Monday, 24 September, 2018
Part-1  Part-2  Part-3  Part-4  Part-5  Part-6  Part-7  1. ரத்தபித்தம் :- ரத்தவாந்தி, வயிறுப்பல், வியர்வை, துர்
பலம், குளிர்சுரம், சதா சீதளம், கால்கை நேத்திரம் இவ்விடங்களில் எரிச்சல், இரைப்பு, கோழை, கொட்டாவி, விக்கல், மந்தாக்கினி, அரோசகம், நிரக்குறைவு, வயிற்றுவலி, நாவுலரல், அருசி, அசீரணம், என்னும் இக்குணங்களை யுண்டாக்கும். இது வாய், குதம், ஆன்குறி
அல்குல் வழியாகவும் ரத்தத்தைவிழச்செய்வதால் அசாத்தியமாம்.

2. ஆம்லபித்தம் :- மஞ்சளை கரைத்தது போல் புளித்த
வாந்தி சூலை அக்னிமந்தம்.நடுக்கல், சோம்பல், தாகம், துர்ப்பலம் வியர்வை, நித்திரைபங்கம், கீல்களில் நோய், துக்கம், தேகத்தில் வளையம்போல் புடைகள், எழும்புதல் என்னும் குணங்களை யுண்டாக்கும்.


3. ஆவரணபித்தம் :- தலைவலி, ஏப்பம், வாந்தி, கோழை உடர்சோர்வு, தாகம், மலபந்தம், தேகம் வாட்டத்திலும் ஸ்தம்பித்தல் எரிச்சல், வியர்வை, நெஞ்சு வாளல், அசீரணம், கைப்பும் புளிப்புமான வாந்தி, மூர்ச்சை, விக்கல் என்னும் குணங்களை யுண்டாக்கும்.
4. உன்மாத பித்தம் :- அறிவீனம், மந்தபுத்தி , ஏப்பம், வாந்தி, வயிறுப்பல், அக்கினிமந்தம், அதிகமாகப் பேசுதல், கூவுதல், அழுதல், நித்திரைபங்கம், அதிகதாகம், மூர்ச்சை, கோழை, எரிச்சல் என்னும் குணங்களை யுண்டாக்கும்.

5. விஸ்மிருதி பித்தம் :-ஞாபகமறதி, மந்தவசனம், பிரமை, ஓக்காளம், சூலை, மலபந்தம், துர்பலம், வியர்வை, சீதளம், கீல்களில் அசதி, தொடையிலும் முழங்காலிலும் நோய், சோர்வு. தாகம், தலையில் நோயுடன் பாரிப்பு, மார்பு எரிச்சல், நாவிலும் வாயிலும் கைப்பு, புளிப்பு, இனிப்பு சுவைகள் தோற்றல், நித்திரைபங்கம், வீரிய நஷ்டம், என்னும் குணங்களை யுண்டாக்கும். (விஷ்மிருதி என்பது மறதி).

6. திக்தபித்தம் :- வேப்பங்காய் போல் வாய்கசத்தல் நா உலரல், தாகம், சுகம், சுரம், சிரசு கனத்தல், தலைசுழலல், கபாலத்திலும் காதிலும் இரைச்சல், துர்பலம், அவயங்கள் சுட்கித்தல் இருமல், நெஞ்சிற்கபம், கோபம், கண்சுழலல் என்னும் குணங்களை யுண்டாக்கும். (திக்தம் என்பது கசப்பு).

7.ஆசியபாக பித்தம் :- வாயில் கொப்புளங்கள் எழும்பி பழுத்துடைதல், துர்நாற்றம், மார்பில் நெருப்புபட்டது போலெரிச்சல் அரோசகம்,வியர்வை, மலபந்தம், வயிறுப்பல், பலயீனம், ஏப்பம், சுரம், சீதளம், மந்தாகினி, தொடைநோய், கோபம், கொட்டாவி, விக்கல், சூலை, அற்ப்பபோஜனம், என்னும் குணங்களை யுண்டாக்கும்.

8. ஜிம்மிகபித்தம் :- நாவில் எள்ளுபோல் கொப்புளங்கள் எழும் புதல், இனிப்புடன் குழம்பாக வாய் நீறுரல், அசீரணம், அன்னத்தில் வெறுப்பு, பலயீனம், தலையிலும், கண்ணிலும் உபத்திரவம், நடுக்கல், கபாலத்திலும் செவியிலும் இரைச்சல், தொடையிலும் முழங்காலிலும் நோய் வியர்வையுடன் சர்வாங்க சீதனம் என்னும் குணங்களை யுண்டாக்கும். இதுவே மதுர பித்தமாம்.

9. துர்கந்தபித்தம் :- ஒருவித நாற்றமுள்ள வாந்தி சர்வாங்கத்திலும், கொப்புளங்கள் எழும்புதல், நாக்கு துர்நாற்றத்துடன் முட்கள் போலிருத்தல், வியர்வை, கண்ணீர் வடிதல், மண்டயிலும், காதிலும் இரைச்சல், கண்டத்தில் நமைச்சல், திமிர் என்னும் குணங்களை யுண்டாக்கும்.

10. தத்ருபித்தம் :- சர்வாங்கத்திலும்,தடித்தலுடன் நமைச்சல் நாவும், வாயும் உலரல், உரோமச்சிலிர்ப்பு, சுரம், வியர்வை, நிறமாறல், இருமல், சோர்வு, பிரமை, கோபம், என்னும் குணங்களை யுண்டாக்கும்.

11. சோகபித்ததம் :- துக்கம், உள்ளங்கை, உள்ளங் கால் எரிச்சல், சிரசிலும் காதிலும் இரைச்சல், நாவும் வாயும் சிலவேளை கைப்பாகவும், புளிப்பாகவும், இனிப்பாகவும் யிருப்பது மன்றி யுலரல், தேகத்தில் தடிப்பு, வாந்தி, சைத்தியம், அசீரணம் சூலை, வயிறுப்பல், தொடைகளில் நோய் என்னும் குணங்களை யுண்டாக்கும். (சோகம் என்பது துக்கம்).

12. மூர்ச்சை பித்தம் :-
மூர்ச்சை, மார்பின் பள்ளத்திலும் நாபியிலும் நெருப்புபட்டது போல் எரிச்சல், ஸ்தம்பித்தல், அதிக தாகம், வியர்வை, இரைப்பு கபாலத்திலும் காதிலும் ஒரு வித சப்தம் நிறக்குறைவு, உடலில் தினையரிசி, வரகரசிபோல் கொப்புளம் எழும்புதல், நாவுலரலுடன் கசப்பு புளிப்பு இனிப்பாக இருத்தல் தேகத்திலும் அவ்வகை வாசனையே வீசுதல், நடுக்கல்,சிரசிலும் வயிற்றிலும் குத்தல் என்னும் குணங்களுடையது.

13. கண்டுபித்தம் :- சர்வாங்கத்திலும் திமிருடன் தினவு, தடிப்பு, சாமை அரிசி, பிராமணங் கொப்புளங்கள் எழும்புதல், சோர்வு, நடுக்கம், பலயீனம், வாந்தி, அசீரணம், தலைநோய், மார்பு எரிச்சல், சிதாதிக்கம், வியர்வை, சூலை, நித்திரையின்மை, விக்கல், ஸ்தம்பித்தல், தொடையிலும் முழங்காலிலும் நோய் என்னும் குணங்களுடையது.

14. பீடக பித்தம் :- தேகமுழுதுந் தடித்து சிறுசிறு கட்டிகள் எழும்புதல், அவைகளில் சுடுகையான சலம் வடிதல், பலவீனம், அதிக உஷ்ணம், ஒருவேளை குளிர்ச்சி, உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், காதடைப்பு என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

15. அனல பித்தம் :- சர்வாங்கத்திலும் மிக்க காங்கையுடன் தடிப்பு, நித்திரைபங்கம், தலைவலி, ஸ்தம்பித்தல், வயிற்றிற்சூலை, நாவில் திமிருடன் படலம் எழும்புவதுமன்றி கசப்பும் புளிப்புமாகயிருத்தல், விக்கல், அவயவங்கள் இளைத்தல், எரிச்சல், மூர்ச்சை, தாகம் தொடையிலும் முழங்காலிலும் நோய் என்னுங் குணங்களுண்டாகும்.

16. சுவேத பித்தம் :- சர்வாங்கத்திலும் வியர்வை, அதில் கைப்பு நாற்றம், நாவும் வாயும் கைத்தல், பலவீனம், ஸ்தம்பித்தல், விக்கல், சுரம், சைத்தியம், சிரோபாரம், தாகம், அக்கினிமந்தம், தொடையிலும் முழங்காலிலும் நோய் என்னுங் குணங்களை யுண்டாக்கும். (சுவேதம் என்பது வியர்வை.)

17. இத்மா பித்தம் :- மாறாத விக்கல், ஏப்பம், மூர்ச்சை, வியர்வை, உள்ளங்காலிலும் உள்ளங்கையிலும் கொப்புளங்கள் எழும்புதல், இருமல், சுவாசம், தலைநோய், சுரம், தேகம் சில்லிடலுடன் ஸ்தம்பித்தல், பிரமை என்னுங் குணங்களை யுண்டாக்கும்.
(இத்மா என்பது விக்கல்.)

18. இக்கா பித்தம் :- ஒயாத கொட்டாவி, சர்வாங்கத்திலும் வியர்வை, கொப்புளம் எழும்புதல், சீதளம், உரோமச் சிலிர்ப்பு, சுரம், நடுக்கல், சூலை, நடுமார்பில் எரிச்சல், சிரோபாரம், நித்திரை பங்கம், கண்ணீர் வடிதல் என்னுங் குணங்களுண்டாகும். (இக்கா என்பது கொட்டாவி.)

19. சூலைப் பித்தம் :- உடல் முழுதும் சூலத்தால் குத்துவது போன்ற வலி, நாபியில் குத்தல், ஏப்பம், அதிக தாகம், துர்க்கந் தத்துடன் கசப்பான வாந்தி, உரோமச் சிலிர்ப்பு, வியர்வை, தடிப்பு, திமிர், தினவு, தலைசுழலல், நடுக்கல், இரைச்சல், அவய வங்கள் சுட்கித்தல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், என்னுங் குணங்களுண்டாகும்.

20. விஷ்டம்ப பித்தம் :- தேகங் கட்டுப்பட்டதுபோ லசை வற்று இருத்தல், மார்பை சுற்றிலும் எரிச்சல், குளிர், சுரம், பல வீனம், ஈனத்தொனி, ஞாபகமறதி, பிரமை, மய்க்கம், மூர்ச்சை, மிகு தாகம் என்னுங் குணங்களை யுண்டாக்கும். (விஷ்டம்பம் என் பது ஸ்தம்பித்தல்.)

21. விரண பித்தம் :- தேகத்தில் சிறிதும் பெறிதுமான விரணங்கள் மிக ஏற்படுதல், திமிர், கனத்தல், நமைச்சல், நா கசத்தல், கறுத்தல், கோசஞ்சிவக்குதல், நித்திரையில் திடுக்கிட்டு எழுதல் கையில் நாடியானது படபடத்து துடித்தல், என்னுங் குணங்களுடையது.

22. ஊர்த்துவ பித்தம் :- அதிககோபம், சதாசண்டை செய்தல் இரைந்து கூவுதல், பூமியிற் குழி விழும்படியான பேதி, பிரமை, கண்சிவத்தல், நித்திரையின்மை, சரீரந்துலித்தல், என்னுங் குணங்களுடையது.

23. சுவாசபித்தம் :- அதிகசுவாசம், வயிறு கனத்தலோடு பொருமல், §தைகமிளைத்தல், அதிகமாய் வாய் நீறுரல், கண் கலங்கலுடன் பார்வை மந்தம், மார்பு வலித்தல், இருமல் பசியின்மை என்னுங் குணங்களுடையது.

24. செம்பித்தம் :- தேகம் சிவத்தல், செம்பின் களிம்பு நிறமாயும் சிவந்த நிறமாயும் வாந்தியாதல், மலம் இருகலோடு சிவந்து நழுகல் , மயக்கம், முத்து முத்தாக சிவந்த வியர்வை கசிதல் மிகுதாகம், தயக்கம், திடுக்கிடல், பயந்தெழுதல் என்னுங் குணங்களுடையது.

25. கறும் பித்தம் :- உடல் கருத்தல், கறுத்த நிறமான வாந்தி, தயக்கம், சிரசிலும் சரீரத்திலும் நடுக்கல், தலைவலி நித்திரை, கடைக்கண் சிவந்து மினுமினுத்தல், தேகங்கனற்று வற்றுதல், அருசி, பசியின்மை என்னுங் குணங்களுடையது.

26. கரப்பான் பித்தம் :- சர்வாங்கத்திலும் சொறி, உபத்திர வத்துடன் கட்டிகள் எழுப்புதல், குழம்பான பேதி, வயிற்றில் இரைச்சலுடன் பொருமல், இசிவு, கால்களில் விலவிலப்பு, இடுப்பு நோய், திமிருடன் சரீரத்தில் இடைவிடாத காந்தல், நிறக்குறைவு என்னுங் குணங்களுடையது.

27. எரிபித்தம் :- அடித்தொடை, பாதம், கண், உள்ளங்கால் உள்ளங்கை, இவ்விடங்களில் எரிச்சல் காது, முதுகு இவ்விடங்களில் வறட்சி, முழங்கால் முழங்கை இவ்விடங்களில் விருவிருப்பு குளிர்ச்சியான இடத்திலும் குளிர்ந்த காற்றிலும் இருக்க விருப்பம் என்னுங் குணங்களுடையது.

28. துடிப்பித்தம் :- தேகத்தில் துடிதுடித்தலுடன் வெளிறல், சற்று நேரமாவது நிலையில்லாத அலைச்சல், அரிசி மீதும் மாதர் மீதும் மிக்க விருப்பம், யாருடனாவது சண்டை செய்தல் சுறுசுறுப்பு எந்த வஸ்துவிலும் இச்சை என்னுங் குணங்களுடையது.

29. விஷம பித்தம் :- சோர்ந்து விழுதல், கடிந்து பேசுதல் தேகம் முற்றிலும் விஷம் போற் பரவி விஷமிக்குதல், சரீரநோய் வீக்கம் அன்னத்தில் வெறுப்பு, என்னுங் குணங்களுடையது.

30.மூல பித்தம் :- வயிற்றில் இரைச்சலுடன்பேதி, மனச் சலிப்பு, தாறுமாறான கோபம், மூலவளையத்தினின்று முளை தொஙகுதல், அடித் தொடையிலும் மேல் தொடையிலும் நோய், தேகத்தில் வெளிறலுடன் வீக்கம், அதிகநித்திரை, சோம்பல், கண் எரிச்சல் என்னுங் குணங்களுண்டாகும்.

31. களப் பித்தம் :- குரல்வளை கனத்தல், கைப்பான வாந்தி, தொண்டையினுள் புண்போலிருத்தல், நாவில் வழுவழுப்புடன் வறட்சி, பாதத்தில் வீக்கம், காதிரைச்சல், சிவந்த மயிர்முளைத்தல், புற இசிவு என்னுங் குணங்களுண்டாகும்.

32. ஓடு பித்தம் :- எழுந்தெழுந்து ஓடுதல், பிதற்றல், யாரையுமிகழ்ந்து பேசல், பல்லைக்கடித்தல், கண்சிவத்தலுடன் மூடி மூடி விழித்தல், கூச்சல், கொக்கரித்தல், கூத்தாடுதல், குதித்தல், அகங்காரம் என்னுங் குணங்களுண்டாகும்.

33. மூடு பித்தம் :- பொன் ஆபரணம் முதலிய வஸ்துக்களை ஒருவருக்குந் தெரியாமல் கண்டவிடத்தில் மறைத்தல், யாரையும் இகழ்ந்து பேசல் முணு முணுத்தல், கையினாலும் காலினாலும் வீண் செய்கைகளைச் செய்தல் அன்னத்தில் வெறுப்பு என்னுங் குணங்களுண்டாகும்.

34. நடுக்கு பித்தம் :- சிரசு, நெற்றி, பிடரி, முதுகுத்தண்டு, கண்டம் தாடை ஆகிய இவ்விடங்களில் நடுக்கம், கனத்தல், எரிச்சல், கைப்பான வாந்தி, அற்ப இருமல், நித்திரைபங்கம், வாய் நீரானது மார்பில்விழும்படி வடிதல், எந்நேரமும் நா துடித்தல் என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

35. கபால பித்தம் :- கபாலமும், சிரசும் அதிரலுடன் அம்பு பட்ட புண்போல் கடுத்தல், சர்வாங்கத்திலும் சீதளத்துடன் மஞ்சள்நிறம், முதுகுதண்டில்நோய், முகத்தில் வீக்கம், மூர்ச்சை, அடிக்கடி எழுந்திருத்தல் என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

36. தாக பித்தம் :- அதிக தாகம், அடிவயிறு துடித்தல், சர்வாங்கத்திலும் அனல்வீசுதல், சீதளம், புளிப்பு வஸ்துக்களில் இச்சை, கண்டத்தில் மிகு வியர்வை, பிடரியையும் அடிநாவையும் இழுத்துக் கொள்ளுதல் போலிருத்தல் என்னுங் குணங்களுண்டாகும்.

37. திமிர்ப் பித்தம் :- சர்வாங்கத்திலும் திமிர், கனத்தல், மயக்கம், வயிறு பொருமலுடன் முள்ளைச் செருகினதுப் போலிருத்தல், உதயகாலத்தில் வாந்தி, மறதி, அசந்த நித்திரை என்னுங் குணங்களுண்டாகும்.

38. வலிப் பித்தம் :- அடிவயிற்றில் இசிவுடன்வலி, இரைச்சல், நாவரளல், சிரோபாரம், கீல்களில் நோய், ஈரலும் குடலும் வலிததல், பசுமஞ்சள் நிறம் போன்ற மலம், சர்வாங்கமும் துடிப்புடன் முடங்குதல், மாரடைப்பு என்னுங் குணங்களுடையது.

39. கிருமிபித்தம் :- மலத்தில் கிருமிவீழல், வயிற்றை புரட்டி புரட்டி வலித்தல், சர்வாங்கத்திலும் தினவு, நோய், மல மும் சலமும் வரளல், கை கால் வாழத்தண்டைப்போல் சில்லிட்டு கனத்தல், தேகத்தில் ஒருவித நாற்றம் என்னுங் குணங்களுடையது.

40. மருந்திடு பித்தம் :- அடிகுடலில் நிலைத்து நின்று மெளனமாக இருத்தல், தேகம் ஊறல் மனக்கலக்கம், அசதி, வயிறு வெளிறல், நித்திரையின்மை, உணவில் வெறுப்பு, உழலல் என்னுங் குணங்களுடையது.

சகலபித்தரோகத்திலும் வாதமாவது சிலேஷ்மமாவது தனித்தனியே சேர்ந்தால் கஷ்டசாத்தியம். இவ்விரண்டும் சேர்ந்தால் அசாத்தியமாம்.

சிலேஷ்மநோய்

தேகங்கனத்து நறுக்கித்துவைத்தது போல் இருத்தல், தேகத்திலும், முகத்திலும் மினுமினுப்பு, குடைச்சல், இருமல், இரைப்பு, ஆயாசம், நடுக்கல், சிரோபாரம், நெஞ்சிற்கபாதிக்கத்துடன் குளிர்ச்சி , வியர்வை, கீல்கள் கட்டுவிட்டுப் போவது போலிருத்தல் விக்கல், சுரம், குளிர், மந்தாக்னி, கண்ணில் கலக்கோவை, அடைப்பு தும்மல், நாற்றம், வாந்தி என்னுங் குணங்களை சிலேஷ்மரோகமானது தனக்குற்ற முதற்காரணமாக பெற்றிருக்கின்றது. இக்குணங்கள் சகல சிலேஷ்ம நோய்களுக்கும் பொதுவென்று அறியவும்.

சிலேஷ்மரோகபேதம் :- சிலேஷ்மரோகமானது வாதசிலேஷ்ம ரோகம் ஆதியாக இக்கா சிலேஷ்மரோகம் ஈறாக இருபது விதப்படுகின்றது. அவைகளின் பெயரையும் செய்கைகளையும் முறையே இதனடியிற் காண்க .

1. வாதசிலேஷ்மம் :- சர்வாங்கத்திலும் நறுக்கித்துவைத்தது போல் இருத்தல், குளிர்ச்சி , வியர்வை, குடைச்சல், இருமல், தும்மல், நாற்றம், வாந்தி, தலை நோய், நெஞ்சிற் கபாதிக்கத்துடன் வரளல், தொடையிலும் முழங்காலிலும் நோய் கடுகடுத்து மலசலம் இறங்குதல், சர்வாங்கத்திலும் பள்ளம் வீழ்தல் என்னுங் குணங்களுண்டாகும் .

2. பித்தசிலேஷ்மம் :- தலைசுழலல், விக்கல், சிலசமயம் ரத்தங்கக்கல், நாவும் வாயும் முள்ளைப்போல் உறுத்தல் மஞ்சள் கோழை விழுதல், கண்டத்தில் கபங்கட்டுதல், மேல்மூச்சு விடுதல் வேதனை, சுரம், வியர்வை, சோம்பல், தாகம், நித்திரையின்மை, ஒரு வேளை உறக்கம், கண்ணீர் பெருகுதல், மார்புநோய், வயிற்றுப்பல், வாந்தி, இருமல், இரைப்பு என்னுங் குணங்களை யுண்டாக்கும். அன்றியும் மயக்கம், பித்தாதிக்கம், அன்னத்துவேஷம், வாய்நீருறல், தேகத்தில் மஞ்சள் நிறம் என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

3. ரத்த சிலேஷ்மம் :- தினந்தினமும் ரத்த வாந்தி, அதில் துர்கந்தமான கோழைவிழுதல், பலமும் காந்தியும் கெடல், அவயவங்கள் சுருங்கல், உள்ளங்கை உள்ளங்கால் காந்தல், மார்பிலும் தலையிலும் குத்தல், சுரம், வயிற்றுப்பல், தேகம் மரத்தல், மயக்கம்,
சிரோபாரம், காதிரைச்சல், மூர்ச்சை, கண் சுற்றலுடன் மயக்கம், முழங்கால், முதுகு, விலா, முழங்கை, கணுக்கை, கீல் இவ்விடங்களில் கடினமான வீக்கத்துடன் குடைச்சல், சளி, இருமல், நா இனிப்புடம் வரட்சி என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

4. க்ஷய சிலேஷ்மம் :- இது நாளுக்கு நாள் அவயங்கள் மெலிதல், சுரம், கண்டத்தில் கபாதிக்கம், கொட்டாவி, விக்கல், ஈனத் தொனி, சிரசிலும் செவியிலும் ஒரு வித இரைச்சல், தொடையிலும் முழங்காலிலும் நோய், அரோசகம், அசீரணம், மலபந்தம், நிறக் குறைவு, மூர்ச்சை, சோம்பல், தாகம், நித்திரையின்மை என்னுங் குணங்களை யுண்டாக்கும். அன்றியும் நெய்யையொத்த சளிவிழு தல், முகத்தில் பளபளப்பு, குளிர், நாசியில் சலம் வடிதல், தேகத்தில் பாண்டு நிறம், அதில் அற்ப உஷ்ணம், சிதங்கலந்தமலம், மஞ்சள் நிறத்துடன் மெதுவாக மூத்திரம் இறங்குதல் என்னுங்குணங்களையும் உடையதென்பது சிலரின் கொளகை.

5. மூர்ச்சை சிலேஷ்மம் :- இது மூர்ச்சை, அதிக கோழை, சரீர எரிச்சல், சுரம் சைத்தியம், தலைநோயுடன் கனத்தல், சுழலல், நடுக்கல், சுவாச வேதனை, கண்களில் உபதிரவம், சோர்வு, பிரமை, அன்னத்தில் வெறுப்பு, தொடையிலும் முழங்காலிலும் நோய், வயிற்றுப்பல், இரைச்சல், மலபந்தம் என்னுங் குணங்களையுண்டாக்கும்.

6. சுட்க சிலேஷ்மம் :- இது சர்வாங்கமும் மெலிதல், கபா திக்கத்துடன் இருமல், மேல்மூச்சு, சுரம், பலவீனம், அன்னத்தில் வெறுப்பு, அசீரணம், வியர்வை, தாகம், மார்புநோய், நித்திரைபங்கம், அதிக எரிச்சல், கழுத்து நேர்ந்து மெலிதல், கண்களில் நோயுடன் குத்தல், கண்டத்தில் ஒருவித சத்தம், ஈனத்தொனி தலைச்சுற்றலுடன் நோய், மலபந்தம், வயிற்றுப்பொருமல், அக்கினி மந்தம், என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

7. சுர சிலேஷ்மம் :- சுரம், எரிச்சல், தாகம், வியர்வை, கீல்களில் துர்பலம், ஏப்பம், அசீரணம், இருமல், தேகவன்மை குன்றல் கண்டத்தில் கோழை நிறைதல், மார்பில் சூலை, கபாதிக்கத்துடன் சீதளம், கொட்டாவி,சோர்வு, பிரமை, தேகங்கனத்தல், வலித்தல் நாவரளல், தாகம் என்னுங் குணங்களுண்டாகும் .

8.மூகைச்சிலேஷ்மம் :- கழுத்துக்குள் ஊமையைப் போல் சப்தம், மிகுதியாக கோழை விழுதல், மார்பு நோய், சுரம், வாதாதிக்கம் நாவும் வாயும் உலர்ந்து கசப்பு புளிப்பு இனிப்பாக இருத்தல் கொட்டாவி, மலபந்தம், சீதளம், துர்ப்பலம் ஸ்தப்பித்தல் என்னுங்குணங்களுண்டாகும் .

9. துக்கச்சிலேஷ்மம் :- துக்கம், கண்டத்தில் கோழை கட்டிக் கொண்டு ஒலித்தல், சூலை, சர்வாங்கமும் மெலிதல், முழங்காலில் நோய் இரண்டு தொடைகளும் மெலிவதுடன் நோதல், நித்திரைப்பங்கம் எரிச்சல், துர்பலம், வயிறு பொருமல், மலபந்தம், தீபனக் கெடுதி சிரோபாரம், சுவாசம்,இருமல், எப்போதும் கபமே பெருகுதல், வாயில் கசப்பு, புளிப்பு, இனிப்பாயிருத்தல் என்னுங் குணங்களுண்டாகும் .

10. தொனிச்சிலேஷ்மம் :- ஈனத்தொனி, மார்பு கனத்தல் வியர்வை, கபாதிக்கம்,எரிச்சல், சுரம், குளிர், தலைவலி, மண்டைக்குள்ளும் காதுக்குள்ளும் இரைச்சல், சர்வாங்கத்திலும் வாட்டம், தொடைகளுக்குள்ளும் முழங்காலுக்குள்ளும் குடைச்சல், நித்திரையின்மை என்னுங்குணங்களுண்டாகும் .

11. கோஷ சிலேஷ்மம் :- கண்டத்தில் கோழை நிறைதலினால் ஒட்டை, வெங்கலதொனி போன்ற ஒலி, தினவு, தேகம் மெலிதல் அக்கினிமந்தம், கொட்டாவி, இருமல், விக்கல், தேகம் சில்லிட்டு ஸ்தம்பித்தல், வரவர கண்டத்தில் அதிக சத்தம் உண்டாதல் நடுக்கல் ன்னுங்குணங்களுண்டாகும் .

12. சுவேத சிலேஷ்மம் :- தேகம் முற்றிலும் வியர்வை, உடல் மெலிதல், கண்டத்தில் கபம் அடைத்தல், மார்பு உலர்தல் நித்திரையும் சமாக்கினியும் கெடல், மலக்கட்டு, விக்கல் என்னுங்குணங்களுண்டாகும் .

13. மகாசிலேஷ்மம் :- சர்வாங்கத்திலும் வாயுவு வியாபித்தல் அதிக கோழை விழுதல், உடல் மெலிதல், நெஞ்சுக்குழியில் கலகலப்பு, சுரம், குளிர், சிரோபாரம், வியர்வை, அன்னத்திலும் வெறுப்பு, அஜீரணம், துர்பலம், சகல் கீல்களிலும் நோய்,  வயிறுப்பல், அக்கினிமந்தம், பித்தாதிக்கம், காசசுவாசம், என்னுங்குணங்களுண்டாகும் .

14. பேன சிலேஷ்மம் :- தினந்தோறும் மிக்ககோழையாக வாந்தி, மார்பில் எரிச்சல், குத்தல், மேற்சுவாசம், அஜீரணம்,
இருமல், ஒக்காளம், அரோசகம், மலபந்தம், சீதளம், குளிர், வியர்வை தேகமிளைத்தல், துர்பலம், தலைவலி என்னுங் குணங்களுண்டாகும் . (பேனம் என்பது நுரை).

15. லாலா சிலேஷ்மம் :- சொள்ளுவடிதல்போல கோழை, சலம் மிகுதியாக வடிதல், கண்டத்திலும் மார்பிலும் கோழைக்கட்டு, சுவாசம்நீடல், சர்வாங்கசீதளம், ஏதேனும் ஒரு அவயவவூனம், மார்பில்குத்தல், இருமல், வேதனை,அக்கினிமந்தம், மலபந்தம், சுரம், குளிர், அஜீரணம், வியர்வை, கொட்டாவி, பலவீனம்,
வீக்கம் என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

16. வமன சிலேஷ்மம் :- மாறாதவாந்தியுடன் கோழை வடிதல், கண்டத்தில் கபம் அடைத்துக்கொள்ளல், மார்பிற்குத்தல், உடல் மெலிவுடன் எரிச்சல், ஏப்பம், வீக்கம், கொட்டாவி, மலபந்தம், அக்கினிமந்தம் என்னுங் குணங்களை யுண்டாக்கும். (வமனம் என்பது வாந்தி.)

17. க்ஷ£ண சிலேஷ்மம் :- பலக்குறைவு, சுரம், சிரோபாரம், தேகம் இளைத்தல், அதிக தாகம், விக்கல், இரைப்பு, நாவும்வாயும் கசக்குதல், மார்பில்குத்தல், குளிர், தொடைநோய், தலை நடுக்கம், நித்திரைபங்கம், மலபந்தம் என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

18. சோஷ சிலேஷ்மம் :- இது பித்தமும் வாயுவும் அதிகரித்தலினால் பிறந்து சோர்ந்துவிழல், சுரம், குளிர், வியர்வை, வீக்கம், அதிக சீதளம், தசைகளில் நோய், தொடைகளிலும் முழங்கால்களிலும் வேதனை, கொட்டாவி என்னுங் குணங்களை யுண்டாக்கும். (சோஷம் என்பது சோர்வு.)

19. உத்கார சிலேஷ்மம் :- மாறாத ஏப்பம், அதிக வாந்தி, மிக்க கோழைவிழல், வயிறுகல்லைப்போல் இருத்தல், ஈனத்தொனி, கண்ணீர் பெரிகல், அசீரணம், தேகவேதனை, தலைவலி, மலபந்தம், அக்கினிமந்தம், சூலை, பொருமல், அதிக எரிச்சல் தாகம் என்னுங் குணங்களை யுண்டாக்கும். (உத்காரம் என்பது ஏப்பம்.)

20. இக்கா சிலேஷ்மம் :- விக்கல், கொட்டாவி, சிரோபாரம், சர்வாங்கவேதனை, மார்பிற்குத்தல், சீதளம், துர்ப்பலம், இரைப்பு, தொண்டைகம்மல், வயிறு கற்போல் இருத்தலுடன் நோதல், கண்ணீர் வடிதல், வாயும்நாவும் புளித்தல், நெஞ்ச உலர்தல் என்னுங்குணங்களை யுண்டாக்கும்.

மேற்கூறிய சிலேஷ்ம நோய்களை காச சிலேஷ்மரோகம், வாத சிலேஷ்மரோகம், பித்த சிலேஷ்மரோகம், ரத்த சிலேஷ்மரோகம், க்ஷமய சிலேஷ்மரோகம், சுர சிலேஷ்மரோகம், சுவாச சிலேஷ்ம ரோகம், தீபன சிலேஷ்மரோகம், மந்த சிலேஷ்மரோகம், தொந்த சிலேஷ்மரோகம், சந்நிபாத சிலேஷ்மரோகம், அதிசார சிலேஷ்ம ரோகம், சல சிலேஷ்மரோகம், அக்கினி சிலேஷ்மரோகம், முசல் சிலேஷ்மரோகம், வெறி சிலேஷ்மரோகம், விகார சிலேஷ்மரோகம், விரண சிலேஷ்மரோகம், துர்கந்தசிலேஷ்மரோகம், நித்தியா சிலேஷ்மரோகம், பூதசிலேஷ்மம் என வேறு வகையாகவும் சில நூல்களில் வகுக்கப்பட்டுள்ளது. சகல சிலேஷ்மங்களும் கபாலத்திலேயே நீடித்து உபத்திரவம் செய்யத்தக்கவைகள். இவைகளுடன் பித்தமாவது, வாதமாவது கூடில் கஷ்ட சாத்தியமும் அசாத்தியமுமாம் .

உன்மாதம்(பைத்தியம்)

வாதம், பித்தம் சிலேஷ்மம் அதனதன் மார்கத்தை தப்பி நடக்கும் போது மனதில் ஒருவித மதம் பிறக்கும். அதுவே உன்மாத ரோகமாம். இது வாதோன்மாதம், பித்தோன்மாதம், சிலேஷ் மோன்மாதம், திரிதொஷோன்மாதம், வியாத்தியோன்மாதம்
விசேஷோன்மாதம் என ஆறு வகைப்படும்.

1. வாதோன்மாதம் :- கைகளை தட்டுதல், நகைத்தல், ஒருவனை பிடிக்க எழுந்திருத்தல், என்னும் குணங்களை
யுண்டாக்கும்.

2. பித்தோன்மாதம் :- யாவரையும் பயப்படுத்தல், எழுந்தெழுந்தோடுதல், சீதள பதார்த்தத்தில் இச்சை என்னும் குணங்களை யுண்டாக்கும்.

3.சிலேஷ்மோன்மாதம் :- அநித்திரை, யாவரையும் பயப்படுத்தல், ஸ்திரீகளிடத்தில் மிகுந்த விருப்பம், சகல பதார்த்தத்தில் இச்சை என்னும் குணங்களையுண்டாக்கும்.

4. திரிதொஷோன்மாதம் :- மேற்கூறிய மூன்று நோய்களின் குணங்களை ஏககாலத்தில் உண்டாக்கும்.

5.வியாத்தியோன்மாதம் :- இது பணத்தை போக்கடித்த விஷனத்தினாலும், மனைவியை இழந்த துக்கத்தினாலும், இன்னும் பந்பல ம்னோவியாதிகளினாலும், அதைரியம், அடிக்கடி வியாகூலப்படல், தேகம் வெளிரல், பிரலாபித்தல், காரணமில் லாமல் அழுதல், தானே ஆச்சரியப்படுதல், நித்திரை பங்கம், புரளல் என்னும் குணங்களையுண்டாக்கும்.

6. விசேஷோன்மாதம் :- இது இடுமருந்து முதலியவைகளி னால் உண்டாகி முகங்கறுக்குதல், தேகம், பலம், பஞ்சேத்திரியங்கள் நசித்தல், திகைத்து திகைத்து திரிதல் முன் அருந்தினமருந்தின் விஷம் தேகத்தில் ஊற ஊற கண்கள் சிவக்குதல் என்னும் குணங்களை யுண்டாக்கும்.

அபஸ்மாரம்(மூர்ச்சை)

சிந்திப்பினாலும், துக்கத்தினாலும், பயத்தினாலும் மனது மிகவும் பதைத்து தவிக்கும் காலத்தில் வாதபித்தங்கள் மிகவும் அதிகரித்து மனதிற்கு தெளிவைத்தருகின்ற நரம்புகளை யுலர்த்தி புத்தியின் தெளிவைக்கெடுத்து சத்துவகுணத்தை அக்மார்க்கங்களை அடைந்து நீக்கி தகாத நடத்தையை நடப்பித்து உன்மாதரோகத்தைப் போலவே இந்த அபஸ்மார ரோகத்தை பிறப்பிக்கும். இது வாத அபஸ்மாரம், பித்த அபஸ்மாரம், சிலேத்தும அபஸ்மாரம், திரிதோஷ அபஸ்மாரம் என நான்கு வகைப்படும்.

அபஸ்மார நோயின் முக்குறிகள் :- அபஸ்மாரரோகம் மார்பு துடித்தல், புத்திக்குத் தெளிவின்மையா லொன்றுந் தோன்றாமலிருத்தல், பிரமை, கண்ணிலிருட்கம்மல், கிடந்தவிடத்திலேயே கிடத்தல், கண்ணிமைநோதல், விகாரப்பார்வை, காதுகேளாமை, ஊமைப் போலிருத்தல், சர்வாங்க வியர்வை, சொள்ளுவடியுஞ் சலத்தை சப் புதல், நாசியிற் சலம்வடிதல், அசீரணம், அரோசகம், மூர்ச்சை, வயிற்றிலிரைச்சல், துர்ப்பலம், சரீரவலி, தாகம், அநித்திரை, சில சமயம் அற்பநித்திரை, அந்தநித்திரையில் தான் ஆடினதுபோலவும் பாடினது போலவும், சாராயம் கள்ளு இவைகளை குடித்தது போலவும் தோற்றுவது, பின்பு அவைகளி லிச்சைப்படுவது என்னுங் குணங்களைத் தனக்குற்ற முதற்குறிகளாப் பெற்றிருக்கும்.

அபஸ்மார நோயின் இலக்கணம் :- பற்கடித்தல், நுரை நுரையாக கக்குதல், கைகாலுதறல், பார்க்கும் உருவமெல்லாம் கண்ணுக்குத் தோற்றாமை, நடக்கும்போது கால்கள் பின்னிக்கொள்வது,
நாக்கு, மூக்கு, கண் இவைகள் விகாரப்படுவது என்னும் பொதுக்குணங்களையுடையது. இந்த ரோகத்தில் வாதசஞ்சாரம் மட்டாகில் அறிவு சிறிது தெளிவடையும். அது அதிகரிக்கில் தெளிவின்மையாம்.

1. வாத அபஸ்மாரம் :- இது இரு தொடையும் ஒடிந்து விழுவது போலிருத்தலுடன் அதிரல், அறிவு நீங்குவது, ஞாபகமறதி, அழுகை, கண்ணை விழித்தப்படியே நித்திரைசெய்தல், நுரைநுரை யாக கக்குதல், நடுக்கல், சிரசிலடித்துக்கொள்வது, பற்களை நறநற வென்று கடித்தல், தலைதொங்கவிடல், திமிர், முறுக்குதல், குரக்கு வலிபோல விரல்களெல்லாம் வளைதல், கண் முகம் நகம் சருமம் ஆகிய இவைகள் தேஜசு நீங்கி கறுத்தல் சிலவேளை சிவத்தலென்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

2. பித்த அபஸ்மாரம் :- இது தேக மறதி உடனே தெளிவது, கண் முகம் சருமம் ஆகிய இவைகள் மஞ்சள் நிறமாவது, ஒருவேளை கண்கள் வெளுப்பது அல்லது சினங்கொண்டவன் கண்போல சிவப்பது, வெறித்த பார்வை, பூமியைக் கையாலறைவது என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

3. சிலேஷ்ம அபஸ்மாரம் :- இது சகல காரியத்திலும் மறதி, வெகுநேரம் பொறுத்து தெளிவது, வெறிச்சேஷ்டை யதிகரிப்பது, ஒருவேளை குறைவது, சதா சொள்ளுசலம் வடிவது, கண் முகம் நகம் ஆகிய இவைகள் வெளிறல், தேகம் பழுத்ததுபோல ஒருவித வெளுப்பு என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

4. திரிதோஷஅபஸ்மாரம் :- இது வாதம் முதலிய மூன்று அபஸ்மாரரோகங்களுக்குள்ள குணங்களை எல்லாம் ஒரே காலத்தில் உண்டாக்கும். இது அசாத்தியம்.

வலி(இசிவு)

இது அமரக்கண்டவலி, குமரக்கண்டவலி, காக்கைவலி, பிரமகண்ட வலி, முயல் வலி என ஐந்து வகைப்படும்.

1. அமரக்கண்டவலி :- இது வரும்போது தேகத்தில் நோயுண்டாகி மூர்ச்சை காணுதல், கையும் காலும் அடித்துத் துவைத்தது போல் அசைவற்று கிடத்தல், குடைச்சல், பல்லை இளித்து மூடல், கழுத்து சிரசில் மிகு வியர்வை, நெஞ்சதோள் முதுகில் உதிரத்தை பற்றிய உபத்திரவம், என்னும் இக்குணங்கள உண்டாக்கும். இதுவே குதிரை வலியாம்.

2. குமரக்கண்டவலி :- இது வாதாதி சிலேத்துமத்தாற் பிறந்து முன் கழுத்தையும், முகத்தையும் முறுக்கி தோள் பக்கத்தில் வைத்தல் தாடை, செவி, கண், உதடு, இவைகள் கோணுதல், அப்பக்கத்தில் அதிக உபத்திரவம், சந்நிபாத குறிகள் என்னும் இக்குணங்களை உண்டாக்கும். இது மாதர்களுக்கு கண்டால் வயிற்றில் உதிரத்தை கட்டிக்கொண்டு கர்ப்பசயத்தில் லடங்கியிருந்து சில நாள் பொரித்து சந்நிபாதம் போலவே காணும், இது திரிதோஷத்தால் பிறக்கும்.

3. பிரமகண்ட வலி :- இது கைகால் நீட்டியபடியே இருந்து துடித்தல், ஆகாயத்தை சிமிட்டாமல் பார்த்தல், தேகத்தில்லதிக உபத்திரவம் என்னும் குணங்களை யுண்டாக்கும். இது சுத்த சிலேத்து மத்தினாற் பிறக்கும். இதனை குறக்கு வலியெனச் சொல்கிறார்கள்.

4. காக்கை வலி :- இது கண்களை மலர மலர விழித்தல், அவ்வேளையில் மலசலம் நழுதல், இரண்டுகால்களும் முறைத்துக் கொள்ளுதல், தொண்டையும், நாவும் உளரல், சிலேத்துமத்தினாலே வாயிலிருந்து கோழை விழுதல், என்னும் இக்குணங்களைஉண்டாக்கும். இது வாத சிலேத்துமத்தால் பிறக்கும்.

5. முயல்வலி :- உடல் வாய்வு நிறைந்தகாலத்தில் எழும்புதல் வயிற்றில், நோய், வாயால் நுரை தள்ளுதல், கை கால் கண் முறைக்குத லென்னும் குணங்களுடையது. இந்த ரோகம் தண்ணீரைக் கண்டாலும் தண்ணீரைச் சிரசில் தெளித்தாலும் அலது அக்கினியை கண்டாலும் அக்கினி சுடுகைபட்டாலும், ஜனப்பெருக்கத்தை கண்டாலும் அடிக்கடி உண்டாகு.

நேத்திர நோய்

நேத்திர நோய்களுக்கு காரணம் :- கண்களுக்கு ஆகாதப் பொருட்களை அருந்துதல், பாஷாண்ம் முதலிய புகைப்படுதல், சிரசிலும் கண்ணிலும் அடிபடுதல், மிகுசுமை எடுத்தல், பாதஞ் சுடும்படி யாக கடூரவெய்யிலில் அலைதல், அப்பியங்க ஸ்தானம் தவறுதல், அல்லது அந்த ஸ்தானத்தில் எண்ணெய் சிக்குவிடாமை, உள்ளங்காலில் உஷ்ண ஒத்திடம், அவ்வித லேபனம், முதலியவைகளை செய்தல் என்னும் இச்செய்கைகளினால் அதிகரித்த வாத பித்த சிலேஷ்ம
தோஷங்கள் நரம்புகளின் துவாரவழியால் சிரசில் வியாபித்து கண் களைப்பற்றி 96-வகை கண்நோய்களை பிறப்பிக்கும்.

நேத்திரரோக வகை :- நேத்திர நோயானது கருவிழி, வெள்விழி, இமை, கடைக்கண் என்னும் நான்கு ஸ்தானங்களைப் பற்றி 96-வகை நோய்களை பிறப்பிக்குமென்றும் அவைகளில் கர்விழியில் காசம், படலம், குமுதம், விழியுந்தல், நெரிசல், வரி, குந்தம், திமிரம் சுக்கிரன், பூ என்னும் பத்து வகை பிரிவினால், (45 வித ரோகமும்) வெள்விழியில் எழுச்சி, படாத்தி, நெரிசல், புற்று, குமிளம் வரி என்னும் ஆறு வகைப் பிரிவினால்

5. நீலகாசம் :- இது கருவிழியில் கருவிழம்பு நிறத்தை உண்டாக்கும்.

6. மந்தாரகாசம் :- இது கருவிழியில் செம்பஞ்சு அல்லது மேகமிவைகளை நிறத்தைப் பிறப்பிக்கும்.

7. விரணகாசம் :- இது கருவிழியில் முத்தத்தை போல் தளதளப்பான நிறத்தை உண்டாக்கும்.

8. கருப்பகாசம் :- இது கருவிழியில் சுத்தகருமை நிறத்தைக் காண்பிக்கும்.

இவற்றுள் பித்தகாசம், நீலகாசம், மந்தாரகாசம் ஆகிய 3-ம் சிகிச்சையினால் நிவர்த்தியாகும். மற்ற ஐந்தும் அசாத்தியம்.

படலம் :- படரோகமானது சதைபடலம், ரத்தபடலம், நீர்ப்படலம், வரிப்படலம், கருநாகப்படலம்,மாமிசப்படலம், பசு விழிப்படலம், என 7 வகைப்படும்.

1. சதைபடலம் :- இது கருவிழியில் குத்தலுடன் நோயை யுண்டாக்கி மேலில் சிவந்த சதயை வளர்ப்பிக்கும்.

2. ரத்தபடலம் :- இது கண்மணியில் உறுத்தல், குமுறல் காத்தல், பிளைச்சாரல்,எரிதல், ரத்தங்கட்டுதல், புருவம், நெற்றி பிடரி உச்சி ஆகிய இடங்களில் குத்தல் என்னும்மிவைகளை யுண்டாக்கும்.

3. நீர்ப்படலம் :- கருவிழியின் மீது மேகம் கருத்தது போல் இருத்தல், கனத்தல், மிகுந்தசலம்வடிதல், கண்மயக்கம், சிரசில் குத்தலுடன் சலக்கோவை என்னும்மிவைகளை யுண்டாக்கும்.

4. வரிப்படலம் :- கருவிழியின் மீது கயிறு போல் வரிகளும் காந்தலும், குத்தலும், அகண்டேநோயுடன் உறுத்தலும், புகைச்சலும் உண்டாகும்.

5. கருநாகப்படலம் :- கருவிழியில் இந்திர தனுவைப் போல் பலநிறமும் குத்தலும், நோயும், உறுத்தலும்,சலப்பெருக்கமும் உண்டாகும்.

6. மாமிசப்படலம் :- விழிமணியின் முனையில் சதை வளர்ந்து அதிக ஊறல், கூசுதல், இடித்தல், சலம்வடிதல், பிடரியில் நோய் என்பவைகளை யுண்டாக்கும்.

7. பசு விழிபடலம் :- கருவிழியில் பசுமை நிறச்சதயை வளர்ப்பித்து, அதில் குத்தல், தீயிருக்குமிடம்போல் காந்துதல், பார்வை மந்தம் என்னும் குணங்களை உண்டாக்கும்.

இவற்றுள் சதைபடலம், ரத்தபடலம், நீர்ப்படலம், வரிப்படலம், இவை நான்கும் சாத்தியமாம், மற்ற 3-ம் அசாத்தியமாம்.

குமுதம் :
- குமுதரோகமானது செங்குமுதம், கருங்குமுதம் வெண்குமுதம், என மூன்று வகைப்படும்.

You are in Part 6. Continued in Part-1  Part-2  Part-3  Part-4  Part-5  Part-7