Monday, 24 September, 2018
பித்த ரோக சிகிச்சை

இருபத்தினாலு பித்த வியாதிகளுக்கு ஏலாதி சூரணம் :- ஏலக்காய் 1 தோலா, இலவங்கம் 2 தோலா, கோரைக்கிழங்கு 2 தோலா அதிமதூரம் 4 தோலா, சிறுபிளைவேர் 5 தோலா, கற்பூரசிலாசத்து 6 தோலா, தக்கோலம் 7 தோலா, சந்தனத்தூள் 8 தோலா, சீரகம் 9 தோலா, மஞ்சள் 10 தோலா, நெல்லிப்பருபு 11 தோலா, தண்ணீர் விட்டான்கிழங்கு 12 தோலா, ஆவாரைவிரை 13 தோலா,  இவைகள் யாவையும் சூரணித்து சூரணத்திற்குச் சமஎடை சீந்தில் சர்க்கரை கலந்து இவைகள் யாவைக்கும் சர்க்கரை கலந்து இரண்டு வேளையிலும் மூன்று விறட்கடை பிரமாணம் சாப்பிட்டு வர சகலபிரமேகங்கள் கிறாணிகள், அதிசாரங்கள் சகல்  பித்தரோகங்கள் நிவர்த்தியாகும். சுக்கிலவிருத்தி புத்திரோற்பத்தி இவைகளை யுண்டுபண்ணும்.


பித்தத்திற்கு பிருங்கராஜ சூரணம் :- உள்ளங்கை அளவு
மிளகை எடுத்து அதில் கரிசாலை 16 பலம் விட்டரைத்து
உலர்த்தி சூரணித்து அதில் கடுக்காய், திப்பிலி, கண்டுபாரங்கி இந்துப்பு, ஆமணக்குவேர், இவைகளை தனித்தனியே சூரணித்து 1/4 பலம் வீதம் சேர்த்து யாவும் கலக்கும்படி அரைத்துவைத்துக் கொள்ளவும். இதை திரிகடிப் பிரமாணம் தேனுடன் கலந்துகொடுத்
தால் பித்தம் சமனப்படும்.

ஆவரபித்தத்திற்கு பைத்தியாந்தக ரசம் :- பாதரசபஸ்பம், அப்பிரகபஸ்பம், இரும்புபஸ்பம், தாம்பிரபஸ்பம், எழுகுபஸ்பம், மாஷிகபஸ்பம், தாளகபஸ்பம், கெந்திபஸ்பம், இவைகள் சமஎடை
கல்வத்திலிட்டு அதிமதூரம், சீந்தில்கொடி, திரா¨க்ஷ, வட்டத்திருப்பி நிலப்புசினிக்கிழங்கு இவைகளின் கியாழத்தில் ஒரு நாள் அரைத்து குன்றி எடை மாத்திரைகள் செய்து வேளைக்கு ஒரு மாத்திரைவீதம்
தேன், வெள்ளைச்சர்க்கரை, பால், இவைகளுடனாவது அல்லது அதிமதூர கியாழத்தில் சர்க்கரை கலந்து அதிலாவது சாப்பிடவும். இதனால் பித்தாதிக்கம், இருபது பித்தரோகங்கள் பித்தசுரம், க்ஷயங்கள் பித்த எரிச்சல், தாஹம், சோபை இவைகள் யாவும் நீங்கும். இதற்கு
பத்தியம் இச்சாபத்தியம்.

விவரணபித்தத்திற்கு படபாக்கினி ரசம் :- சுத்திசெய்த பாதரசம், சுத்திசெய்த கெந்தி, எழுகுபஸ்பம், இரும்புபஸ்பம், வங்க பஸ்பம், நாஹபஸ்பம், வெள்ளிபஸ்பம், பொன்பஸ்பம், தாம்பிர பஸ்பம், காந்தபஸ்பம் இவைகள் சமஎடை கல்வத்தில்ட்டு கற்றாழை சாற்றினால் ஒருஜாமம் அரைத்து குன்றிஎடை மாத்திரை செய்து
வேளைகொரு மாத்திரை விகிதம் திப்பிலி சூரணத்துடன் கொடுத்தால் சகல பித்தங்கள் நிவர்த்தியாகும்.

சூரியாவர்த்த பித்தத்திற்கு மிருகஜ ரசம் :- ரசம், கெந்தி, வெண்காரம், மனோசிலை, ஏலக்காய், தக்கோலம், ஜாதிக்காய் இவைகளை சுத்துசெய்து சமஎடையாக கல்வத்தில்ட்டு தண்ணீர்விட்டான்கிழங்கு கியாழத்தினால் ஒருநாள் அரைத்து குன்றிஎடை மாத்திரைசெய்து வேளைகொரு மாத்திரை விகிதம் சீரகம், சர்க்கரை
இவைகள் அனுபானத்திலாவது தேன் சர்க்கரை இவைகளுடனாவது கொடுத்தால் சூரியாவர்த்த பித்தரோகம் நிவர்த்தியாகும்.

காமிலா பித்தத்திற்கு கபர்தக ரசம் :- இரசபஸ்பம், சுத்தி செய்த கெந்தி, ஏலக்காய், முசுமுசுக்கை, சுட்டவெண்காரம், சீந்தில் சர்க்கரை, வெட்டிவேர், கோஷ்டம், கோரைக்கிழங்கு இவைகள் சம
எடையாக சூரணித்து கல்வத்தில்ட்டு இஞ்சி ரசத்தால் இரண்டு ஜாமங்கள் அரைத்து குன்றிஎடை மாத்திரை செய்து வேளைக்கொரு மாத்திரை விகிதம் சீரககியாழத்தில் கொடுத்தால் காமாலை நாசமாகும். தாகத்தையும், வாந்தியையும், பித்தாதிக்கத்தையும்
நிவர்த்திக்கும்.

ஆமிலபித்தத்திற்கு சுதாநிதி ரசம் :- சுத்திசெய்த கெந்தி,
சுத்திசெய்த ரசம், அப்பிரகபஸ்பம், ஏலக்காய், கிரந்திதகரம், சிறு நாகப்பூ இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு சீரககியாழத்தில் ஒருநாள் நன்கு அரைத்து காசிகுப்பியில்வைத்து சீலைமண்செய்து வாலுகாயந்திரத்தில் வைத்து அடுப்பிலேற்றி எரித்து ஆறியபிறகு எடுத்து 2-குன்றிஎடை தேனிலாவது அல்லது சர்க்கரையுடனாவது கொடுத்தால் ஆமலபித்தம் நசியும்.

ஆமிலபித்தத்திற்கு சஞ்சீவி ரசம
் :- இரசம், கெந்தி, தாம்பிர பஸ்பம், காந்தபஸ்பம் இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு நிலப்பனக்கிழங்கு ரசத்தினால் அரைத்து காசிகுப்பியில்வைத்து வாலுகாயந்திரத்தில் 2-ஜாமங்கள் எரித்து ஆறியபிறகு எடுத்து கல்வத்திலிட்டு மைப்போல் சூரணித்து பிறகு திரிகடுகு, திரிபலை, திரிக்ஷ¡ரங்
கள், பஞ்சலவணங்கள், பெருங்காயம், மயிசாக்ஷ¢குங்கிலியம், சித்திர மூலம், கெச்சக்காய்பருப்பு, வெண்காரம், குரோசாணிஓமம், ஓமம், சாதிக்காய், காட்டுகருணைக்கிழங்கு, காட்டுஇஞ்சி, வெட்பாலை,
முருங்கைவேர், நாறுமுருங்கைவேர், முக்காவேர், முள்ளங்கத்திரி பேய்ப்புடல், ராக்காச்சிமடல், பிரண்டை, நிலப்பாதிரி, ஆடு தீண்டப்பாளைவேர், இவையாவும் சமஎடையாகச் சேர்த்து சூரணித்து மைபோலாக்கி மருந்திற்கு சமஎடையாய் சேர்த்து வெள்
ளைப்பூண்டு, இஞ்சி, எலுமிச்சம்பழம், இவைகளின் ரசத்தால் தனித்தனி மூன்று நாள் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

மேற்கூறிய மருந்தை ஜாமத்திற்கு ஒரு தடவை 2 குன்றிஎடை தேன் அனுபானத்தில் அல்லது வெற்றிலைச்சாறிலாவது கொடுத்து வெந்நீர் சாப்பிட்டால் ஆமலபித்தம், கிறாணி, அஜீரணம் முதலிய ரோகங்கள் நீங்கும்.

ஆமிலபித்தத்திற்கு பித்தபஞ்சன ரசம் :- பாதரசம், கெந்தி தாமிரபஸ்பம், இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு நிலப்பனங்கிழங்கு ரசத்தினால் அரைத்து மாத்திரிகள் செய்து காசிக்குப்பியில் வைத்து வாலுகாயந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து திரிக்ஷ¡ரங்கள், பஞ்சலவணம் சுட்டப்பெருங்காயம்
மைசாஷி குங்கிலியம், கோஷ்டம், திரிகடுகு, திரிபலை, கஞ்சா ஜாதிக்காய், ஜாபத்திரி, ஓமம். குரோசாணிஓமம், போஸ்தக்காய் கசகசா, அபினி, மூசாம்பிரம், அதிவிடயம், ஏலக்காய், வெட்ப்பாலை பெரியஏலக்காய், வெண்காரம், கெச்சக்காய்ப்பருப்பு, சித்திரமூலம் புளி ஈர்க்கு, காசிக்கட்டி, மோடி, மாங்கொட்டைப்பருப்பு, மாதுழம் பழம் இவைகளை சமஎடையாகசூரணித்து இஞ்சி ரசத்தினால்
7 முறை அரைத்து 2 குன்றி எடை தேன் அனுபானத்தில் கொடுத்தால் ஆமலபித்தம் நாசமாகும்.

லீலாவிசரசம் :- பாதரசம், கெந்தி, தாமிரபஸ்பம்,
அப்பிரகபஸ்பம், சவ்வர்ச்சலசணம், இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் ஒரு ஜாமம் அரைத்து காசிக்குப்பியில் வைத்து வாலுகாயந்திரத்தில் வைத்து முறைப்படிஎரித்து எடுத்து பிறகு கெச்சசெருப்பு 1 பாகம், நெல்லிப்பருப்பு 2 பாகம் கடுக்காய் 3 பாகம், இவைகளை யொன்றாய்ச் சூரணித்து இவை
களுக்கு எட்டுபாகமதிகமாய் ஜலத்தை வார்த்து எட்டில் ஒரு பாகம் மீறும் படியாய் கியாழம் காய்ச்சி வடிகட்டி முன்முடித்த மருந்தை கல்வத்திலிட்டு மேற்கூறிய கியாழத்தால் 25 முறை அரைத்து கரிசனாங்கண்ணி சாற்றினால் 25 முறை அரைத்து உலர்த்தி சூர
ணித்து அதில் இரண்டு குன்றி எடை மருந்து எடுத்து தேனுடன் கொடுத்தால் ஆமலபித்தம் நாசமாகும்.

சுவேதபித்தத்திற்கு அமிருதேஸ்வர ரசம் :- சுத்தரசம், சுத்தநாபி சுத்தகெந்தி, ஆடாதோடை, சீரகம், வசம்பு, திரிகடுகு, சித்திர மூலம், சுக்கு, திரிபலை இவைகள் யாவும் சம பாகமாய் கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் மூன்று ஜாமங்கள் அரைத்து காசிக்குப்பியில்வைத்து மந்தாக்கினியால் மூன்றுநாள் எரித்து ஆறியபிறகு
எடுத்து 2-குன்றிஎடை சர்க்கரையுடன் அல்லது தேனுடன் அருந்த சுவேதபித்தம் நசிக்கும்.


உன்மாத பித்தத்திற்கு சண்டபைரவ ரசம் :- இரச பஸ்பம் 3-பாகம், சுவர்ணபஸ்பம் 1-பாகம், வெண்காரம் 4-பாகம், இவைகளை கல்வத்திலிட்டு எருக்கன் பாலினால் இரண்டு ஜாமங்கலரைத்து உருண்டைசெய்து காசிகுப்பியில்வைத்து ஏழுசீலைமண்செய்து
வாலுகாயந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் மந்தாக்கினியா லெரித்து ஆறியபிறகு எடுத்து 2-குன்றிஎடை சர்க்கரை அல்லது தேனுடன் கலந்து கொடுத்தால் உன்மாதபித்தம் நீங்கும்.

புண்டரீகபித்தத்திற்கு விஸ்வமூர்த்தி ரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த கெந்தி, தாம்பிரபஸ்பம், சுத்திசெய்த மனோசிலை, சந்தன தூள், திரிபலை, ஆடாதோடை, கோஷ்டம், சீரகம், ஓமம் இவைகளை
சமஎடையாய்க் கல்வத்திலிட்டு செருப்படை ரசத்தினால் மூன்றுநாளரைத்து உருண்டைசெய்து வஜ்ஜிரமூசையில் வைத்து பூதாயந்தி ரத்திலெரித்து ஆறியபிறகு எடுத்து 2-குன்றிஎடை சாப்பிட்டால் புண்டரீகபித்தம் நிவர்த்தியாகும்.

சகலபித்தங்களுக்கு பாணிபித்த ரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த கெந்தி, எழுகுபஸ்பம், இரும்புபஸ்பம், வெள்ளிபஸ்பம், சுவர்ணபஸ்பம், வங்கபஸ்பம், நாகபஸ்பம், தாம்பிரபஸ்பம், காந்த பஸ்பம் இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு சீரக கியாழத்தில் ஒரு ஜாமமரைத்து காசிகுப்பியில்வைத்து வாலுகாயந்திரத்தில் மூன்று
நாள் காடாக்கினியா யெரித்து ஆறியபிறகு எடுத்து குன்றிஎடை திப்பிலி சூரணத்திலாவது அல்லது நெல்லிவற்றல் சூரணம் சர்க்கரை தேன் இவைகளுடனாவது சாப்பிட்டால் கர்ப்பபாத பித்தங்
கள், சகல பித்தங்கள் நிவர்த்தியாகும்.

சீதபித்தத்திற்கு பூரணாபிரக ரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்தி செய்த கெந்தி, அப்பிரகபஸ்பம், சுத்திசெய்த மனோசிலை, இவைகள் யாவும் சமஎடை கல்வத்திலிட்டு இஞ்சிச் சுரசத்தினால் இரண்டுநாள் அரைத்து காசிகுப்பியில்வைத்து வாலுகாயந்திரத்தில் ஒரு ஜாமம்
எரித்து ஆறியபிறகு எடுத்து மைப்போல் அரைத்து இரண்டு குன்றி எடை தேன் திப்பிலிசூரணம் அல்லது நெய் மிளகு சூரணம் இந்த அனுபானங்களில் கொடுத்தால் சீதபித்தம் நிவர்த்தியாகும்.

மூர்ச்சைபித்தத்திற்கு பைத்தியாங்குச ரசம் :- சுத்திசெய்தரசம், சுத்திசெய்த கெந்தி, பொரித்த வெண்காரம், அப்பிரகபஸ்பம், இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு கோரைக்கிழங்கு கியாழத்தில் மூன்றுநாளரைத்து காசிகுப்பியில்வைத்து பூதரயந்திரத்தில் புட
மிட்டு ஆறியபிறகு எடுத்து மறுபடியும் கல்வத்திலிட்டு கோரைக்கிழங்கு கியாழத்தில் அரைத்து குன்றிஎடை மாத்திரைசெய்து வேளைக்கொரு மாத்திரை விகிதம் இளநீரில் கொடுத்தால் மூச்சா பித்தம் நிவர்த்தியாகும்.

மதுர பித்தத்திற்குபைத்தியகஜாங்குசம் :- கெந்தி, வெங்
காரம், தாளகம், மனோசிலை இவைகளை சுத்திசெய்த சமஎடையாக கல்வத்திலிட்டுச் செருப்படை ரசத்தினால் ஒரு நாள் அரைத்து காசிக்குப்பியில் வைத்து வாலுகாயந்திரத்தில் ஆறு ஜாமங்கள் எரித்து ஆறிய
பிறகு எடுத்து குன்றி எடை அனுபானமாக கொடுத்து வர மதுரபித்ததம் நிவர்த்தியாகும்.

குஷீம பித்தத்திற்கு கஜகேசரி ரசம் :- ரசம், வசநாபி, கெந்தி, லிங்கம், தாளகம் இவைகளை சுத்திசெய்து வகைக்கு 1 தோலாஎடை யும், நன்கு முடித்த அப்பிரகபற்பம் 1 தோலா எடையுஞ்சேர்த்து
கல்வத்திலிட்டுக் கரிசனாங்கண்ணி சாற்றினால் அரைத்து காசிக்குப்பியில் வைத்து வாலுகாயந்திரத்தில் மந்தாக்கினியில் ஒரு நாள் எரித்து ஆறிய பிறகு எடுத்து குன்றி எடை தேன் அல்லது நெய்யுடன் சாப்பிட்டால் குஷீமபித்தம், சகலபித்தங்கள் நிவர்த்தியாகும்.

குரோத பித்தத்திற்கு நாராச ரசம் :- ரசபற்பம், கெந்தி, நாபி மிளகு, சுக்கு, திரிக்ஷ¡ரங்கள், பஞ்சலவணங்கள், இவைகளை சமஎடை கல்வத்திலிட்டுச் சீரக கியாழத்தில் இரண்டு சாமங்களரைத்து காசிக்குப்பியில் வைத்து சீலைமண் செய்து வாலுகாயந்திரத்தில் ஆறு ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து குன்றிப்பிரமாணம் தேன்
அல்லது சீரகம் சர்க்கரை இந்த அனுபானத்தில் கொடுத்தால் குரோத பித்தம் நீங்கும்.

சிரோபித்தத்திற்கு பைத்தியகாலாந்தக ரசம் :- ரசம், கெந்தி நேர்வாளம், லிங்கம், நாபி இவைகளை சுத்திசெய்து சமஎடையாக கல்வத்திலிட்டுச் சித்திரமூல கியாழத்தினால் இரண்டு நாள் அரைத்து பிறகு எடுத்து கல்வத்திலிட்டுச் சதுரக்கள்ளிபாலினால் இரண்டு சாமங்களரைத்து குன்றியளவு மாத்திரைகள் செய்து வேளைக்கு ஒரு
மாத்திரை வீதம் பசு நெய் அல்லது சுண்ணாம்பு நீர் இவைகளுடன் கொடுத்தால் சிரோபித்தம் நீங்கும்.

ஷீதாபித்தத்திற்கு பித்தபஞ்சன ரசம் :- சுத்திசெய்தரசம்,
சுத்திசெய்த கெந்தி, அப்பிரகபஸ்பம், இவைகளை சமஎடை
கல்வத்திலிட்டுக் கரிசனாங்கண்ணி சாற்றினால் அரைத்து வஜ்ர மூசையிலாவது அல்லது காசிக்குப்பியிலாவது வைத்து சீலை செய்து குக்குடபுடமிட்டு ஆறிய பிறகு எடுத்து குன்றி எடை இஞ்சி ரசத்தில் கொடுத்தால் ஷீதபித்தமும் சகலபித்தமும் நிவர்த்தியாகும்.

த்ருஷ்ண பித்தத்திற்கு பைத்திய ஹிம்ஸக ரசம் :- கெந்தி, நாபி மனோசிலை, வெண்காரம், ஊமத்தன்விரை இவைகள் சுத்தி செய்தது, திப்பிலி இவைகள் சமஎடையாக கல்வத்திலிட்டுச்செருப்படை ரசத்தினால் ஒரு நாள் அரைத்து மடக்கில் வைத்து மேல்மடக்கு மூடி சீலை செய்து எரித்து ஆறிய பிறகு எடுத்து மறுபடியும்
சதுரக்கள்ளிபாலினால் அரைத்து குன்றி எடை மாத்திரைகள் செய்து வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் குருவேர் கியாழத்திலாவது அல்லது நெல்லிக்காய் ரசத்திலாவது கொடுத்தால் துருஷ்ண பித்தமும்
சகலபித்தங்களும் நிவர்த்தியாகும்.

சருமபைத்தியத்திற்கு பைத்திய வித்வம்ஸக ரசம் :- பாதரசம கெந்தி, நாபி, இவைகள் சுத்திசெய்தது, திரிகடுகு, வெண்காரம், இந்துப்பு, இவைகள் சமஎடையாக கல்வத்திலிட்டு பாகல் யிலை ரசத்தினால் அரைத்து வாலுகாயந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து உளுந்து அளவு செருப்படை இலை ரசம் 1- சேர் ஆடுநெய் 1 தோலா, மிளகு சூரணம் சிறிதளவு இவைகளை கூட்டிய அனுபானத்துடனாவது அல்லது சிவகரத்தை ரசத்திலாவது அல்லது தேன் சர்க்கரை இவைகளுடனாவது கொடுத்தால் சருமபைத்தியமும் சகல பைத்தியமும் போம்.

மதனபைத்தியத்திற்கு ராமபாண ரசம் :- பாதரசம், நாபி,
சுத்திசெய்தது அப்பிரகபஸ்பம், இவைகளை யாவையும் சமஎடையாக கல்வத்திலிட்டுவெலுமசந்நி கிய்யழத்தினால் ஒரு நாள் அரைத்து மேற்படி கியாழத்தில் துலாயந்திரத்தில் இரண்டு ஜாமம் எரித்து ஆறிய
பிறகு குன்றி எடை இஞ்சி ரசத்தில் காடுத்தால் மதன பித்தம் நிவர்த்தியாகும்.

சகல பைத்தியங்களுக்கு , மஹாகுமாரி தைலம் :- கற்றாழை இரசம் 1 படி, பொன்னாங்கண்ணி இலை ரசம், தண்ணீர்விட்டான் கிழங்குரசம், தாழம்புரசம், கோவை இலை ரசம், வாழைக்கிழங்ரசம், தாளங்கொத்துரசம், சகதேவி இலை ரசம், கோரைக்கிழங்குரசம்,
இளநீர் இந்தரசங்கள் வகைக்கு 1/2 சந்தனத்தூள், தாழம்பு, அதிமதூரம் மகுடம்பு, நன்னாரிவேர், வெட்டிவேர், குருவேர், இலவங்கப்பட்டை கிச்சிலிக்கிழங்கு, சம்பங்கிமொக்கு, பெரியகோரைக்கிழங்கு, மலைக்
குறுவேர், இவைகள் வகைக்கு 2 பலம் சூரணித்து சேர்த்து 256 பலம் சலம் விட்டு அதில் நாலில் ஒரு பாகம் மீறும்படியாக கியாழம் சுண்டக்காய்ச்சி அதில் சுத்தமான எள் எண்ணெய் 1 படி பால் 1 படி வார்த்து, மஞ்சிஷ்டி, குறுவேர், நன்னாரிவேர், வெட்டிவேர், சீரகம், கருஞ்சீரகம், ஏலக்காய், இலவங்கப்பத்திரி, ஜடாமாஞ்சி புஷ்கரமூலம், அதிமதூரம், மலைக்குறுவேர், சம்பங்கிமொக்கு,
ஜாதிக்காய், தக்கோலம், சிறிய கடுகுரோகணி, சிறுநாகப்பு, சந்தனத்தூள் தாமரைவிரை, கிரந்திதகரம், தண்ணீர்விட்டான்கிழங்கு, இலவங்கப்பட்டை, கிச்சிலிக்கிழங்கு, கஸ்தூரிமஞ்சள், சந்தனம், ரோஜாப்பூ,
பச்சைக்கற்பூரம், புஷ்பவல்லி, தாமரைக்கொடி, இலுப்பைப்பூ,  திரா¨க்ஷ, நீலோற்பலம், தேவதாரு, குங்குமப்பூ, திரிபலை சீந்தில்கொடி, கந்தபீஜம், இவைகள் வகைக்கு 1/8 ரூபா எடை சூரணத்தை தைலத்தில் போட்டு, தைலபக்குவமாக காய்ச்சிறக்கி கொள்ளவும்.

இந்த தைலத்தினால் அப்பியங்கனம் செய்து வந்தால் சகல
பைத்திய ரோகங்கள் தேக எரிச்சல், கண்ணெரிச்சல், இவைகள் நீங்கும். இதை நசியஞ்செய்தால் சிரோரோகம், ஊர்த்துவபைத்தியங்கள், ஊர்த்துவவாதங்கள் இவை யாவும் நிவர்த்தியாகும்.

மஹாசதாவரி தைலம் :- தண்ணீர்விட்டான்கிழங்கு ரசம்
16-பலம், நெல்லிக்காய் ரசம் 16-பலம், மண்டூகபரணி, பொன்னாங்கண்ணி இலை இவைகளின் ரசங்கள் பிரத்தியோகம் 1-படி, பச்சைபயறு கியாழம் 1-படி, பச்சிலை இலைரசம் 1-படி, கோவை இலைரசம், கற்றாழை ரசம், நீலோத்பலரசம், வெள்ளிரி இலைரசம், முசுமுசுக்கை இலை, கடாரங்காய், கொடிமாதுளம்பழரசம், எலு
மிச்சம்பழரசம், வாழைக்கிழங்குரசம், கௌளிபாத்திரநீர், பெரிய பூசினிக்காய்ரசம், சீந்தில்கொடி, சஹதேவி, கீழாநெல்லி, குறுவேர், கோரைக்கிழங்கு, வெற்றிலை, வெட்டிவேர், தாமரைக்கிழங்கு, இவைகளின் ரசங்கள் வகைக்கு 1-படி, எள் எண்ணெய் 4-படி, இளநீர் 256-பலம், முலைப்பால் 128-பலம், பசும்பால் 128-பலம்,
தயிமீதுதேட்டை 128-பலம், சந்தனத்தூள் கியாழம் 256-பலம், திப்பிலி, மிளகு, கோரைக்கிழங்கு, குங்குமப்பூ, சிறுநாகப்பூ, தாமரைப்பூ, சடாமாஞ்சி, தக்கோல, சந்தனதூள் இவைகள் வகைக்கு 1-பலம் சூரணம் அதில் போட்டு சுபதின, சுபநக்ஷத்திர சுபமுகூர்த்தத்தில் தயிலபக்குவமாகக் காய்ச்சி இறக்கிக்கொண்டு அப்பியகனஞ் செய்தால், சகலபித்தங்கள், சரீரத்தில் உள் எரிச்சல், தலை எரிச்சல், சரீரம் முழுவதும் அனலாயிருத்தல், கால் கைகள்,
தலை இவைகளில் எரிச்சல், காது, கண்கள் இவைகளில் எரிச்சல், மூக்கு எரிச்சல், உட்புறத்தில் ரூ¨க்ஷ, எலும்பை அநுசரித்த சுரங்கள், முறைக்காய்ச்சல்கள், சகலவாத ரோகங்கள் 96 நேத்திரரோகங்கள், 20 மேகங்கள் இவை யாவும் நிவர்த்தியாகும்.

ஆமலக தைலம் :- நெல்லிக்காய் ரசம் 2-படி, நல்லெண்ணெய் 2-படி, பசும்பால் 2-படி, இவைகள் யாவையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் ஏலக்காய், இலவங்கப்பட்டை, சிறுநாகப்பூ, கோஷ்டம், அதி
மதுரம், தண்ணீர்விட்டான்கிழங்கு, வெட்டிவேர், இவைகள்வகைக்கு 1-பலம் விகிதஞ் சூரணஞ் சேர்த்து வஸ்திரகாயஞ் செய்துபோட்டு தைலப்பக்குவமாகக் காய்ச்சி, தேகத்திற்கும் தலைக்கும் தேய்த்துக்கொண்டு குளித்தால், தேகத்தின் அனல், கால் எரிச்சல், தலை
எரிச்சல், கண் எரிச்சல், தலைசுற்றல், தேகமுழுமையும் எரிச்சல், இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

தேதகீ தைலம் :- தாழஞ்செண்டுரசம், பசும்பால், நல்லெண்
ணெய் இவைகள் சமஎடை சந்தனத்தூள், அதிமதுரம், கோஷ் டம், அமுக்கிறாக்கிழங்கு, தேவதாரு, சரளதேவதாரு, வெட்டி வேர், நீலோத்பலம்கிழங்கு, சடாமாஞ்சி, கிருஷ்ணாகரு, கிரந்தி, தகரம், சிற்றாமுட்டிவேர், குறுவேர், சிறுநாகப்பூ, அவுரிவேர்,
மஞ்சிஷ்டி, நன்னாரிவேர், அருகு, கஸ்தூரி, சதாப்புவிரை,
காட்டுமிளகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, வசம்பு கிச்சிலிக்கிழங்கு இவைகள் சமஎடை அரைத்து கல்கஞ்செய்து அதில் கலந்து தைலபக்குவமாகக் காய்ச்சி தடவிக்கொண்டு குளித்தால் வாதசோணிதவாதங்கள், பித்தசோணிதவாதம், சிலேஷ்ம சோணிதவாதம், சரீரத்தில் எரிச்சல், தலை எரிச்சல், தேகத்திற்குள் அனல்,
சுரம், விஷம சீதசுரம், பித்தாதிக்கம் இவைகள் யாவுங் நீங்கும்.
 

பிருங்காமலக தைலம் :- கரசனாங்கண்ணிரசம் 16-பலம், நெல் லிக்காய்ரசம் 16-பலம், எண்ணெய் 20-பலம், இவைகளை ஒன்றாகக் கலந்து, கடுகுரோகணி, அதிமதுரம், கோஷ்டம், வெட்டிவேர், சந்தனத்தூள், அல்லிக்கிழங்கு, கோரைகிழங்கு, சீரகம் இவைகள் வகைக்கு 4-பலம், கற்றாழைரசம் 16-பலம், தயிர்மீதுதேட்டை
யில் அரைத்து இவைகள் யாவையும் ஒன்றாகக் கலந்து தீபாக்கினியால் தைலத்தை பக்குவமாகக் காய்ச்சி தேகத்திற்கு தேய்த்திக் கொண்டு குளித்தாலும் அல்லது நசியஞ்செய்தாலும், சிரோரோகங்கள் நேத்திரரோகங்கள், அபஸ்மாரங்கள், கர்ணசூலைகள், உன்மாதங்கள், சிலேஷ்மரோகங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.
வெள்ளைமயிர் கருப்புமயிராகும். தேகத்தில் காந்தி இவைகள் உண்டாகும்.

இஞ்சி சர்பத் :- சுண்ணாம்பு நீக்கிய இஞ்சிச்சாறு படி-1/4,
கொத்தமல்லிக் கீரைச்சாறு படி-1/8, புதியன சாறுபடி-1/8, காடி படி-1/4, எலுமிச்சம்பழச்சாறு-1/2, நாட்டு சர்க்கரை வீசை-1/2 இவை களை ஒன்று சேர்த்துக் கலக்கி சர்க்கரை கரைந்தபின் வடிகட்டி ஓர் பாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து சர்பத்பதமாகக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்க.

இதில் வேளைக்கு 2-முதல் 4-தேக்கரண்டி வீதம் தினம் இரு வேளை சிறிது நீருடன் கலந்து சாப்பிட்டுவர, பித்த எரிச்சல், பித்த மயக்கம், பித்தவாந்தி, அரோச்கம், பசியின்மை, மந்தம், அசீரணம் முதலியன குணமாகும்.

இஞ்சிச் சூரணம் :- இஞ்சி பலம்-10, தனியாபலம்-5, சீரகம்
பலம்-2 1/2, ஏலம் பலம்-1 1/4. இஞ்சியைச் சிறுதுண்டுகளாக அரிந்தும், மற்றச்சரக்குகளை சிறிது சதைத்தும் ஒன்று சேர்த்தும் கலந்து ஓர் அகலமான பீங்கான் தட்டிலிட்டு அதில் சுமார் 25 அலலது 20 எலுமிச்சம்பழத்தின் சாற்றை விட்டு கலந்து ரவியில் வைத்து உலர்த்தவும். ஈரமில்லாமல் முற்றிலும் உலர்ந்த பின் இடித்து வஸ்தி
ரகாயஞ்செய்து வைத்துக் கொள்க. இதில் வேளைக்கு திரிகடிப்பிரமாணம் நாட்டு சர்க்கரை சேர்த்து தினம் 3 வேளை வீதம் வாயிலிட்டு சிறிது நீர் சேர்த்து அருந்தி வரவும். இதனால் வாந்தி அரோ சகம், பித்தமயக்கம், மந்தம், அசீரணம், பசியின்மை, வயிற்றுப்பொருமல் முதலிய பித்தாதிக்கத்தினால் தோன்றிய தோஷங்கள்
யாவும் குணமாகும்.

தனியாசூரணம் :- சீரகம், கருஞ்சீரகம், இலவங்கம், இலவங்கப்பட்டை, சதகுப்பை, அதிமதூரம் வகைக்கு பலம் 1, தனியா பலம் 6 இவைகளை இளவறுப்பாய் வருத்து இடித்து சூரணித்து  சமன் சர்க்கரை அல்லது கற்கண்டு பொடித்து சேர்த்து கலந்து வைத்துக்கொண்டு வெருகடிப்பிரமாணம் தினம் இருவேளை அருந்திவர பித்தாதிக்கம், பித்தவாயு, மந்தம்,  அசீரணம், வயிற்றுப் பொருமல், வாய்நீருரல், தேககாங்கை, எரிச்சல்
சுரத்திற்கு பின் ஏற்பட்ட பலயீனம் முதலியன குணமாகும்.

சீந்திற் சத்தாதி சூரணம் :- சீந்திற்சத்து, நெல்லிவற்றல்,
அதிமதூரம், ஏலரிசி, சீரகம், இலவங்கப்பட்டை, சந்தனம்,
சிறுநாகப்பு, தனியா, சோம்பு வகைக்கு 1/2 பலம், இவற்றில் சீந்தில் சத்து தவிர மற்றச்சரக்குகளை இடித்து சூரணித்து வஸ்தி ரகாயஞ்செய்து அத்துடன் சீந்திற்சந்தை தனியாக அரைத்து சேர்த்து கலந்த்து வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு 1/2 வராகனெடை வீதம் தினம் இரு வேளை யாக அருந்திவர பித்தமும் பித்தாத்திக்கத்
தினால் உண்டான குறி குணங்களும் குணமாகும்.

சீரகத்தைலம் :- ஒரு பலம் சீரகத்தை ஒரு வீசை நல்லெண்ணெய்யில் போட்டு ஒருநாள் ஊறவைத்து மறு நாள் அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து ஓடியத்தக்க பதத்தில் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்க. இத்தைலத்தைக் கொண்டு வாரம் ஒரு அல்லது 2 முறை
சிரசிற் கிட்டு ஸ்தானஞ்செய்து வர பித்தமயக்கம், கண்ணெரிச்சல் பித்தவெட்டை, முதலியன குணமாகும்.

மாதுளை சர்பத் :- மாதுளம்பழச்சாற்றுடன் சமன் சர்க்கரை சேர்த்து சர்பத் பதமாக காய்ச்சி வைத்துக்கொண்டு வேளைக்கு 1/4 முதல் 1/2 அவுன்சு வீதம் சிறிது நீரில் கலந்து சாப்பிட்டுவர பித்த
வாந்தி, அரோசகம் முதலியன குணமாகும்.

புளியாரைக் கிருதம் :- புளியாரைச் சாறுபடி 1, செவ்விள்நீர் படி 2, வள்ளிக்கிழங்கு சாறு படி1, ஆவின் நெய் படி 5, பொன்னாங்கண்ணிச்சாறு படி-1, ஆவின்பால் படி-5 இவைகளை ஒருமிக்கக் கலந்து ஓர் தைலப்பாண்டத்திலிட்டு, அதில் சீரகம், மாசிக்காய்,
அதிமதுரம் வகைக்கு கழஞ்சு 4-வீதம், பசும்பாலால் அரைத்துக்கலந்து அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து கிருத பதத்தில் வடித்து அதில் ஏலம், இலவங்கப்பத்திரி வகைக்கு கழஞ்சு-2, கற்கண்டு பலம்-1, இவைகளை சூரணித்துப்போட்டுக் கலக்கிவைத்துக்கொள்க. இதில் வேளைக்கு ஒரு கரண்டி வீதம் தினம் இருவேளை
யாக அரை முதல் ஒரு மண்டலம் அருந்த பித்தவெட்டை, பித்த வாயு, பித்தமயக்கம், பித்தவாந்தி, பித்தஎரிச்சல், நீர்சுருக்கு, உடல் கால்கை முதலியன குணமாகும்.

பிருங்காமலத் தைலம் :- கரிசலாங்கண்ணிச்சாறு, நெல்லிகாய்ச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு 1-படி, பசுவின்பால் 2-படி, இவைகளை ஒன்றுக்கூட்டி ஓர் தைலப்பாண்டத்திலிட்டு அதில் சிற்றா முட்டி, பேராமுட்டி, நாகமுட்டி, அதிமதுரம், சதகுப்பை, கோஷ்டம், சந்தனக்கட்டை, மஞ்சள், பூலாங்கிழங்கு, விலாமிச்ச வேர்,
கொத்தமல்லி விதை, முசும்சுக்கை, சிற்றரத்தை, வெண்மிளகு, இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலம் இவைகளை வகைக்கு வராகனெடை 8 வீதம், பால்விட்டரைத்து கற்கமாகிக் கலந்து அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து தைல பதத்தில் வடித்து வைத்துகொள்க.

இத்தைலத்தைக்கொண்டு வாரத்திற்கு 1 அல்லது 2 முறை
வீதம் அப்பியங்கன ஸ்நானஞ் செய்துவர பித்தநோய்கள் யாவும் தீரும் மற்றும் உடல் காங்கை, நித்திரையின்மை, கண் எரிச்சல் முதலியன நீங்கி முகத்தில் தேஜசு உண்டாகும். இத்தைலத்தைக்கொண்டு ஸ்நானஞ் செய்து வருவதுடன் தினந்தோறும் ஒரு உச்சிக்கரண்டி தைலத்தைச் சிரசின் உச்சியில் தடவியும் வரலாம்.

பொன்னாங்காணி தைலம் :- பொன்னாங்காணி இலைச்சாறு, செங்கழுநீர் கிழங்குசாறு, தாமரைக் கிழங்குசாறு, நிலபனங்கிழங்குசாறு, விலாமிச்சவேர்சாறு, எலுமிச்சம்பழச்சாறு, செவ்விள்நீர், ஆவின்பால், நல்லெண்ணெய் வகைக்கு 1படி, இவைகளை ஒன்றுக்கூட்டி ஓர் தைலப்பாண்டத்திலிட்டு அதில் சந்தனம், நெல்லிவற்றல், சீரகம், ஏலம், கோஷ்டம், அதிமதுரம் வகைக்குக்கழஞ்சு 1 வீதம் பால்விட்டரைத்து சேர்த்து அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து பதமுறத் தைலமாகக் காய்ச்சி வடித்து வைத்துக்கொள்க.

இதை முடித்தைலமாக உபயோகித்துவர பித்தசுரம் மற்றும்
பித்தாதிக்கத்தினால் உண்டான மயக்கம், வாந்தி, எரிச்சல், தலை பாரம் முதலியவைகளும் நீங்கும். பித்தரோகங்களை சமனப்படுத்தும்.

குமரித்தைலம் :- சோற்றுக்கற்றாழைச் சாறு தழை விழுது சாறு, சீந்தில்கொடி சாறு, நல்லெண்ணெய் வகைக்கு படி 1, நெல்லிக்காய்ச்சாறு, பசும்பால் வகைக்குப்படி 2, இவைகளை ஒன்று கூடி ஓர் தைல பாண்டத்திலிட்டு, அதில் சீரகம், ஏலம், சடமாஞ்சி,
சந்தனம், சண்பகப்பு, சதகுப்பை, செவ்வல்லிகொடி, மஞ்சிஷ்டி வகைக்கு வராகனெடை 2, பால் விட்டரைத்து கலக்கி வடித்து வைத்துக்கொண்டு முறைப்படி, முடித்தைலமாக வழங்கிவர பித்தப்பிணிகள் யாவும் தணியும்.

சம்பீரத்தைலம் :- எலுமிச்சம்பழச்சறு, கரிசனாங்கண்ணி
சாறு, இஞ்சிச்சறு, கொத்தமல்லிகீரைச் சாறு, நல்லெண்ணெய் வகைக்குப்படி 1, இவைகளை ஒன்று கூட்டி ஓர் தைல பாண்டத்தி லிட்டு அதில் சந்தனம், அகில் தேவதாரு, வெட்டிவேர், விலாமிச்சவேர், கிறாம்பு, வில்வவேர், அதிமதூரம் வகைக்கு பலம் 1 வீதம் பால்
விட்டரைத்து கலக்கி அடுப்பிலேற்றி பதமுற தைலங் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு முறைப்படி, முடித்தைலமாக வழங்கிவர பித்தத்தினால் பிறந்த ரோகங்கள் நாற்பதும் குணமாகும்.

கீழ்காய்நெல்லித்தைலம் :- ஒரு வீசை கீழாநெல்லி சமூ
லத்தை இடித்து ஓர் பாண்டத்திலிட்டு, 8 படி நீர் விட்டு அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து ஒரு படி அளவிற்கு சுண்டக்காய்ச்சி வடிகட்டிய கியாழத்துடன் பசும்பால் நல்லெண்ணெய் வகைக்குப் படி 1சேர்த்து 1 பலம் சீரகத்தை பால் விட்டரைத்துக்கலக்கி அடுப்பி
லேற்றி பதமுறக் காய்ச்சி வடித்து வைத்துக்கொள்க.
இதை முறைப்படி, முடித்தைலமாக வழங்கிவர பித்தப்பிணிகள் பித்தமயக்கம், பித்தவாந்தி, நடுக்கம், அக்கினிமாந்தம் நித்திரையின்மை முதலியன குணமாகும்.

சந்தனாதித்தைலம் :- சந்தனக்கட்டை, சீவல், வெட்டிவேர்
விலாமிச்சவேர், நன்னாரி, சிற்றாமுட்டிவேர், கோரைக்கிழங்கு, அதிமதூரம், நெல்லிவேர்பட்டை, சீந்திற்கொடி, சிற்றரத்தை இகைகள் வகைக்குப் 10 வீதம் நிறுத்து நன்கு சதைத்து ஓர் பாண்டத்திலிட்டு
12 மரக்கால் சலம் விட்டு நான்கு படி அளவிற்கு சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் பசும்பால் நல்லெண்ணெய் வகைக்கு படி 4  செவ்விளநீர், தண்ணீர்விட்டான் கிழங்கு ரசம் வகைக்கு படி 1, சேர்த்து ஒன்றாக கூட்டி வைத்துக்கொள்க. பின்பு அதில் சந்தனம், அகில் தேவதாரு, சரளதேவதாரு, மஞ்சிஷ்டி, தக்கோலம், வெட்டிவேர், விலாமிச்சவேர், சிற்றரத்தை, சடமாஞ்சி
கோரைக்கிழங்கு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிகாய்,
சண்பகமொட்டு, கோஷ்டம், தாமரை, கஸ்தூரிமஞ்சள்,
வளையம், கொத்தமல்லிவிதை, கிச்சிலிக்கிழங்கு, அதிமதுரம், காட்டாத்திப்பூ, பச்சிலை, சீரகம், இலவங்கம், இலவங்கப்பட்டை, ஏலம், சிறுநாகப்பூ வகைக்கு வராகனெடை 1 வீதம், பால்விட்ட ரைத்து கற்கமாக்கி முன் சித்தப்படுத்திய திரவங்களுடன் சேர்த்துக் கலந்து அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து தைல பதமாகக்
காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு முறைப்படி முடித்தைலமாக  வழங்கிவர பித்தாதிக்கத்தினால் உண்டான கை கால் கண் எரிச்சல் தாகம், மயக்கம் முதலியவைகளும், பைத்தியம் முதலிய பித்த

ரோகங்களும் குணமாகும்.

மஹா விலவாதி லேகியம் :- மேல்தோல் போக்கிய வில்வவேர் 100-பலம், நிலப்பூசினிக்கிழங்கு 50-பலம், குடசப்பாலைவேர் 25-பலம், துளசி, முசுமுசுக்கை, பூதுளசி, வெள்ளை உப்பிலாங்கொடி, கரும் உப்பிலாங்கொடி, நிலபனங்கிழங்கு, சிற்றாமுட்டி, பேராமுட்டி, பூனைக்காஞ்சொரி, பாதிரிமரம், தண்ணீர்விட்டான்
கிழங்கு, முள்ளங்கத்திரி, கண்டங்கத்திரி, ஆடாதோடை, வெட்டி வேர், சீந்தில்கொடி, திரிபலை, மரமஞ்சள், தேங்காய், போளம், தும்பராஷ்டகம், முக்காவேளை, பொன்னாங்கண்ணி, வெள்ளச்சாரணை, செவ்வியம், பற்பாடகம், தாம்பிரகிழங்கு, நெல்பொரி, பாஷாண
கிழங்கு, தேவதாரு, விலாமிச்சவேர், சந்தனத்தூள், அமுக்கிறாக்கிழங்கு, மோடி, அருகம்புல், சிறுகீரைவேர், கீழாநெல்லி, கொத்தமல்லி, ஆலம்விழுது இவைகள் வகைக்கு 20-தோலா விகிதம் இடித்து
ஒன்றாகச்சேர்த்து 2560-பலம் ஜலம்விட்டு எட்டாவது பாகம் மீறும் படியாக கியாழஞ்சுண்டக்காய்ச்சி அதில் பழையவெல்லம் 100-பலம், கலந்து இஞ்சி ரசம், கொடிமாதுளம்பழ ரசம், நெல்லிக்காய் ரசம், கரும்பு ரசம், மாதுளம்பழ ரசம், எலுமிச்சம்பழரசம், விளாம்
பழரசம், இவைகள் வகைக்கு 16-பலம், தேன் 50-பலம், நெய்
25-பலம் வார்த்து லேகியபதமாக வரும்போது அதில் ஏலக்காய், இலவங்சக்கை, இலவங்கபத்திரி, சிறுநாகப்பூ, தாளிசப்பத்திரி, கொத்தமல்லி, கோரைக்கிழங்கு, சடாமாஞ்சி, சந்தனதூள், தக்கோலம், சீரகம், கருஞ்சீரகம், கோஷ்டம், தும்பராஷ்டம், வாய்விளங்கம், மஞ்சிஷ்டி, கிறாம்பு, பத்மகேசரங்கள், சாதிக்காய், ஜாபத்திரி,
சித்திரமூலம், இந்துப்பு, சுக்கு, வெட்டிவேர், அல்லிகிழங்கு, அதிமதுரம், மோடி, கற்பூரசிலாசத்து, இலுப்பைப்பூ, ஓமம், கண்டுபாரங்கி, வெண்காரம், திரா¨க்ஷ, செவ்வியம், சர்ஜீரங்கள், மூங்கிலுப்பு, காட்டுமிளகு இவைகள் வகைக்கு 2-பலம் சூரணம், மிளகுசூரணம் 16-பலம், திப்பிலிசூரணம் 4-பலம், லோஹபஸ்பம் 4-பலம், மண்டூரம் 4-பலம், குங்குமப்பூ 1-தோலா, கோரோசனம் 1-தோலா,
கஸ்தூரி 1/2-தோலா இவைகளை யாவும் சூரணித்து கலந்து இறக்கி நெய்யில் ஊறியபானையில் வைத்து சாஸ்திரவிதிப்படி காலை மாலை 1/2 பலம் பிரமாணம் சாப்பிட்டால் ஆமலபித்தம் அஜீரணம், உதா
வர்த்தம், சோஷை, 21 மேகங்கள், 8 குன்மங்கள், ஆதமானவாயு ருதுசூலை, 80 வாதரோகங்கள், அங்கதாகம், லிங்கதாகம், நேத்திரதாகம், சுரதாகம், பாததாகம், இவைகள் யாவும் நாசமாகும்.

சதாவரீ ரசாயனம் :- தண்ணீர்விட்டான்கிழங்குரசம், நிலப்
பூசினிக்கிழங்குரசம், கரும்புரசம், கலியாணகிழங்குரசம்,
கீழாநெல்லிரசம், நிலப்பனங்கிழங்குரசம், வாழைப்பழரசம், துளசி ரசம், தேங்காய்ப்பால், பசும்பால், இவைகள் யாவும் வகைக்குப்16 பலம், சர்க்கரை 32 பலம், பசுநெய் 20 பலம், வார்த்து அடுப்பிலேற்ற லேகியபக்குவமாக வரும்போது ஏலக்காய், இலவங்கப்பட்டை இலவங்கப்பத்திரி, மூங்கிலுப்பு, திர¨க்ஷ, அக்கிறாக்கிழங்கு, கொத்த
மல்லி, குடசப்பலைவேர், ஜாபத்திரி, போயாவரைவிரை, சீரகம் கருஞ்சீரகம், சுக்கு, திப்பிலி இவைகள் வகைக்கு 2 பலங்கள் இவைகள் யாவையும் சூரணித்து அதில் போட்டு கலக்கி இறக்கி ஆறிய பிறகு 8 பலம் தேன் விட்டுக் கிளறி 15 நாள் தானியராகியில் வைத்து பிறகு எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதன் பலாபலத்தை அறிந்து பிரதி தினமும் காலையில் தக்க அளவாக சாப்பிட்டுவந்தால் சொல்லமுடியாத தாதுவிரித்தியை உண்டாக்கும். மலடி சாப்பிட்டால் கர்ப்பவதியாவாள். மற்றும் இதனால் ரத்தபித்தம், காமாலை, பாண்டுரோகம், சோமமேகம், மூத்திர
கிரிச்சரம், சுக்கிலரோகம், சகலபித்தங்கள், இருபது மேகங்கள் இவைகள் யாவும் நாசமாகும்.