கக்குவான் என்னும் கக்கிருமல்
இது பாலின் தோஷத்தினாலும், ஜலதோஷத்தினாலும் வாயு
அதிகரித்து மார்பிலிருக்கின்ற சிலேஷ்மத்தை இளக்குந்தரு
ணத்தில் பிறக்கும். அப்போது மிக்க ஒலியுடன் பிரபலமான
இருமல், அதில் ரத்தம் விழல், திணரலாண மூச்சு, விழி பிதுங்குவது போலிருத்தல், ஆயாசம், வியர்வை, அருந்திய பாலும்
அன்னமும் கக்குதல், மலமூத்திரம் நழுகுதலென்னும் குணங்களுண்டாகும்.
இது 90 நாள் வரையிலும் பேய் பிடித்து ஆட்டுவது
போல சிசுக்களை ஆட்டுவிக்கும்.