மாந்தம்
வெல்லம், தேங்காய், மாங்காய், சுண்டற்கரி, வழுக்கைக்கீரை
வாளைமீன், வரால்மீன், கெட்டுலர்ந்த பள்ளை ஆட்டின் இறைச்சி,
புளிப்புவேர், பாகற்காய், முதிற்ந்த வாழைக்காய், கிழங்குவகை
மந்தவஸ்து, எருமைப்பால், தினசையோகம், சரகு ஊறிய சலம்,
சலதோஷம், பசி, துயரம், என்பவைகளை அதுசரிக்கும் ஸ்திரிகளின்
முலைப்பாலை குடிக்கும் சிசுக்களுக்கு மந்தரோகம் உண்டாகும்.
இந்நோயில் பசியில்லாமை, சீதங்கலந்த நானாவித நிறத்துடன்
பால்போலவும் தெளிந்த சலம்போலவும் துர்க்கந்தமாகவும், பேதி
யாதல், சுரம், மயக்கம், கையும், காலும் சில்லிடல், கண்களில் வெப்பம்
சிலசமயம் குளிர்ச்சி, உடர்சோர்வு, முகத்தில் பல நிறத்துடன் பளபளப்பு, முதலிய குணங்கள் உண்டாகும். இது செரியாமாந்தம்,
பீர்மாந்தம், சுரமாந்தம், விஷமாந்தம், கழிமாந்தம், ஊது மாந்தம்,
நீர்மாந்தம், தலைமாந்தம் என 8 வகைப்படும்.
1. செரியாமாந்தம் :- வயிறு உப்பலோடு மாவைக் கரைத்தது
போல் கண்டலும், கரைதலுமான பேதி, விக்கல், சுரம், தலைவலி
அரைக்கண் மூடியபார்வை, துர்ப்பலம், துயரம், சோர்வு, என்னும்
குணங்களை உண்டாக்கும்.
2. பீர்மாந்தம் :- வயிறு பொருமலுடன் பால் நிறமான பேதி
புகைந்திருமல், பால் உண்ணாமை, வாந்தி, கண்களில் குழிவிழுதல்
தாகம், அதிகவெப்பம், மார்பு நோய், தலைநடுக்கல், வயிற்றுவலி
சீறிச்சீறி அழுதல், பெருமூச்சு என்னும் குணங்களை உண்டாக்கும்.
3. சுரமாந்தம் :- சுரம், அற்ப்பமாக பாலுண்ணுதல், அடிக்கடி
அழுகை, பொடீருமல், மலசலக்கட்டு, மயக்கம், என்னும் குணங்களை
உண்டாக்கும்.
4. விஷமாந்தம் :- அரைக்குகீழ் சீதளம், வயிற்றிரைச்சல்
பயந்த பார்வை, தாய்கையில் தங்காமை, சோர்வு, மயக்கம்
என்னும் குணங்களை உண்டாக்கும்.
5. கழிமாந்தம் :- நானாவிதகழிச்சல், வாந்தி, மயக்கம்,
சுவாசம், வாயுங்குறலும் சில்லிட்டது போல் தோன்றுவதுமன்றி,
வயிறு, கை, கால் இவைகளில் சீதளத்துடன் வியர்வை என்னும்
குணங்களை உண்டாக்கும்.
6. ஊது மாந்தம் :- கால்,கை, வீக்கம், சோர்வு, சுரம், அன்ன
பானாதிகள் இறங்காமை, நாவில் புண்போலிருத்தல், மிகுந்தசுவாசம்
எழும்புதல் என்னும் குணங்களுண்டாகும்.
7. நீர்மாந்தம் :- சர்வாங்க வியர்வை, சீதளம், குளிர், முகத்
தின் பளபளப்பு, தேகத்திலாவது, கைகால்களிலாவது தினவுடன்
வீக்கம், தலைநோய், முக்கலுடன் நீர் இறங்குதல், இறைந்துறைந்து
வயிறுகழிதல், வாய்நீரூறல், ஒக்காளம், மெலிந்தவார்த்தை, உறக்கம், நகைப்பு என்னும் குணங்களை உண்டாக்கும்.
8. தலைமாந்தம் :- தலையிலும் கழுத்திலும் ஊதல், கைகால்
களில் குளிர்ச்சி, சர்வாங்கநோய் சிலசமயம் குலையில் வலி, அதனால்
துள்ளித்துள்ளிவிழுதல் குளிர்ச்சுரம், முகத்தில் வியர்வை, புருவ
வேதனை, பலவிதமானபேதி, வயிற்றுப் பொருமலுடன் வலி,
ஏப்பம், நாசியில் புண்போல் நோயுடன் நீர்வடிதல் மார்புவலி
பற்கிட்டலுடன் நெற நெறவென்றகடித்தல் , கைகால்களில்
இசிவு, எழுந்திருக்ககூடாமை, அன்னபானதிகளில் வெறுப்பு
அசதி, கொட்டாவி, இளைப்பு, வயிற்றுப் என்னும் குணங்களுண்டாகும்.
மேலும் சில நூல்களில் உள்ளில் வேப்பம் இருந்தால்
கணாமாந்தம், கண்சோருகினால் சொருகுமாந்தம்,உச்சியில் குழி
விழுந்தால் குழிமாந்தம், கைகாலை இழுத்தால் இழுப்புமாந்தம்
வயிறுப்பினால் உப்புமாந்தம், விலாவை தூக்கினால் அள்ளுமாந்தம்
விக்கல் இருந்தால் விக்கல் மாந்தம், வாதபித்த சேஸ்டைகள்
அதிகரித்தா லவைகளின் பெயர் கொண்ட மாந்தம், சந்நிபாத
குறிகளிருந்தால் சன்னிமாந்தம் என மாந்த நோயை 21 வகையாக
வகுத்து கூறப்பட்டுள்ளது.