பாலகிரக தோஷம்
முற்கூறிய தோஷங்கள் தவிர சில தனிப்பட்ட கிரகங்களும்
பாலர்களைப் பிடித்து தோஷகுணங்களை உண்டாக்கும். இதற்கு
பாலகிரகதோஷம் என்பர்.
வேதாகமங்களிற் கூறிய வண்ணம் நித்திய கர்ம ஒழுக்கங்காளை
தவிர்த்து, அனாசாரமாகவும், அசுசியாகவுமுள்ள மாதர்களின் பாலை
யருந்துஞ் சிசுக்களின் ஆரோக்கியத்தை அபகரிக்கும் பொருட்டு
12 வகை கிரகங்களால் பிடிக்கப்பட்டு தோஷகுணங்கள் ஏற்படும்.
இது 12 வகைப்படும். அவை யாவன :-
1. நந்தனா கிரகம் :- இது குழந்தை பிறந்த முதல் நாளிலாவது, முதல் மாதத்திலாவது, முதல் வருஷத்திலாவது சிசுவை அல்லது
தாயைப்பிடிக்கும். ஆரம்பத்தில் சுரம், தாகம், தேகம் இளைத்தல்
வீக்கம், நானாவிதபேதி என்னும்குணங்களுண்டாகும்.
2. சுநந்தனா கிரகம் :- இரண்டாவது நாள், இரண்டாவது
மாதம், இரண்டாவது வருஷம் சிசுவை அல்லது தாயைப்பிடிக்கும்.
சுரம், பல்லைக்கடித்தல், வயிறுப்பல், அன்னத்து வேஷம், கண்மூடல்
எப்போதும் அழுகை என்னும்குணங்களுண்டாகும்.
3. புதனாகிரகம் :- மூன்றாவது நாள், மாதம், வருஷம் சிசுவை
அல்லது தாயைப்பிடிக்கும். அப்போது சுரம், உரோமச்சிலிர்ப்பு
உடல் வலி, அன்னத்து வேஷம், கண்களை மூடிக்கொள்ளுதல் என்னும்குணங்களுண்டாகும்.
4. முகமண்டலிகாகிரகம் :- நாலாவது நாள், மாதம், வருஷம்
சிசுவை அல்லது தாயைப்பிடிக்கும். அப்போது சுரம், சரீரநோய்,
தலைசுழற்றலோடு, தலை இறங்கக்கூடாமை. கண்களை மூடிக்கொள்ளுதல் என்னும்குணங்களுண்டாகும்.
5. பிடாலிககிரகம் :- ஐந்தாம் நாள், மாதம், வருஷத்தில்
சிசுவை அல்லது தாயைப்பிடிக்கும். அப்போது பூனை போல் கத்தல்
சுரம், இளைத்தல், சுவாசம், இருமல், சூலை விக்கல் என்னும் குணங்
களுண்டாகும்.
6. சகுனி கிரகம் : - ஆறாவது நாள், மாதம், வருஷத்தில்
சிசுவை அல்லது தாயைப்பிடிக்கும். அப்போது சுரமும், சரீர
வலியும், உண்டாகும்.
7. சுஷ்கரேவதிகிரகம் :- ஏழாவது நாள், மாதம், வருஷத்தில்
சிசுவை அல்லது தாயைப்பிடிக்கும். அன்னத்து வேஷமும்,
கொட்டாவியும், சரீர நோயும் உண்டாகும்.
8. அந்நியவோடாலிக கிரகம் :- எட்டாம் நாளில் மாதத்தில்,
வருஷத்தில் சிசுவை அல்லது தாயைப்பிடிக்கும்.அப்போது
அன்னத்து வேஷமும், அடிக்கடி நாவை நீட்டுதல், இளைத்தல் வலி,
சதா அழுகை, கண்மூடல் என்னும் குணங்களுண்டாகும்.
9. மத பேதனாகிரகம் :- ஒன்பதாம் நாளில் மாதத்தில்,
வருஷத்தில் சிசுவை அல்லது தாயைப்பிடிக்கும்.அப்போது சுரம் வாந்தி சரீரநோய், வயிற்றுப்பல், இருமல், அன்னத்துவேஷம், காதுவலி
என்னுங் குணங்களுண்டாகும்.
10. ரேவதி கிரகம் :- பத்தாம் நாளில், மாதத்தில், வருஷத்தில் தாயை அல்லது சிசுவை பிடிக்கும். அப்போது சுரம், வாந்தி,
இருமல், அன்னத்துவேஷம், இரைப்பு, வயிறுப்பலோடு சகிக்கக்
கூடாத சூலை என்னுங் குணங்களுண்டாகும்.
11. அர்ச்சகா கிரகம் :- பதினோறாவது நாளில், மாதத்தில்,
வருஷத்தில் தாயை அல்லது சிசுவை பிடிக்கும். அப்போது
தேகம் இளைத்தல், சுரம், சர்வாங்கத்திலும் மிகுநோய், அன்னத்
துவேஷம், விழித்த விழி விழித்ததுப்போலிருத்தல் என்னுங்குணங்கள் உண்டாகும்.
12. அற்புதாகிரகம் :- பனிரெண்டாம்நாள், மாதம், வருஷத்தில் தாயை அல்லது சிசுவை பிடிக்கும். அப்போது அறிவின்மை,
பல்லைக் கடித்தல், அழுகை, கண்ணோய் உரோமச்சிலிர்ப்பு என்னுங்
குணங்களை உண்டாக்கும்.