1. வாத விஷபாகம் :- ஒருபக்கத்தில் வீக்கம், சரீரம் வாட்டத்திலும்
வெளிறல், கணதி, உறக்கம், பசியின்மை, மலச்சிக்கல் என்னுங் குணங்களை உண்டாக்கும்.
2. பித்த விஷபாகம் :- சர்வாங்கத்தினவு, வெடிப்பு, கிரந்தி, பாரிப்பு,
எரிவு, சுரம், ஊறல், அசதி, நித்திரையின்மை, மேல்மூச்சு, என்னும் குணங்களை
உண்டாக்கும்.
3. சிலேஷ்ம விஷபாகம் :- தேகமுற்றிலும் மிகுநமைச்சல்,
வெளிறல், வீக்கத்துடன் வெடித்தல், வறவறப்பு, தாபச்சுரம், குளிர், அற்ப இருமல்,
கோழை, சுடுகையுடன் சிறுநீரிறங்கல், மேல்மூச்சு என்னும் குணங்களை உண்டாக்கும்.
4. தொந்த விஷபாகம் :- மூர்ச்சை, மிகுந்ததாகம், அடிக்கடி நீரிறங்கல்,
விக்கல், மயக்கம், தேகம் வெளுத்து கண்ணூதலுடன் வீக்கம், அருசி, பிரமை, பேதி,
வாய்நீருரல் என்னுங் குணங்களுடையது.
5. வாத விஷபாகம் ::- சேறுபோல்
பேதி, குதத்தில் இரணத்துடன் ரத்தம்கசிதல், சுவாசம், சுரம், மயக்கம், காந்திய
கொள்ளின்மனம்போல் சரீரவாசனை, முகவீக்கம், வியர்வை, அசதி, பிதற்றல் என்னும்
குணங்களை உண்டாக்கும்.
6. அக்கினி விஷபாகம் :- வாதபித்தாதிக்கம்,
தேகமிளைததல், வீக்கம், புரளல், கோழை, இருமல், வாந்தி, மூர்ச்சை, வாய் நீருரல்,
வயிறுளைதல், மலசலச்சிக்கல், பக்கநோய் என்னும் குணங்களை உண்டாக்கும்.
7.
எரிச்சல் விஷபாகம் :- வாயினால் ரத்தம்வீழ்தல், எரிச்சல், கோழை, சுவாசம்,
மார்பில் அடைப்பு, இரணம், அதில் மாமிசம் வளரல், குத்தல், கட்டிபோல் நெஞ்சிற்காணல்,
பேதி, வீக்கம் என்னும் குணங்களை உண்டாக்கும்.
வாதபித்த சிலேஷ்மதொந்த
விஷபாகரோகங்கள் சாத்தியம். மற்ற நான்கும் அசாத்தியம்.
|