CHAPTER 2

Tamil Medicine

the most informative pages on Siddha, Ayurvedha, Tamil Medicine
கண்டாமலை

திரிதோஷங்கள் மேதோதாதுவை அனுசரிப்பதினாலும்,
மாமிசதாது விருத்தியினாலும், கழுத்தின் நரம்புகளிலும், அக்குள் களிலும், அரைகளிலும் தேகநிறத்தைப் பெற்று கெட்டிப்பட்டு மினுமினுத்து நெல்லிக்காய், சிறுகத்திக்காய், பிரமானத்தை ஒத்து சிறிதும் பெரிதுமான கட்டிகள் உண்டாகும். அவைகள் நாட்சென்று பழுத்து உடைந்து நடுவில் குழிவிழுந்து பலபேதங்களாயிருக்கும். இவற்றுள் சிலது அற்ப நோயுடன் உடைந்து சீழைச்சொறிவதும், சிலது நமைச்சலுடன் உஷ்ணத்தைத் தருவதும், சிலது கிளைத்துக்கொண்டே யிருப்பதும், சிலது நெடுநாள்
சென்றும் கரையாது வலுப்பதுமாக யிருக்கும். இந்த ரோகம்
கண்டத்தைச்சுற்றிலும் மாலைப்போல் பிறப்பதால் கண்டமாலை எனப்பெயர்பெற்றது. இதுவே தொடை கவுட்டில் கண்டால் அதனை அரையாப்புக் கட்டி என்பர்.

எந்த கண்டமாலைக் கட்டியாவது அறுகன்வேரைப்போல்
கிளைப்பதும் அடங்குவதுமாயிருந்து இதனால் சுரம், இருமல், வாந்தி, பீனிசம், பக்கநோய், தேகசுட்சம் என்னும் இக்குணங்கள் உண்டாகில் அசாத்தியம். இக்குணங்கள் இல்லாவிடில் சாத்தியம்.