Monday, 24 September, 2018
Part-1  Part-2  Part-3  Part-4  Part-5  Part-6  Part-7  அம்மை சுரம் :- சிறுபயறு பிரமாணம் தேகமுழுவதும் அம்மை அல்லது கொப்புளங்கள் எழும்பல், தாகம், அதிவேதனை, தேகம் எரிச்சலுடன் பதறல், சிலவேளை மார்பெரிச்சல், எழுந்திருக்கக் கூடாமை, பலவீனம், படுக்கை பொருத்தாமை, சுவாசம், வயிறு நோய் பேதி, நிறக்குறைவு, நித்திரைபங்கம், கண்சிவத்தல், நாடி சூட்சுமமாக நடத்தல் என்னுங் குணங்களையுடையது.

நடுக்கல் சுரம் :- நடுக்கல், கூச்சல், வாயிலும் நாவிலும் கொப்புள மெழும்புதல், சுரங்களின் குணங்கள் முதலியன உண்டாயிருக்கும்.

வீக்கச் சுரம் :- கீல்களில் வீக்கம், கைகால் கொதிப்பு, மார்படைப்பு, வயிற்றிலுப்புசத்துடன் நோய், மலபநதம் சுரகுணங்கள் என்னும் இவைகளை யுடையது.


ஆநாக சுரம் :- மலத்துவாரத்தில் சூலை, மலபந்தம், சிரோ
பாரம், சீதளம், அக்கினிமந்தம், தாகம், நெஞ்சுவரளல், துர்ப்பலம், தேகம் கனத்துவெளிறல், கண்சிவத்தல், உரோமச்சிலிர்ப்பு, அடிக்கடி நீரிறங்கள், நாடியிடத்தை விட்டு அலைந்து மிருதுவாகவும் வேகமாகவும் நடத்தல் என்னுங் குணங்களையுடையது.

திரிகால சுரம் :- காலை பகல் மாலையென்னும்  முக்காலத்திலும் பிறந்து பிதற்றல் பற்கடித்தல், ஆடல்பாடல், விகார குணம், உடம்பு பதறல், அற்ப நித்திரை, நாக்கு முள்ளுபோலிருத்தல், முகம் சிவத்தல் காதடைப்பு, அதிசாரம், காசம், ஒக்காளம், பேதி கொட்டாவி என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

1. சுரத்தின் தசாவஸ்தை :- அற்ப ஞாபகம், 2.இறந்தவர்
களை கண்ணிற் கண்டு பேசுதலபோலிருத்தல். 3, சித்தபிரமை 4, மேல்மூச்சு, 5. விழி விழித்தபடியே இருத்தல், 6. குரல் மாரல், 7. சரீரமுழுவதும் அதிக எரிச்சல், 8. தன் கையினால் முகத்தைத் தடவிக்கொள்ளுதல், 9. சரீர முழுவதுஞ் சீதளவியர்வை காணல், 10.தேகத்தை விட்டு ஆவி நீக்குதல் இப்பத்து அவஸ்த்தைக்குள் முதல் மூன்று அவஸ்த்தை வரையிலும் வைத்தியஞ் செய்யலாமென்று
சில நூல்களிலும், ஒன்பதாவது அவஸ்தைவரையிலும் அதாவது பிராணன் நீங்குகிற வரையிலும் வைத்தியஞ் செய்யலாமென்று சில நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.

அசாத்தியசுர இலக்கணம் :- சுரரோகிகட்கு உடலில் நடுக்கலுடன் மிக்க நோய், மேல்மூச்சு, மூர்ச்சை, அடிக்கடி களைப்பு, இளைப்பு, மார்புநோய், கண்ணில் நோயுடன் குத்தல், முகம் குங்குமம்போல் சிவத்தல், கழுத்து குறுகுதல் அல்லது நீளுதல், இரவில் எரிச்சல், பகலில் குளிர்ச்சி, நாகறுத்தல் அல்லது சிவத்தல், ஆசனம் வெளிப்படல், ஈனத்தொளி, சிலேஷ்ம நாடி அதி வேகமாய்
நடத்தல், சுவாசம் சில்லிடல், மார்பு, உந்தி, மூக்கு உள்ளங்கைகள் ஆகிய இவ்விடங்களில் குளிர்ச்சி, சிரசு மாத்திரம் அக்கினி போல் சுடல், தன்படுக்கையை விட்டு ஓடுதல், அடிக்கடி முகத்தை தன் கையால் தடவுதல், தன் படுக்கைய அடிக்கடி தட்டுதல் முதலிய சந்நிபாத அகோர குணங்களிருக்குமானால் அசாத்தியமாம்.

சாத்தியசுர இலக்கணம் :- சுரரோகிகட்கு, கண்பார்வை
தேகம், பஞ்சேந்திரியங்கள், இவைகள் சுகபாகமாயிருத்தல்
சாந்தி, இளைப்பின்மை, உள்ளங்கை, உள்ளங்கால்கள் சூடாகயிருத்தல், எழுந்திருந்தாலும், உட்கார்ந்திருந்தாலும் சரீரம், கனத்தலின்றி இயற்கையாக இருத்தல் என்னுங் குணங்களிருக்குமானால் சாத்திய சுரமென்றரிக.

விட்டசுரஇலக்கணம் :- உடல் கனமின்றி லேசாகவும்
இயற்கையாக இருத்தல், பஞ்சேந்திரியங்களின் சுபாவ இயக்கம், மனசாந்தி, சிரசில் நமைச்சல், தும்மல், வியர்வை, பசி என்னுங் குணங்களிருக்குமாகில் சுரரோகம் விட்டதென்றரிக.

சப்த தோஷ பேதம் :- சுரம், பிறந்த ஒன்பது நாள் வரையிலும் தருண சுரமெனப்படும். அந்த சமயத்தில், பரிமள போஜனத்தினால் குளிர்ந்த சலம், புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, நெய்,நல்லெண்ணெய் வெல்லம், சயித்தியபண்டம்,புது வஸ்திரம், சிவந்த வஸ்திரம்,
பரமளதிரவியங்கள், காற்று வீடு,தாம்பூலம், சீதள உபச்சாரம்,சந்தனம் மாதர்களை விருப்பத்துடன் பார்த்தல், சையோகம், புத்தகம் வாசித்தல், அதிதூரநடை, கோபம், அழுதல், தேகம்,என்பவைகள் அணுகில் வாதாதிகள் நாபியைப்பற்றி, குடிலப்படுத்தி முகம், நாசி, நா என்னும் இவைகளை வெறிந்த பார்வையை உண்டாக்க தோஷம் பிரபலப்படும். அவை எழு வகைப்படும்.

1. அபத்திய தோஷம் :- சோம்பல், மூர்ச்சை, பிரமை
தாகம், அதிக பிரலாபம், மார்பு நோய் என்பவைகள் உண்டாகும்.

2. சங்க தோஷம் :- சர்வாங்கநோய், நடுக்கல், மார்பெரிச்சல் பொய்பேசல், அடிக்கடி தன்படுக்கையை விட்டு எழுந்திருத்தல் பிரமை, உள்ளங்கைகுளிர்ச்சி என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

3. விஷம தோஷம் :- சுரம், எர்ச்சல், அதிதாகம்,
குடித்தலோடு தீவிரமாக நடக்குதல், வயிறெரிச்சல், வியர்வை அழலை என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

4.விஷமசீததோஷம் :- ஒரு தினத்திலேயே இரண்டுதரம்,
மூன்று நாலுதரங்கள், குளிரோடு சுரத்தையுண்டாக்குவதன்றி, தாகம், புறண்டல், தலைநோய், நாக்கு தடித்து முட்போலிருத்தல், பிரலாபம், சித்தபிரமை, புரளல் என இக்குணங்களை யுண்டாக்கும்.

5. பீதஜிம்மகதோஷம் :- நாக்கு மஞ்சள் நிறமாக வெடித்து ஈரமில்லாமல் முட்போலிருத்தல், சுரம், பிரமை, வியர்வை, மூர்ச்சை தொண்டைகம்மல், வெருட்சி, நடுக்கல் என்னும் குணங்களை யுண்டாக்கும்.

6. ரக்தஜிம்மகதோஷம் :- நாக்கு சிவந்து முட்போன்று
கொஞ்சம் நீண்டிருக்குதல், சுரம், தாகம், எரிச்சல் என்னும் குணங்களை யுண்டாக்கும்.

7. கிருஷ்ணஜிம்மகதோஷம் :- நாக்குக் கறுத்து வறண்டு
முட்போலிருத்தல், அடிக்கடி எழுந்திருத்தல், சித்தபிரமை, வயிறுப்புசம், தினவு, வியர்வை, தாகம், சோபம், அழலை, துடிப்பு, கை கால் அசதி, சரீரம் கறுத்தல் என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

மேற்கூறிய சப்ததோஷங்கள் ஏழுநாள்  அல்லதுபதினைந்துநாள் சென்றால் சாத்தியப்படும். ஆனால் சிகிச்சை செய்துக்கொண்டு வெகு ஜாக்கிரதையாக பார்க்கவேண்டியது. அப்படி குறித்தநாட்களில் சாத்தியப்படா விட்டால் அசாத்தியம்.


இரத்த பித்த நோய்

இந்த நோய் இரத்த ஸ்தானமாகிய இருதயத்திலிருந்தாவது
இருதயத்திற்கு வலது இடபுறங்களிலுள்ள மாமிசகண்டங்களாகிய கல்லீரல் மண்ணீரல்களிலிருந்தாவது பிறக்கின்றது. இது ரத்தா
திக்கத்தினாலும், அல்லது இரத்த கெடுதியினாலும் வாதாதிகளின் செய்கையினால் வெளிப்பட்டு துற்நாற்றத்துடனாவது, இயற்கை நாற்றத்துடனாவது இருப்பதுடன் சில சமயம் அற்பமாகவும் சில
சமயம் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் காணப்படும்.

இரத்தபித்த நோயின் பேதம் :- மேற்கூறிய இரத்தபித்த
நோய் திரிதோஷங்களினாலும் அவைகளின் இணைப்புகளினாலும் சந்நிபாதத்தினாலும் எழுவகைப்படும். இந்நோய் ஊர்த்துவமுகம்,
அதோமுகம், உபயமுகம் என்ற மேல்நோக்கு கீழ்நோக்கு, இரு நோக்கு என்னும் மூவகையாகவும் கண்டு காது, நாசி, வாய், உரோமம், சலத்துவாரம், மலத்துவாரம் என்னும் ஏழுவாசல் வழிகளாகவும் வெளிப்படும். கண்கள், காதுகள், மூக்கு, வாய் என்னும் நான்கு வழிகளாக இரத்தம் வெளிப்படுதல், ஊர்த்துவமுக இரத்த பித்த நோயென்றும், சலத்துவாரம், மலத்துவாரம், உரோமத்து வாரம் வழியாக இரத்தம் வெளிப்படுதல், அதோமுக இரத்தபித்த நோயென்றும், ஒரே காலத்தில் ஏழு துவாரங்களின் வாயிலாய் இரத்தம் வெளிப்படுதல், உபயமுக ரத்தபித்தம்மெறரிக. இவற்றுள் ஊர்த்துவமுகம் சாத்தியம், அதோமுகம் கடின சாத்தியம்,
உபயமுகம் அசாத்தியம்.

வாதபித்தம் :- நுரையுடன் சிவந்தரத்தம் வெளியாதல்,
இந்த நோயில் அதிக பித்தமும், அற்ப்ப வாதமும் இருப்பதால் அசாத்தியம்.

பித்தரத்தபித்தம் :- பசுவின் மூத்திரநிறமாகவும், கஷாயத்
தின் நிறமாகவும், குழம்பாகவும் ரத்தம் வெளிப்படும்.

சிலேத்துமரத்தபித்தம் :- வெண்மையாகவும், தேய்த்துக்
கழுவினால், வழு வழுத்திருப்பதாகவும், இருக்கின்ற ரத்தத்தை வெளிப்படுத்தும். இம்மூன்று தவிர எஞ்சியுள்ள நான்கு வகைகளாகிய வாதபித்த, வாதகப, பித்தகப, திரிதோடரத்தபித்தங்களில் மேற்கூறிய குறிகுணங்களில் தொந்தம் காணப்படும் இவைகள்யாவும் அசாத்தியமாகும்.

அசிர்க்கரநோய்

மாதர்கட்கு மாதாந்திர ருதுகாலத்தில் காணும் ரத்தம் சரி
வர வராமல் தப்பினால், அதனால் அசிர்க்கரநோய் உண்டாகும். இதனை பெரும்பாடு, பிரமியம், பிரமேகம், என வழங்கப்படும்.இந்நோயில் பெண்களுக்கு அல்குல் வழியாக வெளிப்படுவதுடன், வாயினாலும் ரத்தம் விழுமென்று அறிய வேண்டும். இந்த நோயானது வாதாசிர்க்கரம்,
பித்தாசிர்க்கரம், சிலேத்துமசிர்க்கரம், சந்நிபாதாசிர்க்கரம்,
எனப்படும்.

வாதாசிர்க்கரம் :- வயிற்றில் வலியை யுண்டாக்கி, கருத்தநிற  ரத்தத்தை அல்குல் வழியாக வெளிப்படுத்தும். வாதத்துடன் சேர்ந்தால் ரத்தமானது கண்டவுடன் மறைந்து விடும்.

சிலேத்துமசிர்க்கரம் :- மாதர்கட்கு ரத்தமானது பிணநாற்றத்துடன் வெண்மையாக அல்குல் வழியாக வெளியாகும். சிலேத்துமத்துடன் வாதம் கூடினால் சீழை போல் வெளியாகும்.

பித்தாசிர்க்கரம் :- சுரத்தோடு நீல நிறமாக ரத்தத்தை அல்குல் வழியாக வெளிப்படுத்தும். பித்தத்துடன் சிலேத்துமமும் கூடினால், ரத்தமானது உருண்டை, உருண்டையாக விழும்.

சந்நிபாதாசிர்க்கரம் :- மேற்கூறிய மூன்று தோஷங்களின் நிறமாகவும், மலமூத்திர நிறமாகவும், நாற்றமுடையதாகி அல்குல் வழியாக வெளிப்படுத்தும். இந்நோயில் சுரமும் மூர்ச்சையும் உண்டாகும் தொந்தமும் இதுவும் அசாத்தியம்.அஸ்திசிராவ நோய்

ரசதாதுகொதிப்பினால் ரத்தத்தின் சுபாவ நிறங்கெட்டு அல்
குல் மார்க்கமாக இரத்தமானது வெளுத்து அல்லது மிகவுஞ் சிவந்து துர்க்கந்தத்துடன் வெளிப்பட்டால் ரத்தசிராவ நோயெனவும், எலும்புகளின் மத்தியிலிருக்கிற மச்சையை யுருகி சூலையுடன் வெளிப்பட்டால் அஸ்திசிராவநோய் அல்லது எலும்புருக்கி நோய் என்றும், கூறப்படும். இவைகள் அசாத்தியம்.

காச நோய்

இதனை இருமல் நோய் எனவுங் கூறுவர். இந்நோயில் மேல் நோக்கும் வாய்வானது மார்பில் சேர்ந்து, முதுகு, மார்பு, விலா பக்கம், தொண்டை முதலிய விடங்களில் வலியை உண்டாக்கி, ஒட்டை வெண்கல ஒலியைப்போன்ற ஒலியை கண்டத்தில் பிறப்பித்து இருமலை உண்டாக்கி கோழையை வெளிப்படுத்தும். இது ஐந்து வகைப்படும்.

1. வாதகாசம் :- வாதாதிக்க வஸ்துக்களின் உபயோகத்தினால் வாதமானது அதிகரித்து மார்பு, கண்டம், முகம் இவைகளை வற்றப் பண்ணி, சிரசு, விலாபக்கம், குண்டிக்காய், மார்பு இவைகளில் குத்தலையுண்டாக்கி சோருதல், மனக்கலக்கம், ஈனத்தொனி, அதிக வேதனை, பொடி இருமல், வேற்றுக்குரல், ரோமச்சிலிர்ப்பு முதலியவைகளை உண்டாக்கும். மேலும் நெஞ்சில் இளகிய கோழையை
கெட்டிப்படுத்தி கொஞ்சங் கொஞ்சமாக வெளிப்படுத்தும்.

2. பித்தகாசம் :- கண்களும், நகங்களும் மஞ்சள்நிறம், வாய் கசப்பு, மஞ்சள்நிற கோழைவிழல், ரத்தவாந்தி, பிரமை, தாகம், கம்மியபேச்சு, புளியேப்பம், எப்போதும் பொடி இருமல் கண்களில் இருட்கம்மல் என்னுங் குணங்களுடையது.

3. சிலேத்துமகாசம் :- மார்பிலும், தலையிலும் நோய், இறுக்கிப் பிடித்ததுபோல் குண்டிக்காயில் நோய், தேகபாரிப்பு, நெஞ்சுக்குள் அறுவருப்பு, மூக்கில்சதா ஜலம்வடிதல், அரோசகம், சரீரமினு மினுப்பு, வெளுப்பாகிய கோழை, வாந்தி என்னுங் குணங்க
ளுடையது.

4. ரத்தகாசம் :- கடின வேலைகள் செய்வதால் தேகம் மெலிந்தவர்கட்கு சுபாவபலம் ஒடுங்கியதால் வாயுவானது மார்புக்குள் சேர்ந்து பித்தத்துடன் கலந்து கண்டத்தில் வேதனையை யுண்டாக்கி ரத்தத்துடன் மஞ்சள்நிறமாகவும், உலர்ந்ததுபோலவும், உண்டை
உண்டையாக கபத்தை வாந்தியாக்கும். ஒருவேளை மார்பை பிகுவாக்கி சுத்த ரத்தத்தையே வாந்திசெய்யும். ஒருவேளை ஊசிகளால் குத்துதல்போல் மார்பில் குத்தலை உண்டாக்கி ரத்தத்தை வெளிப்படுத்தும். அப்போது கீல்களில் வேதனை, சுரம், சுவாசம், ஈனத்தொனி, நடுக்கல், புறசத்தம், பக்கநோவு, இந்தீரியம்,பசி
பலம், தேகவண்மை, இவைகள் குறைந்து, இரத்தமூலம்
முதுகுநோய், இடுப்பு நோய் உண்டாகும்.

5. கஷயகாசம் :- இந்த கஷயகாச ரோகமானது முதலில் இரு மலைப்பிறப்பித்து, பின்னர் தூர்நாற்றத்துடன் மஞ்சள், பச்சிலை ரசம் இரத்தம் இவைகளின் நிறமாக புளிப்பு வாசனையாக வாயினாற் கோழயை கக்கப்பண்ணும். அப்போது பக்கங்களிலும், மார்பிலும் நோயுண்டாகும். உஷ்ணசீதள வஸ்துகளின் மீது நல்லகாந்தி முதலிய
கஷயரூப குணங்களும் உண்டாயிருப்பின் இந்தகாசம், துர்ப்பபல முடையவர்களுக்கும், வயது சென்றவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் வந்தால் தீறாது. சரீர பலமுள்ளவர்களுக்கு வந்தால் ஒரு வேளை
சாத்தியமாம். தொந்தகாசங்கள், கஷாயத்தின் மீது சாத்தியம் மற்ற இரண்டும் அசாத்தியம். கஷயரோகத்தின் பேதங்கள் முதலியது கஷயரோகத்தில் காண்க .

இருமல், இரைப்பு, சுரம், வாந்தி, பேதி என்னுங் குணக்களுடைய காசரோகம் அசாத்தியமாம்.

சுவாசநோய்

இதனை இரைப்பு நோய் எனவும் கூறுவர். இது வாத கபங்
களின் விருத்தி, அசீரணபேதி, வாந்தி, விஷப்பாண்டு, விடாது சுரம், புகை, காற்று, தானியச்சுனை, அதிசீதள கபம், மர்மஸ்தானங்களில் அடிபடுதல், முதலிய காரணங்களினால் உண்டாகும். இதனால் அற்ப சுவாசம் மார்பிலும் விலாப்பக்கங்களிலும் குத்தல், திணறி,திணறி மூச்சு வாங்கல், வயிற்றுப்புசம், இரண்டு நெற்றியிலும் நோய் என்னும் இக்குணங்களை யுண்டாக்கும். இந்தசுவாச ரோகமானது ஐந்து வகைப்படும். அவையாவன :-

அற்ப சுவாசம் :- ஆயாசத்தினாலும், அபத்தினாலும்,
வாயுவானது அதிகரித்து சுவபாவகுணங்களோடுருக்கிற பித்த சிலேத்துமங்களுக்கு பலத்தை கொடுத்து அற்ப சுவாசம் உண்டாகும்.

தாமரகசுவாசம் :- மார்பிலும் விலாப்பக்கங்களிலும் நோயை உண்டாக்கி, கண்டத்தில் குறு குறு வென்ற சத்தத்துடன்,இருமல் பீனசம், சோருதல், அருசி, தாகம், என்னும் குணக்களை அதிகரிக்கச்செய்து இரைப்பினால் தேகமெல்லாம்,அதிர்ந்து குலுங்குதல், கண்டத்தில் அடைத்த  கோழை விழுந்து விட்டால், சிறிது செளக்கியமாக காணல்,  உட்கார்ந்தால் சிறிது செளக்கியம், மேல்பார்வை,நெற்றியில் வியர்வையோடு நோய், அடிக்கடி வாயுலரல், தேகம் நடுக்கல், உஷ்ண திரவியத்தில் இச்சை முதலிய குறிகுணங்களைப் பெற்றிருக்கும். இது
பஞ்சசேந்திரியங்களுக்கு மயக்கம் உண்டாக்குவதால் தமரகசுவாசம் எனப்படும். மேலும் பனிக்காலம், குளிர்ந்த ஜலம், சீதள பதார்த்தம், கீழ்க்காற்று, இவைகளால் சுவாசம் அதிகரிப்பதனால் மந்தார சுவாசமென்றும், மந்தாரகாசமென்றுங் கூறப்படும். இந்நோய் தனித்து இருப்பின் சாத்தியமென்றும், இத்துடன் சுரமும் மூர்ச்
சையும் உண்டானால் அசாத்தியமென்றும் கூறுவர்.

3. விச்சின்ன சுவாசம் :- சாதாரண சுவாசமானது உள்ளில்
மறிபட்டு மறிபட்டுப் பெருஞ்சுவாசமாக வருதல், மர்மஸ்தானங்களில் நோய், வியர்வை, மூர்ச்சை, மேல்வயிற்றுப்பிசம், அடிவயிறு, தேகம் எரிச்சல், மலமூத்திர சிக்கல், கண்ணில் சிகப்பு, வாயுலரல்,
பிரலாபம், தேகநிறமாறல், அதைரியம், ஞாபகமறதி என்னுங் குணங்களுடையது. இந்த ரோகி மயக்கத்துடன் சேர்ந்திருப்பான்.

4. மகா சுவாசம் :- கண்டத்தில் கலகலவென்று சத்தத்
துடன் பெருஞ்சுவாசம், வயிற்றுப்பிசம், முகத்திலும், கண்களிலும் காந்தியின்மை, கையினால் மார்பில் அறைத்துக்கொள்ளல், மலமூத் திர சிக்கல், மெல்லிய வார்த்தை, நெஞ்சுவுலரல், சோருதல், காதிலும் நெற்றியிலும் சிரசிலும் நோய் என்னுங் குணங்களுடையது.

ஊர்த்துவ சுவாசம் :- சுவாசம் மேல்நோக்கி வருவதால்
தலைகுனியக்கூடாமை, முகத்து நரம்புகள் உப்புதல், மேல்பார்வை, மயக்கம், சுற்றிசுற்றி பார்த்து விழித்தல், மர்மஸ்தானங்களின் நோயினால் அழுதல், பேசக்கூடாமை என்னுங் குணங்களுடையது. சிகிச்சை செய்யும்போது குணங்கள் குறைந்தால் சாத்தியம். குறையாவிட்டால் அசாத்தியம்.

காசரோகிக்கும், சுவாசரோகிக்கும் சுரம், வாந்தி, தாகம்,
பேதி, வீக்கம் காணுமாகில் அசாத்தியம்.

விக்கல் நோய்

விக்கல் ஐவகைப்படும். அவையாவன :-

1. அன்னதோஷ விக்கல் :- காரவஸ்து, மிக சுடுகை பதார்த்தம், சீரணமாகாத வஸ்து கடின பதார்த்தம், அன்னபானாதி வித்தியாசம் இவைகளினால் பிறந்து கண்டத்தில் அற்பத்தொனி, அற்ப இருமல் என்னுங் குணங்களை யுடையது. இதுவே அசனோற்பவ
விக்கல்.

2. அற்ப விக்கல் :- சாப்பிடும்போது அதிகரித்த வாயுவினால் அற்ப விக்கல் உண்டாகும். இந்த ரோகிக்கு பசிக்களையினால் உண்டாகும் ஆயாசத்தினால் நெஞ்சு குழியிலிருந்து விக்கலானது அதிகரிக்கும், கொஞ்சம் போசனம் பண்ணினால் சாந்தமாகும். இதுவே
கஷீத்திர விக்கல்.

அடுக்கு விக்கல் :- ஆகாரம் ஜீரணிக்குஞ்சமயம் சற்று
நேரம் பொறுத்து பொறுத்து இரண்டிரண்டாக பிறந்து வயிறுப்பிசம் பிரலாபம், வாந்தி, பேதி, கண்கலங்கல், கொட்டாவி என்னுங் குணங்களுடையது. இது யமளவிக்கல்.

மகாவிக்கல் :- அதிக விக்கலினால் இரண்டு கண்புருவம்
நெற்றிகள் தெறித்து விழுவது போலிருத்தல், சலம் வடிதல்
கண்கலங்கல், சர்வாங்கமும் மரத்தல், நினைவு மாறல், அன்னமிறங்க  வழிமறுபடுதல், கால்களில் நோய், நெஞ்சுக்குள் உலரல் என்னுங் குணங்களுடையது. இது மிகவும் கொடியது.

நீடொலி விக்கல் :- நாபி ஸ்தானத்திலாவது, பக்குவ
ஸ்தானத்திலாவது, பிறந்த மேற் கூறிய குணங்களுடையதாகி கொட்டாவி, தேகமுறுக்கல், அதிக சத்தத்துடன் நீண்டு வரும் விக்கல் என்னுங் குணங்களுடையது. இதுவே கம்பீர விக்கல்.

அன்னதோஷ விக்கல் :- அற்ப விக்கல் சாத்தியம். அடுக்கடுக்கான விக்கல் கஷ்ட சாத்தியம்.இந்த விக்கல் ரோகமானது சகல ரோகங்களைவிட அதிசீக்கிரத்தில் கொல்லும். ஆகையால் இது கண்ட போதே சிகிச்சை செய்து கொள்வது நல்லது.

கஷயநோய்

இந்த கஷயரோகத்தையே யஷீமரோகம், ராஜயஷீமரோகம், ராஜரோகம், கபரோகம், ஈளைரோகம், என்ற்ம் கூறுவர். அதிக இருமல், மந்தாக்னி, தேகம் வற்றல், மார்புவலி, வாந்தி, அரோசகம், முதலிய நோய்களையுடையது. இதில் 11 குணங்களுடைய
தோஷங்கள் உண்டு.

1. மேல்நோக்கு தோஷம் :- பித்த கபஸ்தானத்திலும்
மேலாக வாயுவை சஞ்செரிக்கச்செய்து பீனசம், இருமல்
தோளில் நோய்,தலை நோய், இருமற்கம்மல், அரோசகம்
என்னுங் குணங்களுடையது.

2.கீழ்நோக்கு தோஷம் :- நாபியின் ஸ்தானத்தில்
வாயுவை சஞ்செரிக்கச்செய்து அடிக்கடி மலம் விழுதல்,
வாயுலகலும் என்னுங் குணங்களுடையது.

3. அகட்டு தோஷம் :- வயிற்றுக்குள் வாயுவை சஞ்
செரிக்கச்செய்து, வாயுவாகிய ஒரு குணத்தை மாத்திரம் உண்டாக்கும்.

4. சூலை தோஷம் :- இருபக்க விலாக்களிலும் வாயுவை
சஞ்செரிக்கச்செய்து அவ்விடங்களில் சூலை நோய் குணத்தை மாத்திரம் உண்டாக்கும்.

5. கீல்தோஷம் :- சகல கீல்களிலும் வாயுவை சஞ்சரிக்கச்
செய்து சுரமாகிய ஒரு குணத்தை மாத்திரம் உண்டாக்கும்.
க்ஷயரோகிகளுக்கு ஐவகைதோஷத்தினால் பதினொரு குணங்களதிகரிக்கும்போது கண்டத்திலும் மார்பிலும் நோய், தேகவேதனை, கொட்டாவி, கோழைவிழுதல், மந்தாக்கினி, வாயில் துர்க்கந்தம்வீசுதல் என்னுங் குணங்களுண்டாகும். இது நான்கு வகைப்படும்.

வாதக்ஷயரோகம் :- சிரசு, தோள், கண்டம் இவைகளில் நோய், விலாபக்கங்களில் குத்தல், குரற்கம்மல், கருப்பு வெண்மை நிறங்கலந்த கோழைவிழுதல் என்னுங் குணங்களுடையது.

பித்தக்ஷயரோகம் :- கை, கால், முகம் எரிச்சல், ரத்தவாந்தி, பேதி, வயிற்றினின்று துர்கந்தம் வீசுதல், மஞ்சள் அல்லது சிவப்பு கோழை விழுதல் என்னுங் குணங்களுடையது.

சிலேஷ்மக்ஷயரோகம் :- சிரசும் தேகமும் பாரித்தல், அரோ சகம், வாந்தி, இருமல், வாயிற் சலமூறல், பீனிசம், ஈனத்தொனி, இரைப்பு, மந்தாக்கினி, வெண்மை நிறமாகிய கோழைவிழுதல் என்னுங் குணங்களுடையது.

திரிதோஷ க்ஷயரோகம் :- முற்கூறிய வாத பித்த கப க்ஷய ரோகங்களில் கூறிய குணங்கள் யாவுங் கலந்து காணும்.

க்ஷயரோக சாத்தியா சாத்திய லக்ஷணம் :- க்ஷயரோகிக்கு பக்க நோய், வயிற்றுப்புசம், ரத்தவாந்தி, சீழானவாந்தி, இரண்டு புஜங்களிலும் உபாதை, சீழாகவும், சிகப்பாகவும் கருப்பாகவும் கோழைவிழு
தல் சுரம், இருமல், இரைப்பு இவைகள் அதிகரித்தல், தேககாந்தி, பலம், தொனி இவைகள் குறைவுபடுதல், சரீரம் சுட்கல், பீசத்திலும் வயிற்றிலும் வீக்கம் என்னும் குணங்களுண்டானால் அசாத்தியம், மேற்சொல்லியவை யில்லாதிருப்பின் சாத்தியம். சில நூற்களில் வாதக்ஷயம், பித்தக்ஷயம், சிலேஷ்மக்ஷயம், திரிதோஷக்ஷயம், வாத
பித்த்க்ஷயம், சிலேஷ்மவாதக்ஷயம், சிலேஷ்மபித்தக்ஷயம், சுட்க க்ஷயம், சூலைக்ஷயம், ராஜயக்ஷ£மக்ஷயம், விவர்ணக்ஷயம், மந்தாக்கினி க்ஷயம், வாந்திக்ஷயம், ஏப்பக்ஷயம், சோஷைக்ஷயம், மூர்ச்சைக்ஷயம்
என்று இருபது விதங்களாக எழுதப்பட்டிருக்கின்றது.

குரற்கம்மல் நோய்

இது ஆறு வகைப்படும். அவையாவன :-

1. வாதக் குரற்கம்மல் :- குரல்வளையில் உள்ளீரம் வறண்டு சுட்கித்து முட்சொருகுதல்போல் நோய், வழுவழுத்த பதார்த்தத்திலும், உஷ்ண பதார்த்தத்திலும் விருப்பம், நடுக்கலான தொனி என்னுங் குணங்களுடையது.

2. பித்த குரற்கம்மல் :- குரல் வளையிலும் தாழ்வாய்த்தானித் திலும் எரிச்சலுடன், வரட்டல், பேச முடியாமை, கம்மிய பேச்சு என்னுங் குணங்களுடையது

3.சிலேத்தும குரற்கம்மல் :- குரல் வளைக்குள் கோழை பூசினது போல் இருத்தல், கம்மலானவார்த்தை என்னுங் குணங்களுடையது.

4. திரிதோஷ குரற்கம்மல் :- குரல் வளையை இருக்கிப்பிடிப்பது போல் இருத்தல், மூன்று தோஷ குரற்கம்மல்களுக்குண்டான குணங்கள், கீச்சுக்குரல், தொனியை மறிப்பது போல தோன்றும் என்னுங் குணங்களுடையது.

5. கஷயகுரற்கம்மல் :- குரல் வளையில் புகை கம்மியாய் பட்டது போல் இருத்தல், குரற்கம்மல் என்னுங் குணங்களுடையது.

6. மேதோகுரற்கம்மல் :- குரல் வளையில் வழு வழுப்பான சிலேத்தும குரற்கம்மல் குணங்களுடையது.

குரற்கம்மல் நோய் சாத்தியா சாத்தியங்கள் :- வாதம், பித்தம், சிலேஷ்ம, கஷயரோம குரற்கம்மல்கள் சாத்தியம். திரிதோஷமேதோகுரற் கம்மல்கள் அசாத்தியம்.

அரோசகம்

அரோசகமானது ஐந்து வகைப்படும். அவையாவன :-
அரோசகமானது வாயைத் துவர்ப்பாக்கி ஒக்காளம் காணும். பித்த அரோசகம் எட்டிக்கொட்டையைப் போல் கசகசப்பான ஒக்காளம் வருவது போலச்செய்யும். சிலேத்துமஅரோசகமானது இனிப்பை யுண்டாக்கி இனிப்பான ஒக்காளம் வருவது போலச்செய்யும். சந்நிபாத அரோசகமானது வாயையும் வாயில் ஊரும் சலத்தை
யும் நானாவிதருசிகளாகவும், ஒரு வேளை ருசிகள் ஒன்றும் தெரியாமலும், அவ்வாறே ஒக்காளம் வருவது போலுமிருக்கும். துக்க அரோசகம் வாயிற் கோழையாகிய சலத்தை மாறாமலிருக்க வெளியிற் றள்ளும்.

வாந்திநோய்


வாயில் நீர் ஊறல், அரோசகம், துக்கம், வாயில்லுப்புக்கரித்தல் என்னுங் குணங்களைப் பெற்றிருக்கும். இதற்கு சர்த்திரோகமென்றும்,
வமனரோகமென்றும் பெயர். இது 6 வகைப்படும். அவையாவன :-

1. வாதவாந்தி :- வாய் வரளல், மார்பு நோய், தலை நோய், குரற் கம்மல், இருமல், இளைப்பு, கண்டத்தில் வேதனையுடன் சத்தம், நல்லசலமாகவும் வாந்தி என்னுங் குணங்களுடையது.

2. பித்த வாந்தி :- உப்பு நீராகவும், புகைநிற சலமாகவும்,
பச்சிலைரசம் மஞ்சள் ரத்தத்தோடு புளிப்பாகவும், காரமாகவும்,  கடுமையாகவும் வாந்தி, தாகம், தேகஎரிச்சல், தலைசுழலல், மூர்ச்சை என்னுங் குணங்களுடையது.

3. சிலேத்தும வாந்தி :- வழுவழுப்பாகவும், தடிப்பாகவும்,
கோழையாகவும், நூலைப்போல் கொடிகொடியாகவும், வாந்தி, ரோமச் சிலிர்ப்பு, முகத்தில் கொஞ்சம் அதப்பு, சோர்வு, வாயில் இனிப்பு, மார்பு துடித்தல், இருமல் என்னுங் குணங்களுடையது.

4. திரிதோஷ வாந்தி :- மார்பிலும், கண்டத்திலும், தலை
யிலும் நோய், இருபக்கத்திலும் இசிவு, கண் பிதுங்குவதுபோலிருத்தல், சர்வாங்கத்திலும் எரிச்சல், அதிக தாகம், பிரமை, மூர்ச்சை, நடுக்கல் என்னுங் குணங்களுடையது. இது அசாத்தியம்.

5. திருஷ்டி வாந்தி :- இந்த வாந்தியில் அசுதி, துர்நாற்றம்
இருக்கும். இதற்கு கண்ணேறு வாந்தி என்று பெயர்.

6. கிருமி வாந்தி :- வாந்தியில்கிருமிகள் விழும். வயிறுநோய் தேகம் நடுக்கல், மார்புநோய் என்னுங் குணங்களுடையது.

வாந்தி நோயில் சாத்தியா சாத்தியம் :- மலமாகவும், ரத்த மாகவும் சீழாகவும் மலமூத்திர நாற்றமாகவும், ரத்தபுள்ளிக விருப் பதாகவும் வாந்தியாகுதல், இருமல், இரைப்பு, திரிதோஷ வாந்தியின் குணங்கள் காணல் என்னுங் குணங்களுடையது அசாத்தியம்.
மற்றவை சாத்தியம்.

மார்பு நோய்

இந்த நோயானது ஐவகைப்படும். இதற்கு இருத்ரோகமென்
றும் தமர்வாதமென்றும் பெயர்கள் உண்டு. இதை ருத்திரவாத மென்றுங் கூறுவர்.

1. வாத மார்பு நோய் :- மார்பில் குத்தல், அதிரல், மார்பின்
உட்புறம் வறட்சியாகவும் காலியாகவும் இருப்பது போன்ற
உண்ர்ச்சி, அதைரியம், துர்ப்பலம், பயம், புரளல், பேச்சில் அசங்கி தம், சரீரம் நடுக்கல், மூச்சுபிடுப்பு, திணறலாண மூச்சு, அற்பநித்திரை என்னுங் குணங்களுடையது.

2. பித்த மார்பு நோய் :- மார்பெரிச்சல், தாகம், மனதிற்
பிரமை, மூர்ச்சை, வியர்வை, புளியேப்பம், வாந்தி, சுரம், எந்த பாதர்த்தத்தையும் புசிக்கவேண்டு மென்கிற இச்சை என்னுங்  குணங்களுடையது.

3. சிலேஷ்ம மார்பு நோய் :- மார்பை கெட்டியாக மூச்சுபிடித்ததுபோல் ஸ்தம்பமாக்கி பிடித்தல், பாராங்கல்லை வைத்துப்போலிருத்தல், இருமல், மந்தாக்கினி, வாயிற்கோழைபெருகல், நித்துரை,
சோம்பல், அரோசகம், சுரம் என்னுங் குணங்களுடையது.

4. திரிதோஷ மார்பு நோய் :- மார்பில் ஈட்டியால் குத்துவது போல் ஓடி,ஓடி குத்தல் பிளப்பது போல் இருத்தல், எரிச்சல், கனத்தல், அழுகை, பிரமை, தாகம், சுரம், முதலியவற்றுடன் வாதாதி மூன்று மார்புநோய்களின் துர்குணங்களையும், ஒரே காலத்தில்
உண்டாக்கும். இது கஷ்ட சாத்தியம்.

5.கிருமிமார்பு நோய் :- கிருமிகள் இருதயஸ்தானத்திற்கு
மேல் எதிர்த்தேறுவதனால் மார்பில் துடி துடித்தலுடன் அதரல், வீக்கம், அதிக நமைச்சல், தெரித்து விழுவது போலும் வாளால் லறுப்பது போலும் இருத்தல், கண்கள் கறுப்பாக தோன்றல் கோழை விழுதல், என்னுங் குணங்களுடையது. அதிகவிரைவில் கிருமிகள் விழும்படியாக கசப்புள்ள விரேசனங்கள் கொடுக்க
வேண்டும்.

சாத்தியா சாத்தியங்கள் :- வாத பித்தசிலேத்தும மார்பு
நோய்கள் சாத்தியம். திரிதோஷ மார்பு நோய் கஷ்ட சாத்தியம்.  கிருமிமார்பு நோய் அசாத்தியம்.

தாக நோய்

தாக நோயின் இலக்கணம் :- இந்த ரோகமானது மன
பிரமையுண்டாக்கும், நடுக்கல், தேகத்தில் எரிச்சலோடுகாணல் சோர்வு, தாகம், நாவின்மூலத்திலும், கண்டத்துக்குள் தாடையிலும் இருக்கின்ற நரம்புகள் உலரல், எவ்வளவு உணவு அருந்தினாலும் பூர்த்தியுடையாமை, அன்னத்துவேஷம், குரற்கம்மல், இளைப்பு பிரலாபம், மனக்கெடுதி, மலம் நழுகல் என்னும் குணம் பெற்றிருக்கும்.

1. வாததாகம் :- அதைரியம், இளைப்பு, தலைநோய், அரோ
சகம், காதுமநதம், நித்திரையும், பலமுங்குன்றல், தாகமதிகரித்தல், என்னும் குணங்களுடையது.

2. பித்ததாக :- மூர்ச்சை, வாய்கசப்பு, கண்கள சிவப்பு,
மிகவும் நாவரளல், வாயில் புகை எழல் என்னும் குணங்களுடையது.

3. சிலேஷ்ம தாகம் :- நெஞ்சில் முட்சொருகல், நித்திரையின்மை வாயினிபு, வயிறுப்பிசம், தலை தேகம் மாத்தல், வாந்தி, அரோசகம், சோம்பல், அசீரணரோக குறி என்னும் குணங்களுடையது.

4. திரிதோஷதாகம் :-
வாதாதி, தாகரோக குணங்களுடையது.

5. ரஷகஷய தாகம் :- நாக்கு உலரல், மதிபிரமை, இளைப்பு, எந்த கந்தத்திலும் அசங்கிதம், என்னும் குணங்களுடையது.

6.உபசர்க தாகம் :- இனிப்பு, உப்பு, முதலிய வஸ்துகளை
பிராணந்தப்பி சாப்பிடுங்காலத்தில், களைத்த காலத்தில், சோர்வு அடையுங்காலத்தில், தாபச்சுரகாலத்திலும், நெடுநாளாக பற்றிய ரோகங்களின் விஷமகாலத்திலும், இத்தாக ரோகம் பிறகும்.

தாகநோயில் சாத்தியா சாத்தியம் :- அறிவழிந்த காலத்திலும் நாவானது பயன்படாமல் ரோகத்தால் வெளியில் நீண்டு விட்ட  காலத்திலும், வாய்க்குள் உண்டான ரோகத்தால், தொண்டைக்குள் சலமிறங்காத காலத்திலும், தாகரோக முண்டானால், அசாத்தியம்.

மாதாத்திய நோய்

சுக்கிலம், காமசலம், பலம், கொழுப்பு, முதலியவைகளுக்கு
மதம் என்று பெயர். இதுகளை நாசம் பண்ணுங்கால், மாதாத்திய ரோக முண்டாகும், அப்பொழுது சோருதல், நானாவிதமான மலம் நழுதல் இடைவிடாத தாகம், உஷ்ணசுரம், சீதளசுரம், அரோசகம், மார்பிலும்
சிரசிலும்,தோட்களிலும், விலாப்பக்கங்களிலும், மர்மஸ்தானங்களிலும், தொண்டையிலும், அதிக நோய், நடுக்கல், கல் அடைத்துக்கொண்டது போல் மார்பு அடைத்தல், கண்களில் இருட்கம்மல், இருமல், இரைப்பு,
நித்திரை பங்கம், வியர்வை, ஒருவேளை மலபந்தம், சித்தபிரமை, வீக்கம் பிரலாபம், வாந்தி, மார்பிற்சங்கடம், மயக்கம், துர்ச்சொப்பனம், என்னும் குணங்களுடையது.

இந்த ரோகமானது வாதாதி தோஷங்களை அனுசரித்து நான்கு பேதங்களாக யிருக்கிறது. மேற்கூறிய குணங்களை தோஷத்திற்கு தக்கவாறு அடைந்திருக்கும்.

தும்மிசகவிஷயரோகம்

நாள்தோறும் சாதரணப் பழக்கமாய் புசிப்பவைகளை விட்டு
சாராயத்தை இடைவிடாது அதிகமாய் அருந்துபவர்களுக்கு தும் மிசகவிஷய மென்றும், இரண்டு வகை வியாதிகள் உண்டு.

1. தும்மிசகரோகம் :-
வாயினால் கோழை கோழையாக கக் கல், வார்த்தை கேட்க அசங்கிதப்படுதல், நெஞ்சுலரல், அதிக நித்திரை, சோம்பல் என்னும் குணங்களுடையது. இது தேகத்தை சீக்கிரம் நாசப்படுத்துவதனால், தும்மிசகரோகம் எனப்பெயர் பெற்றது.

2.விஷயரோகம் :-
தேகம், மார்பு, சிரசு, ஆகியவிடங்களில்
அதிக நோய், கண்டத்தை நெருக்கிப்பிடித்தது போலிருத்தல், வாந்தி, சோர்வு, இருமல், தாகம், சுரம் என்னும் குணங்களுடையது.

மதரோகம

மதத்தை உண்டாக்குவது மதரோகம் எனப்படும். இது எழு
வகைப்படும். அவை யாவன :-

1. வாதமதம் :- ஈனதொனி, இடைவிடாத வார்த்தை பெற்றிருக்க வொன்று செய்கின்ற கெட்ட நடத்தை, தேகத்தில் கறுப்பு நிறம் அல்லது சிவத்த நிறம் என்னும் மிக்குணங்களுடையது.

2. பித்தமதம் :- தேகமானது மஞ்சள் அல்லது சிகப்பாக
பேதிக்குதல் கோபம், கலகப்பிரியம் என்னும் குணங்களுடையது.

3. சந்நி பாதமதம் :- வாதாதி முதலான மூன்று மதங்க
ளின் குணங்கள் ஏககாலத்தில் உண்டாகும். இது அசாத்தியம்.

4. ரத்தமதம் :- தேகமுங் கண்ணும் மரத்தலுடன் பித்தத்தின் ரோககுணங்களை யுண்டாகியிருக்கும்.

5.சிலேஷ்மமதம் :- தியானம் செய்பவர் போலிருத்தல் ஒன்றுக்கொன்று சம்மதமின்றி அதிக விரைவாக பேசுகின்றது போல் தேகம் வெளுத்தல் என்னும் குணங்களுடையது.

6. மத்தியபான மதம் :- சரீரத்தில் பலவித கெடுதி, முகத்தில் ஒளி நீங்குதல், தொனிகெடல், எவர்களிடத்தும் நிராசை என்னும் குணங்களுடையது.

7. விஷமதம் :- மேற்கூறிய மதகுண்ங்களை விட அதிகமான துர்குணங்களையுடையது. நடுக்கல் மிகநித்திரையுடையது.

இவ்வேழு மதங்களிலும் ரத்தபித்தரோகங்களில் எல்லாம்
உண்டாகியிருக்கும்.

மூர்ச்சை நோய்

மூர்ச்சை ரோகமானது ஐவகைப்படும். அவை யாவன :-

1. வாதமூர்ச்சை :- ஆகாயத்தைப் பார்த்தால் கறுப்பு நிறம்,
சிவப்பு வர்ணம், நீலவர்ணம் போல் தோற்றி மூர்சை உடனே தெளியும், இதனால் மார்பு நோய், நடுக்கல், பிரமை முதலிய குணங்களுண்டாகி தேகம் இளைக்கும். அப்போது சரீரம் கறுத்து அல்லது சிவந்து இருக்கும்.

2. பித்தமூர்ச்சை :- ஆகாயத்தைப் பார்த்தால் மஞ்சள் நிறம், சிவப்பு வர்ணமாயும் தோற்றப்பட்டு, மூர்ச்சை யானது உடனே தெளியும், இதனால் தேக எரிச்சல், காங்கை, வியர்வை, துண்டு துண்டாகமலம் நழுதல், தேகம் மஞ்சள்அல்லது கறுப்பு வர்ணம், இரண்டு கண்களும்
கலங்கி மஞ்சள் அல்லது சிவப்பு வர்ணம், என்னும் குணங்களுடையது.

3. சிலேஷ்மமூர்ச்சை :- ஆகாயத்தைப் பார்த்தல் மேகம்
கம்மினாற்போல், தோற்றப்பட்டு மூர்ச்சை உண்டாகி நெடு நேரம் பொறுத்து தெளியும். இதனால் மார்பதிரல், வாயில் ஜலம் வடிதல் அவயவங்களெல்லாம் அசையக்கூடாமையாக நனைந்து தடித்தல்.  மத்தைப் போத்திக்கொண்டதுபோல் சரீரம் கனத்திருக்குதல்
என்னுங் குணங்களுடையது.

4. திரிதோஷ மூர்ச்சை :- மேற்கூறிய வாதாதிமூர்ச்சாரோக குணங்களை எல்லாமுடையதும், கோரசேட்டையுண்டாகி அபஸ்மார ரோகத்தைப்போல் உணர்ச்சி யிழந்து மூர்ச்சை யுண்டாகும்.

5. சந்நியாசி மூர்ச்சை :- திரிதோஷங்கள் பிராணஸ்தானங் களில் அதிகரித்து சந்நிபாதமாகி மனம் வாக்கு காயம் என்கிற திரிகரணங்களின் செய்கைகளை அடக்கிவிட்டு தானும் அடங்கி சந்நியாசி ரோகத்தை உண்டாக்கும். அப்போது இந்த ரோகி வெட்டி
முறித்த மரத்தைப்போல் விழுவான். உயிரிருந்தாலும் உயிரில்லாததுபோல் சவத்தைப்போல் கிடந்து இறந்துவிடுவான்.

மூலநோய்

ஆசன வளையங்களில் கிழங்கு முளைகளைப்போலும், வேர்களைப் போலும், மாமிச முளைகளைப் பெற்றிருக்கும் காரணத்தினால் மூல ரோகமென பெயர்பெற்றது. இந்த ரோகம் தாய் தந்தையர் வழி யாகவும், காங்கை வஸ்துக்கள் கடின வஸ்துக்கள் பித்தவாதப்
பொருட்கள் முதலியவைகளாலும் உண்டாகும். இந்த ரோகம் அக்கினி மந்தம், மலபந்தம், அடித்தொடை சதையிலும், கணுக்கால் கண்டைச் சதையிலும், அதிக நோய், ஆயாசம், உடம்பிளைத்தல், கண் அதப்பு, பேதி அல்லது மலக்கட்டு, ஆசனத்தில் நோய்,
அபானவாயு பரிதல், ஏப்பம், சிலவேளை புளியேப்பம், நீரிறங்கள், சொற்ப மலம் நழுவல், எந்த காரியத்திலும் புத்தி செல்லாமை, சிரசு, முதுகு, மார்பு என்னும் இடங்களில் குத்தல், சோம்பல், கோபம் என்னுங் குணங்களுடையது.

1. வாதமூலம் :- முளைகள் உலர்ந்தும், வாடியும், சிவந்தும், கறுத்தும், மேடுபள்ளமாகவும், கடினமாகவும், நெருங்கியும், கூர்மை யாகவும் இருக்கும்.

2. பித்தமூலம் :- முளைகள் சிவந்த நிறமாகவும், மஞ்சள் நிற மாகவும், காந்தியாகவும், வெண்மையாகவும், கறுத்து மெல்லியதாக வும் கொஞ்சம் ரத்தத்துடன் துற்கந்தமாகவும், கொஞ்சம் மிருதுவாகவும், அசையப்படுவாதகவுமிருக்கும். அம்முளைகள் மாமிசகண்
டம், அட்டைமுகம் இவைகளை யொத்திருக்கும். தாகம், சீரணம், சுரம், வியர்வை, உதடுலரல், மூர்ச்சை, அரோசகம் என்னுங் குணங்களுடையது.

3. சிலேஷ்ம மூலம் :- முளைகள் பெருத்து ஆழ்ந்தவேறுள்ள தாகவும், மினுமினுப்பாகவும், வட்டமாகவும், கனத்தாகவும், எண்ணைக்கசியாகவும், நீங்காத வழுவழுப்புள்ளதாகவும், அற்பநோய்,
நமைச்சல், சொறி, அம்முளைகள் மூங்கில் முளை, பலாப்பிஞ்சு, எலும்பு, திராட்சைபழம் இவைகளை யொத்திருக்கும் இந்த ரோகிக்கு இரண்டு கவுட்டியிலும் உப்பல், குதஸ்த்தானத்திலும் அடிவற்றிலும், தொப்புளிலும், அறுப்பது போல் நோய், இருமல் இரைப்பு, தலை நோய், குளிர்சுரம், விந்து நஷ்டம், பீனிசம், சோர்வு
ஒழுக்கு மூத்திரம், அஜீரணம், வாந்தி முதலிய குணங்கள் ஏற் படும்.

4. தொந்தமூலம் :- முளைகளும், வாதபித்த சிலேத்தும
மூலகுணங்களின் தொந்தமும் காணும்.

5.திரிதோஷமூலம் :- மேற்கூறிய .திரிதோஷமூலங்கள்
யாவையும் பெற்றிருக்கும்.

6.ரத்தமூலம் :- இரத்தம் கசிவதால் ரத்தமூலம் ஏற்படும்.

இது தவிர வாதபித்த, வாதசிலேத்தும, பித்தசிலேத்தும
மூலங்கள் திரிதோஷ தொந்தத்தால் உண்டாகியிருக்கின்றன.

மேலும் முளைகள் இருக்கும் இடத்தை அனுசரித்து பலவகரான பெயர்களால் வழங்குகின்றனர். அவைகளாவன :-

மூலரோகமுளைகள் உள்ளிருந்தால் உள்மூலம் என்று பெயர்.

முளைகள் வெளிப்பட்டிருந்தால் வெளிமூலம் என்று பெயர்.

முளைகளோடு சீழ் வடிந்தால் சீழ்மூலம் என்று பெயர்.

முளைகளோடு ரத்தம் கசிந்தால் ரத்தமூலம் என்று பெயர்.

முளைகளோடு சலம் கசிந்தால் சலமூலம் என்று பெயர்.

முளைகள் ஆணிபோல் கடினமாக இருந்தால் ஆணிமூலம் என்று பெயர்.

முளைகள் கிரந்தியுடனிருந்தால் கிரந்திமூலம் என்று பெயர்.

மூலநோயின் சாத்தியாசாத்தியங்கள் :- குதஸ்த்தானத்திற்
குள், அடிவளையம், நடுவளையம், மேல்வளையம், என மூன்று வளையங்கள் இருக்கின்றன. அடிவளையத்தில் திரிதோஷங்களால் உண்டானால் அசாத்தியம். நடுவளையத்தில் மேல்தொந்ததோஷங்களால்
முளைகள் உண்டாகில் சாத்தியமாவது போலாகி வருடந்தோறும் கண்டு மறைவதாய்யிருக்கும். மேல்வளையத்தில் ஒவ்வொரு தோஷத்தினால்
உண்டான முளைகளும் அதிசீக்கிரத்தில் சாத்தியமாகும்.

அசாத்திய மூலரோகம் :- எந்த மூல நோயிலும் கை, கால்
நாபி, ஆசனம், பீஜம், முகம் என்னும் இடங்களில் வீக்கம் உண்டானால் மரணம் வாய்க்கும் என்று அறியவும்.


அதிசாரம்

நோயால் இளைத்த மிருகமாமிசம், கெட்டுலர்ந்த மாமிசம்,
நன்றாக வேகாத பதார்த்தங்கள், புண்ணாக்கு முதலிய மந்த
வஸ்துக்கள், கள்ளு சாராயங் குடித்தல், காரவஸ்து, வயிற்றில் கிருமி நிறைவு, அபானவாயு, தும்மல், மலம், மூத்திரம், கொட்டாவி, பசி, தாகம், இருமல், நித்திரை, கண்ணீர், சுக்கிலம், சுவாசம், வாந்தி, இளைப்பு என்னும் பதிநாலு வேகத்தை யடக்குதல், இவை கானல்வாய்வு அதிகரித்து சப்ததாதுக்களையும், உதராக்கினியையும்,
கெடுத்து மலப்பையிற் சேர்த்டுக்கொண்டு கெட்டியாயிருக்கிற மலத்தை சலமாகக்கறைத்து அபான வாயலின் வழியாய் ஒழுகப் பண்ணும். இது மார்பு, குதம், வயிறு இவ்விடங்களில் நோதல், உடம்பு இளைத்தல், அசீரணம் என்னுங் குணங்களுடையது.

1. வாதாதிசாரம் :- இரைச்சலையும் நோயையும் உண்டாக்கி பேதியாகி நுறையோடு துண்டுதுண்டாக மலம்விழுதல், பசையற்று ஆசனம் காய்ந்ததுப்போல் தோற்றல், கத்தியால் அறுபட்டது போல் நோய், கொஞ்சஞ் சீதம்சுற்றிக் கொண்டதாய் மலம்நழுதல் வயிற்றில் பொருமலுடன் நோய், சூலை, அடிவயிற்றில் பிடுங்கல்,
சிலவேளை மஞ்சளாயும், கருப்பாயும், வெளுப்பாயும் துர்க்கந்தத் துடன் பேதியாகுதல், புளியேப்பம், வாந்தி என்னுங் குணங்களுடையது.

2. பித்தாதிசாரம் :- மலமானது பல நிறத்துடன் துர்க்கந்தத்
துடன் வயிற்றிலும் ஆசனத்திலும் நோயையுண்டாக்கி அசீரணத்துடன் இளகி பேதியாகுதல், தாகம், மூர்ச்சை, வியர்வை, எரிச்சல், என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

3. சிலேத்துமாதிசாரம் :- மலமானது தடித்ததாகவும், எண்ணை கலந்ததாகவும், நூல்போல் கொடிகொடியாகவும், அதிக வெண்மை யாகவும், மினுமினுப்பாகவும், அசீரணப்பட்டதாகவும், பொறுத்து பொறுத்து வருவதாகவும், துர்க்கந்தமாகவும், ஆசனத்தில் மிகுந்த
பளுவையுண்டாக்கி பேதியாகுதல், அதிக நித்திரை, சோம்பல், அன்னத்துவேஷம், ஆசனத்திலும் அடிவயிற்றிலும் மேல்வயிற்றிலும்
கனத்தல், கபாதிக்கம், தும்மல், நீரடைத்தல் என்னுங் குணங்களுடையது.

4. திரிதோஷ அதிசாரம் :- வாதாதி மூன்று தோஷங்களில் உண்டாகிற உபத்திரவங்கள் உண்டாகுதல், சன்னிபாத சுரலக்ஷணம் அடைந்திருக்கும்.

5. பயாதிசாரம் :- சலஞ்சலமாக பேதியுண்டாகும். திரிதோஷ குணங்களைப் பெற்றிருக்கும். இது பயத்தினால் ஏற்படுவதாம்.


6. துக்காதிசாரம் :- தூக்கத்தினால் உண்டாகும் பேதிக்கு
துக்காதிசாரம் என்று பெயர். இதுவும் மேற்கூறிய குணங்களைப் பெற்றிருக்கும்.

7. மந்தாதிசாரம் :- செரியாமல் பேதியாவது மந்தாதிசாரம். இந்நோய் மந்தத்துடன் துர்க்கந்தத்துடன் பேதியாதல், வயிற்றில் நோய் வாயில் நீருறல் என்னுங் குணங்களுடையது. இதனை அசீரண பேதி என்றுங் கூறுவர்

8. ரத்தாதி சாரம் :- ரத்தத்துடன் கலந்து பேதியாவதால்
ரத்தாதி சாரம் எனப்படும். இது தாகம் வயிற்று நோய், ஆசனம் வெளிப்படுதல், சரீர எரிச்சல் என்னுங் குணங்களுடையது.

கிரகணி

அதிசார ரோகத்தைப் போலவே ஜீரணா ஜிரண காலங்களிலும் சுபாவமலமாகவும், சீதங்கலந்தமலமாகவும், செரித்ததாகவும், செரி
யாததாகவும், காரணமில்லாமல் கட்டுப்பட்டதாகவும், நானாவிதமாகவும் அடிக்கடி விஷேச மலமாகவும், பேதியாகும். இதை கிராணி அல்லது
கிரகணி என்றும் கூறுவர். மலமாக பேதியாகில் மலக் கழிச்சலென்றும் சீதமாகப் பேதியாகில் சீதக்கழிச்சலென்றும், சலமாக பேதியாகில் சலக்
கழிச்சலென்றும், தொண்டையில் புகை கிளம்பியது போல் இருந்தால் மயக்கம்,மூர்ச்சை, தலை நோய், கை கால் வீக்கம், மலபந்தம், என்னுங் குணங்களுங் காணும். கிரகணி ரோகம், வாதகிரகணி, பித்தகிரகணி,
சிலேத்தும கிரகணி, திரிதொஷ கிரகணி, குன்மகிரகணி, உஷ்ணவாயு கிரகணி,வாயுகிரகணி, மூலவாயுகிரகணி, கருப்ப கிரகணி, ஒட்டு  கிரகணி, சங்கர கிரகணி, என எழு வகை கிரகணிகள் காணப்படுகிறது.
அவையாவன :-

1. உஷ்ணவாயுகிரகணி :- வயிற்றில் கனத்தலுடன் சத்தம், இரைச்சல், கை, கால் அசதி, தேகங் கருகி மெலிதல், என்னுங் குணங்களுடையது.

2. அந்தர வாயுகிரகணி :- புசித்தவுடன் பேதியாதல்,
இரைச்சல், அசதி, தாகம், தளர்ச்சி, இசிவு, சரீர வெப்பம்,
விக்கல் என்னுங் குணங்களுடையது.

3. மூலவாயுகிரகணி :- இரைச்சலுடன் வயிற்றைப் பிதட்
டல், அடிவயிறு பொருமல், மலம் வரளல், மந்தம், அடிக்கடி
குத்தல், சரீரம் தளரல், குதத்திலும், கண்ணிலும், மூளையிலும் காணல் என்னும் குணங்களுடையது.

You are in Part 2. Continued in Part-1  Part-3  Part-4  Part-5  Part-6  Part-7