கரப்பான்
சர்வாங்கத்திலும் பரபரப்பான ஊரல், பல நிறத்துடன் சாரைப்பாம்பின் தோலையொத்த சொறி, அதில் சிவந்த நீர் கசிவது,
கண்டத்தில் விஷக்கடி ரோகம் போல வெடித்து நீர் கசிவது,
விகாரரூபம் இளைப்பு என்னும் குணங்களுண்டாகும். அன்றியும்
கறுத்தாற் கருங்கரப்பான், சிவத்தற் செங்கரப்பான், வரிவரியாக
இருக்கில் வரிகரப்பான். சொறி எழும்மினாற் சொறிக்கரப்பான்,
தினவு உண்டானால் ஆனந்தக்கரப்பான், தலையிற்காணில்
மண்டைக்கரப்பான் என கரப்பான் நோயை பலவகையாகவும் சில
நூல்களிற் கூறப்பட்டுள்ளது.