1. அல்பானந்தம் :- இதில் புருஷ சம்போகத்தினால் பிறக்கும்
ஆனந்தம் மாதருக்கு உண்டாகாது.
2. கர்ணிணி :- இதில் சிலேஷ்மம் பித்தம் இவைகளின் சேர்க்கை
யினால் யோனிகமலத்தில் தாமரை வித்துபோன்ற திரட்சி ஏற்படும்.
3. அதிசரணம் :- இதில் புருபுணர்ச்சியில்லாமலே யோனி
யில் திரவக் கசிவு ஏற்படும்.
4. அதியானந்தம் :- இதில் அடிக்கடி மாதர்கட்கு புருஷ சம்போகத்தில் விருப்பம் ஏற்படும்.
மேற்கூறிய இரண்டிலும் மாதருக்கு சந்தான விரித்தி கிடையாது.
5. சிலேஷ்மலம் :- இதில் யோனியில் சளிப்போலும் பிசினிப்போலும் ஒட்டிக்கொள்ளுதல், நமை அதிசீதளம், இவைகள் உண்டாகும்.
சன்னிபாத யோனி ரோகங்கள் :-
1. ஷண்டினி - இதில் காமஜலம் இல்லாமல் போவதன்றி புருஷசம்போக காலத்தில் கரகரவென்ற சப்தமுடைய தாய்யிருக்கும்.
2. அண்டினி - இதில் சையோக காலத்தில் யோனியானது
அண்டத்தைப்போல் அதாவது முட்டையைப்போல் தென்படும்.
3. மகதி- இதில் புணர்ச்சி காலத்தில் யோனித்துவாரம் அதிக
விரிவாக இருக்கும்.
4. சூசிகவக்தரம் - இதில் யோனித்துவாரம் குறுகி இருக்கும்.
5. திரிதொஷஜை - இதில் சர்வயோனி தோஷங்களும் ஏற்பட்டிருக்கும்.
மேற்கூறிய ஐந்து யோனிரோகங்களிலும் திரிதோஷங்களின்
குறிகள் அதிகமாயிருக்கும்.
இவ்வைந்தும் அசாத்திய ரோகங்கள்.
யோனிரோகசிகிச்சை :- வசம்பு, கருஞ்சீரகம், சீரகம், திப்பிலி, ஆடாதோடை, இந்துப்பு, ஓமம், யவாக்ஷ¡ரம், சித்திரமூலம்,
இவைகளை நெய்யில் வறுத்து பிறகு இவைகளை சூரணித்து சர்க்கரை
கலந்து கள்ளு அல்லது சாராயத்துடன் சாப்பிட்டால் யோனிரோகம்
பாரிசரோகம், இருதய ரோகம், குன்மரோகம், மூலவியாதி இவைகள்
நீங்கும்.
சித்தரத்தை, அமுக்கிறாக்கிழங்கு ஆடாதோடை, இவைகளை
பாலில் போட்டு காய்ச்சி சாப்பிட்டால் யோனி சூலைகள் நீங்கும்.
கிரந்திதகரம், கண்டங்கத்திரி, கோஷ்டம், இந்துப்பு, தேவதாருஇவைகளை கியாழ வைத்து அதில் போதுமான நல்லெண்ணெய்
வார்த்து தைல பக்குவமாக காய்ச்சி அந்த தைலத்தில் பருத்தியை
நனைத்து எப்பொழுதும் யோனியில் வைத்துகொண்டிருந்தால்
விப்லுகை என்கிற யோனிரோகம் நிவர்த்தியாகும்.
வாத தோஷத்தினால் யோனி கடினமாயும், பிகுவாயும் அற்ப
ஸ்பரிசமுள்ளதாயும் இருந்தால் எள்ளெண்ணெயில் பருத்திய
நனத்து யோனியில் செலுத்தி வைத்தல், வேது பிடித்தல் முதலிய
வைகளையும் பித்த பிரகோபமான யோனியில் நெய்யில் பருத்தியை
நனைத்துப் போட்டு சந்தன ஜலத்தை மேல் தெளித்தலும், எரிச்சல்,
பாதை விரணங்கள் இவைகளை சாந்தியாக்கும்.
சாராயத்தால் பருத்தியை நனைத்து யோனியின் பக்கங்களில்
தரித்துக் கொண்டிருந்தால் சிலேஷ்மயோனி ரோகங்கள், நமைச்சல், பசபசப்பு, ஒழுகல், துர்பலம் இவைகள் நீங்கும்.
யோனி துர்க்கந்தத்திற்கு சிகிச்சை :- சுகந்த திரவியங்களின்
கல்கமாவது அல்லது சூரணமாவது, யோனியில் தாரணை செய்வதால்
யோனி துர்கந்தம், ரத்த ஒழுகல், பசபசப்பு முதலியவைகள்
நீங்கும்.
யோனி தினவுக்கு சிகிச்சை :- சீந்தல்கொடி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல் இவைகளை சமனெடையாக கியாழம்
வைத்து அந்த கியாழத்தை யோனிமீது தாரைப்போல் விட்டு
கழுவினால் ந்மைச்சல் நீங்கும்.
சந்நிடாத யோனி ரோக சிகிச்சை :- தச மூலங்கள், விஸ்வ
பழம், காட்டாத்திப்பூ இவைகளின் கியாழத்தில் பருத்தியை
நனத்து யோனியில்வைத்து வருவதால் சந்நிபாதத்தினால் உண்டான யோனிரோகம் நிவர்த்தியாகும்.
சூதக சிக்கலுக்கு சிகிச்சை :- மாதர்களுக்கு மாதாமாதம்
பிரவிடையாகும் இரத்தமானது சரிவர வெளிவராமல் போனால்
மச்ச மாமிசத்தை சாப்பிட்டால் வெளியாகும்.
வேறு :- கரும் எள்ளு கலந்து கியாழம்வைத்து ஆறிய பிறகு
வெல்லத்தைப்போட்டு மாதர்கள் குடித்தால் சூதகம் வெளியாகும்.
வேறு :- எள்ளு, நருவிலிபட்டை, பெரியசோம்பு இவைகளை
கியாழம்வைத்து ஆறிய பிறகு வெல்லத்தை கலந்து மூன்றுநாள்
சாப்பிட்டால் சோணிதம் வெளியாகும்.
யோனி கந்த நிதானம் :- பகல் நித்திரை, அதிக கோபம், மிகவும் அலுப்பு, அதிக புணர்ச்சி, அபிகாதம், நகக்ஷதங்கள் இவைகளி
னால் வாதாதிதோஷங்கள் குபிதமாகி பூயம், இரத்தம், சமநிறமாகி
எலுமிச்சம்பழ உருவத்துடன் யோனியில் ஒருமுளை ஜனிக்கும்.
இதற்கு யோனிகந்த மென்றும் பெயர்.
இது வாத பித்த கப சந்நிபாதமென நான்கு வகைப்படும்.
வாத யோனி கந்த லக்ஷணம் :- இது பெரியதாயும், நானா
வித நிறங்களுடனும், விகசித்ததுபோல் இருந்தால் அதனை வாத
யோனி கந்தமென்று சொல்லுவார்கள்.
வாத யோனி கந்த சிகிச்சை :- காவிக்கல், மாம்பருப்பு, மஞ்சள், சுருமாகல், காயபலம் இவைகளைச் சூரணித்து தேன்விட்டு
அரைத்து யோனியில் வைத்து அதன் மீது திரிபல கியாழத்துடன்
தேன் கலந்து அதன் மீது ஒத்தடம் கொடுத்தால் வாதஜயோனி
கந்தம் நீங்கும்.
வேறு :- எலிமாமிசத்தை சிறிய துண்டுகளாக்கி போதுமளவு
எண்ணெய்யை வார்த்து அடுப்பேற்றி இந்த மாமிச துண்டுகளை
எண்ணெய்யில்போட்டு அது கரையும் படிக்கு காய்ச்சி ஆறிய பிறகு
தைலத்தில் ஒரு சீலையை நனைத்து கந்தத்தின் மீது போட்டல்
வாதயோனிகந்தம் நீங்கும்.
பித்தயோனிகந்த நிதானம் :- தாபம், சிகப்புநிறம், காய்ச்சல், இவைகளுடன் கலந்திருந்தால் அது பித்தத்தினால் உண்டான
யோனிகந்தமென்றும் அறிய வேண்டியது .
கபயோனிகந்த நிதானம் :- கருப்பு புஷ்ப நிறத்துடன்
நமைச்சலுண்டாகி யிருந்தால் சிலேஷ்மத்தினால் உண்டான
யோனிகந்தமென்றும் அறிய வேண்டியது .
சந்நிபதாத்மகயோனிகந்த நிதானம் :- மேல்கூறிய வாதாதி
முதலிய யோனிகந்தலக்ஷணங்கள் யாவையும் ஒருங்கே உடையதாயிருந்தால் சந்நிபாததோஷத்தினால் உண்டான யோனிகந்தமென்றும்
அறிய வேண்டியது .
யோனிகந்தத்திற்கு குடூஞ்சாதி வர்த்தி :- சீந்தில்கொடி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிவற்றல், நேர்வாளவேர், இவைகளின்
கியாழத்தை விட்டு, திப்பிலி, மிளகு, உழுந்து, தண்ணீர் விட்டான்
கிழங்கு, கோஷ்டம், இந்துப்பு இவைகளை சம எடையாக எடுத்துக்
கொண்டு அரைத்து துணிக்குத்தடவி ஆள்காட்டிவிரல், பிரமாணம்
வத்தி செய்து யோனியில் தாரணை செய்து கொண்டால்
யோனிகந்தம் நிவர்த்தியாகும்.
வேறு :- மைசாட்சி, குங்கிலியம், புழியம்பழம் இவைகளை
அரைத்து வேகவைத்து கந்தத்தின் மீது தடவினால் யோனிகந்தம் நீங்கும்.
யோனிசூலைக்கு சிகிச்சை :- வேப்பன் இலை சாற்றினால்
வேப்பன்கொட்டை ஆமணக்குவிரை இவைகளை அரைத்து மாத்திரை
கள் செய்து யோனியில் வைத்துக் கொண்டால் யோனிசூலைகள் நீங்கும்.
ஆற்றுதும்மட்டிவேரை ஆட்டு நெய்யில் பக்குவமாக சமைத்து
யோனி மீது லேபனஞ்செய்தால் யோனிசூலைகள் நீங்கும்.
யோனி திடமாவதற்கு லேபனம் :- முருக்கன்காய், அத்திக்காய்
இவைகளை அரைத்து எண்ணெய்யுடன் கலந்து அத்துடன் கொஞ்சமாக
தேன் கலந்து சீதளமான யோனிக்கு லேபனம் செய்தால் அது கடினமாகும்.
சரீர துர்க்கந்த ஹரலேபம் :- வெற்றிலை சாற்றில், கோஷ்டம்,
கடுக்காய் இவைகளை சூரணித்து, சாற்றுடன் கலந்து சரீரத்துக்கு
தடவினால் தேகதுர்க்கந்தம் நீங்கும்.
வேறு :- வறுத்த கொள்ளுமாவு, கோஷ்டம், சடமாஞ்சி,
வெள்ளை சந்தனத்தூள், வறுத்தகடலை மாவு இவைகள் யாவையும்
சூரணித்து சரீரத்துக்கு தடவினால் வியர்வையினால் உண்டான துர்நாற்றம் நீங்கும்.
கருப்பிணிகளுக்கு ஏற்படும் பலவகைப் பிணிகளுக்கு
சிகிச்சை முறைகள்
சுர சிகிச்சை :- இலுப்பைப்பட்டை, சந்தனம், வெட்டிவேர்,
நன்னாரி, அதிமதுரம், தாமரைத்தண்டு இவைகளைக் கியாழம்வைத்து
சர்க்கரையும், தேனும் கலந்து குடித்தால் கர்ப்பிணிகளுக்குடைய
சுரம் நீங்கும்.
வேறு :- நன்னாரி, சிந்தில், வெட்டிவேர், கோரைக்கிழங்கு,
சுக்கு இவைகளைக் கியாழம்வைத்து குடித்தால் கர்ப்பிணிகாய்ச்சல்
நீங்கும்.
வேறு :- திரா¨க்ஷ, தாமரைத்தண்டு, வெட்டிவேர், பூசினி
வேர், சந்தனம், நன்னாரி, அதிமதுரம், நெல்லி வற்றல் இவைகளைக்கியாழம்வைத்து பால்சேர்த்து குடித்தால் கர்ப்பிணிகளுக்குண்டா
கும் பித்தசுரம் நீங்கும்.
சர்த்தியதிசார சிகிச்சை :- சுக்கு, வில்வப்பழச்சதை இவைகளை கியாழம்வைத்து அதில் நெற்பொறிமாவைக் கலந்து சாப்பிட்
டால் கர்ப்பிணிகளுக்குண்டாகும் சர்த்தி, அதிசாரம் நீங்கும்.
வாந்திக்கு சிகிச்சை :- கொத்தமல்லியை அரிசிகழுநீரிலரைத்துக் கற்கம்செய்து அத்துடன் சர்க்கரை கலந்து கர்ப்பிணிகளுக்குக்
கொடுத்துவர வாந்திரோகம் நிவர்த்தியாகும்.
சுவாசகாச சிகிச்சை :- வில்வப்பழத்தின் கண்டச்சதை, நெறபொறி தண்ணீரில்போட்டு பிசைந்து சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்
குண்டாகும் சுவாசகாசங்கள் நிவர்த்தியாகும்.
வேறு :- கண்டு பாரங்கி, சுக்கு, திப்பிலி இவைகளை சூரணித்து
வெல்லத்தை கலந்து பிசைந்து சாப்பிட்டாலும் கர்ப்பிணிகளுக்
குண்டாகும் காசசுவாசங்கள் நிவர்த்தியாகும்.
பசி தீபனத்திற்கு சிகிச்சை :- ஓமம், சுக்கு, திப்பிலி, சீரகம்
இவைகள் சமஎடை சூரணித்து தேன், வெல்லம் கலந்து சாப்பிட்டால் அக்கினிதீபனம் உண்டாகும்.
கர்ப்பசூலை சிகிச்சை :- குசதர்ப்பை, காசதர்ப்பை, ஆமணக்கு
வேர், பெரியநெருஞ்சில் இவைகளின் வேர்களை பாலில்போட்டுக்காய்ச்சி அதில் சர்க்கரை கலந்துசாப்பிட்டால் கர்ப்பிணி சூலை நீங்கும்.
கர்ப்பவேதனை சிகிச்சை :- பெரிய நெரிஞ்சல், அதிமதுரம்,
திராஷை இவைகளை பாலிலரைத்து சர்க்கரை தேன் கலந்து சாப்பிட்டால் கர்ப்பவேதனை நீங்கும்.
அனாகவாயுசிகிச்சை :- வசம்பு வெள்ளைப்பூண்டு இவைகளை
பாலில் போட்டு காய்ச்சி சுட்டப்பெருங்காயம், சவ்வரிசி லவணம்
இவைகளை சூரணித்து கலந்து சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு
உண்டாகும் அனாக வாதம் நீங்கும்.
மூத்திரவாத சிகிச்சை :- திரணபஞ்சமூலத்தை அரைத்து
கல்கம் செய்து பாலில் போட்டு காய்ச்சி கர்ப்பிணி பானஞ்செய்தால்
ரத்தபித்தம் மூத்திரபந்தம், மூத்திராவதோவரவம் முதலியன நீங்கி
சுகமுண்டாகும். திரணபஞ்சமூலமென்பது நாணல் வேர், தர்ப்பைவேர்
கரும்பு வேர், நெல்பயிர் வேர், வெள்¨ளாருகம் வேர் முதலியவைகளாம்.
அதிசார சிகிச்சை :- கிச்சிலிக்கிழங்கு, சிங்காரக்கிழங்கு
தாமரைத்தண்டு, கரும் அல்லி, தண்ணீர் விட்டான்கிழங்கு, அதிமதுரம்
இவைகளை கியாழம் வைத்து அதில் பால் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் சூலை அதிசாரம் நீங்கும். பத்தியம் பால்சாதம்.
சூலைக்கு சிகிச்சை :- கரும் அல்லிப்பூ, வெட்டிவேர், சிங்காரக்
கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு இவைகளை பச்சை ஜலத்தில் அரைத்து
பாலில் கலந்து சாப்பிட்டால் மாதர்கட்கு கர்ப்பம் நிலைத்து கர்ப்ப சூலை
நிவர்த்தியாகும்.
முதல் மாத கர்ப்பசலன சிகிச்சை :- மாதர்கட்கு கர்ப்ப காலத்தில்
கர்ப்பசலனம் உண்டானால் திராஷை அதிமதுரம் சந்தணம் ரத்த சந்தணம்
இவைகள அரைத்து பசும்பாலில் கலந்து குடித்தால் கர்ப்பம் நிலைத்திருக்கும்.