இவைகள் நீங்கும்.

சர்வாங்கவாதத்திற்கு மாஷாதி கியாழம் :-உளுந்து, பூனைக்காஞ்சொரி, ஆமணக்குவேர், சிற்றாமுட்டிவேர் இவைகள் வகைக்கு ஒரு தோலா வீதம் சதைத்து அத்துடன் சுட்ட பெருங்காயம்-7 குன்றிஎடை இந்துப்பு-7 குன்றிஎடை, சீரகம் 28 குன்றிஎடைப்போட்டு கியாழம் வைத்து இருவேளையாக்கி குடித்தால் பக்ஷகாத
வாதம் நாசமாகும்.

கபிகச்வாதி கியாழம் :- பூனைக்காஞ்சொரி விரை, சிற்றாமுட்டி வேர், ஆமணக்குவேர், உளுந்து, சுக்கு இவைகள் சமஎடை கியாழம் போட்டு அத்துடன் இந்துப்பு கலந்து மூக்கில் நசியம் செய்தால் பக்ஷ¡காதம், சிரோரோகம் சந்நிவாதம் முதலிய வாதங்கள் நீங்கும்.

வாதத்திற்கு ராஸ்னாதி கியாழம் :- சிற்றரத்தை, சீந்தில்கொடி சரக்கொன்றைப் புளி, தேவதாரு, சிறிய நெரிஞ்சில், ஆமணக்கு வேர், வெள்ளைச்சாரணை இவைகள் சமஎடை கியாழம் வைத்து அதில் சுக்கு சூரணத்தைப் போட்டு சாப்பிட்டால், தொடைகள்,
முழங்கால், முதுகுதண்டு எலும்புக்கு கீழ்பாகம், பக்கங்கள் இவைக ளிடத்தில் இருக்கும் குத்தல், நோய் இதுகள் நீங்கும்.

ஸ்வச்சந்த பைரவரசம் :- சுத்திசெய்த பாதரசம், லோஹபஸ் பம், சுவர்ணமாக்ஷ¢கபஸ்பம், சுத்திசெய்த கெந்தி, தாளகம், கடுக் காய்பிஞ்சி, ஆமணக்குவிரை, நொச்சி, சுக்கு, மிளகு, திப்பிலி, பொரித்த வெங்காரம், சுத்திசெய்த வசநாபி, இந்த பதின்மூன்று தினுசுகள் சம எடையாக நிறுத்திகொண்டு நொச்சியிலை சாற்றினால்
ஒரு நாள் அரைத்த பிறகு சிவகரந்தை யிலைச்சாற்றினால் ஒரு நாள் அரைத்து மான்சிமிழியில் வைத்துக்கொள்ளவும். இதில் குன்றி எடை
வீதம், சிற்றரத்தை, சீந்தில்கொடி, தேவதாரு, சுக்கு, ஆமணக்
குவேர் இவைகளை கியாழம் விட்டு அதில் குங்கிலிய பற்பம் போட்டு இந்த அனுபானத்தில் மருந்தை கூட்டிச் சாப்பிட்டு வந்தால் வாதரோகங்கள் யாவும் நீங்கும்.

சமீரபன்னக ரசம் :- அப்பிரக பற்பம் கெந்தி, வசநாபி, சுக்கு மிளகு, திப்பிலி, பாதரசம், வெண்காரம் இவைகள் சமஎடையாக சுத்திச்ய்து கல்வத்திலிட்டு கரிசாலை சாற்றினால் அரைத்து வெய்யிலில் உலர்த்தவும். இப்படி 7 முறை செய்து எடுக்கவும். இந்த மருந்தில் இரண்டு மூன்று குன்றி எடை பிரமாணம் இஞ்சி சுரசத்திலாவது அல்லது கற்கண்டுடனாவது கொடுத்தல் பிரபலமான வாத
ரோகங்கள் அந்த க்ஷணமே நீங்கும்.

வாதரக்ஷ¡ச ரசம் :- இரச பஸ்பம், கெந்தி, காந்த பஸ்பம்
அப்பிரகபஸ்பம், தாம்பிரபஸ்பம், இவைகளை சமஎடையாக
நிறுத்திக்கொண்டு கல்வத்திலிட்டு அதை வெள்ளைச்சாரணை, சீந்தில் கொடி, சித்திரமூலம், துளசி இவைகளின் சுரசத்திலும், திரிகடுகு கியாழத்திலும், தனித்தனி மூன்று நாள் அரைத்து வில்லை செய்துலர்த்தி
அகலிலடக்கி சீலைமண் வலுவாகச் செய்து நன்குலர்த்தி இலகு புட மாக விட்டு ஆறிய பிறகு மருந்தைப் பொடித்து வைத்துக்கொள்க. வாதரத்தம், காந்திபங்கம், ஆமவாதம், தனுர்வாதம், வேதனாவாதம் வாதசூலை, உன்மாதம் இவைகளை நாசமாக்கும். இதை அனுபான
பேதங்களால் கொடுத்தால் 84 வாதங்களையும் குணமாக்கும்.

வாதாரி ரசம் :- பாதரசம் 1 பாகம், கெந்தி2 பாகம், திரிபலை 3 பாகம், சித்திரமூலம் 4 பாகம், குங்கிலியம் 5 பாகம், இவைகள்  யாவையும் கல்வத்திலிட்டு இரண்டு ஜாமம் அரைத்து பிறகு ஆமணக்கெண்ணெய் யால் அரைத்து வேளைக்கு 1, 2 வராகனெடை வீதம் தினம்
ஒரு வேளை காலையில் சாப்பிட்டு பிறகு சுக்கு ஆமணக்குவேர் இவை கள் கியாழத்தை அருந்த பேதியாகும். பேதி அதிகமானால் மருந்தின்
அளவை குறைத்துக் கொள்க. உஸ்ணமான போஜனம் செய்து காற்றில்லாத காற்றில்லாத இடத்தில் வசித்துக் கொண்டு புணர்ச்சியற்று ஒரு மாத காலம் சாப்பிட்டால் சகல வாதங்கள் நீங்கிவிடும்.

சமீரகஜ கேசரீ ரசம் :- சுத்திசெய்த புதிய அபினி, நாவல்
பட்டை குடிநீரில் நன்கு வேகவைத்து சுத்திசெய்து மேல்தோல் நீக்கிய எட்டிக்கொட்டை, புதியமிளகு இவைகளை சமஎடையாகச் சூரணித்து 1/2 முதல் 1 குன்றிஎடை சூரணத்தை கொடுத்து தாம்
பூலம் போடச்செய்தால் குப்ஜவாதம், கஞ்சவாதம், சர்வஜவாதம், குருத்ரசிவாதம், அவபாஹீகம், வீக்கம், நடுக்கல், பிரதானக வாதம், பேதி, அருசி, அபஸ்மாரம் இவைகளைப் போக்கும்.

மிருதசஞ்சீவினி ரசம் :- லிங்கம் 4-பாகம், நாபி 2-பாகம்,
பொரித்த வெண்காரம் 1-பாகம், நேர்வாளம் 1-பாகம் இவைகளை முறைப்படி நன்கு சுத்திசெய்து கல்வத்திலிட்டு, 2-ஜாமம் இஞ்சி ரசத்தினால் அரைத்து பிறகு எருக்கன் பால், தண்ணீர்விட்டான் கிழங்கு ரசம், இவைகளைனாலும் அரைத்து குன்றிஎடை கொடுத்தால்
வாதரோகம், ஊருஸ்தம்பம், ஆமவாதம், சங்கிரஹணி, மூலவியாதி, எட்டுவித சுரங்கள் இவைகள் நீங்கும். இதற்கு மிருதசஞ்சீவினி என்றும் ரசசாகரமென்றும் பெயர்.

வாதகஜாங்குச ரசம் :- ரசபஸ்பம், லோஹபஸ்பம், கெந்தி, தாளகம், சுவர்ணமாக்ஷ¢க பஸ்பம், கடுக்காய், கடுக்காய்ப்பூ, வசநாபி, திரிகடுகு, நெல்லி, வெண்காரம் இவைகளை சமஎடையாக கல்வத்தி லிட்டு சிவகரந்தை, நொச்சி இந்த இரண்டு ரசத்திலும் தனித்தனி
ஒவ்வொரு நாள் அரைத்து குன்றிஎடை சாப்பிட்டால் சகலவாதங்கள், சாத்திய அசாத்திய ரோகங்கள் யாவையும் நாசமாக்கும்.

வியாதிகஜ கேசரீ ரசம் :- பாதரசம், கெந்தி, தாளகம், வச
நாபி, திரிகடுகு, திரிபலை, வெங்காரம் இந்த தினுசுகள் வகைக்கு 1/2 தோலா நேர்வாளம் 1-தோலா இவைகளை மைப்போல் சூரணித்து கரசனாங்கண்ணி மணத்தக்காளி நொச்சி, ஒவ்வொன்றிலும் தனிததனி எவ்வேழு முறை அரைத்து மிளகு பிரமாணம் மாத்திரை
செய்யவும்.

வியாதிகளின் பக்குவா பக்குவங்களை அறிந்து மருந்தை பால் அனுபானத்தில் கொடுத்தால் எட்டுவித சுரங்களும், நொச்சியிலை, கோரைக்கிழங்கு இந்த இரண்டு தினுசு கியாழத்தில் கொடுத்தால் 84-வாதரோகங்களும், வெல்லத்துடன் கொடுத்தால் 40-வித பித்த
ரோகங்களும் நாசமாகும். அனுபான விசேஷங்களில் கொடுத்தால் சகல ரோகங்களும் நிவர்த்தியாகும்.

சூரியபிரபா வடுகங்கள் :- சித்திரமூலம், திரிபலை, வேப்பம் பட்டை, பேய்ப்புடல், அதிமதுரம், மஞ்சள், சிறுநாகப்பூ, ஓமம், சீமைநிலவேம்பு, மரமஞ்சள், ஏலக்காய், கோரைக்கிழங்கு, பற்பாடகம், ரசாஞ்சனம், கடுகுரோகணி, கண்டுபாரங்கி, செவ்வியம், தாமரைக்கிழங்கு, குரோசானி ஓமம், திப்பிலி, மிளகு, நேர்வாளம், கிச்சிலிக்கிழங்கு, சுக்கு, புஷ்கரமூலம், வாய்விளங்கம், மோடி, சீரகம், தேவதாரு, இலவங்கப்பத்திரி, வெட்பாலைப்பட்டை சிற்றரத்தை, போயாவரை, சீந்தில்கொடி, சிவதைவேர், அல்லி
விரை, தாளிசபத்திரி, இந்துப்பு, பீடாலவணம், வளையலுப்பு
கொத்தமல்லி, சோம்பு, சுவர்ணமாஷிகம், சாதிகாய், யவக்ஷ¡ரம், சக்திஷாரம், மிளகு, இந்த தினுசுகள் வகைக்கு 4 தோலா வைத்து சர்க்கரை 20 பலம், நெய் 10 பலம் கலந்து இரசாயணமாக செய்து ரோகொணியின் பலாபலத்தை அறிந்து வேளைக்கு 1/2 முதல் 1 தோலா எடை வீதம் கொடுத்தால் வாதவியாதி, வூருஸ்தம்பம்
அர்த்திதவாதம், குத்ரவாதம், வித்ருதி, ஆனைக்கால், குன்மம், பாண்டுரோகம். அநாகம், அஸ்மரிமேகம், பிரமேகங்கள் ரத்தபித்தம்,  காமாலை, வாதரோகங்கள், பித்தரோகங்கள், கபரோகங்கள்,  சந்நிபாதரோகங்கள், இவைகள் யாவையும் நாசப்படுத்தும். மற்றும்
அக்கினிதீபனம் மனோவுல்லாசம், ஆயுசு விருத்தி, புஷ்டி
இவைகளை யுண்டாக்கும்.

லகுவாதவித்வம்ச மாத்திரை ரசம் :- பாதரசம், வெண்காரம்,  கெந்தி, பாக்ஷ¡ணபேதி, வசநாபி, பலகறைபஸ்பம், தாளகபஸ்பம் சுக்கு, மிளகு, திப்பிலி, இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு ஊமத்தன் யிலைச்சாற்றினால் அரைத்து 1/2, 1 குன்றி எடை பிரமாணம் மாத்திரை செய்து கொடுத்தால் சந்நிபாதங்கள் கபங்கள், வாதங்கள், சீதங்கள், அக்கினிமாந்தம், சுவாசங்கள், சூலைகள், கிறாணி இருமல் இவைகள் நீங்கும்.

வந்ஹிகுமாரம் :- பொரித்த வெங்காரம், சுத்திசெய்த பாத
ரசம், கெந்தி, சங்கு, பஸ்பம், பலகறை பஸ்பம் இவைகள் சம எடை, வசநாபி 3 பாகம், மிளகு 8 பாகம் இவைகள் யாவையும் கல்வத்திலிட்டு கரிசாலை சாற்றினால் அரைத்து குன்றியளவு மாத்திரைகள் செய்து கொள்ளவும் இதில் பிரதி தினம் காலையில் ஒரு மாத்திரை கொடுத்து வந்தால் சகல வாத ரோகங்கள், சுவாசரோகம் கபரோகம், அக்கினிமாந்தம், பீலிகம், இருமல், சூலை, இவைகள்
நீங்கும்.

வாதவித்வம்ச ரசம் :- பாதரசம் 1 பாகம், கெந்தி 1 பாகம்,
வசநாபி 2 பாகம், தாம்பிரபஸ்பம் 1 பாகம், லோஹபஸ்பம் 1 பாகம மாக்ஷ¢க பஸ்பம் 1-பாகம், நேர்வாளம் 1-பாகம், தாளகம் 1-பாகம், திரிகடுகு 1-பாகம், இவைகள் யாவையும் சேர்த்து நொச்சி, கருணை, எருக்கன்பால், முன்னை, வெள்ளைச்சாரணை, ஊமத்தன் இவை களின் ரசத்தினால் தனித்தனி ஏழுமுறை அரைத்து குன்றிஎடை
பிரமாணம் மிளகு சூரணத்தில் கொடுக்கவும்.

முழங்கால், துடை, கண்டச்சதை, முதுகு, முதுகுதண்டு,
பாதங்கள், உதடு, தலை, இந்த இடங்களில் நோய், தலைபெரிய நரம்புகள், தாடைகள், குதபிரதேசம், இவ்விடங்களில் தம்பித்தல், சுழ்கவாதம், ஜிம்மதம்பம், பாஹீதம்பம், பாததம்பம், அதோபாக ஜனிதவாயுவுகள் சகல வாதங்கள் இவைகள் யாவையும் குணமாக்கும்.

கரசமசமீரபன்ன் :- பாதரசம், தாளகம், சவர்ணமாக்ஷ¢க
பற்பம், லோஹபற்பம், கெந்தி, கடுக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, துளசிவேர், கடுக்காய்ப்பூ, வசநாபி, சுட்டவெண் காரம் இவைகள் சமஎடை எடுத்து துளசி, சிவகரந்தை, இந்த ரசங்களில் அரைத்து குன்றிஎடை மாத்திரைகள் செய்யவும். இந்துப்பு, சுக்கு, சித்திரமூலம், இவைகள் கியாழத்தில் கொடுத்தால் வாயுரோகங்கள் நீங்கும்.

திரிகுணாக்கிய ரசம் :- கெந்தம் 8-பாகம் பொடித்து ஓர் மணணோட்டில் வைத்து அடுப்பிலேற்றிச் சிறிதீயாக எரித்து அதில் பாதரசம் 1-பாகம் சேர்த்து ஒரு க்ஷண பொழுது நெருப்பில் வைத்து எடுத்துக் கல்வத்திலிட்டு பொடித்து அத்துடன் அதற்கு சமம் கடிக்காய் சூரணம் கலந்து நன்குகலக்க அரைத்து வைத்துக்கொண்டு
முதல்நாள் 7-குன்றிஎடை, இரண்டாவதுநாள் 8-குன்றிஎடை, இம் மாதிரியாக நாளுக்கு ஒவ்வொரு குன்றிபிரமாணம் விருத்திசெய்த 21-குன்றி ஆகிறவரையிலும் கொடுத்து பால், நெய் சர்க்கரை கலந்த அன்னத்தை புசித்து காற்றில்லாத இடத்திலிருந்தால் 3-பக்ஷங்களில் கபவாதம் நாசமாகும்.

விதூமவாதத்திற்கு வாதாரி ரசம் :- சுத்திசெய்த பாதரசம் 8-பலம், கழிநீரில் மூன்றுநாள் ஊறவைத்து உலர்த்திய எட்டிக்கொட்டை 8-பலம், கெந்தி 8-பலம், சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய்த்தோல், தானிக்காய்த்தோல், நெல்லிப்பருப்பு, சித்திரமூலம், இலவங்கப்பத்திரி, கோரைக்கிழங்கு, வசம்பு, அமுக்கிறாக்கிழங்கு,
காட்டுமிளகு, சுத்திசெய்த நாபி, கோஷ்டம், திப்பிலிமூலம், இவை வகைக்கு 1-பலம் சூரணித்து யாவும் ஒன்றாய்ச் சேர்த்து 24-பலம் வெல்லம் கலந்து அரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்யவும்.
பசும்நெய், மிளகுசூரணம், இந்த அனுபானத்தில் ஒவ்வொரு மாத்விகிதம் கொடுத்தால் விதூமவாதம் குணமாகும்.

ஏகாங்கவாதத்திற்கு ஸ்பரிசாரி ரசம் : - சுத்திசெய்த ரசம்
1 பாகம், சுத்திசெய்த கெந்தி 2 பாகம், முறுக்கன் விரை 2 பாகம் கழுநீரில் மூன்று நாள் ஊறவைத்து எட்டிக்கொட்டை 12 பாகம் இவைகளை கல்வத்திலிட்டு சூரணித்து தேன் விட்டு அரைத்து மெழுகு பதத்தில் நெய் வைத்திருந்த பானையில் போட்டு ஒரு மாதம் தானிய களஞ்சியத்தில் வைத்து சிறு குன்றியளவு விகிதம் கொடுத்து வர ஏகாங்கவாதம், கஞ்சவாதம் இவைகள் நீங்கும்.

கபவாதாரி ரசம் : - ரசபஸ்பம், லோஹபஸ்பம், சுத்திசெய்த தாளகம், ஹேமமாஷிகபஸ்பம், சுத்திசெய்த கெந்தி, இவைகள் சம எடை கல்வத்திலிட்டு ஆமணக்குவேர், இஞ்சி, கரிசனாங்கண்ணி,
மணத்தக்காளி, வெள்ளைகாக்கட்டான், இவைகளின் ரசங்களினால் பிரத்தியேகம் ஒவ்வொரு நாள் அரைத்து மாத்திரைகள் செய்து  பாண்டத்தில் வைத்து சீலைமண் செய்து மந்தாக்கினியால் ஒரு நாள்
எரித்து ஆறிய பிறகு எடுத்து கல்வத்திலிட்டு சூரணித்து அதற்கு திரிகடுகு, சித்திரமூலம், சுத்திசெய்தகெந்தி, சுத்திசெய்த நாபி கருணைக்கிழங்கு, கடுக்காய், சுட்ட வெண்காரம் இவைகளது சூரணத்தைச்சேர்த்து சிவகரந்தை, நொச்சி, கரிசனாங்கண்ணி,  இவைகளின் சாற்றினால் மூன்று நாள் அரைத்து 4 குன்றி பிரமாணம்
மாத்திரை செய்து தடவைக்கு ஒரு மாத்திரை வீதம் அனுபானத்துடன் கொடுத்தால் கபவாதம் நிவர்த்தியாகும்.

ஜிம்மாங்கவாதாங்குரசம் :- சுத்திசெய்த பாதரசம் 5 பலம்
தாம்பிரபஸ்பம் 5 பலம், சுத்திசெய்த கெந்தி 5 பலம் இவைகளை எலுமிச்சம்பழச்சாற்றினாலும், வெற்றிலை சாற்றினாலும் அரைத்து காசிக்குப்பியில்வைத்து சீலைமண் செய்து லகுபுடமிட்டு ஆறிய பிறகு எடுத்து
கல்வத்திலிட்டு சூரணித்து அதற்குச் சரியாக திரிகடுகுச்சூரணச்சேர்த்து இரண்டு குன்றி எடை பிரமாணம் கொடுத்தால் ஜிம்மாங்க
வாதம் நீங்கும்.

ஸ்கந்தவாதத்திற்கு வாதமுத்கர ரசம் :- பாதரசம், நாபி
சுட்ட வெண்காரம், கெந்தி, மனோசிலை, ஊமத்தன்விரை, இவைகளை சுத்திசெய்து சம எடையாக கல்வத்திலிட்டு செருப்படை சாற்றினால் அரைத்து உருண்டை செய்து குப்பியில் வைத்து மேல் மூடி  சீலைமண் செய்து வாலுகாயந்திரத்தில் நாலுஜாமங்கள் எரித்து
ஆறிய பிறகு எடுத்து மறுபடியும் கல்வத்திலிட்டு கள்ளிப்
பால் விட்டு அரைத்து பிறகு மீன்பிச்சியினால் அரைத்து குன்றி எடைமாத்திரைகள் செய்து கொள்ளவும். இந்த மாத்திரையை அனுபான  விஷேசங்களுடன் கொடுத்தால் ஸ்கந்தவாதம், கந்தரவாதம்இவைகள் நீங்கும்.

பாதவாதத்திற்கு ஸ்வச்சந்தநாயக ரசம் :- ரசபஸ்பம், லோகபஸ்பம், சுத்திசெய்த கெந்தி, சுத்திசெய்த தாளகம், ஹேமமாஷிக பற்பம், கடுக்காய்த்தோல், கடுக்காய்ப்பூ, சுத்திசெய்த நாபி, திரிகடுகு
சுட்ட வெண்காரம் இவைகள் யாவும் சம எடையாக கல்வத்திலிட்டு , சிவகரந்தை, நொச்சி, இவைகளின் சாற்றினால் ஒவ்வொரு நாளாக
அரைத்து 3 குன்றி எடை பிரமாணம் மாத்திரை செய்து அனுபான பேதத்தில் கொடுத்தால் பாதவாதம் நிவர்த்தியாகும்.


வஸ்திவாதத்திற்கு ஸ்வச்சந்தபைரவ ரசம் :- ரசம், சுத்தி ாபி, அப்பிரகபற்பம், சுத்திசெய்தலிங்கம், சுத்திசெய்த
கெந்தி, சுத்திசெய்த தாளகம் இவைகள் சமஎடையாக கல்வத்தி லிட்டு, செருப்படை ரசத்தால் மூன்றுநாள் அரைத்து குக்குடபுட மிட்டு ஆறியபிறகு எடுத்து கல்வத்திலிட்டு சூரணஞ்செய்து மீன்,
ஆமை, காட்டுபன்றி இவைகளின் பித்தத்தினால் ஒவ்வொரு நாளாக அரைத்து உளுந்து அளவு மாத்திரைகள் செய்து இஞ்சி ரசத்தில் கொடுத்தால் மிகவுங் குரூரமாகிய வஸ்திகாரம் நீங்கும்.

சுருங்கலவாதத்திற்கு திரிகுணாக்கிய ரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த நாபி, சுத்திசெய்த கெந்தி, அப்பிரகபற்பம், ஆமல வேதசம் இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு செருப்படை இலைசாற்றினால் இரண்டு நாள் அரைத்து காசி குப்பியில் வைத்து
குக்குடபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து மறுபடியும் கல்வத்திலிட்டு  மீன் பித்தத்தில் பாவனைச்செய்து இரண்டு குன்றிஎடை மாத்திரைச்செய்து ஒவ்வொரு மாத்திரை விகிதம் வசம்பு கியாழத்திலாவது
அல்லது மிளகு கியாழத்திலாவது கொடுத்தால் சுருங்கலவாதம் நீங்கும். இதற்கு பத்தியம், பால்சாதம் அல்லது தேங்காய் பாலுடன் கூடிய அன்னத்தை புசிக்கவேண்டியது.

சுக்கிலவாதத்திற்கு பணிபதி ரசம் :- சுத்திசெய்த பாதரசம், சுத்திசெய்த கெந்தி, அப்பிரகபற்பம், லோஹபற்பம், தாம்பிரபற்பம் இவைகள் சமஎடையாக கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாற்றினால் இரண்டுநாள் அரைத்து உருண்டைசெய்து காசிகுப்பியில் வைத்து சீலைமண்செய்து உலர்த்தி வாலுகாயந்திரத்தில் 6 ஜாமங்
கள் எரித்து ஆறியபிறகு எடுத்து குன்றிஎடை மருந்தை மிளகு சூரணத்தில் நெய் கலந்துக் கொடுத்தால் சுக்கிலவாதம் நீங்கும்.

நஷ்டேந்திரியத்திற்கு வாதாந்தக ரசம் :- சுவர்ணபற்பம்,
காந்தபற்பம், லோஹபற்பம், தாம்பிரபற்பம், அப்பிரகபற்பம், இரசபற்பம், சுத்திசெய்த கெந்தி, வைகிறாந்தபற்பம், பிரவாளபற்பம், ரஜிதபற்பம், தாளகபற்பம், இவைகளை சமஎடையாக சுபமுகூர்த் தத்தில் கல்வத்திலிட்டு 4-ஜாமங்கள் சித்திரமூல கியாழத்தினால்
அரைத்து பில்லை செய்து நிழலில் உலர்த்தி ஆறியபிறகு எடுத்து மைப்போல் சூரணித்து சூரணத்திற்கு பேர்பாதி இரசபற்பம், தாளகபற்பம், கலந்து சித்திரமூலம், இஞ்சி, நொச்சி, பெருங்குரும்பை, ஆடாதோடை, எலுமிச்சம்பழம் இவைகளின் ரசத்தினால் ஒவ்வொன்றிலும் ஏழுமுறை அரைத்து குன்றிஎடை மாத்திரைசெய்துக்
கொள்ள வேண்டியது. திப்பிலி சூரணத்தில் நெய் அல்லது தேன் கலந்து வேளைக்கொரு மாத்திரை விகிதஞ் சாப்பிட்டால் சுப்தவாதம், வாதசூலை, வேதனையுடன் கூடியவாதம், சிநாயுவாதம், கம்ப
வாதம், காத்திரபங்கவாதம், பக்ஷகாதவாதம், ஹனுக்கிரஹவாதம், தம் முதலிய 80-வாதங்கள், சகல ரோகங்கள் நிவர்த்தியாகும். மேலும் இம்மருந்தினால் மலடியும் கர்ப்பிணியாவாள். நஷ்ட வீரியமும் விருத்தியாகும்.

சூதிகாவாதத்திற்கு படபானல ரசம் :- சுத்திசெய்த ரசம்
1-பாகம், தாம்பிரபஸ்பம் 1-பாகம், சுத்திசெய்த கெந்தி 2-பாகம், திரிகடுகு 3-பாகம், சித்திரமூலம் 1-பாகம், கோஷ்டம் 1-பாகம், இவைகளை கல்வத்திலிட்டு துளசிரசத்தில் ஒருநாள் அரைத்து இலந்தன்விரை அளவு வடுகங்கள் செய்து வெள்ளைப்பூண்டு ரசத்தில்
வேளைக்கொரு மாத்திரை விகிதம் கொடுத்தாலும் அல்லது பேயாவாரை வேர் ரசத்திலாவது அல்லது முள்விலாம்பட்டை ரசத்தில்
மிளகுசூரணம் போட்டு அத்துடனாவது கொடுத்தாலும் பிரசூதி வாதம் நீங்கும்.

சூதிகாவாதத்திற்கு வாதவித்வம்ஸி ரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த கெந்தி, நாகபஸ்பம், வங்கபஸ்பம், லோஹபஸ்பம்,
தாம்பிரபஸ்பம், சுத்திசெய்த அப்பிரகபஸ்பம், திப்பிலி, சுட்ட
வெங்காரம், மிளகு, சுக்கு இவைகள் வகைக்கு 1-பாகம்,
சுத்திசெய்த வசநாபி 4 1/2-பாகம், இந்த தினுசுகளை கல்வத்தி லிட்டு திரிகடுகு கியாழம். நிலபனங்கிழங்குரசம், சித்திரமூலரசம், கரசனாங்கண்ணி ரசம், கோஷ்டகியாழம் இவைகளால் தனித்தனி மூன்றுதடவையும், நொச்சி, இஞ்சி, ஆடாதோடை, கெஞ்சாஇலை,
வேப்பிலை இவைகளின் சாற்றினால் தனித்தனி ஒரு தடவையும் அரைத்து குன்றிபிரமாணம் மாத்திரைகள் செய்து வைத்து கொள்ளவேண்டியது. வேளைக்கு 1-2 மாத்திரைகளாக அனுபானங்களுடன் சாப்பிட்டுவந்தால், வாதரோகம், சூலை, சிலேஷ்ம
ரோகம், கிரஹணி, சந்நிபாதம், முகவாதம், அபஸ்மாரம், அக்கினிமந்தம், சீதபித்தம், பிலீகோதரம், குஷ்டரோகம், இந்தரோகங்கள் நீங்கும்.

கடிவாதத்திற்கு வாதகேசரிரசம் :- சுத்திசெய்த லிங்கம், சுத்தி செய்த வசநாபி, கடுரோகணி, திரிகடுகு, வசம்பு இவைகள் சம எடை செய்து தோலாயந்திரத்தில் ஒருஜாமம் எரித்து 1-2 குன்றி வீதம் கொடுத்தால் கடிவாதம் நீங்கும்.

ஊருஸ்தம்ப வாதத்திற்கு வாதகஜாங்குசம் :- சுத்திசெய்த
பாதரசம் 8-பாகம், கழுநீரில் மூன்று நாள் ஊரவைத்த எட்டிக்கொட்டை 8-பாகம், சுத்திசெய்த கெந்தி 8-பாகம், திரிகடுகு வகைக்கு 3-பாகம், திரிபலை, வகைக்கு 3-பாகம், இவைகளை கல்வத்தி லிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் அரைத்து குன்றிஎடை மாத்திரைகளாகச் செய்துலர்த்தி வைத்துகொள்ளவேண்டியது.

வேளைக்கு தேக தத்துவத்தை அறிந்து 1 முதல் 2 மாத்திரை களாக நெய் மிளகுச் சூரணம்சேர்ந்த அனுபானத்துடன் கொடுத்து வர ஊருஸ்தம்ப வாதத்துடன் 80 வாதங்களும் நாசமாகும்.

கம்ப வாதத்திற்கு விஜயபைரவிரசம் :- இரச பஸ்பம், தாம்பிர பஸ்பம் இவைகள் இரண்டும் சம எடையாக கல்வத்திலிட்டு நெறிஞ்சல்வேர் ரசத்தில் அரைத்து உலர்த்தி, இம்மாதிரியாக 21-நாள் அரைத்து பிறகு குன்றி பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலி
லுலர்த்தி பேரரத்தை கியாழத்திலாவது அல்லது நெய் மிளகு சூரணத்துடன் கலந்தாவது ஆறு மாதங்கள் சாப்பிட்டால் கம்பவாதம் நடுக்கல் நீங்கும்.

சீதவாதத்திற்கு அக்கினி குமார ரசம் :- இரசபஸ்பம், தாம்பிர பஸ்பம், சுத்திசெய்த வசநாபி இவைகள் தனித்தனி 1-பாகம், சுத்தி செய்த கெந்தி 2-பாகம், திரிகடுகு 1-பாகம், திரிபலை 1-பாகம், இவைகளை கல்வத்திலிட்டு நொச்சி இலை, கண்டங்கத்திரி வேர், சித்திர
மூலம், சிவப்பு ஆமணக்கு வேர், காட்டுக்கொடி, பாகல், கரும் மணத்தக்காளி இவைகளின் ரசத்தினால் 21 முறை அரைத்து பாவனை செய்து உளுந்து அளவு மாத்திரைகள் செய்து இஞ்சி ரசத்தில் கொடுத்தால், சந்நிபாதம், சீதாங்கவாதம், வாய்வுபிடிப்புகள் இவை
கள் நீங்கும். சந்நிபாத சீதசுரத்தினால் மரணாவஸ்தையடைய சித்த
மாயிருக்கும் ரோகியானது நடுநெத்தியில் மயிரை வாங்கிவிட்டு ஊசியால் இம்மருந்தை எடுத்து அவ்விடத்தில் குத்தி மருந்தையேற்றி
ரத்தத்துடன் சேருகிற வரையிலும் கையினால் தேய்த்தால் சந்நி பாதம் நீங்கி சீவிப்பான் எனக் கூறப்படுகிறது.

முகவாதத்திற்கு சதுர்முக ரசம் :- இரசபஸ்பம், அப்பிரக
பஸ்பம், சுத்திசெய்த மயில்துத்தம், அஞ்சனக்கல், சுத்திசெய்தசிலாசத்து, சுத்திசெய்த குங்கிலியம், சுத்திசெய்த மனோசிலை இவைகள் சமஎடையாக தேன்விட்டு அரைத்து உளுந்தளவு மாத்திரைகள்
செய்து கொடுத்தால் முகவாதம் குணமாகும்.

அசீதிவாதத்திற்கு காலாக்கினி ருத்திர ரசம் :- ரசம், வச நாபி, கெந்தி இவைகளை சுத்திசெய்து இத்துடன் குரோசானியோமம், திரிபலை, சஜ்ஜக்ஷ¡ரம், யவக்ஷ¡ரம், சித்திரமூலம். சைந்தல வணம், சீரகம், சவ்வர்ச்சலவணம், வாய்விளங்கம், சுட்ட வெண் காரம், திரிகடுகு இவைகளை சமஎடையாகச்சேர்த்து சூரணித்து இந்த சூரணத்திற்கு சமமாக சுத்திசெய்த எட்டிக்கொட்டை சூரணத்
தைக் கலந்து கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் ஒருநாள் அரைத்து மிளகு பிரமாணம் மாத்திரைகள் செய்து வைத்துக்கொள்ள வேண்டியது. நெய், மிளகு சூரணம் இந்த அனுபானத்துடன்
கொடுத்தால் அக்கினிமாந்தம், பக்ஷவாதம், முதலிய 80 வாத
ரோகங்கள், குன்மம், கிராணி முதலியவைகள் நீங்கும்.

விலோமவாதத்திற்கு வாதசம்மோஹன ரசம் :- சுத்திசெய்த ரசம்,  சுத்திசெய்த நாபி, அப்பிரகபஸ்பம், சுக்கு, மிளகு, சுத்திசெய்த கெந்தி சுட்டவெண்காரம், இந்துப்பு, சுத்திசெய்த ஊமத்தன்விரை, இவைகளை சம
எடையாக கல்வத்திலிட்டு பாவல் யிலைச்சாற்றினால் மூன்று நாள் அரைத்து வஜ்ரமூசையிலாவது அல்லது காசிகுப்பியிலாவது அம்மருந்தை
வைத்து வாலுகாயந்திரத்தில் மூன்று ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து கல்வத்திலிட்டு மீன் பித்தத்தினால் அரைத்து உளுந்தளவு மாத்தி
ரைகள் செய்து வேளைக்கு ஒரு மாத்திரையாக போயாவரை ரசத்திலாவது
நொச்சி யிலை ரசத்திலாவது சேர்த்து கொடுத்தால் அனுலோமவாதம் நிவர்த்தியாகும்.

விலோமவாதத்திற்கு சிம்மநாத ரசம் : - பாதரசம், வசநாபி கெந்தி, மனொசிலை, பலகறை இவைகள் யாவையும் சுத்திசெய்து  சமஎடையாக சேர்த்து இந்தச்சூரணத்திற்கு சமமாக நிலதந்தி
விரைச் சூரணத்தை கலந்து கல்வத்திலிட்டு பாவல் யிலை ரசத்தால் இரண்டு நாள் அரைத்து பிறகு இரண்டு ஜாமங்கள் வாலுகாயந்திரத்தில் எரித்து ஆறிய பிறகு எடுத்து சூரணித்து குன்றி பிரமாணமாக
நொச்சியிலை சாற்றிலாவது அல்லது போயாவரை ரசத்திலாவது கொடுத்தால் விலோமவாதம் நீங்கும்.

பக்ஷவாதத்திற்கு காலகண்ட ரசம் :- சுத்திசெய்த ரசம்,
சுத்திசெய்த வசநாபி, சுத்திசெய்த கெந்தி, மிளகு, சுட்டவெண்காரம்,  திப்பிலி, சுத்திசெய்த ஊமத்தன்விரை, திரிபலை இவைகளை  சமஎடையாக சூரணித்து கல்வத்திலிட்டு கருத்தும்பை, பெரிய
முள்ளங்கத்திரி, பேயத்தி, கார்போகிவிரை, விலாம், இஞ்சி
கரிசனாங்கண்ணி இவைகளின் ரசத்தினால் எடுத்து கல்வத்திலிட்டு ு இவைகளின் பித்தத்தினால் இரண்டு நாள் அரைத்து குன்றி எடை மாத்திரை செய்து வேளைக்கு ஒரு மாத்திரை யாக திரிகடுகு, திரிபலை இந்தக்கியாழங்களில் கொடுத்தால் பக்ஷகாத
வாதம் நீங்கும்.

அதபவாதத்திற்கு வாதசார்த்தூல ரசம்
:- சுத்திசெய்த ரசம்,  சுத்திசெய்த நாபி, சுத்திசெய்த கெந்தி, அப்பிரகபஸ்பம், சுத்திசெய்த  லிங்கம், இந்துப்பு, மோடி, இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு செருப்படை ர்சத்தினால் ஒரு நாள் அரைத்து குக்குட- புடமிட்டு ஆறியபிறகு எடுத்து சூரணித்து குன்றிஎடை நெய்யுடன் மிளகு சூரணத்தில் கொடுத்தால் சூரியன் உதயமானதும் அந்த
காரம் எப்படி நீங்குமோ அவ்விதம் அதபவாதம் நீங்கும்.

அக்கினிவாதத்திற்கு வீரபத்திர ரசம் :- இரசபஸ்பம், தாம்பிர பஸ்பம், இவைகளை சமமாக கல்வத்திலிட்டு நெரிஞ்சல்வேர் கியாழத்தினால் 21-நாள் அரைத்து உலர்த்தி மாத்திரைசெய்து கொடுப்பதுடன் அம்மாம்பச்சரிசி, அதிவிடையம், சித்திரமூலம், இவைகள்
சமஎடை நீர்விட்டு அரைத்து அதில் கொஞ்சம் நெய்யை சேர்த்து காய்ச்சி சரீரத்திற்கு தடவினால் அக்கினிவாதம் நீங்கும்.

சுப்தவாதத்திற்கு கனகசுந்தர ரசம் :- சுத்திசெய்த ரசம்,
தாம்பிரபஸ்பம், சுத்திசெய்த கெந்தி, பொரித்த வெண்காரம்,
திப்பிலி இவைகளை சம எடையாக கல்வத்திலிட்டு வெலுமசந்தி வேர் உத்தாமணி வேர் இவைகளின் கியாழத்தினால் ஒருநாள் அரைத்து
மாத்திரைசெய்து துலாயந்திரத்தில் ஒரு ஜாமம் காடாக்கினியாக எரித்து இரண்டு குன்றிஎடை முதல் ஏழுகுன்றி வரையிலும் தேக
பலத்தை அறிந்தி இஞ்சி ரசத்திலும் கொடுத்தால் சுப்தவாதம் நாசமாகும். சகல வாதங்களும் நீங்கும்.

குல்பவாதத்திற்கு பிராணவல்லப ரசம் :- சுத்திசெய்த ரசம், வசநாபி, அதிவிடயம், அப்பிரகபற்பம், கெந்தி, மனோசிலை இவை கள் சமஎடையாக எடுத்து கல்வத்திலிட்டு பற்பாடக கியாழத்தில்
இரண்டு நாள் அரைத்து வஜ்ஜிர மூசையில்வைத்து பூமியில்புடமிட்டு ஆறியபிறகு எடுத்து மீன், ஆடு, மயில் இவைகளின் பித்தத்தினால் ஒருஜாமம் அரைத்து குன்றிஎடை மாத்திரைசெய்து இஞ்சி ரசத்தில் கொடுத்தால் குல்பவாதமும், சகல வாதங்களும் நீங்கும்.

ஜங்காவாதத்திற்கு லக்ஷமீவிலாச ரசம்
:- இரசம், நாபி, கெந்தி, நேர்வாளம், லிங்கம் இவைகள் சமஎடையாகச் சுத்திசெய்து கல்வத்திலிட்டு சித்திரமூலகியாழத்தினால் ஒருநாள் அரைத்து துலாயந்தி
ரத்தில் ஒருநாள் எரித்து ஆறியபிறகு எடுத்து மீன் பித்தத்தினால், இரண்டு ஜாமமும், பிரமதண்டுபாலினால் ஒருநாளும் அரைத்து குன்றி
எடை மாத்திரைகள்செய்து சிவகரந்தை இலைசாற்றில் மிளகு சூரணத்தைப் போட்டுக்கொடுத்தால் ஜங்காவாதம் நீங்கும்.

ப்ரமணவாதத்திற்கு விஷ்ணுபராக்கிரம ரசம் :- சுத்திசெய்த இரசம், கெந்தி, பொரித்த வெண்காரம், சுத்திசெய்த வசநாபி, சர்ஜ க்ஷ¡ரம், யவக்ஷ¡ரம், இந்துப்பு இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு
ஊமத்தன் இலைச்சாற்றினால் அரைத்து உருண்டைசெய்து குக்கிடபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து மறுபடுயுஞ் சூரணித்து, மீன், காட்டுப்பன்றி இவைகளின் பித்தத்தினால் அரைத்து உளுந்து பிரமாணம்
மாத்திரைகள்செய்து வேளைக்கொரு மாத்திரை விகிதம் குளிர்ந்த நீரிலாவது அல்லது கொண்ணைவேர் கற்கத்திலாவது அல்லது சந்தனத்திலாவது கொடுத்தால் சந்நிபாதங்கள் சுரங்கள் சுவாசரோகம்
விஷமதோஷங்கள், அமஸ்மாரம், தனுர்வாதம், கம்பவாதம், பிராமண வாதம் முதலியன நீங்கும்.

தண்டவாதத்திற்கு விஜயபைரவ ரசம் :- சுத்திசெய்த ரசம், நாபி, கெந்தி, மிளகு, சுக்கு, கஜ்ஜக்ஷ¡ரம், யவக்ஷ¡ரம், டங்கண க்ஷ¡ரம், இந்துப்பு, சவ்வர்ச்சலவணம், பீடாலவணம், காசிசாரம் சமுத்திரலவணம், இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு இஞ்சிரசத்தில் ஒரு நாள் அரைத்து காசிக்குப்பியில் வைத்து சீலை செய்து, உலர்த்தி வாலுகாயந்திரத்தில் வைத்து சிறு தீயாக எரித்த ஆறிய பிறகு எடுத்து அதற்கு பதினொன்றிலொரு பாகம்  சுத்திசெய்த நாபியை கலந்து மை போல் அரைத்து குன்றி எடை இஞ்சிரசத்தில் கொடுத்தால் தண்டவாதம் நிவர்த்தியாகும்.

மந்தவாதத்திற்கு காலகண்டரசம் :- சுத்திசெய்த ரசம்,
சுத்திசெய்த கெந்தி, அப்பிரகபஸ்பம், லோஹபஸ்பம், தாம்பிர பற்பம் இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு செருப்படை ரசத்தால் இரண்டு நாள் அரைத்து காசிக்குப்பியில் வைத்து சீலை செய்து, வாலுகாயந்திரத்தில் ஆறு ஜாமங்கள் எரித்துஆறிய பிறகு
எடுத்து உளுந்த அளவு, உளுந்து தட்டு, வெள்ளைப்பூண்டு
ரசம் இந்த அனுபானத்தில் கொடுத்தால் மந்த வாதம் நிவர்த்தியாகும்.

இரத்தவாதத்திற்கு ரக்தவாதாந்தர ரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த நாபி, அப்பிரகபஸ்பம், அதிவிடயம், மிளகு, சுக்குதிப்பிலி இவைகள் சமஎடையாக எடுத்து கல்வத்திலிட்டு சித்திர மூலவேர் கியாழத்திலும், ஆடாதோடை இலை ரசம், எருக்கன்
வேர் கியாழம், எலுமிச்சம்பழச்சாறு இவைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நாள் அரைத்து உருண்டையாக்கி கோமூத்திரத்தில்
துலாயந்திரமாக எரித்து உளுந்தளவு மாத்திரைகள் செய்து
வேளைக்கு ஒரு மாத்திரையாக நீர்முள்ளி கியாழத்தில் கொடுத்தால் ரத்தவாதம் நீங்கும். மிளகு சூரணத்தில் கொடுத்தால் ஷீணவாதம் நீங்கும்.

கஞ்சாகாதத்திற்கு வாதவஜ்ரரசம் :- அப்பிரகபற்பம்
சுத்திசெய்த ரசம், சுத்திசெய்தவச நாபி, சுத்திசெய்த கெந்தி, திரி கடுகு, சைந்தவலவணம், சுத்திசெய்த லிங்கம், வாய்விளக்கம் மோடி, சித்திரமூலம், இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு
செருப்படை யிலை ரசத்தால் ஒரு நாள் அரைத்து குக்குடபுடமிட்டு அனுபானத்தில் கொடுத்தாலும் அல்லது அரத்தை சூரணத்தில் கொடுத்தாலும் கஞ்சரவாதம் நிவர்த்தியாகும். களாவாதத்திற்கும்
இதைத்தான் கொடுக்கவேண்டியது.

ஸ்த்யானவாதத்திற்கு வாதோன்மூல ரசம் :- பாதரசம், நாபி, கெந்தி இம்மூன்றையும் சுத்திசெய்து இவைகளுக்கு சமம் சுத்தி செய்த ஊமத்தன்விரை சூரணத்தைக் கலந்து கல்வத்திலிட்டு பஞ்ச
கோலம் அதாவது (சுக்கு, திப்பிலி, திப்பிலிமூலம், செவ்வியம், சித்திரமூலம்) இவைகளின் கியாழத்தினால் இரண்டுநாள் அரைத்து மூசையில்வைத்து மேல்மூடி மூடி, சீலைசெய்து உலர்த்தி, பூதாயந்தி
ரத்தில் புடமிட்டு ஆறியபிறகு எடுத்து சூரணித்து மீன்பித்தத்தினால் இரண்டுநாள் அரைத்து குன்றி அளவு மாத்திரைகள்செய்து பஞ்சகோல க்ஷ¡யத்தில் கொடுத்தால் ஸ்த்யானவாதமும் இன்னும்
மற்ற வாதங்களும் நிவர்த்தியாகும்.

கோஷ்டவாதத்திற்கு சுவச்சந்தபைரவ ரசம் :- ரசம், நாபி, கெந்தி, நேர்வாளம் இவைகளை சுத்திசெய்து அத்துடன் அதிவிடயம், சித்திரமூலம் இவைகள் சமஎடையாகச் சேர்த்து கல்வத்தி
லிட்டு எருக்கன்வேர் கியாழத்தில் ஒருஜாமம் அரைத்து துலாயந்தி ரத்தில் ஒரு ஜாமம் எரித்து குன்றிஎடை கொடுத்தால் கோஷ்டகத வாதம் நிவர்த்தியாகும். மற்ற வாதங்களும் நாசமாகும்.

குல்மவாதத்திற்கு திரிவிக்கிரம ரசம் :- இரசம், நாபி, மனோ சிலை, தாளகம், கெந்தி இவைகளை சுத்திசெய்து, தாம்பிரபஸ்பம், கோஷ்டம், சிற்றாமுட்டிவேர், கடுக்காய், சுத்திசெய்ததுத்தம், நிலப்பனங்கிழங்கு இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு ஆமணக்
கெண்ணெய்விட்டு ஒருநாள் அரைத்து குன்றிஎடை மாத்திரைச்செய்து வேளைக்கொரு மாத்திரை விகிதம் சாரணைரசத்தில் கொடுத்
தால் குன்மவாதம் போம்.

ததிவாதாரி ரசம் :- ரசம், கெந்தி, நேர்வாளம் இவைகளைச்சுத்திசெய்து சமஎடையாக கல்வத்திலிட்டு சித்திரமூல கியாழத்தால் ஒருநாள் அரைத்து துலாயந்திரத்தில் இரண்டுஜாமம் எரித்து
குன்றிஎடை கொடுத்தால் ததிவாதம் நிவர்த்தியாகும்.

ஊர்த்துவ வாதத்திற்கு வாதாரி ரசம் :- சுத்திசெய்த ரசம்
1-பாகம், சுத்திசெய்த கெந்தி 2-பாகம், கடுக்காய்தோல் 3-பாகம், தானிக்காய் 4-பாகம், நெல்லிபருப்பு 5-பாகம், சித்திரமூலம் 6-பாகம், சுத்திசெய்த குங்கிலியம் 7-பாகம் இவைகள் யாவையும் கல் வத்திலிட்டு 5-பாகம் விளக்கெண்ணெய் வார்த்து அரைத்து பிறகு
தேவதாரு இவைகளின் சூரணத்தைக் கலந்து ஒருஜாமம் அரைத்து 1/2-தோலா வீதம் மாத்திரைகள்செய்து வேளைக்கொரு மாத்திரை விகிதம் ஆமணக்குவேர் கியாழத்தில் கொடுத்து அந்த எண்ணையை
தேகம்முழுக்க தடவி வியர்வை உண்டாகுமளவு தேகத்தை பிடித்து வர ஊர்த்துவவாதம் நிவர்த்தியாகும்.

சுண்டீ சூரணம் :- சுக்குசூரணம் 7 பலம், நெய்யில்
வருத்த வெள்ளைப்பூண்டு 7 பலம், இவ்விரண்டையும் அரைத்துவைத்துக்கொண்டு தேகதத்துவத்தை அறிந்து கொடுத்து வர வாதரோகம் நீங்கும்.

நாராச சூரணம் :- திப்பிலி 1 பலம், சிவதைவேர் 4 பலம்
இவைகளைச் சூரணித்து 4 பலம் கற்கண்டு சேர்த்து 1/4 தோலா சூரணம் விகிதம் தேனுடன் கலந்து கொடுத்தால் ஆத்மானவாதம் நீங்கும்.

ஹிங்குவாதி சூரணம் :- பெருங்காயம், மோடி, கொத்தமல்லி சீரகம், வசம்பு, சித்திரமூலம், கிச்சிலிகிழங்கு, புளிஓடு, இந்துப்பு பீடாலவணம், உப்பு, மிளகு, சுக்கு, திப்பிலி, யவக்ஷ¡ரம், வெங்காரம்,
கடுக்காய், கோஷ்டம், சிவகரந்தை, கருஞ்சீரகம் இவைகள் சூரணித்து ொடிமாதுழம்பழம் இவைகளுடன் கலந்து அனுபானங்களுடன் கொடுத்தால் வாதரோகங்கள் நீங்கும்.

ராஸ்னாதி சூரணம் :- சிற்றரத்தை, தண்ணீர் விட்டான் கிழங்கு தேவதாரு, தக்கோலம், பொடுதலை, திப்பிலி, ரத்தசந்தனம், பறங்கிச்சக்கை, இந்துப்பு, தாமரைக்கிழங்கு, அமுக்கிறாக்கிழங்கு, சீந்தில்கொடி கோரைக்கிழங்கு, ஏலக்காய், நிலக்கடம்பு, சதாப்புஇலை,
ஓமம், சுக்கு, கோஷ்டம், இவைகளைச் சமஎடையாக சூரணித்து  வெந்நீருடன் சாப்பிட்டால் சருமவாதம் அஸ்திகதவாதம், வாதவிப்புருதி முதலியன யாவும் சீக்கிரத்தில் நீங்கிவிடும்.

சிக்ருமூலாதி சூரணம் :- முருங்கைவேர், திப்பிலி, சிற்றரததை, சுக்கு, நெரிஞ்சுமுள், இந்துப்பு, சித்திரமூலம், ஆமணக்குவேர் இவைகள் யாவையும் சூரணித்து திரிகடிப்பிரமாணம் கொடுத்துவர
சர்வாங்கத்தில் வியாபித்த வாய்வும் அதிவேகத்தில் நீங்கிவிடும்.

ஆஜாமோதாதிசூரணம் :- ஓமம், திப்பிலி, சிற்றரத்தை, சுக்கு, அமுக்கிறாக்கிழங்கு, சீந்தில்கொடி, சோம்பு, தண்ணீர் விட்டான் கிழங்கு இவைகள் சமஎடை சூரணித்து நெய்யுடன் கொடுத்தால் ஹிருத்ரோகம், கோஷ்டகத, கண்டகதவாதங்கள் முதலியன நாசமாகும்.

குஷ்டாதிசூரணம் :- கோஷ்டம், வெட்பாலைவிரை, சுக்கு,
சித்திரமூலம், அதிவிடயம், மஞ்சள் இவைகள் யாவும் சமஎடையாகச் சூரணித்து வெந்நீருடன் சாப்பிட்டால் சகலவாத விகாரங்களையும் நசிக்கச் செய்யும்.

தூமவாதத்திற்கு திரிபலாதி சூரணம் :- கடுக்காய், தானிக்காய் நெல்லிவற்றல், சித்திரமூலம், அதிவிடயம், இவைகள் சமஎடையாக சூரணித்து ஆமணக்கெண்ணெய், கோமூத்திரம், நெய், இந்த அனுபானத்தில் ஒரு மாதம் சாப்பிட்டால் தூமவாதம் நிவர்த்தியாகும்.

சிநாயுவாதத்திற்கு பிருங்கராஜ சூரணம் :- காரைச்செடிவேர் சூரணம் 1 பாகம், மிளகு சூரணம் 1/2 பாகம், கிறாம்பு சூரணம் கால் பாகம், இவைகள் யாவும் சூரணித்து இதற்குச் சமஎடை சர்க்கரை
கலந்து வேளைக்கு 1/2 முதல் 1 தோலாவிகிதம் வெந்நீருடனாவது அல்லது பசும்நெய்யுடனாவது
அனுபானத்தில் ஒருமாதம் சாப்பிட்டால் தூமவாதம் நிவர்த்தியாகும்.

சிநாயுவாதத்திற்கு பிருங்கராஜ சூரணம் :- காரைச்செடி வேர் சூரணம் 1-பாகம், மிளகுசூரணம் 1/2-பாகம், கிறாம்பு சூரணம் கால் பாகம் இவைகள் யாவும் சூரணித்து இதற்குச் சமஎடை சர்க்கரை கலந்து வேளைக்கு 1/2 முதல் 1 தோலா விகிதம் வெந்நீருடனாவது
அல்லது பசும் நெய்யுடனாவது கொடுத்தால் வாதத்தால் பிறந்த கொப்புளங்கள், கட்டி, விரணம், கிரந்தி முதலியன நீங்கி தோலை வுரித்த சர்ப்பத்தைப்போல் தேகம் இருக்கும்.

போகவாதத்திற்கு ஏரண்டமூல சூரணம் :- பெரிய ஆமணக்கு வேரை சூரணித்து 1/4 முதல் 1/2 தோலா வீதம் ஜலத்திடன் கலந்தி 40-நாள் கொடுத்தால் போகவாதங்கள் சகல வாதங்கள் போம்.

முகவாதத்திற்கு விளங்காதி சூரணம் :- வாய்விளங்கம்,
பெருங்காயம், நாயுருவிவிரை, புங்கன்விரை, கடுகு இவைகளைச்சூரணித்து புகைப்பிடித்தால் முகவாதரோகம் நிவர்த்தியாகும்.

பத்யாதி குக்குலு :- கடுக்காய் 100 காய்கள், தானிக்காய்
200 காய்கள், நெல்லிக்காய் 400 காய்கள் இம்மூன்றுஞ் சேர்ந்து ஏறகுறைய 64-தோலா எடை இருக்கவேண்டும். இவைகளை 1024 தோலா எடையுள்ள ஜலத்தில் இரவில் ஊறவைத்து மறுநாள் காலை
அடுப்பேற்றி பேர்பாதிபாகம் மீரும்படியாக காய்ச்சி வடிகட்டி இரும்புப்பாணலில் போட்டு செவ்வையாகக் காய்ச்சி இறக்கி அதில் வாய்விளங்கம், தந்திமூலம், திரிபலை, சீந்தில்கொடி, திப்பிலி,
சிவதை, சுக்கு, மிளகு இவைகள் வகைக்கு 2-தோலா சூரணித்து போட்டுக் கலக்கி லேகியபதமாக செய்யவும்.
இதைச் சாப்பிட்டு தனக்கிஷ்டமான போஜனம், குளிர்ந்த ஜலபானம் செய்தாலும், குருத்ரசி, கஞ்சவாதம், பிலீகம், பங்குவாதம், பாண்டு, நமைச்சல், வாந்தி, வாதரக்தம் இவைகள் யாவும் நாசமாகும்.

தூவாதிரிம்சக குக்குலு :- சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், கோரைக்கிழங்கு, வாய்விளங்கம், செவ்வியம், சித்திரமூலம், வசம்பு, ஏலரிசி, மோடி, சிவகரந்தை, தேவதாரு, செவ்வலிக்கொடி, கோஷ்டம், அதிவிடயம், மஞ்சள்,
மரமஞ்சள், சீரகம், சுக்கு, சாதிப்பத்திரி, பேயாவரைவேர், சூரத்து கருப்புப்பு, வாய்விளங்கம், யவக்ஷ¡ரம், சத்திக்ஷ¡ரம், ஆனைத்திப்பிலி, இந்துப்பு இவைகள் வகைக்கு 1-பலமாக இவைகள் எடை களுக்கு சமமாக குங்கிலியத்தைச் சேர்த்து மேற்கூறிய பிரகாரம் மருந்து தயார்செய்து இலந்தைப்பழம் பிரமாணம் மாத்திரைசசெய்து தேன் அல்லதி நெய் அனுபானத்தில் காலையில் மாத்திரம் சாப்பிட்டுவந்தால் , ஆமம், உதாவர்த்தம், அண்டவிரித்தி, சூதகிருமி, மகாசுரம், பூத யாதை, அநாஹரோகம், உன்மாதரோகம் குஷ்டரோகம், பாரிசசூலைகள், ஹிருத்ரோகம், குருத்ரசி, ஹதுஸ் தம்பம், பக்ஷகாதம், ஆபதானகம், சோ¨க்ஷ, பீலிகை, காமாலை இவைகள் யாவும் நீங்கும்.

பிரமவாதத்திற்கு விச்வாத்திய குக்லு :- தண்ணீர்விட்டான் கிழங்கு, ஆமணக்குவேர், ஜடாமாஞ்சி, சுக்கு, மரமஞ்சள், கோஷ்டம், இந்துப்பு, சிற்றரத்தை, சீந்தில்கொடி, இவைகள் யாவையும்
சூரணித்து இந்த சூரணத்திற்கு 2 பாகம் சுத்திசெய்த குங்கிலிய சூரணத்தை கலந்து சேர்த்து மாத்திரைகள் செய்து தேக தத்துவத்தை அறிந்து கொடுத்தால் பிரமவாதம் முதல் நாட்பட்ட வாதப்
பிணிகள் நிவர்த்தியாகும். இதை பத்தியத்துடன் சாப்பிடவும்.

வேறுமுறை :- சுக்கு, திப்பிலி, திப்பிலிமூலம், வாய்விளக்கம் தேவதாரு, இந்துப்பு, சிற்றரத்தை, ஓமம், சித்திரமூலம், மிளகு கரும்வசம்பு, கடுக்காய் இவைகள் யாவையும் சமஎடையாகச் சூரணித்து
இந்த சூரணத்திற்கு 2 பாகம் குங்கிலிய சூரணத்தை சேர்த்து நெய்யுடன் கொடுத்தால் வாதங்கள், சூலைகள், குன்மங்கள், பேதிகள் நடுக்கல், குதவாத தோஷம் இவைகளைப் போக்கும்.

அஸ்திமஜ்ஜாகதவாதத்திற்கு கேதகாதி தைலம் :- தாழம்பு,  சிற்றாமுட்டி, போராமுட்டி, இவைகளின் ரசத்தில் நல்லெண்ணெய் சேர்த்து தைலபக்குவமாக காய்ச்சி சரீரத்திற்கு லேபனஞ்செய்தால் அஸ்திகவாதம் நீங்கும்.

பாஹியாமவாதத்திற்கு சர்ஜ தைலம் :- தனுர்வாதத்திற்கு சர்ஜதைலத்தால் லேபனஞ்செய்து பிடித்தாலும் தசமூல குடிநீரை
அருந்தினாலும் அல்லது நசியஞ்செய்தாலும் தனுர்வாதம் நசிக்கும். (சர்ஜதைலமென்பது குங்கிலிய தைலம்).

பக்ஷகாதவாதத்திற்கு கிரந்திகாதிதைலம் :-மோடி, சித்திர மூலம், சிற்றரத்தை, திப்பிலி, சுக்கு, இந்துப்பு இவைகளை கல்கஞ்செய்து உளுந்துக்கியாழம், எள் எண்ணெய் இவைகள் யாவையுஞ்
சேர்த்து தைலபதமாக காய்ச்சி தேகத்திற்கு தடவிக்கொடுத்தால் பக்ஷகவாதம் நீங்கும்.

பக்ஷகாதவாதத்திற்கு மாஷாதிதைலம்
:- உளுந்து, போயா வரை, அதிவிடயம், ஆமணக்குவேர், சிற்றரத்தை, தண்ணீர்விட்டான் கிழங்கு, இந்துப்பு இவைகளை சூரணித்து உளுந்து சிற்றா முட்டி இவையிரண்டையும் கியாழம் வைத்து கியாழத்திற்கு காலில்
ஒரு பாகம் எண்ணெய் வார்த்து மேற்கூறியவைகள் யாவும் ஒன்றாய்க்கலந்து தைலபதமாக காய்ச்சி சரீரத்திற்கு தடவிக்கொடுத்தால்பக்ஷகவாதம் நீங்கும்.

சர்ஜ தைலம் :- குங்கிலியத்தை சூரணித்து எண்ணெயிலிட்
டுக் காய்ச்சி வடித்து சரீரத்திற்கு தடவினால் பக்ஷ¡காதவாதம் நீங்கும்.

மஹாவிஷ கர்ப்ப தைலம் :- ஊமத்தன், நொச்சி, சுரை,
சாரணை, ஆமணக்குவேர், அமுக்கிறாக்கிழங்கு, தகரைச்செடி, சித்திரமூலம், முருங்கைப்பட்டை, மணத்தக்காளி, தானிக்காய், வேப்பன், மலைவேப்பன், ஈசுரமூலி, தசமூலங்கள், தண்ணீர்விட்
டான்கிழங்கு, பாவல், வெள்ளை, நன்னாரிவேர், சிவகரந்தை, நிலப்பூசனி, கள்ளிப்பால், எருக்கன், மருதம்பட்டை, வெள்ளை சிகப்பு அலரி, வசம்பு, வெலுமசந்தி, நாயுருவி, சிற்றாமுட்டி, பேராமுட்டி, முள்ளங்கத்திரி, ஆடாதோடை, முதியார்கூந்தல், இவைகள் வகைக்கு 4-தோலா எடை சூரணித்து 1024-தோலா எடை சலத்தில்போட்டு நாலிலொன்றாக குடிநீரிட்டு அதில் திரிகடுகு, எட்டி
கொட்டை, சித்தரத்தை, கோஷ்டம், அதிவிடயம், கோரைக்கிழங்கு, தேவதாரு, வசநாபி, யவக்ஷ¡ரம், வெண்காரம், இந்துப்பு, பிடா
லவணம், சூரத்து கரும் உப்பு, கடல் உப்பு, மயில்துத்தம், பெருங்காயம், சுக்கு, கண்டுபாரங்கி, நவாச்சாரம், அழவனை, பேயாவரைவேர், சீரகம், பெரிய சதாப்பிலை இவைகள் சமஎடையாகச் சூரணித்து இந்தச் சூரணம் 16-தோலா, 64-தோலா எண்ணெய் இவைகள் யாவையும் ஒன்றாகச் சேர்த்துமந்தாக்கினியால் தயிலபதமாக
காய்ச்சி தயார் செய்யவேண்டியது. இந்த தயிலத்தை தேகத்திற்கு தடவினால் வாதங்கள் யாவும் நீங்கிவிடும். சர்வாங்கத்திலும் சந்திகளிலும் உள்ளவாதங்கள் ஆட்யவாதம், குததோஷவாதம், மஹாவாதம்,
தண்டபதாளகம், கர்ணநாதம், திமிர்வாதம் இவையாவும் காட்டில் சிங்கத்தை பார்த்தால் மற்றமிருகங்கள் ஓடுவதுபோல் பறந்தோடும் ஆனை குதிரை இவைகளின் மீதிருந்து விழுந்து நரம்புகள்
எலும்புகள் உடைந்தது தீராவினையையும் பாதையையும் கொடுக்கிற நோய்களையும் தீர்த்துவிடும். பசுக்களுக்கு வாதரோகமிருந்தாலும் இந்த தைலத்தை தடவிவந்தால் அதின் பிணியையும் தீர்க்கும்.

பிரசாரிணீ தைலம் :- முதியார்கூந்தல்செடி சமூலமாக இடித்துப் பிழிந்தசாறு 400-தோலாஎடை, தயிர் 256-தோலாஎடை, காடி 512-தோலாஎடை, நல்லெண்ணெய் 100-தோலாஎடை இவைகளை ஓர் தைலப்பாண்டத்திலிட்டு அதில் சுக்கு 20-தோலா, சிற்றரத்தை
8-தோலா, முதியார்கூந்தல் 8-தோலா, அதிமதுரம் 8-தோலா இவைகள் யாவையும் சூரணித்து மேற்கூறியதிரவத்தில் சேர்த்து மந்தாக்கினியில் தயிலபதமாக காய்ச்சி தேகத்திற்கு தடவினாலும் அல்லது
நசியஞ்செய்தாலும் ஏகாங்கவாதம், சர்வாங்கவாதம், அபஸ்மாரம், உன்வாதம், வித்திரதி, அக்கினிமந்தம், சர்மரோகம், பிடிப்புசந்திகளி
லிருக்கும் வாதங்கள், சுக்கிரவாதம், ரஜோகவாதம் முதலிய சகல வாதங்களும் போம். இன்னும் இது புருஷனுக்குவீரியவிருத்தியும், மலடிகளுக்கு கர்ப்பத்தையும் உண்டாக்கும், கிழவர்கள்
பாலர்கள், இராஜாக்கள் இவர்களுக்கு மிகவும் சவுக்கியத்தைதரும்.

சதாவரீதைலம் :- தண்ணீர்விட்டான்கிழங்கு, சிற்றாமுட்டி,
போராமுட்டி, சித்தாமல்லி, நிலக்கடம்பு, ஆமணக்குவேர், அமுக்கிறாக்கிழங்கு, நெரிஞ்சல், வில்வம், நாணல், அழவணை இவைகள் வகைக்கு
1 1/2 பலம் அரைத்து கற்கம் செய்து அதற்கு நாலுபாகங்கள்
அதிகமாக ஜலம் விட்டு காய்ச்சி நாலில் ஒரு பாகம் மீறும்படி படியாக குடிநீரிட்டு வடிகட்டி அதில் எண்ணெய் 20 பலம், பசும்பால் 20 பலம், தண்ணீர்விட்டான்கிழங்கு 20 பலம், ஜலம் 20 பலம், அதில் தண்ணீர்விட்டான்கிழங்கு, தேவதாரு, ஜடாமாஞ்சி கிரந்திகரம், சந்தணத்தூள், பெரியசோம்பு, சிற்றாமுட்டி,
கோஷ்டம், ஏலக்காய், கல்லுப்பு, கருஅல்லி, நிலப்பனை, அதிமாதூரம் இலுப்பைமரப்பட்டை, அமுக்கிறாக்கிழங்கு, பூசினிக்கிழங்கு, தினுசுகள் வகைக்கு 1/4 பலம் பிரமாணம் அரைத்து கற்கம் செய்து
அத்துடன் சேர்த்து கோமலத்தால் செய்த எருமுட்டைகளால் எரித்து
தைலபக்குவமாக காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள
வேண்டியது. இந்த தைலத்தை புருஷர்கள் தேகத்திற்கு தேய்த்துக்கொண்டால் காமம் அதிகரித்து பிரதிதினம் மாதரின் புணர்ச்சியைவிடார்கள். மாதர்கள் சரீரத்திற்கு லேபனஞ் செய்தால் யோனி
சூலைகள் நசிந்து பிள்ளைகளைப்பெருவார்கள். அங்கசூலைகள் சிறோசூலைகள், காமாலை, பாண்டு, விஷ்பாதை, குருதசீவாதம், பீலிகை
சோஷை, மேகங்கள், தாபத்துடன் கூடிய வாதாக்தம், பித்தத்தினால் உண்டாகிய மாதரின் பெரும்பாடு நோய், பிரமேகம், இரத்தபித்தம் இவைகள் நீங்கும்.

மாஷதைலம் :- உளுந்து 64 தோலா 256 தோலா எடையுள்ள  ஜலத்தில் போட்டு நாலிலொன்றாக கியாழம் வைத்து அந்த கியாழத்திற்கு நாலு பங்கு பசும்பாலும் 64 தோலா எடை நல்லெண்ணெய்யும் சேர்த்து ஜீவநீயகணத்தில் சொல்லிய 8 சரக்குகள் அதா
வது சோம்பு, இந்துப்பு, சிற்றரத்தை, அதிமதூரம், சிற்றாமுட்டி சுக்கு, மிளகு, நெரிஞ்சல், திப்பிலி இவைகள் வகைக்கு 1 தோலாவீதம் கற்கம் செய்து அதில் விட்டு தைலபக்குவமாகக்காய்ச்சவும் இந்த தைலத்தை உள்ளுக்கு குடித்தாலும் அல்லது மேலுக்கு தடவினாலும் அல்லது வஸ்திரகர்மஞ்செய்தாலும்
பக்ஷகாதம், அர்தித வாதம், கர்ணசூலை, செவிடு, திமிர்ரோகம் சந்நிபாதரோகம், கைநடுங்கல், கைகள்சுழங்கித்தல், கழுத்துவலி
இழுப்பு, முதலிய கழுத்துரோகங்கள் நீங்கும்.

சதாவரிநாராயணதைலம் :- சதாவரி, சிற்றாமல்லி, நிலக்கடம்பு கிச்சிலிக்கிழங்கு, சிற்றாமுட்டி, ஆமணக்குவேர், முள்ளங்கத்திரி
கண்டங்கத்திரி, முதியார்கூந்தல், புங்கண், முள், அழவணை இவைகள் வகைக்கு 40-தோல, 5024-தோலாஎடை ஜலத்தில்ப்போட்டு கியாழம் நாலில் ஒருபங்கு மீறும்படிக் காய்ச்சி வடிகட்டி அதில் வெள்ளைச்சாரணை, வசம்பு, மரமஞ்சள், தண்ணீவிட்டான்கிழங்கு, சந்த
னம், கிருஷ்ணாகரு, சிலாசத்து, கிரந்திதகரம், கோஷ்டம், கல்லுப்பு, ஏலக்காய், ஜடாமாஞ்சி, துளசி, சிற்றாமுட்டி, அமுக்கிறாக்கிழங்கு, இந்துப்பு, சிற்றரத்தை, மஞ்சிஷ்டி, கோரைக்கிழங்கு, கிரந்திதகரம்,
காட்டுமிளகு, ஞாழல் இந்த தினுசுகள் வகைக்கு 6-தோலா கற்கஞ்செய்து பசும்பால், ஆட்டுபால் இவைகள் தனித்தனி 2-சேர்கள் தண்ணீவிட்டான்கிழங்கு ரசம் 1-சேர், எண்ணெய் 1-சேர் இவைகள் யாவையும் சேர்த்து தைலப்பதமாகக் காய்ச்சி இறக்கிகொண்டு கிராம்பு, நகமென்கிற வாசனைதிரவியம், தக்கோலம், வாய்விளங்கம்,
சீரகம், இலவங்கப்பட்டை, கடுகுரோகணி, பச்சைக்கற்பூரம், குங்கு மப்பூ, கஸ்தூரி இவைகள் யாவையும் சூரணித்து தைலத்தில் போடவும். இந்த தைலத்தை வாதரோகத்தால் பீடிக்கப்படும் குதிரைகளுக்கு, ஆனைகளுக்கு, மனிதர்களுக்கு தடவினால் சகல வாதங்கள்
நாசமாகும். மனிதர்கள் அதை உட்கொண்டால் தீர்க்காயுசு பலம் நிச்சயமாய் உண்டாகும். ஹிருதயசூலை, பாரிச்சூலை, ஒற்றை தலை
நோய், கண்டமாலை, வாதரக்தம், காமாலை, அஸ்மரீ, பாண்டு, உன்மாதம் இவைகளை நீங்கும்.

பிரசாரீணீ தைலம் :- முதியார்கூந்தல் சமூலம் 300-தோலா, தண்ணீவிட்டான்கிழங்கு 400-தோலா, அமுக்கிறாக்கிழங்கு 400- தோலா, தாழம்பூ இதழ்கள் 400-தோலா, தசமூலம் பிரத்தியேகம்
400-தோலா, ஜலம் 102400-தோலா, இவைகளை 1024-தோலா கியாழன் மீரும்படியாக சுண்டக்காய்ச்சி அதில் கியாழத்திற்கு இரண்டு பாகம் அதிகமாக புளித்தசலம், தயிர்மூதுதேட்டை, பால், வெள்ளைக்
கரும்புரசம், ஆட்டுக்கரிரசம் இவைகள் பிரத்தியேகம் 1024-தோலாஎள் எண்ணெய் 1024-தோலா இவைகள் யாவையும் ஒன்றாக கலந்து பிறகு சேராங்கொட்டை, கிரந்திதகரம், சுக்கு, சித்திரமூலம், திப்பிலி, கிச்சிலிக்கிழங்கு, வசம்பு, முதியார்கூந்தல், மோடி, தேவ
தாரு, தண்ணீவிட்டான்கிழங்கு, ஏலக்காய், இலவங்கப்பட்டை,  வெட்டிவேர், குங்குமப்பூ, மஞ்சிஷ்டி, கருப்புசேராங்கொட்டை, நகமென்கிற வாசனைதிரவியம், அகரு, பச்சைக்கற்பூரம், மஞ்சள், கிராம்பு, காமாக்ஷ¢புல், சந்தனம், தக்கோலம், நாயுருவி, கோரைக்கிழங்கு, மரமஞ்சள், கோஷ்டம், கிச்சிலிக்கிழங்கு, காட்டுமிளகு, சிலாரசம், கிருஷ்ணாகரு, தாழம்பூ, திரிபலை, கற்பூரகிச்சிலிக்கிழங்கு, புஷ்கரமூலம், க்ஷ£ரகாகோளி, காட்டுப்பச்சைபயறு, காட்டு உளுந்து, வெள்ளைத்தண்ணீவிட்டான்கிழங்கு, நிலப்பனை, சாரனை, சசமூலங்கள், போளம், ரக்தபோளம், நாககேசரம், ரசாஞ்சனம், கடுகு ரோகணி, பின்னங்காய் இவைகள் வகைக்கு 12-தோலா விகிதம் சேர்த்து கற்கஞ்செய்து மந்தாக்கினியால் தயிலபதமாகக் காய்ச்சி
அப்பியங்கனம் செய்தால் சருமரோகம் நீங்கும். பானம் செய்வதால் கோஷ்டகதவாதமும் அன்னத்துடன் கலந்து சாப்பிட்டால் குஷ்மநாடிகவாதமும், நசியம் செய்தால் ஊர்த்துவதகத வாதமும்
வஸ்திகர்மம்செய்தால் பக்ஷ¡சிரிதவாயுவும், நிரோஹிகிரியை செய்
தால் சர்வாங்கவாதமும் போம். வாதம், பித்தம், கபம், தொந்தம் சந்நிபாத சம்பந்தமான சுவஸ்தமாகும்.

விஷகர்ப்பதைலம் :- நொச்சி, கரிசனாங்கண்ணி, ஊமத்தன் இவைகளின் ரசங்கள் கோமூத்திரம் இந்த தினுசுகள் வகைக்கு 64 தோலா வசம்பு, கோஷ்டம், ஊமத்தம்விரை, காயபலம் இவைகள்
வகைக்கு 2 பாகம் இவைகள் யாவையும் கற்கம் செய்து கலந்து கல்கத்திரவியங்களுக்குச் சமம் வசநாபியும் எள் எண்ணெய் 64தோலா எடையுஞ் சேர்த்து தைலபக்குவமாகக்காய்ச்சி மேலுக்கு தடவி
பிடிக்கச்செய்தால் வாதவியாதி நிவர்த்தியாகும்.

இத்தைலத்தில் நாபி, ஊமத்தை, முதலிய கொடிய நஞ்சுச்
சரக்குகள் சேர்ந்திருப்பதால் இந்தத்தைலம் வாயில் படாதபடி கவனிக்கவும்.

மஹாபலாதி தைலம் :- சிற்றாமுட்டிவேர், தசமூலங்கள், யவ தானியம், இலந்தை, கொள்ளு இவைகளை சமஎடையாகக் கொண்டு முறைப்படி எட்டிலொன்றாக காய்ச்சிய கியாழம் பசும்பால் இவைகள் வகைக்கு 8 பாகங்கள் இந்துப்பு, அகருகுங்கிலிய்ம் சரளதேவதாரு, தேவதாரு, மஞ்சிஷ்டி, சந்தணம், கோஷ்டம், எலக்காய்
இலந்தை, தண்ணீர்விட்டான்கிழங்கு, பன்னீர்கிழங்கு, சதாப்பிலை சாரணை இவைகளை சமஎடையாக கற்கஞ்செய்து கியாழத்தின் எடையில்
எட்டிலொன்றை சேர்த்து தயிலபதமாகக்காய்ச்சி பொன்பாத்திரத்திலாவது
அல்லது வெள்ளிப்பாத்திரத்திலாவது அல்லது மண்பாத்திரத்திலாவது உபயோகித்தால் சகலவாதரோகங்கள் நிவர்த்தியாகும்.

சிசுவைப்பெற்றவளுக்கு தேகபலத்தை அறிந்து கொடுத்தால் பிரசவத்திலுண்டான ரோகங்கள் நீங்கும்.
மலடிக்கு கொடுத்தால் கர்ப்பிணியாவாள். புருஷனுக்கு
கொடுத்தால் நஷ்டவீரியம் விரித்தியாகும். தேகதத்துவத்தை அறிந்து கொடுத்தால் ஷீணகாதம், மர்மகாதம், தண்டாகாதம், பீடை அஸ்திபங்கம், ஆஷேபகாதவாதங்கள் இவைகள் யாவும் நிவ்ர்த்தியாகும்.

சந்தனாதிக்தைலம் :- சந்தனம், தாமரைத்தண்டுகள், கோஷ்டம் வெட்டிவேர், தேவதாரு, சிறுநாகப்பூ, இலவங்கப்பத்திரி,ஏலக்காய், இலவங்கப்பட்டை, ஜடாமாஞ்சி, கிரந்திதகரம், வெட்டி
வேர், ஜா