Monday, 24 September, 2018
Part-1  Part-2  Part-3  Part-4  Part-5  Part-6  Part-7  மசூரிகை

முதலில் சுரத்தோடு கடலைப்பிரமாணம் கொப்புளங்களுண் டாகி முத்துகள்போல எழும்பும். அப்போது வாயுலரல், சரீர உளைவு, கீல்களில், தளர்ச்சி, அரோசகம், உரோமச்சிலிர்ப்பு,தலை, கொப்புளங்கள் ஒன்பது நாள் இருக்கும். இதற்கு வைசூரி நோய்
அல்லது அம்மை நோயென்று பெயர். கொப்புள பேதங்களால் பெரியம்மை, சின்னம்மை, பனை யேரி, தட்டை பயறி, ராமக்கம் எனவும், வழங்குகிறார்கள். இது குழந்தைப் பருவ முதல் கிழ வயது வரையிலும் காணும். இந்த நோய் எலும்பைப் பற்றி பிறக்கும்.

இது ஒன்பது வகைப்படும். அவை தோடவிகற்பம், முதலிய
அககாரணங்களினால் வாத, பித்த, சிலேத்தும, வாத பித்த, பித்த சிலேத்தும, வாத சிலேத்தும, திரிதோஷ மைசூரிகள் என ஏழுவகையும், இரத்தமைசூரிகை என ஒர்வகையும், அடிபடிதல் முதலிய புறக்காரணங்களினால் ஏற்படும் ஆகந்துக மசூரிகை என ஒர் வகையும் ஆகும்.


இவற்றுள் முதலிற்கூறிய வாதாதி தோஷங்களினால் ஏற்படும் எழு வகை மசூரிகைகள் பொதுவாக மசூரிகை நோய்குரிய கொப்பு ளம் முதலிய குணங்களுடன் அந்தந்த தோஷத்தின் இயற்குணங்களையும் பெற்றிருக்கும்.

இரத்த நிறமான கொப்புளங்கள் உண்டாவதை இரத்த மசூ
ரிகை யென்றும், முதலில் ஓர் இடத்தில் அல்லது ஓர் உறுப்பில் தோன்றிப் பின்னர் உடல் முழுவதும் வியாபிப்பதை ஆகந்துக மசூரிகை எனவும் வழங்கப்படும்.

சில நூல்களில் கொப்புளங்களின் அளவு அல்லது உருவத்தைக் கொண்டு இந்த மசூரிகை ரோகத்தை எட்டு விதங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அவைகளாவன :- மசூரிகை, சரசபிகை, அசகை, கோத்திரவம், கங்கு, விஸ்போடகம், அபாகி, விசர்பை என்பவைகளாம்.

1. மசூரிகை :- தேகத்தில் கடலையைப்போல் சிறுத்தும், சிவந் தும், அடுக்கடுகாக கொப்புளங்கள் எழும்பும். இதனால் வீக்கம், தினவு உண்டாகும்.

2. சரசபிகை :- கடுகை போல நிறமும், உருவமும், உள்ள கொப்புளங்கள் எழும்பும். இதனால் உடம்பில் எரிச்சல் , நோய் ரத்த மூத்திரம் உண்டாகும். இது கஷ்ட சாத்தியம்.

3. அசகை :- பருத்தும், தடித்தும் இரணத்தைத் தருவதாய் அநேக கொப்புளங்கள் எழும்பும். இதனால் கில்களிலும், முகத்திலும் வீக்கம், தாகம், பிசுபிசுப்பான சகல சீதங்களும் உண்டாகும்.

4. கோத்திரவம் :- சர்வாங்கத்தில் வரகு போல் கொப்புளங்கள் எழும்பும். இதனால் உபத்திரவங்கள் உண்டாகும்.

5. கங்கு :- சரீரம் முழுவதும் சாமை என்னும் கொப்புளங்கள் எழும்பும்.

6. விஸ்போடகம் :- பாதமுதல் சிரசுபரியநந்தம் நெருப்புக் கொப்புளத்தைப் போலவே பெரிது பெரிதாக கொப்புளங்கள் எழும்பும். இது அசாத்தியம்.

7. அபாகி :- தேகத்தில் தூர தூரமாக உலர்ந்தது போலும் சுருங்கினது போல் கொப்புளங்கள் எழும்பும். இவைகள் நெடு நாளாக இறங்காமல் உபத்திரவத்தை தரும். இது அசாத்தியம்.

8. விசர்பை :- மயிலிறகின் கண்ணைப்போல் பல நிறமாக கொப்புளங்கள் எழும்பும். இதனால் சரீரம் ஊறல், வீக்கம், சுரம் தாகம் என்னும் குணங்கள் உண்டாகும்.

சகல மசூரிகை ரோகங்களிலும் முத்துகள் என்கிற கொப்புளன்கள் சீக்கிரத்தில் பிறந்து மறைந்தாலும் முதல் முதல் சிறு கடலைப்பருப்பைப் போல் தோன்றி கண்டம் வரையிலுமிராமல் பவழ குண்டுகளைப்போல் பருத்து குழிகள் விழுந்தாலும் மச்சங்களைப்போல் சுருகி கறுத்தாலும் அசாத்தியமாம்.

விஷ்போட நோய்

பித்தாதிக்கத்தினால் ரத்தம் கொதிப்புற்று சுரம் எரிச்சல்,
உதடுரல், சரீர வளைவு என்னும் குணங்களுடன் சர்வாங்கமும் மறையும்படி, சிறிதும் பெறிதுமாக தேகம்முழுதும் அநேக கொப்பு ளங்கள் எழும்பும். (விஷ்போடம் என்பது அதிக கொப்புளம்) இது சீத பித்தம் ஆமபித்தம், ஆமலபித்தம், கஷீத்திரம் என நான்கு வகை யாம்.

சித்தபித்தவிஷ்போடம் :- அகன்று பரவுவதாயும் வளையாகர மாயும், ரத்தநிறத்தோடுங்கூடிய புடைகள் தேகமுழுதிலும், எழும்பும் அவைகளில் சதா நமைச்சல் உண்டாகும்.

ஆமபித்தவிஷ்போடம் :- தேகம் கருத்து பலவிதமான புடைகள் எழும்புதல், மூர்ச்சை, வியர்வை, தாகம், கோழை, வாந்தி தலைவலி,வயிறு, சுரம், வயிறுமார்பு,கண்டம், இவைகளில் எரிச்சல் ரசதாது வற்றுதல் என்னுங் குணங்களுடையது.

ஆமலபித்தவிஷ்போடம் :- தேகத்தில் வளையாகரமான புடைகள், பலவித ரூபநிறங்களை பெற்ற கொப்புளங்கள் அவை களில் மாறாதினவும் புளிப்பும் காரமுமான வாந்தி, மார்பில் எரிச்சல், மார்பு அதிரல், தேகம் பாரிப்புடன் சுடுகை, அரோசகம், மூர்ச்சை, சோர்வு பிதற்றல், பிரமை, இரைப்பு, இளைப்பு, துக்கம், கண்ணில் இருட்கம்மல் என்னும் குணங்களை யுடையது.

க்ஷ£த்திர விஸ்போடம் :- சர்வாங்கத்திலும் எரிச்சலோடு வியர்க்குருப்போல சிறிது சிறிதாக அநேக கொப்புளங்கள் எழும்பி ஆதியில் சுரமும் அந்தத்தில் பேதியும் உண்டாகும்.

குஷ்டரோகம்

குஷ்டரோகமானது சரீரம் பளபளப்பு, மாறுநிறம் கடினத்துடன் தடித்த சருமம், அச்சருமத்தில் தொட்டவிடத்தில் தினவு வியர்வை, எரிச்சல், உரோமச்சிலிர்ப்பு, கொஞ்சம் காயம் பட்டிடி னும் பெரிய விரணமாதல், அதில் கறுத்த உதிரம் வடிதல், அதிநித் திரை, மிகுவிரணம், குழிவிரணம் முதலிய குணங்களைப் பெற்றிருக்கும்.இதற்குக் குறைநோய், தொழுநோய், பெரும்வியாதி என வேறு பெயர்களுமுண்டு.

வாதாதி தோஷத்தொந்தபேதத்தினால் குஷ்டநோயானதுபதினெட்டு வகைப்படும். அதாவது, வாதத்தால் கபாலகுஷ்டமும், பித்தத்தால் அவதும்பரகுஷ்டமும், சிலேஷ்மத்தால் ருசியஜிம்மிககுஷ்டமும், சிலேஷ்மபித்தத்தால் சருமகுஷ்டமும், ஏககுஷ்டமும், கிடிப குஷ்டமும், சித்மகுஷ்டமும், அலசகுஷ்டமும், சிலேஷ்ம வாதத்தால் வியாதிகாகுஷ்டமும், திரிதோஷத்தால் தத்துருகுஷ்டமும், புண்ட ரீக குஷ்டமும், சதாருகுஷ்டமும், விஸ்போடகுஷ்டமும், பாமா குஷ்டமும், சர்மதளகுஷ்டமும், காசசகுஷ்டமும், பிறக்கும். இவற்றுள் அவதும்பரம், மண்டலம், ருசியஜிம்மிகம், புண்டரீகம், கபாலம், காகசம் என்னும் ஆறு குஷ்டங்களை மகாகுஷ்டங்களென்று கூறப்பட்டுள்ளது.

1. கபால குஷ்டம் :- கபாலத்தைப்போல் வெளுத்த கொப்பு
ளங்களும் விரணங்களும் உண்டாகி பின்னர் குழிவிழுந்து சினைத்தண்ணீர் ஒழுகுவதுமாக இருக்கும்.

2. அவதும்பர குஷ்டம் :- அத்திப்பழத்தையொத்த கொப்பு
ளங்களையும் விரணங்களையும்முடையது. விரணத்தில் இரத்தம் வடிதலும், புழுக்கல் ஊருவதும், தினவும், உடல் உளைவும், மயக்கமும உண்டாகும்.

3. மண்டல குஷ்டம் :- இதில் கொப்புளங்கள் பலவித நிறத்தையுடைய தாயும்மினுமினுத்தும் நாள்பட உடைந்து ஒன்ய்ச்சேர்ந்து மண்டலாகாரமான விரணத்தை யுண்டாகும். அவைகளில் புழுக்களும் சீழும் ஒழுகிக் கொண்டிருக்கும். ரணத்தை சுற்றிலும் மஞ்சள் நிறமான சருமம் உண்டாகும். சிரசிலும் சர்வாங்கத்திலும்
ரணங்கள் தடித்து கறுத்தல் அதில் ரத்தம் வடிதல் என்னுங்
குணங்களுண்டாகும்.

4. விசர்ச்சிகா குஷ்டம் :- இதில் கொப்புளங்கள் கறுப்பு நிறமாயும் பின்பு உடைந்து விரணமாகி அவைகளில் சினைநீர் ஒழுகுதல், அதிக ஊரல், எண்ணையை தடவினதுபோ லிருத்தல், வெளிறல், எரிச்சல், வேதனை, சிவந்த தடிப்பு என்னும் குணங்களுடையது.

5. ருசிய ஜிம்மிக குஷ்டம் :- கொப்புளங்கள் முள்ளைப்போல் மெல்லியதாய் நீண்டும் பிசுபிசுத்தும் சுறசுறத்தும் உள்ளில் கறுத்தும் முனையில் சிவந்தும் நெருக்கமாக எழும்பி விரணங்களாகி அவைகளில் புழுக்களும் எரிச்சலும் உண்டாகும்.

6. சர்ம குஷ்டம் :- தோலானது மஞ்சள் நிறமாயும் சிவந்த நிறமாயும் மீன்களின் சிதளையொத்து சுறசுறத்து தடித்து கிள்ளினால் உபத்திரவமில்லாமல் காயம்பட்டால் தெறியாமலும் இருக்கும். சருமம் தடித்தல், அதில் சீழ்வடிதல் சொறி யுண்டாதல், எரிச்சல், துண்டு துண்டான தடிப்பு என்னும் குணங்களுடையது. இதனை
மேகப்படை திமிர்படை யென்றுங் கூறுவர்.

7. ஏகசர்ம குஷ்டம் :- சரீரத்து தோல்முழுதும் யானையின் துதிக்கைபோல் தடித்து பார்வைக்கு விகாரமாயிருக்கும். தேகமுழுதும் தோல் உரிந்து சிவத்தல், வறவறப்பு, சொறி, தினவு, திமிர், கால் விரல்கள் கனத்தல் சர்வாங்கத்தில் வீக்கம் என்னும் குணங்களுடையது. இதனை சடை குஷ்டம், யானை குஷ்டம் எனவுங் கூற்வர்.

8. கிடிப குஷ்டம் :- கொப்புளங்கள் சுடுகையுடன் எழும்பி
விரணமாகி அவைகளில் அதிக நமைச்சல், சொறிந்த இடத்தில் காய்ப்பேறினதுபோல் இருத்தல், தடித்தல், சர்வாங்கமும் கனத்தல், யானைதோலைப்போலிருத்தல், அடிக்கடி நீரிறங்கல், தேகத்தில் சினைநீர் வடிதல், துர்நாற்றம் என்னும் குணங்களுடையது.

9. சித்மா குஷ்டம் :- இதில் மிகவும் புடைகள், பெரும்பான் மையும் ஊர்த்துவ தேகமான நாபிக்குமேல் வெளுத்த சிகப்பு நிறத்துடன் உண்டாகி அவைகளின் மேல் மினுமினுப்பும் சொறிந்தால் சருமத்தூள் விழுவதும், அவ்விடங்களில் வழுவ்ழுப்பதும், சரீரமுழுதும் திமிருடன் தடித்தல், மஞ்சள் நிறம், அதில் ரத்தம் கசிதல், சகிக வொண்ணாத திமிர், மறதி என்னும் குணங்களுடையது.

10. அலச குஷ்டம் :- இதில் ரத்தநிறமான சிறு கூழாங்கற் களைப்போல் கொப்புளங்கள் விஸ்தாரமாக யுண்டாகி உடைந்து விரணங்களாகி அவைகளில் அதிக நமைச்சல் உண்டாகும்.

வியாதிககுஷ்டம் :- கால்களிலும் கைகளிலும் சிவந்த கடினமான கொப்புளங்களாகி விரண்ங்களாகும். தேகத்தில் வெடித்தலுடன் சகிக்ககூடாத அருவருப்பு, கை, கால், கண்கண்டம் இவைகளில் வெடிப்புடன் வீக்கம் சர்ப்பத்தையொத்த தேககாந்தி என்னும் குணங்களுடையது.

தத்ருககுஷ்டம் :
- முதலில் மண்டலாகரமான கொப்புளங்களெழும்பி பிறகு கலங்கி கறுப்பு அகத்திப்பூ நிறங்களைப் போல் விரணங்களாகும். தேகத்தில் சிவந்த தடிப்பு வெளிதல் ஊறலுடன் திமிர் என்னும் குணங்களுடையது.

சாதாருககுஷ்டம் :- சிவந்தும் கருத்தும் அடியகன்றும் அனேக கொப்புளங்களுண்டாகி சர்வாங்கத்திலும் விரணங்களாகி அவைகளில் எரிச்சலும், வலியும், கிருமியும், அதிகரித்தல், நாசி கண் காது கன்னம் இவைகளில் தடிப்பு என்னும் குணங்களுடையது.

புண்டரீக குஷ்டம் :- கொப்புளங்கள் மிக உயர்ந்து முனையில் ரத்த நிறம், நடுவில் வெண்மை உள்ள நிறம் ஏற்ப்பட்டு பின்னர் தாமரைப்பூ நிறத்¨தெயொத்து விரணங்களாகி நோய் , எரிச்சல் நமைச்சல், குழப்பமான சினைநீர்வடிதல், தத்தந்செரிதல் என்னும் குணங்களுடையது.

விஷ்போடகுஷ்டம் :- கொப்புளங்கள் சிவந்தும் வெளுத்தும் விஸ்த்தரித்து எழும்பி விரணங்களாகி அதில் தினவு எரிச்சல் உண்டாதல், சருமம்மிருதுவாகயிருத்தல், விஷஎரிச்சலையொத்த எரிச்சல், வெளிதல் என்னும் குணங்களுடையது.

பாமாகுஷ்டம் :- கொப்புளங்கள் சிவந்தும் கருத்தும் பருத்தும் நெருக்கமாக இரண்டு முனையிலும் முழங்காலிலும் தொண்டையிலும் எழும்பி விரணங்களாகி அவைகளில் நோயும் வறவறப்பும் மிகு தினவும் சினைத்தண்ணீர் கசியும் சருமம் விரித்தலுடன் வீக்கம் கால் கை குறைதல் என்னும் குணங்களுடையது.

சர்மதலகுஷ்டம் :- கொப்புளங்கள் பிறக்கும் இடங்களில்
சிவந்தும் அதிக தினவு தொடக்கூடாத நோய் உண்டாகி கொப்புளங்கள் எழும்பி விரணங்களாகும். குத்தல் எரிச்சல் உண்டாகும். தேகத்தில் கீற்று கீற்றக வெடித்தல் வேதனை தொடக்கூடாமை அதில் ரத்தம் வடிதல் வயிற்றுவலி என்னும் குணங்களுடையது.

காகசகுஷ்டம் :- கொப்புளங்கள் சிவந்த நிறத்துடன் உண்டாகி பிறகு கறுகி கிறாம்பு மொக்கின் உருவத்தை பெற்று உடைந்து விரணங்களாகி அவைகளில் அதிக எரிச்சல் நோய் முதலிய குணங்களும் உண்டாகும்.

மேற்கூறிய பதினெட்டு குஷ்டங்களை தவிற கர்ணகுஷ்டம், கிருஷ்ணகுஷ்டம், அபரிசகுஷ்டம் எனவேறு மூன்று குஷ்டரோகங்கள் உண்டென்றும் சில வைத்திய நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

கர்ணகுஷ்டம் :- சர்மத்தில் பச்சைவன்னத்துடன் பொரி பொரியாக வெடித்தல், தேகம் பாரித்து திமிருடன் காக்கட்டான் பூநிறமாக தோற்றுதல், தடிப்பு வீக்க என்னும் குணங்களுண்டாம்.

கிருஷ்ண குஷ்டம் :- சர்வாங்கம் கறுத்தல், சர்மத்தில் திமி ருடன் நாற்றம் வீசுதல், நோதல், சப்ததாதுக்களும் உஷ்ணமா யிருத்தல், அரையிலும் புறங்களிலும் கொஞ்சமாயும் சிரசில் அதிக மாகவும் விரணங்காணுதல், புத்தி சஞ்சலமுறுதல் என்னும் குணங்களுண்டாகும்.

அபரிச குஷ்டம் :- சர்வாங்கத்திலும் கறுத்த ரத்தம் வடிதல், நோய், தொடக் கூடாமை, வீக்கம், வெடிப்பு என்னுங் குணங்களை உடையது.

வெண்குஷ்டம்


இந்நோயைக் குஷ்டமெனக் கூறினும், இது குஷ்ட வகைகளினின்று வேறுபட்ட தென்பதையும் குஷ்டத்தைப்போல அவ்வளவு கொடுமையான வியாதி அல்லவென்றும் உணரவேண்டும். இந்நோயால் திட்டு திட்டாக வெண்மை நிறமான படைகள் உண்டாகி
பிறகு தேகம் முழுதும் பரவி உடலை விகாரப்படுத்துதல் முதலிய குணங்களை யுடையது. இது வாத வெண் குஷ்டம், பித்த வெண் குஷ்டம், சிலேத்ம வெண் குஷ்டம் என மூன்று வகைப்படும்.

வாதவெண் குஷ்டம் :- இது கறகறத்து சிவந்து கொஞ்சம் கருமைச் சாயலுடன் வெளுத்திருக்கும். வெளுக்காத இடங்களில் அழுக்கு நிறமுண்டாகும்.

பித்த வெண் குஷ்டம் :- இது செந்தாமரைப் பூவிதழ்போல் சிவந்த வெளுப்பாக பரவுவதும் அவ்விடத்தில் எரிவதும் உரோமங்கள் உதிருவதுமாக யிருக்கும்.

சிலேஷ்ம வெண் குஷ்டம் :- இது தும்பை மலரைப்போல வெண்மையாக வெளுத்து கொஞ்சம் தடித்து பரவும். இது பரவு மிடங்களில் நமைச்சல் உண்டாகும். இக்குஷ்டம் ரத்ததாது மாமிச தாது மேதோதாதுவையும் பற்றும்போது கண்ணுக்கு அசங்கிய மான நிறமும் தேகத்தில் வெடிப்பும் வீக்கமும் உண்டாகும்.

வெண்குஷ்டத்தில் சாத்தியா சாத்தியம் :- உரோமங்களை வெளுக்கப்பண்ணாமலும் கையால் தடவில் மேடுபள்ளம் இல்லாமலும் சடை பின்னல் போலும் அக்கினியால் சுட்டாரிய வடிப்போலும் வெளுக்காம லிருக்கிற வெண் குஷ்டம் சாத்தியம். மேற்
வகைப்படும். ககேரூகம், மகேரூகம், சவுரசம், சுலூணம், வேலிகம் என்பவையாம். இவைகள் பெருங் கூட்டங்களாகி மெத்த பருத்தும், சக்கரவடிவாயும், உரோமத்தைப்போல் மெல்லியதாயும் கறுப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும், கறுப்பு வெள்ளை கலந்த நிறத்தையும் பெற்று மலப்பையில் சஞ்சரிக்கும் இதனால் பேதி, சூலை,
மலச்சிக்கல், உடம்பு இளைத்தல், தேகத்தில் சுறுசுறுப்புடன் வெண்மைநிறம், உரோமசிலிர்ப்பு, அக்கினி மந்தம், குத்தல், நமைச்சல், எரிவு என்னும் குணங்களுண்டாகும். ஒரு வேளை அக்கிருமிகள் ஆமாசய ஸ்தானத்தைப்பற்றி எதிர்த்து ஏறும்போது வாயில் நீர்சுரப்பு, துர்க்காந்தம் இரைப்பு என்னும் குணங்களுண்டாகும்.

இவற்றுள் இறுதியில் கூறப்பட்ட சிலேத்தும மலக்கிருமி, இரத்த மலக்கிருமி, அக மலக்கிருமி ஆகிய மூன்று வகைகளும் மதுரமான பொருட்கள், மாவுபண்டங்கள் முதலியவற்றை அதிகமாக அருந்துதல் முதலிய காரணங்களினால் ஏற்படுவதாகக்கூறப்பட்டுள்ளது. இவைகளை அந்தர் மலக்கிருமி யென்றும் வழங்கப்படும்.

வாதா நோய

சகல உயிர்களுக்கு ஆதாரமாயும் படைப்பிற்குக் காரணமாயு முள்ள வாயுவானது உண்ணுகின்ற உணவாதி பேதங்களினாலும், தகாத நடத்தைகளினாலும், தன்னிலை மாறி நோய்முகத்திரும்பி எண்பது வித வாதநோய்களை உண்டாக்குகின்றது. அவைகளாவன :-

1. பாதா§க்ஷபக வாதரோகம் :- சீதள பொருள்களையே புசித்து வருதல் முதலிய காரணங்களினால் வாதமானது இருபாதங்களிலிருக்கின்ற சப்த தாதுக்களை அநுசரித்து அப்பாதங்களை நடக்கும்போது ஒன்றோடொன்று அடித்துக்கொள்ளச் செய்யும். எழுந்தாலும் நின்றாலும் நடந்தாலும் சுற்றி விழுவதுபோலிருத்தல், கால்கள் உதறுதல் தொடைகளில் வேதனை முதலிய குணங்கள் உண்டாகும். [பாதம் என்பது கால், ஆ§க்ஷபகம் என்பது தடை.]

2. பாதலகவாதம் :- அதிக சீதள பிரதேசத்தில் இருப்பதினாலும், சீதள காற்றினாலும் இந்நோய் உண்டாகி, வாதமானது உள்ளங்காலில் சேர்ந்துக்கொண்டு பாதத்தை தூக்கும்போதும் வைக்கும்போதும் களிமண் அப்பியதுப்போலும், செத்தை முதலியன ஒட்டிக்கொண்டதுப்போலும் தோற்றும். அப்போது கால்களில் மரத்தலும், கனத்தலும், நோதலும் ஒன்றோடொன்று அடித்துக்கொள்ளுதலும் அதிக உறக்கமும் உண்டாகும். இது நெடுநாள் நீங்காது. இத்துடன் பித்தமாவது சிலேத்துமமாவது சேர்ந்தால் சாத்தியம். இரண்டும்சேர்ந்தால் அசாத்தியம். (லகம் என்பது பற்றுதல்)

3.பாதஹரிஷவாதம் :- பாதத்தில் அநுசரித்த சீதளத்திற்கு சூடான ஒற்றடம் போடுவதினாலும், அக்கினியில் காய்ச்சுவதினாலும், கூறிய சாத்தியக் குறிகள் மாறாக இருந்தாலும், முதலில் குதம் குய்யம் உள்ளங்கை, உதடு, என்னும் இடங்களில் உண்டாகி கோரமாக சீக்கிரத்தில் பரவினாலும் அசாத்தியம்.

கிருமிநோய்

இது கிருமிகளால் ஏற்படும் ஒர் நோய். இந்தக்கிருமிகள் இருபது வகைப்படும். இந்தக்கிருமிகள் உண்டாகும் இடங்களை பொறுத்து இந்நோயை நான்கு வகையாகப் பிரித்துள்ளனர்.

புறமலக்கிருமி :- சரீரத்தின் மேல்புறத்தில் சேருகின்ற அழுக்கினால் வீட்சர யுகா என்கிற இரு வித பூச்சிகள் உண்டாகும். இவைகளில் யுகா என்னும் பூச்சிஉரோம ஸ்த்தானத்தில் எள்ளுபோல் உருவமும் கறுத்த நிறமும் மிகுந்த கால்களும் முடையதாய்ப் பிறந்து சஞ்சரிக்கும். இது கடிப்பதினால் சிறு சிறு மச்சங்களும் வியர்குரு போல் அணு கொப்புளங்களும் உண்டாகும். வீட்சா என்னும் பூச்சி அழுக்கு வஸ்திரங்களில் வெள்ளை எள்ளுரூப வண்ணங்களுடையதாய்ப் பிறந்து சஞ்சரிக்கும். இது கடிப்பதினால் சிறு சிறு தடிப்புகளும் தினவு உண்டாகும். இதுவே பாக்கிய மலக்கிருமியாம்.

சிலேத்துமமலக்கிருமி :
- இது சிலேத்துமத்தால் ஆயாச ஸ்தானத்தில் பிறந்து உள்ளில் சஞ்சரிக்கின்ற கிருமிகள். இது ஏழு வகைப்படும். பெரும்பூநாகக்கிருமி, நீர்ப்பாம்புகிருமி, கொல்முனை கிருமி, சன்னநீளக்கிருமி, அணுக்கிருமி, வெண்கிருமி, செங்கிருமி என்பவைகளாம். இவைகள் கால்கள் இல்லாமல் வட்டமாக சுற்றிய தூலைப்போலும் பார்வைக்குத் தோணாமல் அணுப்போலவும் தருப்பைப்பூ வாசனைப் பெற்று குடலில் சுற்றிக்கொண்டு மார்பு மட்டும்
ஏறி அதிக உபத்திரவங்களை உண்டாக்கும். அப்போது மார்புஅதிரல் வாய் நீறுரல், அசீரணம், அரோசகம், வாந்தி, மூர்ச்சை, சுரம் என்னும் குணங்களுண்டாகும். இது கபத்தால் பிறக்கும் .

இரத்தமலக்கிருமி :- இது உதிரம் ஓடுகின்ற நரம்பு ஸ்தானத்தில் பிறந்து சஞ்சரிக்கின்ற கிருமிகள். இது ஆறு வகைப்படும். அணுக்கிருமி, வட்டக்கிருமி, காலிலாக்கிருமி, மிகு சூட்சமக்கிருமி, தோற்றாங்கிருமி, செங்கிருமி என்பவைகளாம். இவைகள் பெருங்கூட்டங்களாகி தாதுக்களிலும் பரவி உரோமங்களை உதிரப்பண்ணுவதுடன் கிருமி
பேதங்களுக்குத் தாயாயு மிருக்கும். இவைகளால் குஷ்டங்களைப்போலவே தேகத்தில் மாநிறமுண்டாகும்.

அகமலக்கிருமி :- இது அதிக மலச்சேர்க்கையினாலும், பச்சை தானிய இலைக்கறி, கருணை சேமை முதலிய கிழங்குகள் புசிப்பதனாலும் பக்குவாய ஸ்தானத்தில் பிறந்து சஞ்சரிக்கின்ற கிருமிகள். இது ஐந்து

கூறிய சாத்தியக் குறிகள் மாறாக இருந்தாலும், முதலில் குதம் குய்யம் உள்ளங்கை, உதடு, என்னும் இடங்களில் உண்டாகி கோரமாக சீக்கிரத்தில் பரவினாலும் அசாத்தியம்.

கிருமிநோய்

இது கிருமிகளால் ஏற்படும் ஒர் நோய். இந்தக்கிருமிகள் இருபது வகைப்படும். இந்தக்கிருமிகள் உண்டாகும் இடங்களை பொறுத்து இந்நோயை நான்கு வகையாகப் பிரித்துள்ளனர்.

புறமலக்கிருமி :- சரீரத்தின் மேல்புறத்தில் சேருகின்ற அழுக்கினால் வீட்சர யுகா என்கிற இரு வித பூச்சிகள் உண்டாகும். இவைகளில் யுகா என்னும் பூச்சிஉரோம ஸ்த்தானத்தில் எள்ளுபோல் உருவமும் கறுத்த நிறமும் மிகுந்த கால்களும் முடையதாய்ப் பிறந்து சஞ்சரிக்கும். இது கடிப்பதினால் சிறு சிறு மச்சங்களும் வியர்குரு போல் அணு கொப்புளங்களும் உண்டாகும். வீட்சா என்னும் பூச்சி அழுக்கு வஸ்திரங்களில் வெள்ளை எள்ளுரூப வண்ணங்களுடையதாய்ப்பிறந்து சஞ்சரிக்கும். இது கடிப்பதினால் சிறு சிறு தடிப்புகளும் தினவு உண்டாகும். இதுவே பாக்கிய மலக்கிருமியாம்.

சிலேத்துமமலக்கிருமி :- இது சிலேத்துமத்தால் ஆயாச ஸ்தானத்தில் பிறந்து உள்ளில் சஞ்சரிக்கின்ற கிருமிகள். இது ஏழு வகைப்படும். பெரும்பூநாகக்கிருமி, நீர்ப்பாம்புகிருமி, கொல்முனை கிருமி, சன்னநீளக்கிருமி, அணுக்கிருமி, வெண்கிருமி, செங்கிருமி என்பவைகளாம். இவைகள் கால்கள் இல்லாமல் வட்டமாக சுற்றிய தூலைப்போலும் பார்வைக்குத் தோணாமல் அணுப்போலவும் தருப்பைப்பூ வாசனைப் பெற்று குடலில் சுற்றிக்கொண்டு மார்பு மட்டும் ஏறி அதிக உபத்திரவங்களை உண்டாக்கும். அப்போது மார்புஅதிரல் வாய் நீறுரல், அசீரணம், அரோசகம், வாந்தி, மூர்ச்சை, சுரம் என்னும் குணங்களுண்டாகும். இது கபத்தால் பிறக்கும் .

இரத்தமலக்கிருமி :- இது உதிரம் ஓடுகின்ற நரம்பு ஸ்தானத்தில் பிறந்து சஞ்சரிக்கின்ற கிருமிகள். இது ஆறு வகைப்படும். அணுக்கிருமி, வட்டக்கிருமி, காலிலாக்கிருமி, மிகு சூட்சமக்கிருமி, தோற்றாங்கிருமி, செங்கிருமி என்பவைகளாம். இவைகள் பெருங்கூட்டங்களாகி தாதுக்களிலும் பரவி உரோமங்களை உதிரப்பண்ணுவதுடன் கிருமி
பேதங்களுக்குத் தாயாயு மிருக்கும். இவைகளால் குஷ்டங்களைப்போலவே தேகத்தில் மாநிறமுண்டாகும்.

அகமலக்கிருமி :- இது அதிக மலச்சேர்க்கையினாலும், பச்சை தானிய இலைக்கறி, கருணை சேமை முதலிய கிழங்குகள் புசிப்பதனாலும் பக்குவாய ஸ்தானத்தில் பிறந்து சஞ்சரிக்கின்ற கிருமிகள். இது ஐந்து

உள்ளங்காலில் நின்ற சீதளத்தினால் இந்நோய் பிறந்து அதிகரித்து கால்களில் உரோமங்கள் சிலிர்த்தல், மரத்தல், கனத்தல், நடுக்கல், குத்தல், அசைதலில் நீட்டலில் முடக்கலில் நோய் தெரியாமை மந்தநடை என்னுங் குணங்களுடையது.

4. அபிகாதவாதரோகம் :- அதிகநடை,வாகனங்களில் ஏறி விரைவில் செல்லுதல், மல்யுத்தம் செய்தல், சீதள வஸ்த்துகளை புசித்தல் என்னுஞ் செய்கைகளினால் உண்டாகி சர்வாங்கத்திலும் வியாபிக்கும், அப்போது உடலில் அசதி, நோய், பக்க இசிவு, திமிர், முறுக்குதல்
சர்வாங்கமும் அடித்து துவைத்தது போலிருத்தல் ஆயாசம்
நீட்டலில் முடக்கலில் நோய் என்னுங் குணங்களுடையது.

5. புச்சாவர்த்தவாதரோகம் :- பாதத்தில் சீதளம் அது சரித்து இருக்கும் போது மீளவும் சீதள வஸ்துகளை புசித்து நித்திரை செய்வதினால் இந்த ரோகம் பிறந்து கை கால் விரல்களை அது சரிக்கும். அப்போது விரல்களில் சிவந்த நிறமும், நோயும், மரத்தலும் உண்டாகும். இது விருத்தியடைய விரல்களை நீட்ட மடங்க கூடாமை ஏற்படும். (புச்சம் என்பது விரல்கள் ஆவர்த்தம் என்
பது சூழல்)

6.சீதகண்டுவாதரோகம் :- பாத நரம்பில் மிகு சீதளம் சேருவதனால் இந்நோய் பிறந்து உள்ளங்காலில் அடிக்கடி சீதளத்துடன் நமைச்சலை பிறப்பிக்கும். அப்போது பாதத்தில் கனப்பு நோய், குத்தல், மிகு தினவு உண்டாகும். இது சாத்தியம். (சீதம் குளிர்ச்சி கண்டு என்பது தினவு).

7.கப்திவாதரோகம் :- சீதள காலத்தில் சீதள வஸ்துகள் மிகுதியாய் சாப்பிடுதல் , பகல் நித்திரை, ஆழ்ந்த பள்ளத்தில் உட்காரல், ஆகிய இவைகளில் ஏற்பட்டு குதிக்க்கால், பாதம், விரல்கள் முழங்காலுக்கு கீழ் மேல் சிறு தோடைகவுட்டி என்னும் இடங்களில் எதிலாவது நிலைத்து விடும், அப்போது அதி உறக்கம் , தேகத்தில் மரத்தல், கனத்தல், வீக்கம், குத்தல் உண்டாகும். இதற்கு உடனெ சிகிச்சை செய்யில் கஷ்டசாத்தியம்.இல்லாவிடில் அசாத்தியம். (கப்திஎன்பது உறக்கம்).

8. பாதகண்டகவாதரோகம் :- உள்ளங்காலில் சீதளம் அது சரிக்கும் போது உஷ்ண ஒற்றடம் போடுவதினாலும்,காய்ச்சுவதினாலும் உண்டாகி கணுக்கால்களில் தங்கி கால்விரல்களின் சந்துகளில் பரவும். கலை தூக்கும் போதும் வைக்கும் போதும் காலில் முள்ளு, சிராய் ஊசிமுனை,கல், நகம், இவைகளால் குத்துவது போல் வேதனை வலி உண்டாகும். இது அசாத்தியம். (கண்டம் என்பது முள்ளு).

9. களாயகஞ்ச வாதரோகம் :- சீதளகாலத்தில் சீதள பூமி
யில் சஞ்சரிப்பதனாலும் சகா உட்கார்ந்திருப்பதனாலும் மிகு நித்திரையாலும் பிறந்து சகல கீல்களிலும் தங்கி யிருக்கும். அப்போது தேகத்தில் நோய், வீக்கம், எழுந்திருந்தால் நடுக்கல், நொண்டுதல், கீல்கள் தளரல், மரத்தல், கனத்தல் என்னுங் குணங்களுண்டாகும். (களாயம் என்பது கீல், கஞ்சம் என்பது ஊணம்)

10. சம்பூகசீரிஷ வாதரோகம் :- சீதளகாலத்தில் சிலேத்தும வஸ்த்துகள், பிண்ணாக்கு, வாயுவுள்ள வற்றல் முதலியவைகளைப்புசித்த்ல், அதிக நடை, பகல் நித்திரை, மிகுசையோகம் இவைகளால் பிறந்து முழங்காலில் கீல்களில் தங்கிவிடும். அப்பொழுது முழங்காலில் வீக்கம், தடித்தல், மரத்தல், நோய், குத்தல், மலபந்தம், நித்திரை என்னுங் குணங்களுண்டாகும். இதுவே நரித்தலை
வாதம். (சம்பூகம் என்பது நரி, சீஷணம் என்பது தலை)

11. பாதோபகாத வாதரோகம் :- அதிகசீதள மந்த சிலேத் தும பொருட்களைப் புசித்தல், உட்கார்ந்து உறங்கல், மிகுசஞ்சாரம், புல், கல், கட்டை காலிற்பட்ட வேதனை ஆகிய இவைகளினாலுண் டாகி தொடைகளிற் பரவி தங்கியிருக்கும். அப்போது நீட்டின காலை முடக்கில் திமிர், மரத்தல், கனத்தல், விரல்களில் நோய், காலில் எதுவோ பூசினதுபோலிருத்த என்னுங் குணங்களுண்டாகும். (உபகாதம் என்பது அறை உண்டல்.)

12. கிருத்திரசி வாதரோகம் :- சதாகாலம் நடையின்றியிருததல், பகல் நித்திரை, பதினான்கு வேகத்தை யடக்கல், மாமிசம் இனிப்பு, உப்புப்பொருட்கள், எண்ணெய்ப் பொருட்கள், மந்தத்தையும் சீதளத்தையும் உண்டாக்கும் பொருட்கள் இவைகளை மிதமின்றி
புசித்தலினாலும் உண்டாகி தொடைகளின் நரம்புகளை அநுசரித்து பாதவிரல் முதல் அடிமுதுகுவரையிலு மிருக்கின்ற நரம்புகளின் துவாரத்திற் சேர்ந்துகொள்ளும். அப்போது தேகத்தில் குத்தல், கனத்தல், நோய், வேதனை என்னுங் குணங்களுண்டாகும். (கிருத்திரசி என்பது தொடை நரம்பு.)

13. சோணித வாதரோகம் :- உஷ்ண வஸ்த்துகள், காந்திய அன்னம், உலர்ந்த பதார்த்தம் இவைகளை புசித்தலினாலும், பகல் நித்திரை, மிகுசையோகம், பதினாலுவேகத்தை மறித்தல் இவைகளினாலும் நரம்பின் துவாரங்களில் ஒடப்பட்ட உதிரமானது தடைப்படுபதனாலும் இந்நோயுண்டாகி கைகால்களின் கீல்களிலாவது அல்
லது சகல கீல்களிலாவது தங்கி அவைகளிற் குத்தல், நோய் வீக்கம், தினவு, சரீரத்தில் கருமைநிறம், சீதளம், சிரசிலுபத்திரவத்துடன் பாரிப்பு என்னுங்குணங்களையுடையது. இதுவே உதிரவாத
ரோகமாம். (சோணிதம் என்பது ரத்தம்.)

14.உருஸ்தம்பவாதரோகம் :- அதிசீத அல்லது தீயுஷ்ண தன்மையுள்ள பொருட்கள் திரவப்பொருட்களை மிகுதியாகப்புசித்தலினாலும், சீதள காலத்தில் யானை முதலிய வாகனாதி வேகம், பகல் நித்திரை, இரவில் அநித்திரை, ஆகிய இ¨வாகளினாலும் பிறந்து தொடைகளிலிருக்கும், சிலேஷ்ம நீரிலும் மேதோ தாது விலும் மற்ற இதர தோஷத்திலும் வாயுவானது வியாபித்து தொடை மரத்தல் கனத்தல், நடையின்மை என்னுங் குணங்களுண்டாகும்.

15. சகனாவர்த்தவாதரோகம் :- தயிர், அதி சீதள சலம், மாப்பண்டம், கிழங்கு, கீரைக்கட்டை, கனிவர்கம், மஞ்த மாமிசமச்சங்கள் முதலியவைகளை அதிகமாய்ப் புசித்தலினாலும், சீரண காலசையோகத்தினாலும், கனநடையினாலும் உண்டாகி இடுப்பில் வாச
மாய்த்தங்கி இரண்டு சகனத்திலும் தொடைக்கு கீழிலும், மேலிலும் சஞ்சரித்துக்கொண்டே இருக்கும். அப்போது தொடைகளிலும் குடைச்சல் நோய், மரத்தல் குனியக்கூடாமை என்னும் குணங்களுண்டாகும்.

16. துனி வாதரோகம் :- சிலேத்தும மந்தவஸ்துகளினாலும் பதினாலு வேகத்தை யடக்குதலாலும் உண்டாகி கீழ்வயிறு குதம் அல்குல், பிட்டம், இவ்விடங்களில் வியாபித்து வேதனை செய்யும். அப்போது வயிற்றில் மிகு உபத்திரவமும், அறுப்பது போலும், இழுத்து பிடிப்பது போலும் மரத்தல், கனத்தல், மலமூத்திரச்சிக்கல் என்னும் குணங்களுடையது.

17. பிரதி துனி வாதரோகம் :- துனிவாதத்தை பிறப்பித்தவாறே இந்நோயும் பிறந்து முன்சொன்ன இடத்தைத்தாண்டி மேல் நோக்கி வியாபித்து பக்குவாசயம், மேல்வயிறு, முதலிய விடங்களில் வேதனையை உண்டாக்கும்.

18. மூட வாதரோகம் :- சீதளப் பொருட்கள், மிகு உணவு,
அக்கினிமந்தம் இவைகளினாற்பிறந்து நாபிஸ்தானத்தில் கட்டியைப்போல கட்டிக்கொண்டு வேதனையை செய்யும். அப்போது மலபந்தம், வயிறுப்பல், நோதல், குத்தல், தேகமரத்தல் குடலை இழுத்துப்பிடிப்பதுபோலிருத்த லென்னுங் குணங்களுண்டாகும்.

19. ஆத்மான வாதரோகம் :- மலபந்தத்தை யுண்டாக்கும் பொருட்கள், சீதள சிலேத்தும புள்ப்புத்தன்மைகளுள்ள பொருடகள், மாப்பண்டம், பனிக்காற்று இவைகளினாலுண்டாகி அடிவயிற்றிற்றங்கி வேதனையை செய்யும். அப்போது கிடலின் துவாரத்தில் நோய், சிறிது மலமும் மூத்திரமும் கட்டுப்படல், வயிற்றில்
கடகடவென்ற சத்தம், வயிறுப்புசம் வாதசுரக்குறி என்னுங் குணங்களுண்டாகும்.

20. பிரத்தியாத்மான வாதரோகம் :- மலபந்தத்தையும், மந்தத்தையும் உண்டாக்கும் பொருட்கள், நடையில்லாதிருத்தல், எந்நேரமும் ஈரத்தில் உட்காரல் ஆகிய இவைகளினால் உண்டாகி முன் சொன்ன ஆத்மான வாதத்தைபோலவே குடலின் துவாரத்தில் தங்கி அதிகரித்து மேல்நோக்கி வயிற்றில் இரைச்சல், நோய், எக்காலமும் மரத்தல், மூத்திரபையில் நோயுடன் குத்தல், மலமூத்திர பந்தம், வயிற்றைக் கையால் அரக்குவதுபோலிருத்தல், மேல் மூச்சி, பக்கநோய் என்னுங் குணங்களுண்டாகும்.

21. அபதந்திரக வாதரோகம் :- மந்தவஸ்து, இலைக்கறி, மாமிசம் முதலிய பதார்த்தங்கள், பால், எள்ளு, பிண்ணாக்கு, பயரு இவைகளை அதிகமாக புசித்தலினாலும், பயம், துக்கம், பகல் நிததிரை, உபவாசம் ஆகிய செய்கைகளினாலும் பிறந்து சிலேஷ்ம நரம்பு, வாத நரம்பு, பித்த நரம்பு, ரத்த நரம்பு என்னும் நரம்புகளின் துவாரங்களினாலும் குடலுலும் வியாபித்து பின்பு மேல்நோக்கி மார்பு நரம்புகளில் பரவி மார்பிலும் சிரசிலும் நெற்றியிலும் நோயை பிறப்பித்து பிறகு சர்வாங்கத்திற்கும் வேதனையைக்கொடுத்து அவ்வங்கத்தை வில்லைப்போலவே வளைத்து வருத்தமுறச்செய்வதுமன்றி ஊர்த்துவகாயத்திலிருந்து அதோ காயத்தை மரத்தல் அடையசெய்வதும், அதோகாயத்திலிருந்து ஊர்த்துவகாயத்தை மரத்தலடையச் செய்வதுமாக இருந்து மிகுந்த உபத்திரவத்தை விளைவிக்கும். அப்போது கண்விழி கீழே செறிந்ததுப்
போல் இருத்தல் அல்லது மூடிக்கொள்ளுதல், புறாச் சத்தத்தைப்போல் நெஞ்சில் ஒரு வித சத்தம் எழும்பல், ஞாபகமறதி, விசையாக நடக்கும் போது தடுக்கி விழுதல், நடுக்கல், இளைத்தல், பிரமை, முதலிய குணங்கள் உண்டாகும். இது மார்பை விட்டு கீழ் இறங்குமாயின் கஷ்டத்தின் மேல் சாத்தியமாகும். இறங்காவிடில் அசாத்தி யம். இது மாதர்க்கு கருப்பங்கலைந்த காலத்திலும் மாதாந்திர ருதுகாலத்திலும் உற்பத்தியாகில் மிகவும் கஷ்டசாத்தியம்.

22. மனோவிருத்தி வாதரோகம் :- அனலாதி வெய்யல், கோபம் மனந்தபித்தல், அதிநடை, பயம், துக்கம், குத்துப்படல் இவைகளினால் பிறந்து மனோசக்தியைக் கெடுத்து, கீழ்வயிற்றிலும், பக்கத்திலும் மூத்திர நரம்புகளிலும், சிலேத்தும நரம்புகளிலும் வாத நரம்புகளிலும் அநுசரித்து மலமூத்திரம் நழுகல் தேக உளைவு மனக்கெடுதி என்னுங் குணங்களுண்டாகும். இது ஒரு வருஷத்திற்குமேல் இருப்பின் அசாத்தியம்.

23. ஆந்திர பித்வாதரோகம் :- இது வாதவஸ்து சீதளவஸ்து மச்சம், மாமிசம், வெல்லம், அதிரசம் முதலிய பண்டங்கள், காந்திய அன்னம் இவைகளை அதிகமாக புசித்ததினால் உண்டாகி வயிற்றில் பெருங்குடலின் துவாரத்தில் வியாபித்து, வயிற்றில் கலக்குதல் போலும், அறுத்தலுபோலுமிருத்தல், பொறுத்துப்பொறுத்து உப்பல், நோதல், வருத்தத்தின் மேல் மலமூத்திரம் கட்டுப்படல், வாந்தி ஏப்பம், மூர்ச்சை, பிரமை என்னுங் குணங்களுண்டாகும். இதற்கு குடல்வாதமென்றும் பெயர். இது கஷ்டசாத்தியம். (ஆந்திரம் என்பது குடல், பித் என்பது பேதித்தல்.)

24. அபதானக வாதரோகம் :- இனிப்பு, சீதள, மந்தப் பொருட்களை மென்மேலும் புசித்தலாலும், பயம், உபவாசம், பகல் நித்திரை இவைகளினாலும் உண்டாகி சரீரத்தில் சப்த தாதுக்களிலும் நரம்புகளிலும் வியாபித்து, அடிக்கடி திடீலென்று எழுந்திருத்தல் பேச்சுக்குப் பேச்சு நகைத்தல் முதலிய குணங்கள் உண்டாகும். இதில் இன்னுஞ் சில துர்க்குணங்கள் உண்டானாலும் அல்லது நெடுநாட் சென்றாலும் கஷ்டசாத்தியம்.

25. நாளாவர்த்த வாதரோகம் :
- அதிக சீதள சலபானம் மிகுந்த நடை, பதிநாலு வேகத்தை யடக்கல், வெகு சையோகம், ஆகிய இவைகளினால் உண்டாகி ஆண்குறி துவாரத்தின் அடியிலும் நடுவிலும் முனையிலும் தங்கி நிலைத்துவிடும். அப்போது மூத்திரமானது மாமிசம் மேதை எலும்பு மா இவைகளின் நிறங்களைப் பெற்று கலங்கிய சுக்கிலம்போலும் நாளத்தின் வழியாய் பொறுத்து பொறுத்து ஒழுகும். இவ்வாய்வு அதிகரிக்க அதிகரிக்க அடிநாள முதல் முனைநாளம் வரையிலும் நோயும் குத்தலும் உண்டாகும். (நாளம் என்பது ஆண்குறியின் துவாரம்.)

26. மூத்திரசர வாதரோகம் :- உலர்ந்த பதார்த்தம், காந்தலன்னம், உஷ்ணவஸ்து, லவணவஸ்து, காங்கைவஸ்து, பிரமாணந்தப்பி தினந்தோறும் புசித்தல், அதிக சையோகம், மலமூத்திர விருத்தி, மிகுந்தநடை ஆகிய இவைகளினால் பிறந்து ஆண் குறியின் துவாரத்தில் வியாபித்து மூத்திரத்தை கொஞ்சங் கொஞ்சமாகவும் அதிகம் அதிகமாகவும் இடைவிடாமல் ஒழுகச்செய்வதும், அன்றி மூத்திரப்பைக்குள் தங்கி கனத்தல், எரிச்சல், நோய், திமிர் என்னும் குணங்களுடன் மூத்திரம் இறங்கும். இது மூத்திரத்தை சரம் போல் இறங்கலால் மூத்திரசரவாதம் எனப்பெயர் பெற்றது.

27. மேட்ரக்ஷ£ய வாதரோகம் :- வாதவஸ்து, சீதளவஸ்து களி இவைகளை மிகவும் புசித்தல், மிகுபோகம், பதினாலுவேகத்தை மறித்தல், பகல் நித்திரை, வேகநடை இவைகளினால் பிறந்து ஆண் குறியின் வன்மையைக் குறைத்து அத்துவாரத்தை அநுசரித்து அவ்விடத்தில் எரிச்சலாவது நோயாவது கனத்தலாவது உண்டாகும்படிச் செய்யும். இதனால் சையோக வெறுப்பும், பீசக்கெடுதியும் பிறக்கும். இது அதிகரிக்கில் பீச கோசங்களில் வீக்கமும், அதனால் நீர்க்கட்டும் உண்டாகும். இது அசாத்தியம். மேட்ரம் என்பது ஆண்குறி. க்ஷ£யம் என்பது பலநாசம்.

28. இருதாவிருத வாதரோகம் :- இது லவண, சிலேத்தும, மந்தப்பொருட்கள், வரகரிச்சோறு முதலியவவைகளை புசிப்பதி னால், உண்டாகி இருதயத்தில் தங்கி உபதிரவத்தை செய்யும்.
அப்போது மார்பில் வாளால் அறுப்பதுப்போலிருத்தல், தேகம் கனத்தல், நோய், சீதளம், அரோசகம், வாந்தி, பிரமை, வியர்வை, புரளல், எரிச்சல், இளைப்பு கீல்களில் நோய் என்னுங் குணங்களுண டாகும். இது மார்பு விலா முதுகு என்னும் இவ்விடங்களில் வியாபித்து பின்பு வெளிப்புறத்தில் வியாபிக்கும். (இருத் என்பது மார்பு, ஆவிருதம் என்பது சூழல்.)

29. சுரோணி சூலைவாதரோகம் :- இது வாதவஸ்து, மந்த வஸ்து, மலபந்தவஸ்து, பதினாலுவேகத்தை யடக்கல் இவைகளிலை பிறந்து இடுப்பின் பக்கங்களில் தங்கி அவ்விடத்தில் அதிக குத்தல், வயிற்றில் சங்கடத்துடன் அறுப்பதுபோ லிருத்தல், பிரமை, மல மூத்திரக்கட்டு, வயிற்றிலும் பக்கத்திலும், நாபிக் குள்ளிலும் கனத்தல் வயிறுப்பல், வாந்தி, ஏப்பம், எரிச்சல், உதடுலரல், இளைப்பு, நடுக்கல் என்னுங் குணங்களுண்டாகும். (சுரோணி என்பது பிட்டம். சூலை என்பது குத்தல்.)

30. நாபிசாருவாதரோகம் :- அதிகவாதவஸ்து, வயிற்றுப்பிச வஸ்து மலபந்தவஸ்து இவைகள் சேர்ந்த போஜனம், மிகுந்த சையோகம் பதினாலு வேகத்தை யடக்கல், அதிக நடை இவை களினால் பிறந்து நாபியை அனுசரித்து அவ்விடத்தைப்பற்றிய வாதவாத நரம்புகளிலும், சிலேத்தும நரம்புகளிலும் வியாபிக்கும், இதனால் கனத்தல், வாந்தி, கொட்டாவி, கீழ்வயிற்றில் சூலை, வயிற்றிலும் சூதசந்திலும், ஆண்குறியிலும், நோய் என்னும் குணங்களுண்டாகும். இது தொப்புளை பற்றியதால் நாபிசாரு வாதம் என்று பெயர்பெற்றது.

31. அஸ்டிலாவாதரோகம் :- இது நாபிசாரு வாதத்தை யுண்டாக்கும் வஸ்துகளினால் பிறந்து அதைப்போல் நாபிஸ்தானத் தின் கீழ்நின்று அதிகரித்து மூத்திரப்பையில் துவாரத்திலும் அதற்குள்ளிலும், வெளியிலும், பக்கங்களிலும், கட்டிபோல் வீக்கத் தைப்பிறப்பிக்கும். அப்போது வயிற்றில் கனத்தல், உப்பல் மல மூத்திரக்கட்டு, நோய், அரோசகம், நானாவித வேதனை என்னும் குணங்களுண்டாகும்.

32. பிரத்தியஸ்டில்லாவாதரோகம் :- சிலேத்துமவஸ்து, சீத வீரியவஸ்து, தயிர், கடலோரமாமிசம், நூலிழைந்துசலம் உண்டாகிய அன்னம், அஜீரணதோஷம், அதிககாற்று, பதினாலு வேகத்தை யடக்கல், சஞ்சாரமின்மை ஆகிய இவைகளினால் முன் சொன்ன அஷ்டிலா வாதத்தைப்போலவே பிறந்து நாபிஸ்தானத்திற்கு கீழே னும் மேலேனும் கட்டிபோல் வீக்கத்தைப் பிறப்பித்து அவ்விடத்தில் குத்தல் முதலிய உபத்திரவங்கள் உண்டாகும்.

33. ஸ்தனருக்கு வாதரோகம் :- இது முறுக்குப் பலகாரம், மந்தமாமிசம், சிலேத்துமவஸ்து, சேற்றுநீர் இவைகளின் சேர்ககையால் பிறந்து ஸ்தனத்தின் அடியில் வியாபிக்கும் அப்போது மூலைக்கு உள்ளீலும், வெளியிலும், மூளைக்கு நேர்முதுகிலும் வேதனை யுண்டாவதன்றி மூலைக்காம்பை வாளால் அறுப்பது போலிருக்கும். அடிக்கடி வாந்தியுண்ட்டாகும். (ஸ்தனம் என்பது முலை ருக்கு என்பது அதிக நோய்).

34. பஷகாத வாதரோகம் :- மந்தவஸ்து, மலபந்தவஸ்து, மயக்கவஸ்து, குளிர்ச்சி இடத்தில் நித்திரை, குளிர்ச்சி ஆசனம், தேகத்தில் சீதளசேர்க்கை, ஆகிய இவைகளால் பிறந்து உதிர ஓட்டம் குறைந்த பாதி சரீரத்தில் தங்கி அப்படியே சப்ததாதுக்களிலும் நரம்புகளிலும் அதுசரிக்கும். அப்போது பாதி உடம்பில் கனத்தல், நோய், மரத்தல், வேதனை அப்பக்கத்து கால்கள் மெலிதல், பிரமை, சுவாசம், அறிவின்மை, நானாவித நோய், பயங்கரம் என்னும் குணங்களுண்டாகும். இது ரத்த நரம்பையும்,
சன்ன நரம்பையும், உலர்த்தி கீல்களை தளரப்பண்ணி பிரபலப்படும். இதனைப் பஷவாதம், ஏகாந்தவாதம், அர்தாங்கவாதம், பாரிசவாதம், பக்கவாதம், இளம் பிள்ளை வாதம், எனவும் கூறுவர். (பஷம் என்பது பக்கம் காதம் என்பது அடித்தல்).

35. உதாவர்த்தவாதரோகம் :- வேகத்துடன் வருகிற மல மூத்திராதிகளை யடக்கல், மந்தவஸ்து மல பந்தவஸ்துகளை புசித்தல், முதலிய செய்கைகளினால் பிறந்து கீழ்வயிற்றில் நிலைத்துவிடும். அப்போது அடிவயிற்றில் கனத்தல், உப்பல், நோய், மலசலகட்டு என்னும் குணங்களுண்டாகும். இதில் கண்களும் குழி விழுந்து முற்கூறிய குணங்களும் மேலிடில் இது அசாத்தியமாம்.

36. தண்டகவாதரோகம் :- மந்தவஸ்து, சீதவீரியவஸ்து, தயிர், அதிகலவணம், பகல்நித்திரை, பதினாலு வேகத்தையடக்கல், இவைகளின் செயலை மாற்றிவிடும்.இதனால் ரசாதி தாதுக்களில் மரத்தல், சீதளம், உள்ளெரிச்சல், அதிவேதனை, நீர்கட்டு, என்னும் குணங்களோடு தேகமானது தண்டத்தைப்போல் விழுந்து நீட்டல் முடக்கல், அசைதல் முதலியது இல்லாமல் சலம் போல் இருக்கும்.

37. தனுஷ்தம்பவாதரோகம் :- இது சிலேஷ்தும மதுரவஸ்து சஞ்சாரமின்மை, சீதளச்சேர்க்கை இவைகளினால் பிறந்து தாதுக்களிலும், வியாபித்து உள்ளிலேனும் வெளியிலேனும் சஞ்சரித்து
தேகத்தின் முன்புறமாவது, பின்புறமாவது தேகத்தை வில்லைப்போல்வளைக்கும். அபோது தேகத்தில் கனத்தல் மரத்தல், நோய் பின்பு ஒருசாமம் பொறுத்து அதிகவேதனை, இளைப்பு முதலியன உண்டாகும். இதற்கு முன்னிசுவு பின்னிசுவு என்றும் பெயர்.

You are in Part 4. Continued in Part-1  Part-2  Part-3  Part-5  Part-6  Part-7