Sunday, 24 September, 2017
பக்ஷ தோஷம்

சிலவகைப் பட்சிகளாலும் குழந்தைக்கி தோஷம் ஏற்படுவதுண்டு. இதனைப் பட்சிதோஷ மென்பர். இது அந்தி சந்தி, நடுப்பகல், பாதிராத்திரி ஆகிய காலங்களில் சிசிக்களை தெருக்களில்
எடுத்துக்கொண்டு போவதினால் ஏற்படும்.

இந்நோய் வாந்தி, பேதி, தாகம், சுரம், அவயவங்கள் இளைத்தல், பலவீனம், பால் குடியாமை, நடுக்கல், அநித்திரை, தோள்,இடுப்பு, நடுநெற்றி ஆகிய இடங்களில் குழிவிழுதல் என்னுங் குணங்
களுண்டாகும். இன்னும் குடித்த பால் எதிர்த்தல், மயக்கம், சீறி சீறி அழுதல், தலைநோய், வயிற்றில் கடுப்புடன் காந்தல், கபாதிக்கம், உச்சியிலும் முலைமார்பிலும் சுடுகை, நாக்கு வறளல், முகத்தில் பச்சையும் மஞ்சளுங் கலந்த நிறம்போல் தோற்றல் என்னுங் குணங்களும் உண்டாகும்.


இது நான்கு வகைப்படும். அவையாவன :-

1. ஆண்பக்ஷ¢ தோஷம் :- தாகம், பேதி, சரீரம் உலரல், கன்கள் குழிவிழுதல், நாக்கை நீட்டுதல் என்னுங் குணங்களை உண்டாக்கும்.

2. பெண்பக்ஷ¢ தோஷம் :- சர்வாங்க நடுக்கல், காங்கை, தாகம், பேதி, பால் குடியாமை, கண் சொருகுதல், சீதபேதி, கடுப்பு, ஆசனம் பிதுங்கல், சீறியழுதல், தேகங் கறுத்தல், கண்ணோய், வீக்கம், வாய்நீருறல் என்னுங் குணங்களை உண்டாக்கும்.

3. மலட்டுப்பஷி தோஷம் :- ஆயாசத்துடன் இளைப்பு உச்சியில் குழி விழுதல், வாந்திபேதி, தாகம், தேககாங்கை என்னும் குணங்களுண்டாகும்.

4. அலிப்பஷிதோஷம் :- தோல், முதுகு கண்டம், முழங்கை ஆகிய இடங்களில் குழிவிழுதல், வாந்தி, பேதி தாகம் என்னும் குணங்களுண்டாகும்.

பாலகிரகபீடை உண்டாக காரணம் :-
குழந்தைகட்கு தாய் தந்தையர் மிகவும் அநாசரமுடையவர்களாயும், குழந்தை களை தேகத்தையும், துணி முதலியது சுத்தப் படுத்தாமலும் தேகத்தின் மீது துர்க்கந்த முண்டாகும்படியாக தேகத்தை கழுவமலும் வைத்திருப்பதனால் பாலகிரஹங்கள் பிடிக்கின்றன. ஆகையால் அப்பேற்பட்ட கிரகங்கள் அணுகாமலிருக்க அப்போதைக்கப்போது குழந்தை வாந்தி எடுத்தாலும், மலஜலங் கழிந்தாலும் சுத்தி செய்து பரிசுத்தமாய் வைத்திருக்கவேண்டியது.

 

சிசுவைப் பெற்ற தாயார் அல்லது பால் கொடுக்கும் தாதி நித்தியம் நீறுட வேண்டியது. அணிந்த துணி முதலியவைகளை தோய்த்து தரித்துக் கொள்ள வேண்டியது. எப்பொழுதும் பரிசுத்தமாயும், துர் நாற்றமுள்ள எது வும் குழந்தைமீதும் தன்மீதும் இல்லாமலிருக்க பிரயத்தணிக்க வேண்டியது. சுசியாய் இருப்பதால் துஷ்ட கிரகங்கள் அருகில் நெருங்கப் பயப்பட்டு விலகி நிற்கும். ஆகையால் பரிசுத்தமாயிருத்தல் பால கிரகங்கள் அணுகாமலிருப்பது ஓர் முக்கிய மருந்தாகும்.